மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 18, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2064 ( திபூவை இறுதி பாகம்)

 

ஹோசூர் சந்திரசேகர் மருத்துவமனை.,

சுரேஷ்க்கு  அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருந்தது.

ஐ சீ யூ அறையின் வெளியே,  மலரின் குடும்பம் கவலையாக நின்று கொண்டிருந்தது. மனோ, கீர்த்தனாவுக்கும் தகவல் சொல்லப்பட அவர்கள் அலறியடித்து ஓசூருக்கு விரைந்து வந்து கொண்டிருந்தார்கள்.  கீர்த்தனா தன் வரலட்சுமி கயிறை விடாது பிடித்து கொண்டிருந்தாள். ரஞ்சிதா அழுதபடியே இருந்தாள். மனோ உறைந்து போயிருந்தான்.

ஐ சி யூ அறையில் சுரேஷ் மெல்ல தனது நினைவை இழந்து கொண்டிருந்தான்.  அவனுக்கு இந்த பூமியுடன் இருந்த தொடர்புகள் மெல்ல அறுபட்டுப் போய் கொண்டிருந்தன. அவனால் இப்போது உடல் எது? உயிர் எது?  என தனித்து பிரித்து பார்க்க முடிந்தது

அவன் மெல்ல சிரித்தான்.

இந்த பூமி ஒரு காடு.,  இல்லை, இல்லை. இந்த மனம் தான் ஒரு காடு. இந்த காட்டில் மனம் இருக்கிறது. நரியும் இருக்கிறது. எல்லாம் அறிந்த ஒன்று உள்ளே இருக்கிறது., அதை தெரிந்து கொள்ள நினைக்கும் போது அதெல்லாம் வேண்டாம் என காமம். கோபம், ஆசை, இச்சை போன்ற விஷயங்கள் நரிகள் போல பின்னால் இருக்கிறது.

பவானி சங்கர் கோயிலில், நான் என்னை அறிந்து கொள்ள என் மனதை திடப்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய நினைத்தேன். அதற்குள் என்னை குற்றுயிராய் படுக்கையில் கிடத்தி விட்டார்கள். என்னை சரியாக்கி கொள்ள முயலும் போது தான் இப்படி ஒரு விபத்து.

காலம் காலமாய் சரியே செய்ய முடியாத தப்புகளை  செய்தேன். எப்படியாயினும் சரி ஆகலாம் என நான் முயல ஆரம்பிக்க ., ஆரம்பித்த உடனே இப்படி ஒரு பெரிய அடி.

எனக்கு ஏன்? ஏன் ? இது நடந்தது. வேனில் இருந்து இழுத்து போட்டு ஓங்கி அறைய வருபவனை நோக்கி, கைகளை தடுக்க கூட முடியவில்லை. யாரையோ அடிப்பது போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

அவனது எண்ணங்கள் தாறுமாறாக மோத ஆரம்பித்தது. நம்மை ஏன் தாக்கினார்கள்? அந்த ஆளுக்கு எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘மங்களூர் திருமண விழாவில், பவித்ராவை தொட வந்தார்கள் என்பதற்காக அவனை முதல் மாடியில் இருந்து தூக்கி எறிந்து விட்டோம். தவறான் செயல். ஒரு அறை விட்டு அனுப்பி இருக்கலாம், அல்லது எச்சரித்து இருக்கலாம்.

 

அதை விடுத்து அவனை தூக்கி முதல் மாடியில் இருந்து தூக்கி போட்டது என்பது பெரும் தவறு. நம்முடைய பலத்தைக் காட்டுவதற்காக செய்த செயல்.  பலத்தை யாருக்கு காட்டுவதற்காக ? பவித்ராவிற்கு காட்டுவதற்காக.,  அப்படி பலத்தை காட்டி அவளை உள்ளே அழைத்து கொண்டு படுக்கையிலும் அதே பலத்தை காட்டினோம். இப்போது அசைய கூட தெம்பில்லாமல் படுத்திருக்கிறோம்.

செய்த பாவங்கள் என்னை கட்டி போட்டு விட்டது. வீட்டின் குல விளக்கு பவித்ராவை பழிவாங்க., நண்பன் ஒருவனை அனுப்பி  நெருக்கமாக பழகி படங்கள் எடுக்க அனுப்பிய., மாபாதாக செயலை என்னை தவிர வேறு யாரும் செய்ய முடியாது.

செய்தேன். ஆனால் வெறுமனே அவளை ஒரு டிராப்பில் சிக்க வைக்க அஜய்யை அனுப்பினால்,  அவன் அவளிடம் அத்துமீறி நடந்து கொண்டான்.

