மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 4, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2055 ( திபூவை இறுதி பாகம்)

 ப்படிக் காப்பாத்த முடியும் தாயே?.  ஒவ்வொரு  நாள் ஒரு பாவத்தை செஞ்சி வச்சிருக்கானுங்க .  இப்ப ஆளுங்க தேடிவந்து கொன்னு போ வந்திருக்காங்க. இதெல்லாம் தடுக்கும் சக்தி நமக்கு இல்ல.”

அப்போ, இந்த கண்டத்தில் இருந்து என் பையன் தப்பிக்க மாட்டானா?”

 தெரியல தாயே என்ற சொல்லும் போதே அவரது குரல் உடைய.,

சரி விடுங்க., ங்க இருந்து என்ன பண்ண போறான்? இன்னும் நாலு பொம்பளைங்கதான் இவன் கிட்ட சீரழியனும்?” என வேதனையாக சொல்ல,.

 கிழவர், இதே தான்  உன் பெரிய பையனும் பண்றான். ஆனா அவன் மேல மட்டும் உனக்கு ஏன் அவ்வளவு கருணை?  சுரேஷ் மேல மட்டும் அவ்வளவு கடுப்பு?”

பெத்த புள்ளைங்க செய்ற தப்பை ., சரின்னு  நாம எப்பவும் சொல்ல கூடாது. இவனும் தப்பு, அவனும் தப்பு ,ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் நல்ல புத்தி வரணும்,”

சாமிதான் நல்ல புத்தியை கொடுக்கணும்? நாம என்ன பத்தா பெத்து வைச்சிருக்கோம்.. ரெண்டே இரண்டு தான்.  அந்த இரண்டுமே இப்படி பொம்பள மோகத்துல திரிஞ்சு போவுதே ன்னுதான் கவலையா இருக்கு. எல்லா வாலிப பசங்களுக்கும் அந்தந்த வயசுல வரக்கூடிய ஆர்வகோளாறு தாண்டி இது. ஆனால் இதில் அகப்படாமல் தப்பிச்சு நீந்தி கரையேற சிலபேருங்க தான் உன்னதமான நிலைக்கு வந்துடுவாங்க்க.. ஆனால் அதுதான் நம்ம பசங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை

எனக்கு என்னமோ இந்த சுரேஷோட கிரகங்கள் மாறுதல் இருக்குமுன்னு நினைக்கிறேங்க.  மூனு ஒம்பது இருவத்தி ஏழு.. அவன் பொறந்து 27 திதி போச்சே. இல்லேன்னா நம்ம குலதெய்வம் கோயிலுக்கு வரணும்ன்னு அவனுக்கு தோன்றி  இருக்குமா? “

அதான்டி வினை. இப்ப அவனுங்க கிட்ட,உன் புள்ளை  தனியா வந்தீருக்கான்.”

..இல்லங்க., எதுவோ ஒன்று அவனை இங்க வர வைச்சிருக்கு.. அதுவே ஒரு நல்ல மாற்றம்னு  நினைக்கறேன்.”

நீ வேற தாயே!  அவன் இப்போ இங்க வந்ததால் தான் அவங்க கத்திகளுக்கு இரையாக போறானோ என்னவோ?” என சொல்லி அந்த சிபு வின் டவேரா காரை காட்டினார்.

அந்த இரண்டு ஆன்மாக்களின் பலத்த வாக்குவாத ஓசை அங்கே இருக்கும் பறவைகளுக்கு, பூச்சிகளுக்கு  தெளிவாக கேட்டது.  அவை  மிரண்டு போய் இன்னும் மரக்கிளையில் தங்காமல்  வினோதமாக அலைந்து கொண்டே இருந்தது.

கோயிலுக்கு நேர்ந்து  விட்ட ஆடு, மாடு கோழி கள் பிரகாரத்தை விட்டு எட்டிப் போயின. சூட்சும சக்திகளின் பலத்த ஓசை அந்த பிராந்தியத்தில் கனமாக ஒலிக்க.,

சரி அவன்கிட்ட ஏதாச்சும் கடைசியா பேசுங்க. ஸ்தூல வடிவா போங்களேண்.. எனக்கு என்னமோ பயமா இருக்கு என்றாள்.

