பாகம் – 1
அத்தியாயம் 1
சென்னை.
தை மாத ஆரம்பத்தின் குளிரும், லேசான வெப்பமும் கலந்த
காலை நேரம்.
முந்தைய நாள் இரவு முழுக்க ‘கொட்டி தீர்த்த மழை’யின்
சுவடு அதிகாலை தார்சாலையின் கண்ணாடி போன்ற
பளீச்சென தெரிந்தது.
கோயம்பேடு 100 அடி சாலையின் மத்தியில் இருந்த அந்த நட்சத்திர ஓட்டலில் திருமண விழா ஒன்று மிக வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. நகரத்தின் மிக முக்கியமான விஐபிகள் திருமண அரங்கில் நிறைந்திருந்தார்கள் .
அங்கிருந்த பலருக்கும் பொதுவான விஷயம் பணம். ஆம்
எல்லாருமே எலைட்டான ஜனங்கள். எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தில் விசாரித்து, ஆங்கிலத்தில் பதில் சொல்லிக்
கொண்டிருந்தார்கள்.
சர் புர்' ரென கார்கள். அதனால் பரபரப்பு. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை அது ஒரு பெரிய இடத்து திருமணம் .
மாப்பிள்ளை
ரகுபதி பாஸ்கரன் மாநில அளவிலான டென்னிஸ் பிளேயர். அவனை மீடியாக்களுக்கு
நன்றாக தெரிந்திருக்கிறது. எக்கச்சக்க பேர் காமிரா, மைக்கை தூக்கி கொண்டு
வந்துவிட்டார்கள். மீடியா வெள்ளை வேன்கள்.
ரகுதான் சென்னை. அவனது அப்பவுகு கோவை. ரகுவிற்கு
தனியார் நிறுவனத்தில் பெரிய பதவி. செம்மையான வருமானம். அப்பா ரிட்டையர்டு உப
தாசில்தார். மண்டபம் முழுக்க அந்த பணம் வாரி இறைக்கப்பட்டிருந்தது. ரகு ஆறேகால்
அடி தொன்னுத்தி சொச்ச கிலோ உடம்பு. உயரத்துக்கேற்ற அகலம். ஆனாலும் ஃபிட்னஸ்ஸில் கனக்கச்சிதம்.
வயது முப்பதுக்கு அருகே இருக்கலாம். ஆனால் கட்டுகோப்பான உடற்பயிற்சிகள் இன்னும்
இளமையானவனாக, மண மேடையில் பக்கத்தில் நின்றிருந்த பேரழகி மணமகளுக்கு இணையானவாக
கம்பீரமாக நின்றான்.
கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவளுக்கு தாலி கட்டி
பொண்டடடியாக்கிவிட்டு உற்சாகமாக கை கொடுத்து கொண்டிருந்தான்.
காமிராக்கள் இடை விடாமல் கண் சிமிட்டின. நிறைய
விஐபிகள் வந்து போட்டோ பிடித்தனர்.இந்த படங்கள் எல்லாம் நாளை தமிழ் & ஆங்கில
நாளேடுகளில் வெளியாகும்.
மணமகள் ஷிவானி. அதிக மேக்கப் இல்லாமல் அனுஷ்கா
சாயலில் இருந்தாள். ஐந்தே முக்கால் அடி உயரத்தில் 34 இஞ்சு புஷ்டியான மார்பகங்களோடு
தங்க நிறத்தில் மயக்கும் கருவிழிகள், சங்கு கழுத்து, சரிவான இடுப்பு, சந்தன நிற உடல் கட்டோடு ஜொலித்தாள் ஷிவானி, அவளது
பேரழகிற்கே மணமகன் கிடைப்பது அரிதாக இருந்தது.
“நீ கைக்கு
அடக்கமா இருக்கே., ஆனா உன் பொண்ணு வாட்டச்சாட்டமா இருக்காளே., எங்க போய்
மாப்புள்ளை புடிக்க போறே?” அத்தை தன்
மருமகளிடம், ஷிவானி அம்மா விஜய லட்சுமியிடம் அடிக்கடி சொல்லி கிண்டல் செய்வாள்.
