மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, June 2, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1763

 

"என்ன தம்பி சொல்றே? ஏதாச்சும் செய்வினையா?" சற்குணம் கேட்க.,

"இல்ல சார் , எலுமிசை பழம், குங்கும், ஆட்டு ரத்தம் சமாச்சரம் , அமாவாசை பூஜை இல்ல., இது விர்ச்சுவல் சயின்ஸ்., “

புரியலப்பா

சார் யோசிக்கறதுக்கும், மனசுல வார்த்தைகலை உரு போட்டு அதை கோர்வையா  பேசறதுக்கும் எல்லாத்துக்கும் புத்தி தான் ஆதாரம்., அந்த புத்தியில் சதா எந்த நேரமும் குறுக்கீடு செஞ்சுகிட்டிருந்தா., பேச்சே கோர்வையா இருக்காது ..ஈஸியா அவனை உளற வைக்கலாம்., எல்லாம் அவனை கேலி பண்ணுவாங்க.,"

"என்னய்யா சொல்றே?"

"ஆமா. எனக்கு அவன் யூஸ் பண்ன துண்டு, கைக்குட்டை.,ஏதாச்சும் கொடுங்க.,"

கட்சியின் ஆஸ்தான பேச்சாளன் சம்பத்து  குடித்த எச்சில் டம்ளரை எடுத்து வந்தார்கள்.

 'இதான் கிடைச்சது.'

இது போதும்.,’

அவன் முக்கால் மணி நேரத்தில் மதுரையை நெருங்கி கொண்டிருந்த., சம்பத்துவின் காரில் போய் மையமாக உட்கார்ந்தான்.

சம்பத்துக்கு கார் முழுக்க மரிக்கொழுந்து வாசம் அடித்தது. மூச்சை முட்டுகிறார் போல என்ன வாசனை இது..?

காலையிலேயே சரக்கு அடித்த போதை அவனுக்கு தலை வலியை கொடுக்க.,

"ஹேய்..ஏசி ஆப் பண்ணிட்டு., கார் கதவை திறங்கப்பா..."

சரி தலைவரே

காரை நிறுத்தேன்

சம்பத்து சொல்ல., காரை நிறுத்தினார்கள்.,

"என்ன சார்.."

"இரு பாத்ரூம் போய்ட்டு வந்துடறேன்..."

தன்னி?”

வேணாம்..”

வனாந்திர காட்டில் உச்சி வேளையில்., சிறு நீர்  கழிக்க கூடாது. ஆனால் சம்பத் போனான்... ஓரிரு மூத்திர சொட்டுக்கள் உள்ளங்காலில் ., பாதத்தில் பட ...கெட்ட பைபாசங்கள் நெருங்கி வந்து அவன் மது போதையை வாசம் பிடித்தன.

அவனுக்கு இன்னும் தலை வலித்தது. உடலில் அசதியாக இருந்தது.

மதியம் மதுரையில்  போன உடன் சாப்பிட்டு லாட்ஜில் போய் படுத்தான். இந்த மரிக்கொழுந்து வாசம் ஏன் இப்படி அடிக்குது? எம் மேல..தூத்தெறீக்க ., என்ன இது ரூம் ஸ்பிரேவா? எவனாச்சும் கட்டில்ல கீழ ஒளிஞ்சுக்கிட்டு இருக்கற  மாதிரியே இருக்கே.. கட்டில் கீழ் பார்த்தான்.  உடம்பு குனியவே வயிறு.. கடகட வென இருந்தது., மீண்டும் படுத்தான்

படுத்த உடனே.. நெஞ்சு  பொங்கி எழுந்து அவன் சாப்பிட்டதை யெல்லாம், வாய் வழியே எடுக்க வைத்தது.. திருச்சியிலே இருந்து  கார்ல ஏறுன உடனே தண்ணி அடித்தது தப்பாய் போய் விட்டது.

லேசான மயக்கத்தில் படுத்தான்.

மாலை  ஐந்து மணிக்கு கதவை தட்டினார்கள்.' திறந்தான்.

"என்னண்ணே? ஈவ்னிங்  கூட்டத்துல தலைவர் முன்னாடி பேசப் போறீங்க... இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க"

"வரேன் போ.."

போனான். ஆனால் மனது ஒரு நிலையில் இல்லை. படபடப்பாக இருந்தது. ஏதோ தவறாகி விட்டது.. எதையும் கோர்வையாக யோசிக்க முடியவில்லை.'

