மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, March 18, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 4


சௌம்யா பாலகிருஷ்ணனின்  வீடு மிக பிரம்மாண்டமாக இருந்தது. பழமையும். நவீனமும் கலந்து அந்த வீட்டின் வெளிப்புறம் படு சுத்தமாக இருந்தது. 

எப்படியும் ஒரு ஏக்கரில்., நட்ட நடுவில் அந்த பங்களா இருந்தது. பங்களா பின்னால் புறாக் கூண்டு போல அல்லாமல் விஸ்தாரமான அவுட் ஹவுஸ். செக்யூரிட்டி, டிரைவர்லாம் தங்கும் இடம் போல.

இதெல்லாம் சௌம்யா சம்பாதித்து வாங்கியதா? இல்லை அப்பாவின் சொத்தா தெரியவில்லை.

ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் வெள்ளை அடிப்பார்கள் போல வெள்ளை வெளேரேன பங்களா ஜொலித்தது.

சௌம்யா பந்தியில்  உட்கார வைக்கப்பட்டிருந்தாள். எந்த ஒரு நேர்காணலிலும் இப்படி உறவுக்கார விசேஷம் போல பந்தி  அமைந்திருக்காது .  சிற்றுண்டி வாசனை மூக்கை துளைத்தது. இது ஒரு முற்றிலும் புதிய அனுபவம் என்பது போல அவள் நினைத்தாள்.

‘வெண்  பொங்கல் , கொஜ்ஜி., இட்லி வடகறி சட்டினி  என அளவாக டிபன் பரிமாறப்பட்டது . ரத்னா கபே பொங்கலை விட பல மடங்கு சுவையான நெய் வழியும் பொங்கலாய் அது இருந்தது. அதனுடன் இட்டிலியும் சாப்பிட்டுவிட்டு நுனி நாக்கில் லேசாக கசக்கும் ஒரு சூப்பர் காப்பியை குடித்துவிட்டு தோட்டத்தில் சிறிது நேரம் நடந்தாள். இரண்டு மூன்று முறை ஏப்பம் வந்தது.

யப்பா... இந்த டிபனுக்கே சும்மாவே இங்கு வேலை செய்யலாம்.

அவள் முன்னால் வந்து பார்த்தாள்..  கூட்டம் பாதியாக குறைந்திருந்தது.

 அவள் கண்கள் சந்திராவையோ அல்லது கிருபாவையோ தேடின.  இருவருமே காணவில்லை. அவள் நிழலாக நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

சௌம்யா மேடத்துக்கு  போட்டி பாடகி தேவையில்லை . அப்ப ஏன் கர்னாடக இசை ஞானம் மஸ்ட்? ஏனென்றால் அந்தம்மாவுக்கு தோழி வேண்டும். யெஸ். வயது குறைந்த பெண்ணாக இருந்தால் வேலை சொல்லலாம். பயணத்தின் போது கதைக்கலாம். எதை கதைக்க..?  சினிமாவா? அரசியலா? கர்நாடாக இசை பற்றி..தான் அவள் பேசுவாள். அவளுக்கு இணையாக பேச வேண்டும். உதவியாளாகவும் இருக்க வேண்டும்.  

யூ ட்யூபில் அந்தம்மா சேனலில் வீடியோ போட, அப்பாய்ன்மென்ட் ,ஷெட்யூல் பிக்ஸ் செய்ய, சம்பளம் பேச...ஆடியோ ஆல்பம் போட இதுக்கு தான் ஆள் தேவை.. 

அவர்கள் வாய்ஸில் சொன்னதை டைப் செய்து புத்தகமாக்க வேண்டும். இதற்கு என்னை போல சிஸ்டம், டிடிபி ., டிசனிங்க் நாலேஜ் தேவை.. அவள் வேலையை புரிந்து கொண்டாள்.

"ஆஅ ஆடல்.. கலையே தெய்வம் தந்தது...' என உருகி பாடுவதெல்லாம் அவள் வேலை. அதை காசாக்கி அவள் கையில் தருவது தான் நம் வேலை. ஐ மீன் மார்க்கெட்டிங்க் . அது நமக்கு கை வந்த கலை இது,.  பாடுவதெல்லாம் நம் வேலை.. சுரம் கோர்ப்பதல்ல நமது பணி.

