சங்கீதா, மரியாவின் வீட்டுக்கு போன போது மரியா நீளமான கவுனில் இருந்தாள். சோர்வாக, கன்னங்கள் வீங்கி களை இழந்து இருந்தாள்
“என்னடி ஜுரமா? எனக்கு சொல்ல
கூடாது”
“...வா... சங்கீதா..ஜுரம்லாம் இல்ல
மனசு சரியில்ல”
“என்னடி ஆச்சு ? பிள்ள எங்க”
“ட்யுஷன போயிருக்கான்.”
“போன் பண்ணா எடுக்கல்.. ஏன்டி?”
“இல்ல.. மனசே சரியில்ல”
“அதுக்கு எங்கிட்ட பேசலன்னா என
அர்த்தம்? சொல்லு என்ன ஆச்சூ?”
“எனக்கு ஒன்னும் ஆகலடி? என்
பிரண்டுக்குதான்.”
“ என்ன ஆச்சு?”
“அவளுக்கு விரும்பத் தகாத சம்பவம்
நடந்து போச்சு.. தூக்க மாத்திரை போட்டு சாக போனா., நான் தான் அவளை காப்பாத்தி
ஆஸ்பத்திரிக்கு கூட்டி போனேன்..”
“அய்யய்யோ யார்டி அது? நம்ம காலேஜ்
ஃப்ரண்டா?”
“இல்ல உனக்கு தெரியாது”
“யாரு எனக்கு தெரியாம,?”
“எங்க ரிலேஷன் ஸைடு”
‘சரி என்ன ஆச்சு.. ஏதாச்சும்
அபையர்ஸா?’
“இல்லடி.. போன வாரம் அவ என்ன பண்ணி இருக்கா, ஒரு பிரைவேட் அவார்ட்
பங்க்ஷன்னு ஹோட்டலுக்கு ஒரு பார்ட்டி போய் இருக்கா . அவ
என்னை
கூப்ட்டா. நான் தான் வரலன்னேன். அவ தனியா
தான்
போனா. அவ எப்பவும் ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டா. ஆனா அன்னிக்கு, அங்க ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கா.
ஒரு நப்பாசைல குடிச்சி இருக்கா. அதுக்கப்புறம்
கீழ போய்
அவ ஸ்கூட்டர் எடுக்க பார்க்கிங் வந்து இருக்கா . அவளால ஸ்கூட்டர் எடுக்க முடியல .”
‘.................ம்ம் “
“ அப்ப அங்கிருந்து ரெண்டு பசங்க
வந்து,
வண்டிய நாங்க எடுத்து தரேன்!’ ன்னு சொல்லி வண்டி எடுத்து கொடுத்து இருக்காங்க. அவ தேங்க்ஸ் சொல்லி வண்டியை ஸ்டார்ட் பண்ணிருக்கா. ஆனா அதுல ஒரு பையன் வண்டிய பின்னாடி டைட்டா புடிச்சிருக்கான் போல,. வண்டி முன்னாடி போகவே இல்லை . அந்த பசங்க அந்த மாதிரி பண்றாங்கன்னு அந்த அவளுக்கு தெரியல.’ இருங்க மேடம்! வண்டி ஸ்டார்ட் ஆகலை. இந்த கண்டிஷன்ல நீங்க வண்டி ஓட்டினா, எங்கனாச்சும் இடிச்சிடுவீங்க ‘ அப்படின்னு சொல்லி வண்டி ரிப்பேர் பண்ற சாக்குல அப்படியே அவ இடுப்புல ஒருத்தன் கை வைச்சிருக்கான்”
‘கடவுளே”
‘ இவ உடனே தட்டி விடணுமில்ல, மயக்கத்துல கிடக்க, வாங்க மேடம். உங்களை வீட்டில் கொண்டு போய் விடறேன்’ன்னு சொல்லி அவனுக்கு அந்த பார்க்கிங்ல இருக்கிற கார்ல ஏத்திருக்கானுங்க”
“ அய்யய்யோ அப்புறம்”
“ அவ கார்ல ஏறினது தான் தெரியும் . பசங்க நல்லா பூந்து விளையாடிட்டானுங்க”
“ என்னடி சொல்றே?”
“ அவ முழுசா தன்னை அவனுங்க கிட்ட
இழந்துட்டா. ஓ’ ன்னு எங்கிட்ட கதறி அழறா. எனக்கு மனசே சரியில்ல சங்கீதா. குடும்ப
பொண்ணு இப்படி செய்யலாமா? குடும்ப பொண்ணு
இப்படி செய்யலாமா? ன்னு கதறிகிட்டே இருக்கா. அவ வீட்டுக்கார் நல்லவர்., அவருக்கு துரோகம் பண்ணிட்டோமேன்னு
அழுதிட்டிருக்கா”
“........................................’
‘அவ கூடத்தான் இத்தினி நாள்
இருந்தேன்”
“இவ்ளோ டீடெயில் சொல்றே? யாரு
பேரு..”