அது பெரிய தவறு என்பது எனக்கு உறைக்கவில்லை. ஹரீஷின் மீதன கோபத்தில் அவனை பழிவாங்க இப்படி ஒரு ஈன செயலை செய்த நான் உண்மையிலேயே கிரான்டனி வாரிசா? இல்லை. நான் இங்கே எதுவும் இல்லை.

என அழகு என் அம்மா கொடுத்தது. இந்த செல்வம், இந்த பேர் என் அப்பா கொடுத்தது. நான் இங்கே எதுவும் இல்லை. போவது தான் சரி.

அவன் உள்ளுக்குள் முனகினான்.

அவனது காதுகளில் ஓயாத ரீங்காரமும் கேட்டது.’ இதுதான் என் மூச்சா இதுதான் என் சுவாசமா?  தன்  சுவாசத்தை அதன் ஒலியை தேடிப் பிடிக்க முயற்சி செய்தான்.

ஆனால் சுவாசம் வெறுமையாகவே இருந்தது. அவன் நாடி அடங்க ஆரம்பித்தது.

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2063 ( திபூவை இறுதி பாகம்)

 

ஹரீஷ் தலையில் அடித்துக்கொண்டு அ.

நல்லா அழுவுங்கஇப்ப

ஐயோ உங்க தம்பிக்கு எதனாச்சும் ஒன்னுனா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்றாள்.. பவி,.  அவன் புரியாமல் விழிக்க.,

எங்க அப்பாவுக்கு ழி வந்தா. எனக்கும் வந்த மாதிரி.. ஐயோ அந்த சுரேஷ்ஷை எப்படியாச்சும் காப்பாத்து கடவுளே .. காப்பாத்தி.., கொடுங்க என்றாள்

உங்கப்பனுக்கு அறிவே கிடையதுடி..”

எல்லாம் உங்களாலதான். பணம் பணம் பணம் னு  இப்படி அலையறீங்க. நான்தான் அன்னிக்கே சொன்னேனே சுரேஷ் தேவையான பங்கை கொடுத்துடுங்க . அவருக்கு என்ன சேரனுமோ அதை கொடுத்துடுங்கன்னு., கம்பெனியில அவருக்கு என்ன போஸ்டிங் இருக்கோ கொடுங்க,. அப்படின்னு சொன்னேன் நீங்க கேட்கவே இல்லை.. கண்ணன் சார் சொல்றாரு., பெரியப்பா சொல்றாரு., பெரியம்மா சொல்றாங்க., நான் சொல்றேன்..  ஆனா யார் சொல்றதையும் நீங்க கேக்க மாட்டீங்க., உங்க இஷ்டம் போல் நடந்துகிட்டீங்க., என்ன தான் இருந்தாலும், அவர் உங்க தம்பி தானே. “

“.  பவி…..அய்யோ எல்லாத்தையும் குடுத்துடறேன்….”

நீங்க இப்பதான் உங்க வாயால சொல்றீங்க., அப்போ ஷேர் குடுக்கறதுதுல உங்களுக்கு என்னங்க பிரச்சனை?  ஒத்துக்குறேன் கம்பெனி நீங்க தான் கஷ்டப்பட்டு நிலைக்கு கொண்டு வந்தீங்க,. ஆனால் அந்த விதை யார் போட்டது? உங்க அப்பா போட்டுத்தானே இந்த தோட்டமே கிடைச்சது? எதுவா இருந்தாலும்  நீங்க ரெண்டு பேர் தானே. உங்க ரென்டு பேருக்கும் உரிமை இருக்குல்லே. அதை விட்டு அவரை போய் சென்னைக்கு அனுப்பி.. ஆப்டர் ஆல் உங்க ரீஜனல் மேனஜர் வீட்டுல போய் தங்க வெச்சு., இந்த ஒன்னரை வருஷம் கஷ்டப்பட வெச்சு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வெச்சி.. ச்சே யாராச்சும் இப்படி செய்வாங்களா?…”

“..இல்ல பவி.. அவன் சிவில், ஆர்கிடெக்சர்,, எம்பிஏ  ன்னு எந்த குவாலிபிகேஷன் படிப்பும் இல்லாத்தால தான்..”

ச்சீ கூச்சம் இல்லாம பொய் பேசாதீங்க….அவனை அப்படி தேவையான படிப்பை எல்லாம் படிக்க விடாம., உதவாத படிப்பை படிக்க வெச்சு., அவனை கெடுத்து குட்டி சுவராக்கினது நீங்க தானே

“……………………..”