யெஸ்..! இது தான் நான் உள்ளே போகும் ரூட்., அது தெரியாதவர்கள் சௌம்யாவைப்பற்றி  விக்கிபீடியா பற்றி  தேடுகிறார்கள்.  நானும் தான் தேடினேன்? மை காட் ஜஸ்ட் மிஸ்..  ரிஜக்ட் ஆகியிருப்பேன்.

ரொம்ப தேங்க்ஸ் கிருபா'  அவள் மனம் தெளிவாகி, அப்படி தெளிவானதால் உடல் தளர்வாகி உட்கார்ந்தாள்.

சும்மா உட்கார்ந்திருக்கும் நேரம் பிடித்து மூச்சை பிடித்து தியானம் செய்யலாமே என நினைத்து’ பயமும், பதட்டமும் போக  தியானம் செய்ய ஆரம்பித்தாள்.

'ம்மா தூங்கக் கூடாது..." ஒரு வேட்டிக்கார ஆள் வந்து நின்றான்.

"தூங்கலப்பா. மெடிடேஷன். நீ யாரு?"

" நான்.. முருகேசன்.. இங்க தோட்டக்காரன். காபி தண்ணி வேணுமா பாப்பா" 

"வேணாம்" அவன் நகர., அவள் திரும்ப தியானத்தில் ஆழ்ந்தாள்..

 கண்களை மூடிய போது வாசலில் வேகமாக ஒரு கார் வந்து பிரேக் அடிக்கும் சத்தம் கேட்க , திடுக்கிட்டு கண்ணை திறந்தாள்.

காரில் இருந்து  சிவப்பாய் ஒரு பெண்ணும் கூடவே ஒரு இளைஞனும் வந்தார்கள். அவர்களை பார்க்கும் போதே அவரது பணக்காரத்தனம் தெரிந்தது. ஏதாவது சௌமியாவுக்கு உறவுக்காரர்கள் இருக்கலாமா? என அவள் நினைத்தாள்.

அந்த இளைஞன் மிக அலட்சியமாக எல்லோரையும் பார்த்தான். அவனைப் பார்த்து . முருகேசன் ஓடி வந்தான். கிருபாகரன் ஆவனை முறைத்தபடி நின்றான்.

“ வாங்க வாங்க  பிரசன்னா சார்” தோட்டக்காரன் முருகேசன் கூப்பிட., கிருபாவும் வந்தான்.

“ முருகேஷ், இவங்க என்னுடைய சித்தி பொண்ணு . என தங்கச்சி.  சௌமியா மேடம் அசிஸ்டன்ட் கேட்டாங்கன்னு கேள்விப்பட்டேன் .அதான் இவங்கள சேர்த்துவிட்டு போடலாம்னு வந்தேன் முருகேசா” அவன் ஏனோ கிருபாகரனை உதாசீனம் செய்தான்.

‘ என்ன சார் விளையாடுறீங்க?  இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்காங்களே இவங்கல்லாம் யாருன்னு நினைச்சீங்க?” கிருபா குரல் கொடுத்தான்.

“ யாரு ?"

“எல்லாம்  பிஏ கேண்டிட்ஸ். இன்டர்வியூக்கு தான் வந்து இருக்காங்க”

“ இன்டர்வியூக்கா?” அந்த இளைஞனின் முகம் லேசாக மாறியது.

“ஓ  பேப்பர்ல ஆட் கொடுத்துட்டாங்களா ? சரி இவங்கள நான் மேடத்துகிட்ட இவளை அழைச்சிட்டு போகனுமே  முருகேசா“

“என் கிட்ட பேசுங்க..தோட்டக்காரங்கிட்ட பேசறீங்களே?'

"அவரு தோட்டகாரன்.. நீ என்ன ஜி எம்மா? நீ டிரைவர்தானே? வழிய விடு சௌம்யாகிட்ட நான் பேசிக்கறேன்"

"சார் ஜென்ட்ஸ்லாம்  உள்ள நாட் அல்லோவ்ட் சார். இவங்கள அப்ளிகேஷன் ஃபில் அப் பண்ணிட்டு வெயிட் பண்ண சொல்லுங்க “

‘ என்னய்யா யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்க?”