ஷிவானி அவளது அப்பா போல. பரசுராமன் போல ஆஜானுபாகு
தோற்றம். ஏதாவது சீரியலில் டைட்டில் ரோலுக்கு அப்ளை செய்தால், உடனே செலக்ட் ஆகி
விடக்கூடிய கவர்ச்சியும், அழகும், இளமையும் அவளிடம் அளவுகதிமாக மேலோங்கி கிடந்தன.
ஒருகாலத்தில் டெல்லியில் இருந்தபோது பள்ளிக்கும் போகும்
வயசிலேயே பசங்க பைத்தியம் பிடித்து போக, இங்க சென்னையில் வந்து கல்லூரிக்கு சேர,
மடிப்பாக்கம் ஏரியாவே அல்லோகலப் பபட்டது. தெருவுக்கே ஷிவானி பேரை வைக்கலாமா? என
அரும்பு மீசை பையன்கள் முழி பிதுங்க, எங்கிருந்தோ வந்த டென்னிஸ் காரன் ‘ரகுபதி
பாஸ்கரன்’ ஷிவானியை தட்டிக் கொண்டு போய்விட்டான்.
எல்லாம் பணம், டப்பு செய்யும் வேலை.
ஆனால், ஷிவானிக்கேற்ற மணமகனாய் ரகுபதி வந்தான்.
மானிறம் என்றாலும், அடர்த்தியான தலை முடி, திடமான தோள்கள், 48 இஞ்சுக்கு மேலாக விரிந்த
நெஞ்சு, கனமான தோள்கள், டிஷர்ட்டின் தையைலை பிரிக்க துடிக்கும் புஜங்கள். நிலைக்கதவு போன்ற முதுகு, ஒட்டிய வயிறு
ஆகியவற்றால் இளமை, வேகம் சுறுசுறுப்பு, மீடியா, புகழ் என அவன் கொஞ்சமும்
குறைவில்லாமல் ஷிவானிக்கு ஏற்றவனாக இருந்தான்.
இவர்களின் ஜோடிப் பொருத்தம் பார்த்து எல்லாரும்
திகைத்து போனார்கள். ஷிவானியின் அப்பா பரசுராமுக்கு கை கொடுத்தார்கள்.
“ நீ இந்தியா முழுக்க ஊரு சுத்தினாலும், கடைசியில நீ
சென்னையிலயே மாப்பிள்ளை புடிச்சிட்டியேப்பா. அதுவும் ஸ்போர்ட்ஸ் மாப்பிள்ளையை.
புடிச்சிட்டே.” சிலாகித்தார்கள்.
“ மாப்பிள்ளை நல்ல பர்சனாலிட்டி.ஃபிட்டான
பிசிக்..நம்ம ஷிவானி குட்டிக்கு பர்பெக்ட் மேட்ச்..” உறவுகள் சொல்ல பரசு
குளிர்ந்து போனார். கல்யாணத்திற்கு
ஏகப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் வந்திருந்ததால் போலீஸ் பந்தோபஸ்தும்
போடப்பட்டிருந்தது.
மணமகள் ஷிவானி என்னும் அழகுப்பெண்ணின் தந்தை பரசுராம் ஆரம்பத்தில்
மைலாப்பூர்காரர். அப்புறம் மத்திய அரசு பணியில் சேர அவர்
நாட்டுடமையாக்கப்பட்டவர் ஆனார். காரணம், வேலை. எங்கெங்கே தூக்கியடிக்ககப்பட்டு
கடைசியில் டெல்லி. இப்போது சென்னை.
பரசு மத்திய அரசில் ஒரு முக்கிய துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கு மத்திய மந்திரிகள் பலர் வெகு பரிச்சயமாக இருந்தார்கள். டெல்லியில் பணிபுரிந்து இருந்த பரசு, இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மாற்றலாகி தற்போது சென்னையில் செட்டில் ஆகி இருக்கிறார். தற்போது என்றால்
கடந்த 5 ஆண்டுகளாக சென்னை வாசம் தான்.