மனோ பொன்டாட்டிகிட்ட., நீங்க வம்பு வச்சிகிட்ட மாதிரி., அவனும் வம்பு வெச்சி அவமானப்பட்டு., அப்புறம் அது பெரியப்பா வரைக்கும் போயி.,அவர் கோபத்துக்கு ஆளாகி., அதனால அவன் கிரான்டனி குரூப்லருந்து வெளிய போகனும்.. இதானே உங்க பிளான்.”

“……………..”

இப்ப உங்க பெரியப்பா கோவத்துக்கு ஆளானது  யார்? அவனா? நீங்களா? பேராசை பெரு நஷ்டம்..ஹரீஷ்.,  கெடுவான் கேடு நினைப்பான்

என பவித்ரா கோபத்துடன் திட்ட.,

பவித்ரா இப்போது ஆளே மாறி விட்டிருப்பதாக .,ஹரீஷ் நினைத்தான்,. முன்பெல்லாம்  ஆபீஸ் நிர்வாகத்தில் மட்டுமல்ல ., கிரான்டனி வீட்டில் சேர்க்க கூட  சுரேஷ்க்கு., ஏகப்பட்ட கட்டுப் பாடுகளை போட்டவள் இந்த பவித்ரா தான்.

உங்க தம்பி என்னிடம் தப்பாக நடக்கிறான் என எங்கள் அண்ணன் தம்பி பகைக்கு தூபம் போட்டவள் இவள்.  இப்போது சுரேஷுக்கு பயங்கரமாக சப்போர்ட் செய்கிறாள்.

 ஆனால் யார் எப்படி நடந்து கொண்டாலும், என்ன சொன்னாலும் நியாயம் என்று ஒன்று இருக்கிறது, அதை நாம் தவறி விட்டதால் தான் இப்போது எல்லோரும் நம்மை கைகாட்டி பேசுகிறார்கள்.

 

நேற்று கூட ஒரு டைரக்டர் மீட்டிங்கில் என்ன சார் உங்க தம்பிய ஜே எம் டி சீட்டில் உட்கார வைக்காம சின்ன பசங்க மாதிரி எஸ் ஏ பி சர்ட்டிஃபிக்கெட் வாங்கிட்டு வா டீ வாங்கிட்டு வான்னு சொல்லி அவரை கொடுமை பண்றீங்க ?” என கூட்டத்தில் நேருக்கு நேராக கேட்டுவிட்டார்கள்.

நாளையே .எல்.எஃப் நிறுவனத்தின் பெண் நம் வீட்டு மருமகளாக நுழைந்துவிட்டால்,  சுரேஷ் நம்மை விட மிகப்பெரிய வலிமையானவன் ஆக மாறி விடுவான்.  நிச்சயம் அவன் கை மேலோங்கினால், நம்மை பழிவாங்குவான். அதற்காக மட்டும் இல்லை ஒரு தம்பியாகிய அவனுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்து விட வேண்டும் .

சுரேஷ் நம் கை பிடித்து மேலே வரட்டும் அல்லது நாம் நமது கையை தட்டி விட்டு மேலே கொண்டு போகட்டும்., நடப்பது நடக்கட்டும் பவித்ரா சொல்வது போல இந்த நிறுவனத்தின் விதை எனது தந்தை போட்டது. அது சுரேஷுக்கும் சொந்தமானது தான் நாம் கூடப்பிறந்த தம்பியையே மிகக் கேவலமாக நினைத்து ஒதுக்க நினைத்ததால் தான், எங்கிருந்தோ வந்த ஒரு மாமா அவனை ஆளை வைத்து கொள்ளும் அளவிற்கு போயிருக்கிறார்.

நாம் உண்மையில் சுரேஷுக்கு ஆரம்பத்திலிருந்தே தப்பான வழியை காட்டி கொண்டு விட்டோம். வீணாவின் மூலமாக பெண் சுகத்தை அவனுக்கு அறிமுகப் படுத்தினோம். ஒரு உதவாத படிப்பை உதவாத கல்லூரியில் படிக்க வைத்து அவனது எதிர்காலத்தை பாழாக்க நினைத்தோம்.

இப்போது எனது தம்பி பயங்கரமாக அடிபட்டு மருத்து வமனையில் கிடக்கிறான் கடவுளே அவனை மட்டும் காப்பாற்றி விடு எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு என வேண்டிக் கொண்டே இருந்தான். கார் ஓசூரை நெருங்கியது.