“சார்! உங்கள தெரியாதா பிரசன்னா சார்.?. ஆனா,  இதுதான் சார் எனக்கு சௌமியா அம்மா சொல்லி இருக்கிறது . அதன் படி நடக்கலைன்னா என்னைதான் திட்டுவாங்க., கொஞ்சம் புரிச்சுக்கிட்டு வெயிட் பண்ணுங்க சார்”

“சரி அப்ளிகேஷன் எங்கய்யா இருக்கு குடு. அவங்க கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான் அந்த பிரசன்னா.

 கிருபாகரன் அப்ளிகேஷனை எடுத்து வந்து கொடுக்க, தனியே மேஜையில் உட்கார்ந்து அவன் கூட வந்த பெண் விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்தாள். அபர்ணாவுக்கு உள்ளே ஒன்று ஏதோ ஆஃப் ஆனது போல இருந்தது.

“ போச்சு எந்த வேலைக்கு தான் ரெக்கமண்டேஷன் தேவைன்னு  வரை முறை இல்லாமல் போச்சு . இந்த மாதிரியான செல்வாக்கு உள்ள ஆள மீறியா நமக்கு வேலை கிடைக்கப் போகுது?  வேலை என்னமோ  நல்லவேளை தான் . டிபனே இவ்ளோ சூப்பரா இருக்குன்னா சொல்லவா வேணும்?

யாருன்னு தெரியாத ஆளுங்களுக்கு போடுற டிபணே இவ்ளோ சூப்பரா இருக்குன்னா,  இங்க வேலையில் சேர்ந்த அப்புறம் கிடைக்கிற சலுகை எப்படி இருக்குன்னு சொல்லு தேவையில்லை. ஆனா, அப்படிப்பட்ட வேலை நமக்கு கிடைக்குமான்னு தெரியலையே’ அபர்ணா யோசித்தாள்.

சாதாரண குடும்பம் தான் அவளுடையது.  முன்பெல்லாம் அப்பாவிற்கு தனியார் கம்பெனியில் மேனேஜர் வேலை . எப்போதெல்லாம் டார்கெட் முடிக்கிறாரோ அந்த மாதம் மட்டும்தான் இன்சென்டிவ் கிடைக்கும். அதிக வருமானம் அந்த மாசம் தான் மற்ற மாதம் எல்லாம் சம்பளம். 25000 ரூபாய் தான் பகுதி நேரம் நாயனம் வாசித்து சுமாராய் வருமானம், வரும். அதை வைத்துக் கொண்டுதான் மூன்று பேரும் ஜீவனம் செய்தாக வேண்டும் .

வாடகைக்கே பெரும்பணம் போய்விடும்.  ரிட்டையர்ட் ஆனப்பறம் செக்யூரிட்டி ஆகிவிட்டார். நல்ல வேளை அம்மாவின் மசாலா, ஊறுகாய் வகையறாக்களுக்கு நல்ல பணம் கிடைத்தது. அப்பாவின்  கை இறங்க அபர்ணாவின் கை ஓங்கியது. எடுத்த எடுப்பிலேயே இருவதாயிரம் ரூபா சம்பளம், இப்போது முப்பதாயிரம். அவளின் அழகும் அறிவும் அவளுக்கு நல்ல சன்மானத்தைப் பெற்றுத் தந்தது.

வீட்டில்  பெரியதாய்  வறுமை இல்லை. உணவுக்கு பஞ்சமில்லை' என்றாலும் சௌமியா வீட்டு டிபன் போல ஒரு உணவை அவள் கனவில் கூட  நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவள் வீடு நடுத்தர வீடு .

