மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, July 25, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1807

 இருவரும் உள்ளே போக ரேகாவின் அப்பா, அம்மா, அண்ணன், தங்கைகள் எல்லாம் அந்த நடு வீட்டில் சோகமாக உட்கார்ந்து இருந்தார்கள்.

ஹலோ அங்கிள்ரஞ்சிதா தயக்கமாய் வீட்டுள் நுழைய.,

வா. நீ தான் ரஞ்சிதாவா?”

ஆன்டி எப்படி இருக்கீங்க? அங்கிள் எப்படி இருக்கீங்க ?”

அது இருக்கட்டும்.  இவன் யாரு? உனக்கு பாடி கார்டா?

அங்கிள். இவர் என் பாய்பிரெண்ட்

இந்த கருமாந்திரம். இது தான் தான் எல்லா இடங்களிலும் ஒரு பிரச்சினையா இருக்கு..”

“………………”

எல்லா பொண்ணுங்களும் இதான் பிரச்சினை.  நீங்க லவ் பண்றீங்கன்னா., லவ் பண்றவனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே,  அதை பெத்தவங்க்கிட்ட  சொல்ல வேண்டியது தானே, இப்படி மறைச்சு மறைச்சு எதுக்கு எல்லாரும் எங்களை சாகடிக்கிறீங்க?”  ரேகாவின் அப்பா கத்த.,

அங்கிள் கூல்.., கூல் .,ரேகா அப்படியெல்லாம் யாரையும் லவ் பண்னல., எனக்கு தெரிஞ்ச்சிரஞ்சிதா சொல்ல

ஹேய்ய் ரஞ்ச்சிதா., கண்டிப்பா ரேகா பிராப்ளம் உனக்கு என்னன்னு தெரியும். காலேஜ்ல விசாரிச்சா நீ தான் அவளுக்கு குளோஸ்னு சொல்றாங்க., என் பொண்ணுக்கு என்னனு தெரியாம, நான் உன்னை உங்க இருந்து அனுப்பமாட்டேன். தோ இந்த பாடி கார்டு என்ன செஞ்சு கிழிக்கிறானு பாக்கறேன்

“……………..’

யேய்ய்.. மரகதம்.. ரேகாவோட மத்த பிரண்ட்ஸ்., ஸ்வேதா, சௌம்யா எல்லாரையும் இங்க வரவழை.., டேய். அஷோக் அவங்களுக்கு போனை போட்டு இங்க வரவழைடா. எல்லாரையும் தூண்ல கட்டி உரிக்கறேன்அவர் தன் மனைவி, மகனிடம் ஆவேசமாக கத்த.,

ஸார்..ஒரு நிமிஷம் பொறுமையா இருங்க, முதல்ல என்ன பிராப்ளம் சொல்லுங்க. உங்க பொண்ணு பிரபாளத்தை எல்லாரும் மேல் சுமத்தினா அப்புறம் தீர்வு கிடைக்காது. நீங்க முதல்ல உங்க டாட்டருக்கு என்னாச்சுனு சொல்லுங்கசுரேஷ் நிதானமக பேசினான்

ஆமா டாடிபொறுமையா இருங்க”  அவர் மகனும் அவனை சமாதானப்படுத்த

எப்படிடா இருக்கறது?., கல்யாணம் ஆன ரென்டாவது மாசம் எம் பொன்ணை வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க., பேய் புடிச்சிருக்குன்னு சொல்றானுங்க..”

அவரது கோபம் குறைய அழுகை வர., அவரது பெண் பாசத்தினால் தான் அவர் ஆர்ப்பாட்டம் செய்கிறான் என்பதை புரிந்து கொண்டு சுரேஷ் அவரை நெருங்கி ஆதரவாய் தோளை தொட்டான்.

சார் .ஆக்சுவலா ரேகாவுக்கு என்ன பிராப்ளம்?”

நான் என்னன்னு சொல்றது?. கல்யாணம் பண்ணி ரெண்டு மாசம்தான் ஆச்சு. அவங்க வீட்ல இந்த பொண்ணு சரியில்லை சொல்லி அனுப்பிட்டாங்க இங்க என் வீட்டுல எப்பவும் ரூமுக்குள்ள தான் இருக்கிறா. கேட்டா புருஷன் கூட வாழ புடிக்கலன்னு சொல்றா. மாப்பிள்ளை பையன் சொக்க தங்கம்.

“………..”