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2062 ( திபூவை இறுதி பாகம்)

 

ங்கே லிங்கப்பா வீட்டில் ..

தன்னுடைய ஆட்கள் மாட்டி  கொண்டார்கள் என கேள்விப் பட்டவுடன், லிங்கப்பா உஷாரனார். தனது டிரைவரின் பேரில் வாங்கிய அவர்களுடன் பேசிய போன்., சிம் எல்லாவற்றையும் கழட்டி போட்டி கொளுத்தினார். தன் பேர் வந்துவிடக் கூடாது என சொல்லி பெரிய அதிகாரிகளுக்கு கோடி கணக்கில் பணத்தை டிரான்ஸ்பர் செய்தார்.

காரில் சென்று கொண்டிருந்த ஹரீஷ்க்கு போன் செய்தார்.

ஹேய்ய் மாமாடி…” ஹரீஷ் காரில் கத்த

டிரைவ் பண்னிகிட்டே போன் பேசாதீங்க

சரி ஸ்பீக்கர் போடு..”

அவள் போட்டாள்.

ஹலோமாமா

“‘என்ன மாப்பிள்ளைஆர் யூ ஹாப்பி?”

ஹாப்பியா?” அவன் அதிர்ந்து போக.,

என்ன மாப்பிளை உங்களுக்கு சர்பிரைஸ் கிப்ட்.”

என்ன மாமா?”

என்னப்பா பெங்களூரே அல்லோகலப்படுது. உனக்கு தெரியாதா?”

”…………………”

உங்க தம்பியை ஆளை வெச்சு முடிக்க தான் டிரை பண்ணினேன். இன்னும் இழுத்துகிட்டு இருக்கு,. ஹாஸ்பிடல்ல நம்ம ஆள்  ஒருத்த இருக்கான்

அப்பா…..” பவித்ரா அதிர்ச்சி ஆக.,

மாமா என்ன சொல்றீங்க?” ஹரீஷும் கத்த

என்னப்பா  இவ்ளோ ஷாக் ஆகறீங்க? இது உன் நல்லதுக்கு  தான்பா. “

நல்லதா?”

உனக்கு போட்டியாக இருந்த ஒரே ஒரு தடுப்பை ரிமூவ் பண்ணிட்டேன் ஹரீஷ்.. “

என்ன மாமா சொல்றீங்க? இது உங்க வேலையா?”

அய்யோ,ம் அப்பா நீங்களா இப்படி பண்ணீங்க?”

பவி    நீ பயப்படாதே ., நம்ம பேர் எங்கயும் வெளிய வராது. “

அப்பா..”

அய்யோ பவிசுரேஷ்., ஆல்ரெடி மங்களூர்ல அவனுங்க கூட சண்டை போட்டிருக்கானுங்க.. அந்த விரோதத்துக்காக அவனுங்க தான் இதை செஞ்சானுங்கநான் செலக்ட் பண்னி இவனுங்க கிட்டே இந்த வேலையை கொடுத்தேன்.  நான் காசு கொடுக்கலன்னாலும் இதை பண்ணி இருப்பானுங்க

அப்பா நீங்களா இப்படி பேசறீங்க?”

பவி இது பிசினஸ்மா.. போனை மாப்பிள்ளை கிட்ட கொடு.. என்ன ஹரீஷ் நீ சொல்லு.. ஹாப்பி தானே?”

யோவ்….”

“………………”

அவன் என் தம்பிடா.” அவன் கோபத்தில் சீற.,

மாப்பிள்ளை?” அவர் அதிர்ச்சியாக.,

என் தம்பியை கொல்றேன்னு எங்கிட்டயே சொல்றியே நீ?”

என்ன ஹரீஷ் ? இப்படி உல்டாவாக பேசுற? உன்னால தான் அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனை? கம்பெனில ஷேர் போகும் . உனக்கு ரொம்ப லாஸ்னு சொன்னியே?”

மா யார் இல்லைன்னு சொன்னா . அந்த நாயை எனக்கு பார்த்தாலே பிடிக்காது. அவன் பேரை சொல்ல எனக்கு துளிகூட விருப்பம் இல்லை. எனக்கு அப்ப்ப்போ டிரபுள் கொடுத்திருக்கான். பர்சனலாவே எனக்கு ரொம்ப பிராப்ளம். டில்லி, சென்னைன்னு எல்லா ஊர்லயும் அவன் எனக்கு கொடுத்த அவமானம் நிறைய…. எல்லாம் கரெக்டுதான்.  ஆனா அதுக்காக அவனை கொல்ல முடியுமா? அவன் என் தம்பிடா ராஸ்கல்..