இப்படிப்பட்ட  மாளிகையில் ஒரு வேலை கிடைத்துவிட்டால் வீட்டை மறுசீரமைப்பு செய்துவிடலாம் . கொஞ்சம் காசு பணம் சம்பாதித்து சேர்த்து விட்டு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கட்டிக் கொள்ளலாம். இதோ இப்போது எம்.ஜி ஹெக்டரில் வந்து இறங்கினானே இந்த இந்த கம்பீரமான ஆளைப் போல., சேச்சே இவ்ளோ பணம் எல்லாம் வேணாம் .

அப்புறம் யாரையுமே மதிக்காமல் வாழ வேண்டும். கூட்டத்தை எல்லாம் தள்ளிக் கொண்டு முன்னே போக வேண்டும். நான் யார யார் தெரியுமா?'  என விரல் சொடக்கி பேச வேண்டும். அப்படி எல்லாம் வேண்டாம் .

மாதம் ஒரு லட்சம் வருமானம் வரக்கூடிய பையனாக இருந்தால் போதும். இந்த வேலை நமக்கு முக்கியம். சம்பளம் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், பாதுகாப்பான ஒரு இடம் கிடைப்பதும் நல்ல வருமானம் கிடைப்பதும் எல்லாத்தையும் விட மனசுக்கு பிடிச்ச ஒரு வேலை கிடைப்பது என்பது ரொம்ப கடினம்.

கடவுளே! இந்த வேலையை எப்படியாவது எனக்கு கொடு. உள்ளிருந்த சௌமியா சிரித்தாள்.

 


காமப்புனல் 6 ஆம் பாகம் மார்ச் 21

 

KAAMA PUNAL

Part  - 6



வாசகர்களுக்கு வணக்கம்!

 

எனது இந்த ஆறாவது நூலான காமப்புனல் நாவல் வழக்கத்தை விட அதிக தாமதம் ஆகிவிட்டது. அதற்கு காரணம் அதிக பக்கங்களும், நேரமின்மையும் ஆகும்.

 

எவ்வளவு முயன்றாலும் சொல்ல வந்த கதை அம்சத்தையும் பிளாஷ்பேக் திரைக்கதையும் சுருக்கமாக என்னால் கூற இயலவில்லை.  மாறுபட்ட புதுமையான சந்தர்ப்பங்கள் காமத்தை உருவாக்க வல்ல சூழ்நிலைகள் ஆகியவற்றை விரிவாகத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

 

இந்த பாகத்தில் காமப் புனல் நாவலின் ஐந்தாம் பாகத்தில் வந்த பார்த்திபன் என்கிற ஒரு பீஸ்ட் போல இதில் தீனா என்கிற ஒரு கேரக்டர் வருகிறது. இது போன்ற விஷமத்தனமான கயமைத்தனைமான ஆண்கள் எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலைகளையும் ஒரு குடும்பத்தில் உள்ளே புகுந்து உங்கள் கைவரிசையை காட்ட பார்ப்பார்கள்.

 

அது போலவே பிற்பாதியில் வரக்கூடிய உஸ்மான் மற்றும் அன்வர் போன்ற கேரக்டர்கள் நிஜமாகவே இருள் மரைவில் வெவ்வேறு பார்வையில் நம்மைச் சுற்றிலும் உலவி கொண்டிருக்கிறார்கள்.  சென்னை போன்ற நகரங்களில் இது அதிகம்.  கல்லூரி இளம் பெண்களை மற்றும் தனிமையில் வாழும் இல்லத்தரசிகளை வைத்து இது போன்றவர்கள் குறுக்கு வழியில் சம்பாதிக்க முயல்கிறார்கள்.

அதுபோலவே கதையில் வரும் ஜூலு ஜமீலா பெண் கதாபாத்திரம் பல உயர்மட்ட குடும்பத் தலைவிகளோடு பின்னி பிணைந்து அவர்களை மூளை சலவை செய்து தங்களுக்கு வேண்டியதை சாதித்து விடுகிறார்கள் .

இது போன்ற கதாபாத்திரங்களை எல்லாம் நமது கதையில் கொண்டு வருவதன் மூலமாக இதை ஒரு சாதாரண காம நாவலில் இருந்து காம  விழிப்புணர்வு நாவலாக மடை மாற்ற முடியும் என நம்ப முடிகிறது.