வேற என்னடி வேணும்ணா எதுவுமே சொல்ல மாட்றா. அடிக்கடி ஈஸ் ஈஸ் ங்க்கிறா. என்ன அது ஈஸ்? இவளை யாரோ ஏதோ பண்ணிட்டாங்கன்னு நாங்க ஃபீல் பண்றோம்.மாந்த்ரீக்காரங்களை கூப்பிட்டு கேட்டோம். பாத்துட்டு இது பெரிய விஷயம். எங்களால ஒன்னும் பண்னம் முடியாதுன்னு கை விரிச்சிட்டாங்க.. கேரளா ஆளுங்களை கூப்பிடோம். இவளுக்கு பண்ணவங்களை கூப்பிட்டு விசாரிச்சா தான் மாத்து வழி சொல்ல முடியும்னு சொல்றாங்க.. என் பிசினஸ் எதிரிங்க யாரும் இல்ல. அதான் இந்த பொண்ணை கூப்பிட்டு ஏதாச்சும். லவ், கிவ்னு பசங்க சுத்துனாங்களான்னு? விசாரிக்கிறேன்.”

என்ன சார்?  இந்த காலத்துல மந்திரமாய் எல்லாம் இருக்கா என்ன?”

ஏன் இல்லாம? எத்தனையோ சைக்காக்ரிஸ்ட்டு டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போனோம். எல்லாருமே உங்க பொண்ணுக்கு எதுவுமே இல்லை’  நார்மலா தான் இருக்காங்க.,  ஏன் இப்படி நடந்துக்கிறாங்க தெரியலையே ன்னு தான்  சொல்றாங்., அப்ப என்ன அர்த்தம்..? கல்யாண ரிஷப்ஷன் வரைக்கும் சரியாத்தானே இருந்தா.. முஹூர்த்தம் முன்னாடி கூரை புடவை கட்ட அவங்க அம்மா போனா., வெறிச்சி பாத்துக்கிட்டு இருந்தாளாம்..”

.. ..சீ.. நாங்க உங்க பொண்ண பார்க்கலாமா சார்?”

தாராளமா போங்க . அந்த ரூம்ல தான் இருக்கா.” என்றாள். ரஞ்சிதாவும் சுரேஷும் அவள் அறைக்கு செல்ல., அங்கே ரேகா அலங்காரம் இல்லையென்றாலும் மிக அழகாக இருந்தாள். ஒரு சாதாரண காட்டன் சுடிதாரில் அழகு தேவதையாக ஜொலித்தாள். அவளது இளமை வளைவுகளும் தினவெடுத்த உடல் அழகும் பார்த்தால் பல முறை காமத்தை ருசித்தாற் போல் இருக்கிறது. ஆனால், கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்கிறார்களே. அதுதான் ஒரே குழப்பமாக இருக்கிறது என நினைத்தபடி இருவரும் அவள் அருகே சென்றார்கள்.

ரேகா கட்டிலில் உட்கார்ந்து இருக்க, அருகே இருந்த நாற்காலிகளில் இருவரும் போய் உட்கார்ந்தார்கள்,அவர்களைப் பார்த்ததும் எழுந்து கொண்டாள்.

ஹாய் ரஞ்ச்சிதா..வாடி”..என்றவள் ஆஜானுபாகுவாய் வசீகராமாய் இளைஞன் ஒருவனை தன் அறைக்குள் பார்த்த்தும் புருவம் சுருக்கினாள் .

இவர் பேர்..சுரேஷ் என்னுடைய பிரண்டு .,”

ஓ வாங்க..”

ரேகா. நான் உன்ன பத்தி கேள்விப்பட்டேன். உங்க அப்பா உன்னை பத்தி ரொம்ப கவலைபகிறார் என்னாச்சு ரேகா?”

ப்ச்.. எனக்கு ஒன்னும் இல்லடி..அவர் தான் சீன் கிரியேட் பண்றார்..”

அட நார்மலாதானே பேசறா..

ரேகா னக்கு கொஞ்சம் ப்ரீயா ன்கிட்ட பேசணும்.மறைக்காம சொல்லு

இல்லடி ஐ அம ஆல்ரைட்.. எனக்கு ஒன்னும் இல்ல ரஞ்சிதா அப்பாதான் தேவையெல்லாம் போட்டு குப்பிட்டிருக்கிறார். எனக்கு எது புடிக்குதோ அதை செய்ய விட மாட்டேங்குறாரு

உனக்கு எது புடிச்சி இருக்கு?”

அதான் தெரியலையே . ஒருவேளை ஈஸ்.. ஈஸ்  இருக்குமா? ஒரு நேரம் அது நல்லா இருக்கு இன்னொரு நேரம் வேற நல்லா இருக்கு.  எல்லா நேரமும் வேற ஏதாவது கிடைச்சா நல்லா இருக்குனு நினைக்கிறேன்.எனக்கு எதுக்கு  நல்லதுன்னு எனக்கு புரியல., எனக்கு பிடிக்கவே இல்லைஅவள் திடீரென சம்பந்தமில்லாமல் பேச ரஞ்சிதாவும், சுரேஷிம் ஒருவரை  ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அவளது தனிப்பட்ட அந்தரங்கம் விஷயங்களுக்கு மட்டும் ரேகா உளறலாக பதில் சொன்னாளே தவிர, மற்ற எல்லா விஷயங்களிலும் நார்மலாக இருந்தாள். அதனால் தான் சைக்கலாஜிக்கல் டாக்டர்கள் நிபுணர்களால் அவளுக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை போல என அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

இன்னும் கொஞ்ச நேரம் ரேகாவிடம் பேசிவிட்டு வெளியே வந்தார்கள்.