தான் கூட்டத்தில் பேச வேண்டியதை மனதில் சொல்லி பார்த்தான்., எதுவுமே வசமாகவில்லை. தமிழர் வரலாறு, மொழியின் அருமை.., கட்சியின் வளர்ச்சி., தலைவரின் நிர்வாகம்., எதிர்கட்சிகளின் அராஜகம்..உலக அரசியல் என பலமணி நேரம் ஆயிரம் கூட்டங்களில் பேசிய சாதனைக்கு சொந்தக்காரனுக்கு மனம் முழுக்க இருண்டு இருந்தது..

 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1762


 அடுத்த இரண்டு நாட்கள் அவன் ரூமிலேயே இருந்தான். பெரிய இரும்பு பெட்டி வாங்கி எல்லா புத்தகங்களையும் வைத்து பத்திரமாக பூட்டினான். இந்த சமரன் எழுதிய புத்தகங்களை எல்லாம் நாம் எழுதி புத்தகமாக வெளியிட்டால் அதிகபட்சம் ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சம் விற்றால் பெரிய விஷயம். நாமும் சமரனை போல அக்குளில் புத்தகத்தை வைத்துக்கொண்டு தெருத்தெருவாக போய் கொண்டிருக்க வேண்டியதுதான். அப்படியென்றால் என்ன செய்வது என்று யோசித்தான்.
இதை ஏண் எல்லாருக்கும் சொல்லி கொடுகவேண்டும். மானுடத்தை உய்விப்பதா நம் வேலை? நோ..நெவர்,
ஓர் புதிய சக்தி என்னிடம் இருக்கிறது என அவனுக்கு  தோன்றியது. 
மாதத்தில் ஆயிரக்க்கணக்கில் வரக்கூடிய வருமானங்கள் அவனுக்கு போதவில்லை. அவனுக்கு அவன் மிகப்பெரிதாக வர ஆசைப்பட்டான். லாட்டரி சீட்டில் வரக்கூடிய எண்களை, நாளை வரக்கூடிய எண்களை ஜெயிக்கமுடியும், எந்த ஐ பி இல் அணி தோற்கும், எந்த அணி ஜெயிக்கும் என முன்னாடியே சொல்ல முடியும், எந்த பாலில் எப்போது விக்கெட் சொல்ல முடிந்தாள். பவுன்டரியா? சிக்சரா சொல்லட்டுமா?
எந்த குதிரை, அந்த குதிரையை ஜெயிக்கும் என சொல்லமுடியும் என்கிற அசாத்தியமான அறிவு பெற்றிருந்த ஈஸ்வர் சந்திரசேகர் அந்த விளையாட்டை துவங்கும் போது அனைத்து விளையாட்டுகளுமே தடை செய்யப்பட்டுவிட்டன. அனைத்து சூதாட்டங்களை தடை செய்யப்பட்டு விட்டன. அவனுக்கு வேறு வருமானம் இல்லாததால் வேறொரு குறுக்கு வழியில் ஆராய்ந்தான்.
அவனுக்கு தோன்றியது தான் இந்த பிரய்ன் டெவலப்மென்ட் சென்டர் ஐடியா. சரி இது அவுட் ஆகுமா? ஏற்கனவே, பல மனவளக்கலை மையங்கள் சென்னையில் இருந்தன. அதெல்லாம் போய் விசிட் செய்தான். அதில் எல்லாம் தியானம், யோகா மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல். இதைத் தாண்டி வேற எதுவுமே சொல்லப்படவில்லை.
எனது பிரய்ன் டெவலப்மென்ட் சென்டர் வேற மாதிரி..அவன் முடிவெடுத்தான். ஊருக்கு போனன்.  அப்பா அம்மாவிடம் பேசி பெரும் பணம் வாங்கினான்.. வீட்டின் பாகத்தில் தமக்கு வரவேண்டிய தொகையை கேட்டு சண்டைபோட்டு வாங்கினான். நண்பர்களிடம் உதவி கேட்டான். சென்னை அரும்பாக்கத்தில் அலுவலகம் பார்த்து ஒரு ஹால் இருக்கக் கூடிய அலுவலகத்தை லீசுக்கு எடுத்தான். ஈஸ்வர் மனவளக்கலை மையம் என்று ஒன்றை துவங்கினான். வகுப்புகள் எடுத்தான்.