 

காமப்புனல் நாவலின் மொத்த பாகங்களில், இந்த ஆறாம் பாகம் சமகால சமுதாயத்திற்கு அயோக்கியர்களிடமிருந்து தற்காத்து கொள்ள கவனமாக கண்டிப்பாக தேவை' என நினைக்கிறேன். அப்போதுதான் ஒரு பெரிய பிரச்சினை  வீட்டில் உருவாவதற்கு முன்பு முளையிலேயே அதை கிள்ளிவிட முடியும்.

 

முழு பாகத்தையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மேலே சொல்லவும்.

 

-  நவீன வாத்சாயனா

 

பின்குறிப்பு :  

பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.

வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.


மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க 
வேண்டாம் .,               

                                                                                                                                             

 

என் வி யின் அனைத்து மின் நூல்களை ஆன்லைனில் படிக்க.
https://authornv.com/

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..
thirumbudi.blogspot.com


இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

naveenavathsayana@gmail.com





காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 3

அபர்ணா மட்டும் தான் தமிழ்நாட்டில் கர்நாடக சங்கீதம் கற்றவளா? அது இருந்தார்கள் ஆயிரக்கணக்கில். அதுவும் பிரபல பாடகி  சௌமியாவுக்கு உதவியாளர் என்றால் நல்ல சம்பளம் நல்ல சலுகைகள் கிடைக்குமே.,

இவள் உள்ளே நுழைந்ததும் வாசல் கேட் சாத்தப்பட்டது,

"நைன் தெர்டி குளோஸ். யாரையும் உள்ளே அலவ் பண்ணாதீங்க” யாரோ சொன்னார்கள்.. சரி தான் இது வேறயா?

உள்ளே பட்டுப் புடவைகள்,., ஐயர்., அய்யங்கராத்து மாமிகள்., சிறுமிகள், இளம்பெண்கள்., கும்பல் கும்பலாக பாட்டு., கீர்த்தனைகள்., மடி தட்டும் சத்தங்கள்., கடவுளே பிஏ வேலைக்கு கூட போட்டியா?, இந்தம்மா., விளம்பரத்தை சன் டிவியில் போட்டுச்சா? இல்ல, விஜய் டிவில போட்டுச்சா?

ஆங்காங்கே., பெண்கள் ரவுண்டாக உட்கார்ந்து கொண்டு கீர்த்தனை பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள்.. கிட்டத்தட்ட எல்லாருக்குமே குரல் வளம் நன்றாக இருந்ததாக தோன்றியது அபர்ணாவுக்கு.

எப்படியும் எழுவது என்பது பேருக்கு மேல் இருப்பார்கள்  போல, இது தேறாது,. வேலைக்கு ஆகாது. டைம் தான் வேஸ்ட். நல்ல வேளை அந்த மார்கெட்டிங்க் ஆபீசில் வேலையை எழுதி கொடுத்துவிடவில்லை. லீவ் தான் போட்டிருக்கிறோம். கிளம்பலாம். அங்கேயே ரீ ஜாய்ன்ட் பண்ணலாம்.

‘ காலையில் சாப்பிடாமல் வந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. போய் ஹோட்டல் எங்கே இருக்கிறது?” என விசாரித்து சாப்பிட்டு வந்து பார்க்கலாம்.  ..கேட் திறப்பார்களா?

திரும்ப வந்தால், அப்பவும் கூட்டம் எப்படி அலைமோதினால், பேசாமல் ஊருக்கு போய்விடலாம்.  வந்ததுக்கு சௌம்யா மேடத்தை கிட்டக்க உக்காந்து  பாக்கலாம். ஒரு செல்பி.. ஒரு ஆட்டோகிராப். போதும்., அவள் சோம்பல் முறித்தாள். என்ன செய்வது?

