மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, March 18, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 4


சௌம்யா பாலகிருஷ்ணனின்  வீடு மிக பிரம்மாண்டமாக இருந்தது. பழமையும். நவீனமும் கலந்து அந்த வீட்டின் வெளிப்புறம் படு சுத்தமாக இருந்தது. 

எப்படியும் ஒரு ஏக்கரில்., நட்ட நடுவில் அந்த பங்களா இருந்தது. பங்களா பின்னால் புறாக் கூண்டு போல அல்லாமல் விஸ்தாரமான அவுட் ஹவுஸ். செக்யூரிட்டி, டிரைவர்லாம் தங்கும் இடம் போல.

இதெல்லாம் சௌம்யா சம்பாதித்து வாங்கியதா? இல்லை அப்பாவின் சொத்தா தெரியவில்லை.

ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் வெள்ளை அடிப்பார்கள் போல வெள்ளை வெளேரேன பங்களா ஜொலித்தது.

சௌம்யா பந்தியில்  உட்கார வைக்கப்பட்டிருந்தாள். எந்த ஒரு நேர்காணலிலும் இப்படி உறவுக்கார விசேஷம் போல பந்தி  அமைந்திருக்காது .  சிற்றுண்டி வாசனை மூக்கை துளைத்தது. இது ஒரு முற்றிலும் புதிய அனுபவம் என்பது போல அவள் நினைத்தாள்.

‘வெண்  பொங்கல் , கொஜ்ஜி., இட்லி வடகறி சட்டினி  என அளவாக டிபன் பரிமாறப்பட்டது . ரத்னா கபே பொங்கலை விட பல மடங்கு சுவையான நெய் வழியும் பொங்கலாய் அது இருந்தது. அதனுடன் இட்டிலியும் சாப்பிட்டுவிட்டு நுனி நாக்கில் லேசாக கசக்கும் ஒரு சூப்பர் காப்பியை குடித்துவிட்டு தோட்டத்தில் சிறிது நேரம் நடந்தாள். இரண்டு மூன்று முறை ஏப்பம் வந்தது.

யப்பா... இந்த டிபனுக்கே சும்மாவே இங்கு வேலை செய்யலாம்.

அவள் முன்னால் வந்து பார்த்தாள்..  கூட்டம் பாதியாக குறைந்திருந்தது.

 அவள் கண்கள் சந்திராவையோ அல்லது கிருபாவையோ தேடின.  இருவருமே காணவில்லை. அவள் நிழலாக நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

சௌம்யா மேடத்துக்கு  போட்டி பாடகி தேவையில்லை . அப்ப ஏன் கர்னாடக இசை ஞானம் மஸ்ட்? ஏனென்றால் அந்தம்மாவுக்கு தோழி வேண்டும். யெஸ். வயது குறைந்த பெண்ணாக இருந்தால் வேலை சொல்லலாம். பயணத்தின் போது கதைக்கலாம். எதை கதைக்க..?  சினிமாவா? அரசியலா? கர்நாடாக இசை பற்றி..தான் அவள் பேசுவாள். அவளுக்கு இணையாக பேச வேண்டும். உதவியாளாகவும் இருக்க வேண்டும்.  

யூ ட்யூபில் அந்தம்மா சேனலில் வீடியோ போட, அப்பாய்ன்மென்ட் ,ஷெட்யூல் பிக்ஸ் செய்ய, சம்பளம் பேச...ஆடியோ ஆல்பம் போட இதுக்கு தான் ஆள் தேவை.. 

அவர்கள் வாய்ஸில் சொன்னதை டைப் செய்து புத்தகமாக்க வேண்டும். இதற்கு என்னை போல சிஸ்டம், டிடிபி ., டிசனிங்க் நாலேஜ் தேவை.. அவள் வேலையை புரிந்து கொண்டாள்.

"ஆஅ ஆடல்.. கலையே தெய்வம் தந்தது...' என உருகி பாடுவதெல்லாம் அவள் வேலை. அதை காசாக்கி அவள் கையில் தருவது தான் நம் வேலை. ஐ மீன் மார்க்கெட்டிங்க் . அது நமக்கு கை வந்த கலை இது,.  பாடுவதெல்லாம் நம் வேலை.. சுரம் கோர்ப்பதல்ல நமது பணி.

யெஸ்..! இது தான் நான் உள்ளே போகும் ரூட்., அது தெரியாதவர்கள் சௌம்யாவைப்பற்றி  விக்கிபீடியா பற்றி  தேடுகிறார்கள்.  நானும் தான் தேடினேன்? மை காட் ஜஸ்ட் மிஸ்..  ரிஜக்ட் ஆகியிருப்பேன்.