பரசுவின் மகள் ஷிவானி காலேஜில் நுழைய ஆரம்பித்ததில்
இருந்து சென்னை மடிப்பாக்கம் தான்.
டெல்லியில், ஹிந்தி, பானிபூரி., பீடா போன்ற
சமாச்சாரத்தை யெல்லாம் விட்டு விட்டு சென்னை வந்து செட்டில் ஆனதில் பரசு
அம்மாவுக்கும் சரி., அவரது மனைவி, ஷிவானி அம்மா விஜயலட்சுமிக்கு
சரி டன் டன்' டன்னாக ஆனந்தம்.
பரசுவின் மனைவி விஜயலட்சுமி டெல்லியில் இந்த போது புகழ்பெற்ற
பரதநாட்டிய டான்சராக இருந்தாள். மொட்டை மாடியில் டான்ஸ் ஸ்கூல் நடத்தினாள்.
‘மறந்த நாட்டிய முத்ததிரைகள்’ என தனி
ஆல்பம் போட்டிருக்கிறாள். இப்போதில்லை, ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. அவளது தங்கை
ஷோபனாவும் அவளும் சேர்ந்து ஆடிய பல நடனங்கள் யூ ட்யூபில் இப்பவும் சக்கைப்போடு
போட்டிருக்கின்றன. விஜயலட்சுமி அப்போதெல்லாம் ஹிந்தி டிவிக்களில் நிறைய பேட்டி
கொடுத்திருக்கிறாள்.
இருவரின் நடனத்தைப் பார்த்து தான் நீண்டகாலமாக திருமணம் ஆகாத அவளது தங்கை
ஷோபனாவுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரன் கூட கூடி வந்தது. அதெல்லாம் தனிக்கதை.
பேசி பலனில்லை.
டெல்லியில் அந்த குடும்பம் அரசு அதிகாரிகள்
குடியிருப்பில் வெகு நாள் தங்கி வாசம் செய்தது. நீண்ட நெடிய காலத்துக்குப் பின்
பரசுவின் ஓயாத நச்சரிப்பு மற்றும்
செல்வாக்கின் காரணமாக அவனுக்கு சென்னையில் மாற்றல் கிடைத்தது. திருவான்மியூரில்
அலுவலகம், மடிப்பாக்கத்தில் வீடு.
“பெருமாளே! என்னடா இது? மயிலாப்பூரு போலாம்னு’
சொன்னியே. இங்க காட்டுல வந்து தள்ளிடியே?” பரசுவின் அம்மா கோபித்து கொண்டாள்.
“அம்மா புரிஞ்ச்சுக்கோ. இப்ப மயிலையில நமக்கு
தெரிஞ்சவா யாருமில்ல.. எல்லாம் அதை விட்டு போயாச்சு. மயில, ட்ரிபிளிகேன்லாம் ரொம்ப
நெரிசல். பொல்யூஷன் ஜாஸ்தி. ஜனங்கல்லாம் அவுட் ஆப் சென்னை நகர ஆரம்பிச்சிட்டா.. பெருங்களத்தூர்
டூ மணலி, அப்புறம் இந்தாண்டை தின்னணூர்
வரைக்கும் இப்ப சென்னை தான். இந்த மடிப்பாக்கம், புழுதிவாக்கம், நங்கனல்லுர்லாம் ஹார்ட்
ஆஃப் சென்னைம்மா.."
"மடிப்பாக்கம்லாம் ஒரு காலத்துல காடுடா
பரசு"
"அது ஒன்ஸ் அப்பான் எ டைம். இப்ப அப்படில்ல.,
நிஜமான டீசன்டான சென்னையே இப்ப சௌத் சென்னை தான். சரவணா ஸ்டோரே இங்க வந்தாச்சு.. நான்
கூட மடிப்பாக்கத்துல தான் லேண்ட் வாங்க்கி வீட்டை கட்டப் போறேன். மயிலையை
மறந்துடும்மா” பரசு என்னதான் சமாதானம் சொன்னாலும்,
'மயிலையும், அல்லிக்கேணிய தவிர இங்க பூலோகத்துல மனுஷா
வாழ்றதுக்கு வேற என்ன இடம் இருக்கு சொல்லுங்கோ?" என்பாள்.. " பரமுவின் அம்மா.
