மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, June 12, 2024

கள்வெறி கொண்டேன் முதல் பாகம் - EP 10

"அய்யோ மாப்பிள்ளை என்ன சொண்னீங்க? எப்படி ஒத்துக்கிட்டான்?"

"உண்மையை  சொன்னேன்னு பாட்ஷா ரஜினி டயலாக் எல்லாம் சொல்லாதப்பா ரகு?" பரசு சொல்ல.,

"ஆஆ..கிட்டத்தட்ட உண்மைதான். ஆனா, அந்த உண்மை உங்ககிட்ட சொல்லக்கூடாத உண்மை"

"நிஜமாவா?'

"ஆமா மாமா உண்மைய தான் சொன்னேன் ."

விஜிக்கு சான்ஸ் கிடத்த கொடுத்த சந்தோஷம், ஒரு புறம் இருக்க அது கிடைக்கப்பட்ட விதமும்,  அங்கு காமுக செகரட்டரி தன்னை நடத்திய விதமும் அவளுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது.

நல்ல வேளை ரகுபதி வந்தான். ஆனால் அவன் வந்ததும், அவளுக்கு உறுத்தலாக இருந்தது. அவன் நம்மை பற்றி ரகு என்ன நினைப்பான்?  எவனோ ஒருவன் நம்மை அத்துமீற அதை கணவன் தட்டி கேட்காமல், மருமகன் தட்டி கேட்டானே? நாம் நின்ற கோலத்தை மருமகன் பார்த்து விட்டானே? என்கிற நெருடலும்,  அவளுக்கு இருந்தது.

ரகுபதி காரை திருப்பிக் கொண்டு வந்தான்.' ஏறுங்க" என்ன சொல்ல ரகுபதி பக்கத்தில் பரசு உட்கார்ந்தான். பின் சீட்டில் விஜயலஷ்மி சாய்ந்து உட்காரந்தாள். இன்னும் படபடப்பு அடங்கவில்லை. அவளால் இதை நம்ப முடியவில்லை நம்பாமல் இருக்க முடியவில்லை.

சென்னைக்கு வந்த இந்த ஐந்து ஆண்டுகாலம் இந்த கிண்டி நாரத கான சபாவை பற்றி தான் அவள் கனவு கொண்டிருந்தாள். ஒரு நாள் ஒரு நிமிடம் இந்த மேடையில் ஏற நமக்கு வாய்ப்பு கிடைக்காதா? என நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், தேதி வாங்கவே முடியவில்லை. அத்தை எவ்வளவோ முயன்றாள். கணவனும் அல்லாடினான். ஆனால் யாராலும் முடியவில்லை. கடினாமன இந்த வேலையை நேற்று வந்த எனது மகளின் புருஷன் செய்து காட்டி விட்டான்.

' ரொம்ப நன்றி ரகு'  என சொல்ல அவள் மனம் துடித்தது.

ஆனால் புருஷன் எதிரில் எப்படி சொல்வது? என அவள் வாய் திறந்து மனபூர்வமாக நன்றி சொல்ல இயலாமல் நெஞ்சுக்குள்ளே மனம் குமுறினாள். கண்காளாளேயே நன்றி சொன்னாள்.

எப்படி அவன் சரியான நேரத்தில் வந்தான்?. அவளுக்கு வியப்பாக இருந்தது.

 

பரசு,  விஜயலட்சுமியை சபாவுக்கு வரச் சொல்லி மகள் ஷிவானிக்கு போன் செய்தவுடன், ரகு அப்போது தான் ஷிவானியிடம், 'என்ன ஏது?"வென்று கேட்டான்.

அப்போதுதான் ஷிவானி தனது அம்மா பரத நாட்டியத்தின் மீது வைத்திருக்கும் காதலை முழுவதுமாக விலாவாரியாக அவனுக்கு சொன்னாள்.