எனக்கு கூட பேசணும் தான்., ஆனா எப்படி பேசறது தான் தெரியல?. ஆனா ஒரு வேளை., அதோ பார், அந்த சின்ன மண்டபத்துல அருள்வாக்கு சொல்றேன்னு சொல்லி ஒருத்தன் வந்து இருக்கான் பாரு., கறுப்பா

ஆமா முடி எல்லாம் ஜடை தட்டி போய் இருக்கே. அவனையா சொல்றீங்க?” எனக் கேட்க

ஆமா அவன் கிட்ட உன் பையன் போனா., என்னால சுரேஷ் கிட்ட பேச முடியும்னு  நினைக்கிறேன்

அது என் பொறுப்பு எண்றாள்அம்மா


ம்மா  சொல்லிக்கொண்டே இருக்கும்போது மரத்தின் கீழே  நிழலில் நின்றிந்த மலர்,

அங்க பாருங்க ஒருத்தர் அருள்வாக்கு சொல்கிறார். போய் கேட்கலாமா?” என்றாள்.

அதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை என சஞ்சனாவும், சஞ்சனாவின் கணவரும் சொல்ல.,

சுஜாதா மட்டும் போய் என்னதான் கேட்கலாமே வாங்க”” என்று சொல்லி , அந்த குடும்பமே அந்த மண்டபம் நோக்கிப் போனது.

ஆனால் அவர் யாரையுமே கூப்பிடவில்லை. ரென்டு இட்டிலி கேட்டார். சாப்பிட்டு முடித்த பிறகு., ‘ஏவ்வ்.. என ஒரு ஏப்பம்

இந்த குடும்பத்தை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு,

சுஜாதா பக்கம் திரும்பினார்.

என்ன இப்ப சுகமா?”

“………சாமி?…….”

போதும்ல இந்த ஆயுசுக்கு?”

அவளுக்கு ஏதும் புரியாமல் இருக்க.,

அவர் சுரேஷ்ஷை மட்டும் விரலைக் காட்டி கூப்பிட்டார்.

சுரேஷ் அருகே வர,.

என் பின்னால வா கன்னட்த்தில் சொன்னார்.

அவர் மண்டபத்திற்குள் சென்று ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டார், சுரேஷ் பின்னல போனான்,

 மலர் குடும்பம் தொலைவில் இருக்.,

சுரேஷ்  அவர் எதிரே உட்கார, அவர் கற்பூரத்தை ற்றினார்.

என்னென்னமோ மந்திரம் சொன்னர். உடல் சிலிர்த்தார். கண்ணீர் விட்டார்.

 என்ன தம்பி இப்படி வில்லங்கத்தில் மாட்டீங்களே >“

ஐயா சுரேஷ் திகைக்க

அவர் கண்ணை மூடிக்கொண்டார்.

உனது பெயர் சுரேந்தர், சுகுமார், சுரேஷ், சுதன் இதுல ஒன்னா?”   என கேட்டார்.

ஆமாங்க சொன்னான்.

இந்த இடத்துக்கு வரதுக்கு உனக்கு இவ்ளோ நாளா ஆயிடுச்சா தம்பி?”

சுரேஷ் தலையை மெல்ல சாய்த்து கொண்டான்.

உன்னை சொல்லி குற்றமில்லை. அலவில்லாத வயசு. ஆடாத ஆட்டம். “

“…………..”

பொம்பளையிய காம்மா பாக்கறது தான்  இளமைங்கறது முட்டாள்தனம்னு உனக்கு மட்டுமில்ல ., இங்க பலருக்கும் தெரில.”

“……………..”