ரொம்ப தேங்க்ஸ் கிருபா'  அவள் மனம் தெளிவாகி, அப்படி தெளிவானதால் உடல் தளர்வாகி உட்கார்ந்தாள்.

சும்மா உட்கார்ந்திருக்கும் நேரம் பிடித்து மூச்சை பிடித்து தியானம் செய்யலாமே என நினைத்து’ பயமும், பதட்டமும் போக  தியானம் செய்ய ஆரம்பித்தாள்.

'ம்மா தூங்கக் கூடாது..." ஒரு வேட்டிக்கார ஆள் வந்து நின்றான்.

"தூங்கலப்பா. மெடிடேஷன். நீ யாரு?"

" நான்.. முருகேசன்.. இங்க தோட்டக்காரன். காபி தண்ணி வேணுமா பாப்பா" 

"வேணாம்" அவன் நகர., அவள் திரும்ப தியானத்தில் ஆழ்ந்தாள்..

 கண்களை மூடிய போது வாசலில் வேகமாக ஒரு கார் வந்து பிரேக் அடிக்கும் சத்தம் கேட்க , திடுக்கிட்டு கண்ணை திறந்தாள்.

காரில் இருந்து  சிவப்பாய் ஒரு பெண்ணும் கூடவே ஒரு இளைஞனும் வந்தார்கள். அவர்களை பார்க்கும் போதே அவரது பணக்காரத்தனம் தெரிந்தது. ஏதாவது சௌமியாவுக்கு உறவுக்காரர்கள் இருக்கலாமா? என அவள் நினைத்தாள்.

அந்த இளைஞன் மிக அலட்சியமாக எல்லோரையும் பார்த்தான். அவனைப் பார்த்து . முருகேசன் ஓடி வந்தான். கிருபாகரன் ஆவனை முறைத்தபடி நின்றான்.

“ வாங்க வாங்க  பிரசன்னா சார்” தோட்டக்காரன் முருகேசன் கூப்பிட., கிருபாவும் வந்தான்.

“ முருகேஷ், இவங்க என்னுடைய சித்தி பொண்ணு . என தங்கச்சி.  சௌமியா மேடம் அசிஸ்டன்ட் கேட்டாங்கன்னு கேள்விப்பட்டேன் .அதான் இவங்கள சேர்த்துவிட்டு போடலாம்னு வந்தேன் முருகேசா” அவன் ஏனோ கிருபாகரனை உதாசீனம் செய்தான்.

‘ என்ன சார் விளையாடுறீங்க?  இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்காங்களே இவங்கல்லாம் யாருன்னு நினைச்சீங்க?” கிருபா குரல் கொடுத்தான்.

“ யாரு ?"

“எல்லாம்  பிஏ கேண்டிட்ஸ். இன்டர்வியூக்கு தான் வந்து இருக்காங்க”

“ இன்டர்வியூக்கா?” அந்த இளைஞனின் முகம் லேசாக மாறியது.

“ஓ  பேப்பர்ல ஆட் கொடுத்துட்டாங்களா ? சரி இவங்கள நான் மேடத்துகிட்ட இவளை அழைச்சிட்டு போகனுமே  முருகேசா“

“என் கிட்ட பேசுங்க..தோட்டக்காரங்கிட்ட பேசறீங்களே?'

"அவரு தோட்டகாரன்.. நீ என்ன ஜி எம்மா? நீ டிரைவர்தானே? வழிய விடு சௌம்யாகிட்ட நான் பேசிக்கறேன்"

"சார் ஜென்ட்ஸ்லாம்  உள்ள நாட் அல்லோவ்ட் சார். இவங்கள அப்ளிகேஷன் ஃபில் அப் பண்ணிட்டு வெயிட் பண்ண சொல்லுங்க “

‘ என்னய்யா யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்க?”

“சார்! உங்கள தெரியாதா பிரசன்னா சார்.?. ஆனா,  இதுதான் சார் எனக்கு சௌமியா அம்மா சொல்லி இருக்கிறது . அதன் படி நடக்கலைன்னா என்னைதான் திட்டுவாங்க., கொஞ்சம் புரிச்சுக்கிட்டு வெயிட் பண்ணுங்க சார்”

“சரி அப்ளிகேஷன் எங்கய்யா இருக்கு குடு. அவங்க கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான் அந்த பிரசன்னா.