" என்னடி சொல்ற? ஆன்டி ஒரு பரதனாட்டியா டேன்சரா? ஓ மை காட்!  என்கிட்ட நீ சொல்லவே இல்லையே.  கிண்டி நாரத கானா சபால சாண்ஸ் வேனுமா? போடி முன்டம். எங்கிட்ட ஏன் சொல்லல நீ? இதுக்கு போயா 10 வருசம் டிரை பண்ணீங்க..உங்கப்பா எவ்ளோ பெரிய போஸ்டுல இருக்கார். அவரை விடு. எங்கிட்ட சொன்னீங்கன்னா முடிச்சிருப்பேனே.."

"உங்களால முடியுமா ரகு?"

"ஏய்ய் அங்க ஒரு எடுப்பு ஒருத்தன் இருக்கான்.  அவன் பெயர் சக்திவேலோ? ரத்தினவேலோ? ஒரு போன் போட்டா ஓடியாறான்? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா எப்பவே முடிச்சிருப்பேன்டி லூசு. "

"என்னங்க சொல்றீங்க இந்த ஒரு விஷயத்துக்காக எங்க அம்மா பத்து வருஷத்துக்கு மேல போராடிட்டு இருந்தாங்க., அய்யோ இது தெரியாம போச்சே"  என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் மறுபடியும் பரசு ஷிவானிக்கு போன் செய்து விஜியை, சுடிதாரில் இருந்து லெக்கின்ஸ் வர சொல்ல அவள் பதிலுக்கு பயங்கரமாக சீறிவிட்டாள்.

" என்னப்பா சொல்றீங்க? ரகு வீட்ல இருந்தார்னா மம்மி நைட்டி கூட போட மாட்டாங்க. உங்களுக்கு தெரியாதா? அவங்கள போய் சுடி போடு, லெக்கின்ஸ் போடுன்னு சொல்றீங்க?  அப்படி யாருப்பா அந்த டிரஸ்ஸை மம்மியை போட சொன்னான்? அவன் யாருப்பா இதெல்லாம் சொல்றான்?  பரத நாட்டியத்துக்குனு ஒரு டிரஸ் இருக்கு புனிதம் இருக்கு. லெக்கிங்க்ஸ் போட்டு யாராவது பரதநாட்டியம் ஆடி இருக்காங்களா? அவன் தான் சொன்னான்னா, உனக்கு எங்கப்பா போச்சு அறிவு?.. போனை வைய்யி. அம்மாவை திருப்பி அனுப்பி வை.. எங்காய்ச்சும் அவளை நிக்க வெச்சி அசிங்கப்படுத்த போறே?" ன்னு பயங்கரமாக சீறி திட்டி போனை வைத்துவிட்டாள்.

ஆனாலும், அவளுக்கு மனசு கொள்ளவில்லை, ஏதோ தப்பு நடக்கப் போகிறது என பயமாக இருந்தது.

"என்னடி ஆச்சு?" ரகு கேட்க,

"ஏங்க நீங்க  வேணும்னா,  போய் என்ன ஏதுன்னு போய் பாத்துட்டு வரீங்களா? எனக்கு பயமா இருக்கு.. மம்மிக்கு சுடி போட்டு அனுப்ப சொள்றாரு டாடி.. சரியான லூசு அப்பா"

"என்னடி சொல்ற? அப்போ நம்ம திருநீர்மலைக்கு போறோமா இல்லையா?"
" அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்,  முதல்ல நீங்க கிண்டி சபாவுக்கு போங்க. என்ன? ஏதுன்னு பாருங்க. எனக்கு ஏதோ மனசுக்கு தப்பா படுது' என ஷிவானி, ரகுவை அனுப்பி வைத்தாள்.

அவனும் கார் எடுத்துக் கொண்டு சபாவுக்கு கிளம்பினான்.

அவன் சக்திவேலைப் பற்றி பல விஷயங்கள் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருந்தான் .