காமம் எல்லாத்தையும் திண்னுடுச்சு. உன் அறிவைநேரத்தை, நல்ல மனசை.. எல்லாத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும். இப்ப நான் விட்டேன்ல அது மாதிரி

“………………”

காமம்னா அது உடல் சம்பந்தப்பட்டது அப்படின்னு  நினைக்கிறது தப்பு. அது மூளை சம்பந்தப்பட்டது. அந்த மூளையை எப்போதும் சுத்தமாக ஆரோக்கியமாக வைச்சிக்கனும். சுத்தமான ஆரோக்கியம்னா எப்படி?. சுத்தமான எண்ணங்கள்தான் ஒரு மூளையை சுத்தமாக வைச்சிக்கும்

இந்த பூமியில நம்ம செய்ற ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கர்மா இருக்கு. ‘ யாரும் பாக்கல யாருக்கும் தெரியாது நமக்கு சந்தோஷமா இருக்கு அப்படின்னு செய்கிற எந்த வேலையாக இருந்தாலும் அதுக்கு நிச்சயம் பதில் இந்த பிறப்பிலேயே உனக்கு கிடைக்கும் .

இந்த பூமில நடக்கிற குற்றச்செயல்கள் எல்லாத்துக்கும் மண்னு,  பொண்ணு ரெண்டுதான் காரணம்.  இந்த ரெண்டு மேல ஆசை வைக்கலாம் தப்பு இல்ல. ஆனா வெறி இருக்க கூடாது. இது உனக்கு நான் அறிவுரையாக சொல்லல.

இதுதான் கோடு என்றால் அந்த  கோட்டுக்குள்ள தான் நாம நடக்கணும். கோட்டை விட்டு போனா என்னன்னு நாம நினைச்சா? தப்பு.  அப்படியே எல்லாருமே நினைச்சா வீண் குழப்பம் தான். யாரும் இங்க இருக்க முடியாதுமேலே கை காட்டினார்.

ஐயா என் தவறு எனக்கு தெரியுது.  ஆனா ?”

ஆனா என்ன? நீ செஞ்சது யாருக்கும் தெரியாது நினைக்கிறியா நீ? செஞ்ச பாவங்களை நான் லிஸ்ட் போடட்டுமா? அந்தப் பாவங்களுடைய கூட்டு என்னமா இப்ப வந்து இருக்கு தெரியுமா? இப்போ இந்த கோயில் வாசல்ல அது காத்துகிட்டு இருக்கு. நீ கோயிலை விட்டுப் போன தான் , அது உனக்கு தெரியும்.”

ஐயா அவன் திகைப்போடு கேட்க,

டேய்ய்ய்  உன்னை கொன்று போட்டு புதைக்க இந்த உலகமே காத்திட்டு இருக்கு.  ஆனா இது ன் ரத்த பந்தம் ன்னு சொல்லி கிட்டு காலையிலருந்து ரென்டு  ஆன்மா அழுது,  அதை தடுத்து கிட்டு இருக்கு

ஐயா எனக்கு ஒன்னும் புரியலையே

நீ எப்பவாச்சும் உங்க அப்பா அம்மா போட்டோவை வணங்கி கும்பிட்டு இருக்கியா?

“…..”

 உன் குலதெய்வம் கோயிலுக்கு வந்து அன்னதானம் போட்டிருக்கியா ? முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு உதவி பண்ணி இருக்கியா ? ஜீவராசிக்கு இரை போட்டிருக்கியா? கை, கால் இல்லாதவங்க உடம்பு முடியாதவங்களுக்கு தண்ணி கொடுத்திருக்கியா? யாரையும் ஏமாத்தாம துரோகம் பண்ணாம நடந்து இருக்கியா? பிறந்ததிலிருந்து எந்த நன்மையும் செய்யாத ஒருவனுக்கு எல்லா நன்மைகளும் தானாகவே கிடைக்கும் நினைச்சா, நம்மை யாராச்சும் காப்பாத்துவாங்கன்னு மதப்ப்பா இருந்தா அதைவிட பெரிய முட்டாள்தனம் உலகத்தில் வேறு எதுவுமே இல்லை.. நீ பட்டுத்தான் ஆகனும்

அவர் விட்டு விட்டு பேசினார். பேச்சு கோர்வையாகை இல்லை. யாரோ பக்கத்தில் உட்கார்ந்து சொல்லி கொடுத்ததை அவர் உள்வாங்கி சொல்வது போல சுரேஷின் மனதுக்கு பட்டது.