சே.. இந்த வேலைக்கு சேரலாம் என ஆரம்பித்த போதே வீடு எதிர்த்தது . இப்போது அவர்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி தான் எல்லாம் நடக்கிறது. அவள் அலுப்பாக எழ,

“ மேடம் காப்பி “ என ஒரு இளைஞன் காப்பி தட்டில் காப்பியை கொடுக்க, அவன் அணிந்த ஒயிட் அண்ட் ஒயிட் டிரெஸ்ஸை பார்த்த உடனேயே அவன் அந்த வீட்டின் டிரைவராக இருக்க வேண்டும் என நினைத்தாள்,

“ ரொம்ப தேங்க்ஸ்ங்க.,  ஆனா நான்  பிரேக் பாஸ்ட் சாப்பிடல., போய் சாப்பிட்டு வந்துடறேன் “ என  அபர்ணா சொல்ல

“ ஏன் மேடம் வெளியே போய் சாப்பிடுறீங்க. நீங்க இங்கேயே சாப்பிடலாம் எல்லாரும் வந்த உடனே சாப்பிட சொல்லி இருப்பாங்களே ., சந்திரா.. ஏ சந்திரா ‘’ என அவன்  உள்ளே பார்த்து குரல் கொடுத்தான் .

‘இல்ல இல்ல பரவால்ல உங்களுக்கு ஏன் சிரமம்? .  நான் வெளியே சாப்பிட்டுகிறேன் “

“அய்யோ என்ன மேடம் சொல்றீங்க?  நீங்க சாப்பிடணும்னா மூணு கிலோ மீட்டர் போகணும் .மெயின் டவுன்லதான் நல்ல ஹோட்டல் இருக்கும். அதனால தான் சௌமியா  மேடம் இண்டர்வியூ வர்றவங்களுக்கு டிபன், சாப்பாடு ரெடியா இருக்கணும்னு சொல்லி இருக்காங்க.

“ ஓ அப்படியா வெரிநைஸ் ? “அவள் ஆச்சரியப் பட்டாள்.

“சாப்பாடு மட்டும் இல்ல., நீங்க வரப்போற டிக்கெட் செலவு வழிச் செலவுக்கு எல்லாம் சேர்த்து 2000 ரூபாய் கூட  போரப்ப கவர்ல கொடுத்துடுவாங்க”

“ அடேயப்பா தட்ஸ் கிரேட்.”

‘ ஆனால் கேண்டிடேட்ஸ்க்கு மட்டும்தான் காசு . கூட வரவங்களுக்கு எல்லாம் கிடையாது . இப்ப கூட பாருங்க ஒரு கேண்டிடேட் அப்படின்னா ரெண்டு மூணு பேரு கூட வந்திருக்காங்க”

“ ஓ அப்படியா நான் கூட, எல்லோரும் கேண்டிடேட்ஸ் என்று நினைச்சுட்டேன்”

“. எப்படிங்க மேடம்?  நீங்க மட்டும் தான்  தனியா வந்திருக்கீங்க போல..,  உங்களை போல சில பேரு மட்டும் தான்  தனியா வந்து இருக்காங்க.,  ஆனா ரொம்ப பேரு பேரன்ட்ஸோ ,சிஸ்டர்ஸ் ,ஃப்ரெண்ட்ஸோட வந்திருக்காங்க..”

“ஓ. மொத்தம் எத்தினி பேரு மிஸ்டர்..?” என அவள் இழுக்க.,

“ கிருபான்னு.,  சொல்லுங்க என் பேரு கிருபாகரன்.,”

“ அதான்  எத்தினி பேரு ?’

“கேண்டிடேட்ஸ் மட்டும் பாத்தீங்கன்னா 33 அப்ளிகேஷன் வந்து இருக்கு உங்களை சேர்த்து .34”

“சரி இதெல்லாம் பார்த்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்., ரொம்ப பேரு வந்து போயிட்டாங்க., எனக்கு  தெரிஞ்சி பன்னெண்டு மணிக்குள்ள  எல்லாரையும் பார்த்து முடிச்சிடுவாங்க.,  போறப்போ சாப்பிட்டும் போலாம்”

“லஞ்சா.. ?”

“ம்ம் ஆனா  சாப்பாடு கேண்டிடேஸ்க்கு மட்டும் இல்ல., கூட வரவங்களுக்கும் உண்டு”  அவன் சிரித்தபடி சொல்லிக்கொண்டே அடுத்த ஆளிடம் போனான் .