அவளுக்கு தினமும் பெருமாளை சேவிக்க வேண்டும்.
" காலைல சுப்ர பாதம்,. காதை சொக்க வைக்கிற வேத
சப்தம். ரத்னா கஃபே ஹோட்டல் காபி.., மெரீனால வாக்கிங்.. அடடா வேற ஒன்னும் வேனாம்
போ.. இங்கத்த ஜனம் மாதிரி வேற எங்கயும் வராது.." இத்தனைக்கும், அம்மா ஸ்ரீரங்கத்துக்காரி.
"சென்னை கூட நிரந்தரம் இல்லம்மா. மத்திய
சர்க்கார் வேலைன்னா அப்படித்தான் அங்கங்க தூக்கி அடிப்பான். என்னை அடிச்சது ரொம்ப
கம்மி. ரொம்ப கேப் விட்டு தானே அடிக்கிறான்."
" போதும்டா ஆந்திரவில ஆறு வருசம். உபி யி ல நாலு வருசம். இங்க டெல்லில பதினொரு
வருசம்.. ஷிவானி படிப்பு ரொம்ப கெட்டு போச்சு.."
"என்ன நஷ்டம் இப்ப? நாலு பாஷை பேசறா"
"பேசி..? எதுக்குடா மத்த நீஷ பாஷை? தமிழ் போறுமே" அம்மா ஒரு நாலாயிர
திவ்விய பிரபந்த பிரியை.. அவளது பூர்வீகம் ஸ்ரீரங்கம், என்பதால் ஆழ்வார்
புராணத்தின் எல்லா பாசுரமும் மனப்பாடம். அவள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரைக்கும்
திருச்சியை தாண்டி வந்ததில்லை.
பரசுவின் அப்பா தான் மயிலை. கல்யாணம் கட்டி பத்தொன்பது
வயதில் மயிலை வந்து சேர்ந்து விட்டாள். பரசுவின் அப்பா ஹைகோர்ட்டில் பெரிய லாயர். மயிலையில் பெரிய ஓட்டு வீடு.
அதெல்லாம் பழைய கதை. பரசு காலேஜில் நுழையும் போதே
அவர் போய் சேர்ந்து விட்டார். அதன் பின்
அவள் ஒன்டிக்கட்டை. அம்மா காத்திருப்பார்களே என்பதற்காகவே வீடு விட்டால் காலேஜ் ,
காலேஜ் விட்டால் வீடு என ஒழுக்கமாக வளர்ந்த பிள்ளை பரசுராமன். அவன் உத்தியோகம்,
உயர்வெல்லாம் அவனது உழைப்பு, அவனது கல்வி
மட்டும் தான். ஆனால், அடித்தளம் போட்டது மட்டும் அம்மா.
பரசுவுக்கு சென்ட்ரல் வரித்துறையில் வேலை
கிடைத்ததுமே, மணப்பெண்ணுக்கு அலைந்தாள். ஆடி ஓடி ஸ்ரீரங்கத்து விஜயலட்சுமியை தேடி
தேடிப்பிடித்தார்கள்.
"ஆஹா என்ன ஒரு முழி., ? அடர்த்தி தலை முடி போ.. ஜடையை
எடுத்து முன்ன போட்டா பாதி தொடை வரைக்கும் தொங்கிகிட்டு இருக்கு. அந்த சிரிப்பும்,
கண்ணும்., உதடும். பொம்னாட்டிகளுக்கே
சிம்ம சொப்பனம் தான். உன் மருவம சாட்சாத் ராணிதான் போ.. என்னமா சமைக்கிறா.,
வெங்கலம் சிணுங்கற மாதிரி ஒரு நாதம். கேட்டுகிட்டே இருக்காலம் போல. நல்ல தனம்,
ரொம்ப அளவான பிருஷ்டம்" யாரோ ஒரு பெண்மணி பரசுவின் அம்மாவிடம் சொல்ல., "போதும்" என
நிறுத்திவிட்டாள்.