“உனக்கு தெரியாதுடி. நீ பாத்திருக்க
மாட்டே.. எங்க சின்ன அக்கா இருக்குல்லே அவங்களோட நாத்தனார்.. திருவான்மியூர் வீடு”
“ஏன்டி தெரியாம., ரேவதிடி ? “
“ஆ..ஆமா ரேவதி.. உனக்கு தெரியுமா?”
மரியாவுக்கு தூக்கி வாரி போட்டது.
“அவ புருஷன் கூட பஸ் டிராவல்ஸ்
வச்சிருக்கானே?”
“அ..ஆமா சங்கீதா. உனக்கு தெரியுமா
”
“அவளா நல்ல பொண்னாச்சே!. ரென்டு வருஷம் முன்னாடி, அவங்க கூட நாம ஏலகிரி டூர் கூட போனேமே.. “
“அ.ஆ மா”
“ அடடா.. பாக்க எக்கசக்கமா
இருப்பா. ஆனா குடும்ப பொண்ணாச்சே. அவளா இப்படி போயி மாட்டிகிட்டா.?.”
“யா.. யார் கிட்டயும் கேட்டுடதே..
சொல்லிடாதே சங்கீதா...”
“ நான் சொல்ல மாட்டேன். நீ சொல்லாம இருந்தா போதும். அதுசரி. இவ மேல்
தானே தப்பு. வெளிய போனா துணையில்லாம பொம்பளங்க போலாமா? அப்படியே போனாலும்
குடிக்கலாமா? இப்படி தேவுடியா எவ்வளவு குடிச்சிருந்தா எவன் வந்து ஏறுறான்னு கூட தெரியாம
படுத்துட்டு வருவா. இப்ப நல்லவ மாதிரி
நடிக்கிறாளா? அதான்
பெரியவங்க சொல்லுவாங்க, ஊசி இடம் கொடுக்காம,நூலு நுழையாதுன்னு ”
“...................”
“முதல்ல, குடும்ப பொம்பளைங்க பார்ட்டி,கீர்ட்டிக்கு போலாமா? மானத்தை காப்பாத்தறது எது? நம்ம சுயசிந்தனை தான். அதை போய் குடிக்கு அடகு
வச்சிட்டாளே? இத்தனைக்கும் சின்ன பசங்க தான் அவளை கார்ல கொண்டு போய் மேட்டர் பண்ணிட்டாங்க . எடுத்த உடனே ரேவதி அதுக்கு ஒத்துக்கிட்டாளா?”
‘ஒத்துக்காம என்ன பண்ண? எல்லாம் முடிஞ்சப்புறம் அவளையும், ஆக்டிவாவும் பத்திரமா வீட்ல விட்டு போய்ட்டானுங்க. காலையில எழுந்தப்ப தான் அவளுக்கு எல்லாமே உறைக்குது.
எனக்கு போன் போட்டு அவ அழுவுறா ” என மரியா சொல்லும் போது அந்த சோக சித்திரத்தின் நிழல் அவள்
மீதும் படிந்திருப்பதை சங்கீதா உணர்ந்தாள். நாளை தனக்கும் ஏதும் நடந்தால் மரியா
இப்படித்தான் பீல் பண்ணுவாள் என சங்கீதா நினைத்தாள்.
‘சரி மரியா நீ வருத்தபடாதே! இப்ப என்ன பண்னலாம்? பசங்க ஏதாச்சும் வீடியோ
எடுத்து வெச்சிருக்காங்களா?”
“ ச்சே.. அதெல்லாம் இல்லப்பா..”
“ அப்ப., பசங்களை புடிக்க
முடியுமா? “
“ பீமா எஸ்கார்ட்ஸ்னு டீ சர்டுல
போட்டிருந்துச்சாம்..பவுன்சர்ஸ் போல ., எல்லா பார்ட்டிகும் போவானுங்க போல.,”
‘அப்ப சரி போலீஸ்ல மாட்டி
விடலாமா?”
“அய்யோ வேணாம். அவ அதைபத்தி ஏதும்
சொல்லல,. அவ அவங்களை ஏதும் திட்ட கூட இல்ல., எனக்கென்னமோ அவ , அவனுங்க கூட
இருந்ததை விட, தான் இவ்ளொ பலவீனமா
ஆகிட்டோமேன்னு, நினச்சி வருந்தி தான் சூசைட் அட்டம்ப்ட் போயிருப்பான்னு தோனுது. “
“ சோ, அவளும் ஆசைப்பட்டு தான் ஒரு
வேகத்துல, உடன்பட்டிருக்கா”
“எனக்கு தெரியல சங்கீதா.. அவளை
நினைச்சா பரிதாபமா இருக்கு. எனிவே
இதப்பத்தி, யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிக்காத ப்ளீஸ்’
“அவ கிடக்குறா. நீ விடு. அவளுக்கு
அது தேவையா இருந்திருக்கு. டபுள் மைண்டடா இருந்திருக்கா. அதான் இப்படி ஒரு நல்லவ
மாதிரி டிராமா போடறா.. லீவ் இட்.. இதெல்லாம் நீ யோசிக்காதே. டோன்ட் திங்க் அபவ்ட்
இட்.”