சௌமியாவின் தயாள குணத்தை கேட்டு, அபர்ணா நெகிழ்ந்து போனாள். வாரி கொடுக்கும் கரங்களுக்கு தான் எல்லா செல்வமும் இறைவன் அருளுவான்  போல .

“கிருபாகரன் சார் “  கைதட்டி அழைத்தாள்.

“சார் லாம் வேணாம்  கிருபான்னு கூப்பிடுங்க போதும்., சொல்லுங்க”

“ சரி கிருபாகரன் இப்போ இவ்ளோ பேர் இருக்காங்களே ? இதுல சௌமியா அம்மா எந்த பேஸிக்ல ஆள செலக்ட் பண்ணுவாங்க?” அவன் சிரித்தான்.

“எக்ஸாம்  கொஸ்டின் பேப்பர் கேக்குறீங்க இல்ல?”

“ ஐய்யையோ அப்படி இல்ல .,அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சா அதுக்கு ஏதாவது போல நடந்துக்கலாம் இல்லையா?”

“ அதெல்லாம் இல்லம்மா.,  நீங்க  நீங்களாவே இருக்கணும் . அத விட்டுட்டு வந்த உடனே, மேடம் கிட்ட ' உங்களை ரொம்ப பிடிக்கும், உங்க பாட்டை கேட்காம தூங்க மாட்டேன். உங்கள மாதிரி ஒரு அபூர்வமான பெண்மணி கூட வேலை செய்றதே பெரிய விஷயம்.  அப்படின்னு சொல்ற சொல்றவங்களைல்லாம் அவங்க ரிஜெக்ட் பண்ணாம என்ன பண்ணுவாங்க?”

 “அப்படியா?” அபர்ணா யோசித்தாள்.

“காலைல எட்டு மணியிலயிருந்து இந்த கூத்து தான்  நடக்குது. மேடத்துக்கு என்ன வயசு? எப்ப பாட ஆரம்பிச்சாங்க.. எத்தினி கச்சேரி., எவ்ளோ அவார்டுன்னு? என்ன ராகம் புடிக்கும்? என்ன பாட்டு புடிக்கும். எப்ப பாட ஆரம்பிச்சாங்க? அவங்க அப்பா பேரு என்ன?"

அபர்ணா  உறைந்து போய் பார்க்க.,

" ஒரு பொண்னு .,தோ அங்க பாருங்க கம்ப்யூட்டர் பாத்து மனப்பாடம் பண்ணுதுங்க. ஏதோ கூகிள் விக்கிபீடியாவாம். அதோ அந்த குரூப்பு  சாட் சிபிடில  சௌம்யா அம்மா பத்தி தேடுது. கலிகாலம்டா.. இல்லல்ல கம்ப்யூட்டர் காலம்”

அபர்ணா  திகைத்தபடி எட்டிபார்க்க., அங்கே கூகுள் விக்கிபீடீயாவை பார்த்து மூளையில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் சில இளம்பெண்கள்.

“ சௌம்யா அம்மா கிட்ட  போய், ஏன் அவங்களை பத்தி சொல்லனுமின்னு விவஸ்தையே இல்லை போங்க” கிருபாகரன் சொல்ல., அபர்ணாவுக்கு வெட்கமாக இருந்தது. நல்ல வேளை.  நாம் செய்ய இருந்ததை எல்லாம் கிருபாகரன் முன்னாடியே சொல்லி விட்டான் .

“அது மட்டும் இல்லைங்க .,ரொம்ப பேர் வந்து உட்கார்ந்த உடனேயே கர்நாடக சங்கீத பாட்டு பாடல் பாட ஆரம்பிச்சுடுறாங்க., இங்க என்ன சூப்பர் சிங்கர் போட்டியா நடக்குது? இதுல ' மேடம் ., மேடம் உங்க கூட ஒரு செல்பி' ன்னு வந்து உக்காந்துக்கறாங்க.. "