இந்த கோயில் உங்க குடும்பத்துக்கு மட்டுமல்ல, 40 குடும்பத்துக்கு சொந்தம். 300 வருஷத்துக்கு முன்னாடி 40 ஏழை குடும்பம் இந்த மண்ணில் இருந்தது. அந்த 40  குடும்பமும் சேர்ந்து கட்டிய கோயில்தான் இது . இதுல இருக்கிற சாமி வேற யாரும் இல்ல உங்க வம்சாவழில வந்து பொறந்த ஒரு பாவப்பட்ட பொன்னு தான். அதுக்கப்புறம் அந்த  நாப்பது குடும்பமும் திசைக்கொன்னா ஓடிப்போச்சு.  நாப்பது, நாலாயிரம் ஆச்சி, 4 லட்சம் ஆட்சி.,  ஆனா அவங்கள பலபேரு இந்த கோயிலை எட்டிப் பாக்கல.”

“………………”

மரக்கான் கிரான்டனி,பையன் வீரய்யா கிரான்டனி,. குடும்பம் தவறாமல் இந்த கோயிலுக்கு வந்துட்டு இருந்தது. அந்த வீரய்யா கிரான்டனி பையன் தான். உங்கப்பன்., சீராம் கிரான்டனி.”

சுரேஷ் திகைப்பானான்.

தோ அழுதுகிட்டிருக்கான்.. பாரு சுவத்தை காட்டினார் சம்பந்தமில்லாமல்,.

உங்க தாத்தா வீரய்யா கிரான்டனி தான், இந்த கோயிலைச் சுற்றி இருக்கிற நிலத்தை வாங்கி கோயில் பேரில் எழுதி வைச்சிட்டு  போனார்.

அப்புறம் உங்க அப்பா சீராம் கிரான்டனி, இந்த மண்டபத்தை யெல்லாம் கட்டி கொடுத்தார் ,அதுக்கு அடுத்த தலைமுறை நீயும், உங்க அண்ணனும் இந்த கோயிலுக்கு என்ன பண்ணிங்க ? ஒருவேளை சோறு ? யாருக்காச்சும் சோறு போட்டு இருக்கீங்களா?முதல்ல இப்படி ஒரு கோயில் இருக்குன்னு வெளீ உலகத்துக்கு தெரியுமா?

“……………”

உன்மேல மட்டும் இல்ல? உன் ஒட்டுமொத்த பரம்பரை மேல அம்மன் ரொம்ப கோபமா இருக்கா? என்ன ஏது ன்னு நீ கோயிலுக்கு போனாத்தான் தெரியும் என சொல்ல ,.

அய்யா இப்ப நான் என பண்னனும்?”

“……………….”

இனிமே எப்படி இருக்கனும்?”

ஓன்னும் பண்ண வேணாம். எல்லாம் முடிஞ்சி போச்சி., நீ கிளம்பு.. அதோ இருக்காளுங்க பாரு மூனு ஆட்டக்காரி.. குடிச்சிசிட்டு ஆட்டம் போடு..

“………………..”

அய்யா இப்ப நான் என பண்னனும்?”

“………………..”

ஐயா இப்போ எனக்கு ஒரு பொண்ணு பாத்து இருக்காங்களே அவங்கள நானு கட்டிக்கலாமா ? “என சொல்ல அவர் அவனை உற்றுப் பார்த்தார்.

நான் சொன்னது உனக்கு எதுவும் புரியல. போடா பைத்தியக்காரா? என்றார் கோவத்தோடு.

ஐயா?” என அவன் கூப்பிட.,

அவர் மண்டபத்தை விட்டு., வெளியில் வந்து அங்க்கிருந்த  முள் புதரை நோக்கி போனார்.

என்ன நான்  கேட்டுவிட்டேன்?  அவன் சுற்றுமுற்றும் தேடி.னாண்.,

அந்த ஆளைக் காணவில்லை. சுரேஷ் பயந்து போய் உள்ளுக்குள் அழுதான், மனதில் எதுவோ கரைபுரண்டு ஓடியது.

இனிமேல் தனது வாழ்க்கை எப்படி அமையும் என்று கூட அவனால் புரிந்துகொள்ள முடியவில்லயே.