இறந்து போன சமரனின் ஆதர்ஷ சிஷ்யன் என விளம்பரப்படுத்தி கொண்டான். அவனுக்கு நல்ல மரியாதை கிடைத்தது.
பிரெய்ன் இம்ப்ரூவ்மெண்ட் செண்டர்  என பலகை வைத்தான்.  வந்த சிலரை சுறுசுறுப்பாக்கினான். பரீட்சையில், விளையாட்டில் தேர்வு பெற வைத்தான். புத்தி  மேம்பட ஒரு கோச்சிங்க் செண்டரா ? எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது.. கூட்டம் வர பிரபலமனான்..
நிறைய பள்ளிகளில் கலூரிகளில் போய் பேசினான். மந்தமான மாணவர்கல் உலகத்திலேயே கிடையாது என சத்தியம் செய்தான்.
அவனது மையத்துக்கு வந்தவர்களின் ஆன்மாவை  சுத்தமாக்கினான். எண்ணங்களை சுத்தமாக்கினான். அயராது உண்மையாக உழைத்தான். 
அந்த மனவளக்கலை மையத்தை. கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகள், குடும்ப உறவில் ஏற்படக்கூடிய தகராறுகள், படிப்பில் பின்தங்கியவர்களை அவர்களது அறிவை மேம்படுவதற்கான வழிமுறைகள், விளையாட்டில் இன்னும் ஆர்வத்துடன் விளையாடுவதற்கான யோசனைகள் என பல்வேறு கோச்சிங்க்குளை தொடங்கினான். மனபிறழ்வு கொண்டவர்களை குறுகிய காலத்தில் குணப்படுத்தினான். நேரடியாகவே பயிற்றுவித்தான். பலபேர் அவனிடம் பயிற்சி பெற்றார்கள். பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. காசு ஓயாமல் வந்தது. ஆனால் குறைவாக வந்தது. அவன் இன்னும் பெரிதாக சம்பாதிக்க ஆசைப்பட்டான்.
கெட்ட விஷயங்களை செய்தால் காசு அதிகம் என கணித்தான். நல்வினைகளுக்கு பதிலாக எதிர்வினைகள் செய்ய மக்கள் அலைந்தார்கள்.
அப்படித்தான் மாஜி எம் எல் ஏ  சற்குனம் அவனிடம் வந்தான்.
"தம்பி. .ஈஸ்வரு. .,எதிர்கட்சி ஆளுங்க கூட பிரச்சனையில்ல. இப்பல்லாம் எங்க கட்சி ஆளுங்க தான் தொல்லை. இவன் பேரு சம்பத்து.." போட்டோ காட்டினான். சற்குணம்
" பெரிய பணக்காரன்.பெரிய பேச்சாளன்.. மைக்கை  புடிச்ச ஒன்னரை மனி நேரம் பேசுவான். இவன் இருக்கத்தான் எனக்கு இங்க சீட் கிடைக்க மாட்டேங்குது. துட்டு கொடுத்தாலும் எனக்கு கிடக்கல. இந்த சமபத்தை  காலி பண்னனும்..பசங்க கிட்ட சொன்னா போட்டு தள்ளிடுவாங்க..ஆனா நான் தான் செஞ்சேன்னு எல்லாருக்கும் ஈஸியா தெரிஞ்சிடும்.. என்ன செய்யலாம்."
"நீங்க சொல்லுங்க"
"சாமியார்ங்க,.முஸ்லீம் பாய்ங்க கிட்ட எல்லாம் போனேன்.. நீலாங்கரை பரந்தாமன்னு ஒரு சாஸ்திரி அவர்கிட்டயும் போனேன்.. அவன் ரொம்ப யோக்கியமா  இதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டான்... பசங்க உங்களை பத்தி சொன்னாங்க..சொல்லுங்க ஈஸ்வர் சந்திரன்....சம்பத்தை முடமாக்கனும்.."
"சார் சம்பத்துக்கு பெரிய பலம் எதுன்னு சொன்னீங்க?"
"காசு...
காசா?”
இல்ல இல்ல பேச்சு.."
"சரி வாயை கட்டிடலாம்...." என்றான் ஈஸ்வர் சந்திரன். அவன் தடம் மாறியது இப்போது தான்.


 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்