என்ன தம்பி பேசினீங்களா என் பொண்ணுக்கிட்ட என ரேகாவின் அப்பா கேட்க சுரேஷ் ஹாலில் உட்கார்ந்து படி யோசித்தான்.

சார். நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? இவங்க ரொம்ப நார்மலா தான் இருக்காங்க. பொண்ணு பார்க்க மாப்பிள்ளை பையன் வந்துட்டு போனதிலருந்து , நிச்சயதார்த்தம், பந்தக்கால், ரிஷ்ப்ஷன் வரைக்கும் நல்லா தான் இருக்காங்க. ரிஷப்ஷன் முன்னாடி நலுங்கு வைக்கும்போதும் நார்மலா தான் இருக்காங்கன்னு நீங்க சொல்றீங்க. அதுக்கு அப்புறம் தான் அவளுக்கு ஏதோ பிரச்சினை ஆயிருக்கு. அதாவது ரிஷப்ஷனுக்கு முகூர்த்தத்துக்கும் நடுவாலசம்திங்க் ஹாப்பன்ட்..”

“……………………..”

பை த பை . உங்க ரேகாவோட கல்யாண கேஸட் உங்ககிட்ட இருக்கா?”

இருக்கே., தம்பி ஆனா எங்களுக்கு போட்டு பாக்க தான் பிடிக்கல என்றார்.

பரவால்ல இப்ப போடுங்கஎன்றபடி அந்த வீட்டின் பெரிய டிவியில் அவர்கள் கல்யாண பட சீடியை போட்டார்கள். வரவேற்பு காட்சிகள் ஒவ்வொரு வினாடியிலும் ரேகாவின் முகத்தில் தெரிந்த மாற்றங்களை குறித்துக் கொண்டே வந்தான். ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் மறுநாள் முகூர்த்த்த்தில் ரேகாவின் முகத்தில் பெரிய வித்தியாசம் தெரிந்தது. அந்த இரவு அவளுக்கு என்னமோ நடந்திருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான்.

மறுபடியும் அந்த கேசட்டை போட்டு வரவேற்பு நிகழ்ச்சியை ரீவைன்ட் பார்க்க,வந்திருக்கக் கூடிய ஆட்கள் யாராவது வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா? என கவனித்தான்.

இரன்டு டீ, ஒரு மினி டிபன் சாப்பிட்ட பிறகு தான் சுரேஷ் அந்த கிரே கலர் சபாரி சூட் ஆசாமியை கவனித்தான். அவன் மட்டும் ரேகாவை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்ததை கவனித்தான்.

அட இரண்டு தடவை ஸ்டேஜ் ஏறுகிறானே? ஏன்? யாரிவன்?

ப்ரீஸ் செய்யுங்கசுரேஷ் கத்த., சிடி நிறுத்தப்பட திரையில் அவன்.

அங்கிள் யார் இது?”

தெரியலையே

எதுக்கு டூ டைம் ஸ்டேஜ் ஏறுறான்..”

எல்லாரும் டிவிய பார்த்தார்கள்.  வீடியோ ஓட.,

யெஸ்.. ஃபர்ஸ்ட டைம் வரான்.. கிப்ட் கொடுக்கறான்.. கேப் விட்டு அகெய்ன் வரான்..”

ரேகாவையையே பாக்குறாம்பா.. அவன் கண்ணை பாருங்களேன்ராஸ்கல் வூ இஸ் திஸ்?’

வெய்ட் இவன் ஸ்கீர்ன்ல வரப்ப ப்ரிஸ் பண்ணி போட்டோ எடுங்க

எடுத்தார்கள்.

சார். இவன் உங்களுக்கு தெரிஞ்ச ஆளா?”

இல்லப்பா., மாப்பிள்ளை சைடா இருக்கலாம்.. ஒருவேளை மாப்பிள்ளைக்கு உறவாய் , சம்பந்திக்கு ஃபிரண்டா இருக்கலாம்

சரி இந்த ஆள் போட்டோவை  உங்கள் சம்பந்தி வீட்டிற்கு அனுப்பி இவர் யார் என கேட்டு சொல்லமுடியுமா ?”

நானா?’

ஆமா கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் என்று சொல்ல உடனே அந்த ஆசாமி போட்டோவை அனுப்ப அவர்கள் பதில் அளித்தார்கள் .

இவரா? இவர் பெரிய ஸ்காலர் ஆச்சே?

‘பேரு?’
ஈஸ்வர் சந்திரன் என பதில் வந்தது .


 

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்