ரகு சார்ந்து இருந்த ஒரு டென்னிஸ் சங்கம் சார்பாக ஒரு பாராட்டு விழாவை அந்த நாரதகான சபையில் வைப்பதற்கு ஒரு டென்னீஸ் வீராங்கனை தனியாக செகரட்டரியை பார்க்க போக,  அவன் எக்குததப்பாக நடந்து கொள்ள, அவனிடம் நைசாக பேசி, நேரில் வரவழைத்து குமுறு கஞ்சி காய்ச்சி, நையப் புடைத்தவர்கள் தான் ரகுபதியும் அவனது  நண்பர்களும்.

அவன் ஆள் சரியில்லை, ஒரு மார்க்கமானவன் என்பதை அவன் முன்னமே தெரிந்திருந்தான். அப்படிப்பட்ட இடத்தில் தனது அத்தை போனால் என்ன ஆவது? இந்த மாமாவோ எதற்கும் லாயக்கற்றவர், பரசுராமர் நல்ல திறமையான நிர்வாகி, தான். ஆனால் அது ஆபீசில், வெளியில் அல்ல. அந்த ஆளை நம்பி அத்தை போய் விட்டார்களே?'  என பயந்து கொண்டே ரகு வேகமாக காரை ஓட்டினான்.

 காரை சபா  பார்க்கிங்க்கில் ராங்க் சைடாக நிறுத்திவிட்டு ஓடினான். ஓடிப்போய், அந்த சபா செக்ரட்டரி சக்திவேலின் ரூமின் வாசலில் நிற்க மாமாவும் அத்தையும் உள்ளே இருப்பதை கண்டு, அவன் வாசலிலே நின்று ஹைட்ராலிக் கதவை மட்டும் லேசாக திறந்து கொண்டு அவர்கள் பேசும் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான்.

எப்போது விஜயலட்சுமியை 'கையை தூக்கு, இடுப்பு காட்டு" என சொன்னானோ, அப்பவே அவனை உதைக்க வேண்டும்' என அவன் முடிவு செய்து கொண்டான். சுடி போடு , லெக்கிங்க்ஸ்ல வா' என்னும் போது அவன் கோபம் உச்சம் தொட்டது.

அப்படித்தான் உள்ளே நுழைந்து சக்திவேலை துவம்சம் செய்தான்.

'என்ன ஆச்சு அத்தை? வொய் யூ டல் ஃபீல்? உங்களுக்கு சந்தோஷம் தானே! நீங்க விருப்பப் பட்டபடி சான்ஸ் கிடைச்சுதா? தி கிரேட் நாரத நாட்டிய சபா. தவ்சன் டூ  ஹன்ட்ரட்ஸ்.. சீட்ஸ் கெப்பாசிட்டி. செம்மையா கலக்க போறீங்க"

 "......அட போங்க மாப்பிள்ளை"

" நீங்க டேன்சர்னு தெரியாம போச்சே? ஒரே ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருந்தா, அந்த செகண்டே இந்த செகரட்டரியை,   நம்ம வீட்டுக்கே கூப்பிட்டு சான்ஸ் வாங்கி இருக்கலாமே! எங்கிட்ட சொல்லாம என்ன இப்படி பண்ணிட்டீங்க ?" என சொல்ல, விஜி குனிந்து கொண்டாள். அவள் அழுகிறாள் என நினைத்தான். பதறினான்.

" அய்யோ மாமா., ஆன்டி அழுவுறாங்க"

" விடு விஜி அதான் சான்ஸ் கிடைச்சாச்சு இல்ல? ஏன் அழறே? டேக் இட் ஈஸி"

" நீங்க பேசாதீங்க உங்க எதிரிலியே, அவன் என்னை பேர் சொல்லி கூப்பிடறான், இப்படி திரும்பு, அப்படி திரும்புன்னு சொல்றான். கையை தூக்கு, இடுப்புல சதை போட்டு இருக்கா?'  இதெல்லாம் கேட்கிறான்.  நீங்க அப்படியே பார்த்துகிட்டு இதே மாதிரி தான் அசையாம  நிக்கீறீங்க "

".................."