"சாகற வரைக்குமா அழகு வரப் போறது?"
"ம்ம் இவ அழகு செத்தப்பறமும் நிலைச்சிருக்கும். ஏதோ ஒரு வம்சம். தப்பி தவறி
அங்க பொறந்திருக்கு"
அப்படித்தான் விஜயலட்சுமியை வாயரா புகழ்ந்தார்கள்
பரசு பக்க உறவுகள். நேரில் போய் பார்த்தபின் அது உண்மைதான் என பரசுவுக்கு, அவனது
அம்மாவுக்கும் தோன்றியது.
அதே போல அந்த பக்கமும் சலசலப்பு இருந்தது.
உறவு, நட்பு பரிவாரங்கள் இல்லாமல் தன்னம் தனியே
இருவர் அம்மாவும் பிள்ளையும் ரெண்டே பேர் பெண் பார்க்க வந்ததே பெண் வீட்டாருக்கு
பிரமிப்பாக இருந்தது.
"அம்மா சாது, பிள்ளை சொக்க தங்கம். சுளையா
இருவதாயிரம் ரூவா. மத்திய சர்க்கார் வேலை.. 60 வயசு வரைக்கும் நான் ஸ்டாப்
சர்வீஸ். நாத்தனார், ஓரகத்தி பிடுங்கலே
இல்ல. பையன் காதுல பாரு வைரக்கல் டாலடிக்குது. டக்குன்னு ஓகே சொல்லு. ஒன்னுக்கு
ரென்டு பொம்னாட்டி பிள்ளைங்க வெச்சிருக்கே. டக்குன்னு ஒன்ன தள்ளி விடும் ஓய்"
“மெட்ராஸ்லாம் வேணம்.. ஸ்ரீரங்கம், கும்பகோணம்,
இல்லாட்டி சிதம்பரத்துல தான் பாக்கறோம்.”
விஜியின் அப்பா தயங்கினார்.
“ஏன் மயிலாப்பூர்க்கு என்ன கொறைச்சல்? இது 2001..
ப்பா. 1960 இல்ல. அவனவன் அமெரிக்கா, ஆஸ்திரேலியாங்க்கிறான்.. பொண்ண பெத்து ஃபாரின்ல
தாரை வாக்குறான். நம்ம சென்னைக்கென்னப்பா...? எட்டி மிதிச்சா எட்டு மணி நேரம்”
“விஜி இப்ப தானே காலேஜ் முடிச்சா. கொஞ்ச நாள்
போகட்டுமேன்னு பாத்தேன்..”
“ நல்லா பாத்தே போ. சரி அவ தங்கை ஷோபானா ரொம்ப சின்ன
பொண்னு. இல்லண்ணா.,அவளுக்கே பேசலாம்”
“அய்யயோ.. விஜிக்கே பேசுங்கோ. ஷோபனா இன்னும்
படிக்கட்டும்” அப்பா பரசுவின் சம்பந்ததை ஒத்து கொண்டார்.
சொந்தங்கள் விஜயலட்சுமியின் குடும்பத்தை நெருக்க.
கும்ப கோணத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி மயிலையைச் சேர்ந்த பரசுவின் கரம் பிடித்தாள்.
இதோ முழுதாய் 21 ஆண்டுகள் ஓடிவிட்டன. பெண் வளர்ந்து கல்யாணத்துக்கு
நிற்கிறாள்.
கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "
என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.
Authornv(dot)com
என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..
thirumbudi(dot)blogspot(dot)com
இந்த நாவலினை விமர்சனம் செய்ய.
Naveenavathsayana(at)gmail.com