 கிருபாகரன் அப்ளிகேஷனை எடுத்து வந்து கொடுக்க, தனியே மேஜையில் உட்கார்ந்து அவன் கூட வந்த பெண் விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்தாள். அபர்ணாவுக்கு உள்ளே ஒன்று ஏதோ ஆஃப் ஆனது போல இருந்தது.

“ போச்சு எந்த வேலைக்கு தான் ரெக்கமண்டேஷன் தேவைன்னு  வரை முறை இல்லாமல் போச்சு . இந்த மாதிரியான செல்வாக்கு உள்ள ஆள மீறியா நமக்கு வேலை கிடைக்கப் போகுது?  வேலை என்னமோ  நல்லவேளை தான் . டிபனே இவ்ளோ சூப்பரா இருக்குன்னா சொல்லவா வேணும்?

யாருன்னு தெரியாத ஆளுங்களுக்கு போடுற டிபணே இவ்ளோ சூப்பரா இருக்குன்னா,  இங்க வேலையில் சேர்ந்த அப்புறம் கிடைக்கிற சலுகை எப்படி இருக்குன்னு சொல்லு தேவையில்லை. ஆனா, அப்படிப்பட்ட வேலை நமக்கு கிடைக்குமான்னு தெரியலையே’ அபர்ணா யோசித்தாள்.

சாதாரண குடும்பம் தான் அவளுடையது.  முன்பெல்லாம் அப்பாவிற்கு தனியார் கம்பெனியில் மேனேஜர் வேலை . எப்போதெல்லாம் டார்கெட் முடிக்கிறாரோ அந்த மாதம் மட்டும்தான் இன்சென்டிவ் கிடைக்கும். அதிக வருமானம் அந்த மாசம் தான் மற்ற மாதம் எல்லாம் சம்பளம். 25000 ரூபாய் தான் பகுதி நேரம் நாயனம் வாசித்து சுமாராய் வருமானம், வரும். அதை வைத்துக் கொண்டுதான் மூன்று பேரும் ஜீவனம் செய்தாக வேண்டும் .

வாடகைக்கே பெரும்பணம் போய்விடும்.  ரிட்டையர்ட் ஆனப்பறம் செக்யூரிட்டி ஆகிவிட்டார். நல்ல வேளை அம்மாவின் மசாலா, ஊறுகாய் வகையறாக்களுக்கு நல்ல பணம் கிடைத்தது. அப்பாவின்  கை இறங்க அபர்ணாவின் கை ஓங்கியது. எடுத்த எடுப்பிலேயே இருவதாயிரம் ரூபா சம்பளம், இப்போது முப்பதாயிரம். அவளின் அழகும் அறிவும் அவளுக்கு நல்ல சன்மானத்தைப் பெற்றுத் தந்தது.

வீட்டில்  பெரியதாய்  வறுமை இல்லை. உணவுக்கு பஞ்சமில்லை' என்றாலும் சௌமியா வீட்டு டிபன் போல ஒரு உணவை அவள் கனவில் கூட  நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவள் வீடு நடுத்தர வீடு .

இப்படிப்பட்ட  மாளிகையில் ஒரு வேலை கிடைத்துவிட்டால் வீட்டை மறுசீரமைப்பு செய்துவிடலாம் . கொஞ்சம் காசு பணம் சம்பாதித்து சேர்த்து விட்டு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கட்டிக் கொள்ளலாம். இதோ இப்போது எம்.ஜி ஹெக்டரில் வந்து இறங்கினானே இந்த இந்த கம்பீரமான ஆளைப் போல., சேச்சே இவ்ளோ பணம் எல்லாம் வேணாம் .

அப்புறம் யாரையுமே மதிக்காமல் வாழ வேண்டும். கூட்டத்தை எல்லாம் தள்ளிக் கொண்டு முன்னே போக வேண்டும். நான் யார யார் தெரியுமா?'  என விரல் சொடக்கி பேச வேண்டும். அப்படி எல்லாம் வேண்டாம் .

மாதம் ஒரு லட்சம் வருமானம் வரக்கூடிய பையனாக இருந்தால் போதும். இந்த வேலை நமக்கு முக்கியம். சம்பளம் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், பாதுகாப்பான ஒரு இடம் கிடைப்பதும் நல்ல வருமானம் கிடைப்பதும் எல்லாத்தையும் விட மனசுக்கு பிடிச்ச ஒரு வேலை கிடைப்பது என்பது ரொம்ப கடினம்.

கடவுளே! இந்த வேலையை எப்படியாவது எனக்கு கொடு. உள்ளிருந்த சௌமியா சிரித்தாள்.

 


No comments:

Post a Comment