ஸௌம்யாம்மாஅ அடக் கடவுளே'  தலையில அடிச்சிக்கிறாங்க “ அபர்ணா அதிர்ந்து போக.,

“அவங்க என்ன  இவங்களை பாட்டு போட்டிக்காக கூப்பிட்டாங்க? இல்ல இங்க பாடகியர் தேர்வு  நடக்குதா?  ஒரு  பி.ஏக்கு என்னென்ன அடிப்படை வேலைங்க இருக்கும்?   சௌமியா மேடம் மாதிரி இருக்குற ஒரு விஐபிக்கு என்னென்ன பிரச்சனை வரும் அப்படின்னு தெரிஞ்சுகிட்டு .....அதை ஒரு உதவியாளரா வரவங்க...” என அவன் சொல்லி அப்படியே நிறுத்தினான்.

“எல்லாத்தையும் நான் சொல்லிடுவேனா? நீங்களா திங்க் பண்ன மாட்டீங்களா?  நீங்க எதாச்சும் கொஞ்சம் யோசிங்க”

“ஏய்ய் இருப்பா ஏய்ய்ய்  கிருபாகரன் கிருபாகரன் “ கூப்பிட கூப்பிட அவன் போய் விட்டான். சரி இது போதும் நண்பனே. நல்ல வேளை என்னை  காப்பாற்றினாய். உஷாரகி விட்டேன்..

அதானே., கொல்லன் தெருவில் ஊசியை விற்கமுடியுமா? இவர்களுக்கு பிஏ தான் தேவை., போட்டி பாடகி தேவையில்லை. ஓகே என்ன மாதிரி பந்து போடுவார்கள்' என தெரிந்து விட்டது. இப்ப பார் என் ஆட்டத்தை.. அவள் எல்லா குறிப்பு புத்தகங்களையும் தூக்கி தூரப் போட்டாள். இதெல்லாம் தேவைப்படாது. 

 அவன் போய்விட, சந்திரா என ஒரு பெண் வந்தாள். அவள் அந்த வீட்டு வேலைக்காரியோ அல்லது சமையல்காரியோ. ஆனால் படு நீட்டாக டிரஸ் செய்து இருந்தாள். அவள் அணிந்திருந்த காட்டன் புடவையும் தலையை வாரி இருந்த விதமும் உதவுமே அந்த வீட்டின் செழிப்பை சொன்னது.

வேலைக்காரியே இப்படின்னா., வீட்டுக்காரி?

 சந்திரா கூந்தலை கொண்டையாக போடாமல் வாரி விட்டிருக்க., குன்டி பருவ மேடுகளில் படர்ந்து கிடந்தது. அவளுக்கு பக்கவாட்டில் மார்பு கூம்புகள் திண்மையாக புடைத்து இருந்தது. சுற்றிலும் பெரும்பாலும்  பெண்களே இருந்ததால். லோ ஹிப் அல்லது  பக்கவாட்டு மார்பு கணங்கள் விம்மி பெருத்து தெரிவது குறித்து அவள் கவலைப்படவில்லை.

அவள் அபர்ணாவிடம் மிகவும் பணிவாக பேசினாள்.

“ நீங்க சாப்பிடலன்னு கிருபாகரன் சொன்னாப்ல .,நீங்க டிபன் சாப்பிட்டு வந்துடறீங்களா ? உள்ள கூப்பிட லேட் ஆகும்” என்றாள்.

 இதற்கு மேலும் நாம் பிகு செய்தால் கடும் பசியுடணே சௌமியாவை சந்திக்க வேண்டி இருக்கும்.  சௌமியாவை அப்படி எல்லாம் சந்திக்கக் கூடாது . வயிறு நிறைவாக, மனது நிறைவாக இருக்க வேண்டும் ‘என யோசித்தாள் .

“சரி சாப்பிடறேன்’’ என்றாள்

வீட்டிற்கு பின்னால் தோட்டத்தில் ஷாமியானா பந்தல் ஒன்று போடப்பட்டிருக்க அங்கு ஏழு எட்டு பேர் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கேயும் பல குரூப்களின் கர்னாடக பாடல் தான் ஓடிக் கொண்டிருந்தது.
"கமலம் ம்ம்ம் பாத.. கமல...........ம் "

அய்யோ தாங்க முடியலடா சாமி.....