“……………..”

மாமாம்,. அவன் என் தம்பி இல்லைனா கூட ஒரு உயிரை என் சுய நலத்துக்காக ஒருத்தனை கொல்ல முடியுமா? அறிவு கெட்டவனே….”

ஹரீஷ் என்ன வாய் நீளுது., நான் உன் மாமா

அதுக்காதான் போன்ல் பேசிகிட்டு இருக்கேன். இல்லன்னா என் எஸ்கார்டசை உன் வீட்டுக்கு அனுப்பி.. இருடா முதல்ல பெரியப்பா கிட்ட சொல்றேன்.. அவர் என்னமோ, இதை நான் பண்ண மாதிரி  சட்டையை புடிச்சி உலுக்குறார்

அய்யோ ஹரீஷ்.. விட்டுடு.. அவர் கிட்ட சொல்லாதே

அப்பா ஏம்பா இப்படி பண்ணீங்க? ச்சீ..”

“……………….”

எப்படிப்பா  இப்படி நீங்க யோசிச்சீங்க?   நீங்க யாரை  கேட்டு இதெல்லாம் பண்றீங்க?’

“………….”

ஹேய்ய் என் தம்பியை கொல்றேனு நீ என்கிட்டே சொல்றே?  னக்கு எவ்வளவு திமிரு?”

ஹய்யோ ., ஹரீஷ் உனக்கு நல்லது செய்ய போயி தான்பா.. உனக்கு வர வேண்டிய ஷேர் குறைய கூடாதுன்னு தான்பாஅவர் அழுதார்.

என் தம்பியை ஏதாச்சும் பண்ணுன்னு உங்க கிட்ட சொன்னேனா? அவன் எங் கிராண்ட்டனி வாரிசு. அவனுக்கு 500 கோடி இல்ல 50 கோடி இல்ல ,. 5 கோடி இல்ல  5 லட்சம்  கூட கொடுத்தாச்சும் நான் எங்காவது  அனுப்பிடுவேன் . ஆனா அவனை சாகடிக்க நான் யார்?” கூடப்பிறந்த தம்பிய போய் இப்படி பண்ணுவாங்களா? அந்தளவுக்கு நான் கல்நெஞ்சக்காரனா?  உங்களுக்கு அறிவே கிடையாதா? இனிமேல் என் மூஞ்சில முழிக்காதிங்க?  ன் தம்பிக்கு ஏதாவது ஆச்சுன்னா., உங்க மக கூட   நான் வாழரது பத்தி யோசிக்கனும் மாமா. “

மாப்பிள்ளை

அப்பா.,  அவரு மங்களூர்ல ஹோட்டல்ல பிரச்சனை பண்ணாதால தான் அவரை ஓசூர்ல வெச்சி போட்டாங்கன்னு சொல்றீங்களே? அது என்ன பிரச்சனைன்னு தெரியுமா உங்களுக்கு

பவி..”

அன்னிக்கு நைட்டு இவனுங்க குடிச்சிட்டு எங்கிட்ட வம்பு பண்ணாங்க..என் மேல கை வைக்க வந்தாங்க., இவரு குடிச்சிட்டு பார்ல விழுந்து கிடந்தார். “

“……………’

அப்ப மேரேஜுக்கு வந்த சுரேஷ் தான் கரெக்ட்டான டைமுல வந்து அவங்களை அடி, அடின்னு அடிச்சி போட்டு . போலீசில புடிச்சி கொடுத்து என்னை காப்பாத்தி என் ரூம்ல பத்திரமா சேத்தார்.”

அய்யோ என்னம்மா சொல்றே?” அவர் நிஜமாகவே அதிர்ந்தார்.

இப்ப அவங்களுக்கு காசை கொடுத்து அந்த சுரேஷையே கொல்ல ஆளை அனுப்பீருக்கீங்களே

அய்யோ .இ இ தெல்லாம் எனக்கு தெரியாதே?”

அவரு இல்லனா ., அந்த மூனு பேரும் என்னை. ஹோட்டல் ரூமுல வெச்சிஅன்னிக்கு நைட்டு..”

அய்யோ பவித்ரா அவர் அலற.,

ராஸ்கல்என ஹரீஷ் பல்லை கடிக்க., போன் கட் ஆக.,

அந்த காருக்குள்ளே  நிலைமை தர்ம சங்கடமானது.

ஹரீஷ் மீண்டும் அழுதான்.