"நீங்க கொஞ்சம் கூட ரோஷமே இல்லாத ஆளு. உங்களுக்கு ஒரு இஙக்கிதமே கிடையாது. ஏன்னா, அவன் உங்க பொன்டாட்டிகிட்ட தப்பா நடந்தும் கூட, உங்களுக்கு கோபமே வரல. உங்களை கூட்டிட்டு போனதுக்கு பதிலா ஒரு கல்ல கூட கூப்பிட்டு போய் இருக்கலாம்" என விஜி சரமாரியாக சீறி திட்ட.,

"அச்சோ விடுங்க விடுங்க அத்தை, அவன் நல்லவன்னு நினைச்சி,  மாமா உங்களுக்கு ஏதோ நல்லது நடக்கப்போவுதுன்னு அமைதியா இருந்திருக்காரு" என மாமாவை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.

" அது இல்லங்க. நீங்க மட்டும் அந்த சமயத்துக்கு வரலைன்னா, ஐயோ எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. என் ஜென்மமே முடிஞ்சு போயிருக்கும்" என விஜி சொல்ல

"அட விடுங்க அத்தை, அவன் எல்லாம் ஒரு ஆளா? அவனெல்லாம் கரப்பான் பூச்சி மாதிரி அடிச்சு நசுக்கணும். அதை நினைச்சி கவலைப்பட கூடாது."

"என்னை எப்படியெல்லாம் பேசினான் தெரியுமா? "

"அப்ப அவனை அடிச்சப்ப எதுக்கு தடுத்தீங்க"

"ம்ம்ம்.அந்த ஆளுக்கு ஒன்னு கிடக்க ஒன்னாச்சுன்னா. நமக்கு தான்  பிரச்சனை. உங்க பொண்டாட்டிக்கு யார் பதில் சொல்றது?"

"சரி சரி விடுங்க,. ஆக வேண்டியதை பாருங்க. உங்களுக்கு அடுத்த மாசம் 17ஆம் தேதி டேட் வாங்கி இருக்கேன். இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு. நீங்க அதுக்கு ரெடியாகுங்க போதும்.  அதை தவிர மனசுல, வேற எதுவும் வச்சுக்க கூடாது", என ரகு சொல்ல. விஜி, மருமகன் சண்டையிட்டு வாங்கி தந்த, தனக்கு கிடைத்த திடீர் பரிசு ஏற்க முடியாமல் திணறினாள்.

"ஆங்க்.. அப்புறம் ஒன்னு. இங்க நடந்ததை  நாம யாரும் ஷிவானி கிட்ட சொல்லிக் கூடாது. எது நல்ல விஷயமோ, அதை மட்டும் சொல்ல பழகிக்கங்க" என கணவன் மனைவி இருவருக்குமே உத்தரவு போட்டான் ரகு.

"ம்ம் சரி" பரசு தலையாட்டினான்.

அவர்கள்  வீட்டிற்கு போய் ஷிவானியிடம் ' உங்க மம்மிக்கு டேட் கன்பர்ம். செவன்டீத் ஸ்டேஜ்  பெர்மார்மன்ஸ்., நோ ஆடிஷன். டைரக்ட் செலக்ஷன்" ரகு அலட்டலாய் சொல்ல.,

"வாவ்வ் மம்மி..." ஷிவானி சந்தோஷத்தில் குதித்தாள்.  டிசம்பர் 17 தேதி வைத்துக் கொண்டு ஷிவானி நாட்டியத்திற்கு முழு மூச்சாய் ரெடியானாள். நாம் மட்டும் ஆடுனா போதாதே' ஷோபனா வேனுமே' விஜி தன் தங்கை ஷோபனாவையும் ஆட்டத்தில் சேர்த்தாள்.

எளிதில் நடனம் ஆட சம்மதிக்காத ஷோபனா கூட, ஷிவானி, விஜியின் தொந்தரவால் வெகு நாள் கழித்து மேடை ஏற சம்மதித்தாள்.


 

 


கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "