மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 4, 2024

கள்வெறி கொண்டேன் முதல் பாகம் - EP 5

 

அத்தியாயம் 5

மறுனாள் காலை, ஷிவானி முழு மலர்ச்சியாய் வெளிய வர, ஷோபனா புரிந்து கொண்டு சிரித்தாள்.

"என்னடி கொஞ்சம் கூட தூங்க விடலையா?"

"போங்க சித்தி..சரி மம்மி வரலியா?"

"அவங்க எங்க? அப்பவே மண்டபத்துலருந்து வீட்டுக்கு கிளம்பிட்டாங்க.. தாம்பரம் குமரன் ஹாஸ்பிடல் போயி.."

"அய்யோ"

'ஒன்னுமில்ல ரெகுலர் செக்கப் தான் குமரன் ஹஸ்பிடல் போயி பாத்துட்டு வீட்டுக்கு போயிட்டாங்க.. காலை எழுந்து உங்கப்ப ரெண்டு காபி குடிச்சிட்டார் ஸ்டில் ஹி இஸ்  நார்மல்..ஓகே.."

" நான் வீட்டுக்கு போய் பாக்கட்டுமா?"

"வேணாம். அங்க ஒரு பிரச்சனையுமில்லை.. நீ அவர் கூட இரு."

"பக்கத்துல தானே"

"நோ சொன்னாக் கேளு ஷிவானி.. அஞ்சாம் நாள் மறு வீட்டுக்கு அங்க வா. போதும்.."

"அப்ப  அதுவரைக்கும் நீங்க எங்க கூட இருங்க.."

"சரி இருக்கேன் போ.." என்று தான் ஷோபனா சொன்னாள். ஆனால்  நாலாம் நாளே, அவள் கிளம்பி விட்டிருந்தாள். மாமியார் தான்  சொன்னாள். ரகுவும், ஷிவானியும் திருநீர் மலை கோயிலுக்கு போய் விட்டு திரும்பும் போது வீட்டில் ஷோபனா இல்லை.  ஷிவானி போன் செய்தாள்.

" என்னாச்சு.. சித்தி? இருக்கேன்னு சொன்னீங்க... இப்ப கிளம்பிட்டீங்க"

" லூசு  சிவபூஜைல கரடியாட்டம், எதுக்கு நான் அங்க?"

" நீங்க கரடியா?"

"சரி மான் குட்டி.." ஷோபனா கலகலப்பாக பேசினாள்.

".. சித்தி உண்மையை சொல்லுங்க.. அப்பாவுக்கு ஏதாச்சும்"

"அய்யோ நீ வேற ஏண்டி படுத்தறே? அவரு கிளம்பி ஃபிரண்டு வீட்டுக்கு போயிருக்கார். அவருக்கு ஒண்னுமில்ல., நான் இன்னிக்கு ஈவ்னிங்க் ஊருக்கு போறேண்"

"அப்ப நீங்க இங்க வரமாட்டீங்களா? ஹனிமூன் போற வரைக்கும் சென்னைல தான் இருப்பீங்கன்னு நினைச்சேன் "

" நீங்க வர சண்டே, ஹனிமூன் போறல்ல.போய்ட்டு வா. அப்புறம் வீட்டுக்கு வரேன்.. சரி சிம்லா தவிர எங்கெங்கே போறீங்க?"

ஷிவானி சொன்னாள். அவர்கள் இருவரும் தோழிகள் போல நிறைய பேசினார்கள்.

 

அந்த சண்டே ரகுபதியும், ஷிவானியும் சிம்லா கிளம்பினார்கள். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருவரின் பெற்றோரும் வந்து வழியனுப்பினார்கள்.

கல்யாண ஜோடி 2 மாதம் இந்தியா முழுக்க ஊரு சுற்றினார்கள், சிம்லா, நேபாள், கோவா என தேனிலவு கொண்டாடிவிட்டு சென்னைக்கு தரையிறங்கும் போது, ஷிவானி வயிற்றில் 50 நாள் கரு.

எல்லாருக்கும் சந்தோஷம்.

'பகவானே யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பினை? " ரகுவின் அம்மா சிலாகித்தார்.  அவர்கள் வந்த பின் கொஞ்ச நாள் இருந்துவிட்டு ஊருக்கு போகலாம் என இருந்த ரகுவின் அப்பாவும், அம்மாவும் தங்கள் திட்டத்தை தள்ளி போட்டார்கள். மாதங்கள் ஓடின.

ஷிவானிக்கு ஆறாம் மாதம் வர, பிள்ளைப்பேறுவிற்காக  ஷிவானியை அவள் வீட்டுக்கு அனுப்பிய பிறகு, கிளம்பினார்கள்.

"என்னம்மா இது? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன். குழந்தை பிறந்தப்பறம் பாத்துட்டு போலாமே" ரகு தடுத்து பார்த்தான்.

"டேய்ய்.  ஷிவானியை விட்டு இங்க இருக்க போறியா?  டெய்லியும் போய் அவளை பாரு, கூட இரு. ஒரே பொண்ணு. வேற துணை அவங்களுக்கும் இல்ல, பாவம் உடம்பு சரியில்லாத மனுஷன். டெய்லியும் இல்லாட்டியும் அப்பப்போ அங்க போய்ட்டு வா., என்னை கேட்டா நீ அங்கயே இருந்து ஆபீஸ் போ..அது பெட்டர்"

"என்னம்மா இது ஷிவானி இங்க வீட்டுக்கு, வர வரைக்குமாவது இருக்கலாமில்ல?"

"டேய்.. அவ புள்ளை பெத்து, அதுக்கு அஞ்சாம் மாசம் வந்தாதான் இங்க அனுப்புவாங்க.. அதுவரைக்கும் நீ உன் மாமியா வீட்டுல புரண்டு கிடக்கறதை நாங்க பாக்கனுமாக்கும்"

"எனக்கு டென்னிஸ் பிரக்டிஸ்  பண்ணனும்மா"

"வீக் என்ட் இங்க  வாடா.,மத்தபடி ஷிவானி வீட்ல பொங்கி போடுவா., தின்னு..அங்க நம்ம நிலத்துல இந்த மாசம் கரும்பு, அடுத்த மாசம் மஞ்சள் போடறாங்க. போயி தான் பாக்கனும்" அவர்கள் பிடிவாதமாக மகனை விட்டு விட்டு ஊருக்கு கிளம்பினார்கள்.

அவர்கள் போன பின் அவனுக்கும் அங்கே இருக்க பிடிக்க வில்லை. அடிக்கடி மனைவியை பாக்க போனான்.சாப்பிட்டு விட்டு இரவானால் வீட்டுக்கு வந்தான். காலையில் டிபன் கேரியரில் ஷிவானியின் அப்பா சாப்பாடு எடுத்து வந்து ஆபிஸ் போகும் மாப்பிள்ளைக்கு பைக்கில் வந்து கொடுக்க.,

"அய்யோ என்ன மாமா இது? வெளிய சாப்பிட்டுக்க மாட்டேனா? இல்ல கேன்டீன் கிடையாத எங்க ஆபீசுல? நீங்க போய்"

"ஷிவானி தான் கேக்க மாட்டேங்க்கிறா. அவ அம்மாவும் விட மாட்டேங்க்கிறா.."

"அதுக்காக அவ்ளோ பெரிய ஆபிசர் நீங்க போய் காலையிலேயே ஓடி வரீங்களே?"

"ஆட என்ன கெட்டு போச்சு இப்ப., சாப்பிட்டு கிளம்புங்க.. இந்தாங்க இது லஞ்ச் பாக்ஸ்., மதியத்துக்கு.."

"மாமா"

"என்ன பண்றது ரகு ?. உங்களை அங்கேயே தங்க சொன்னா., முடியாதுன்னு சொல்றீங்க. வேற வழி?" அவர் அலுப்பாய் போனார்.

ஒவ்வொரு நாளும் டிபன் பாக்ஸை தூக்கி கொண்டு தினம் தினம் பரசு ஓடி வர, அவனுக்கு என்னவோ போல் இருந்தது.,

இவர்கள் விட மாட்டார்கள். இதுக்கு ஒரே வழி., நாம் அங்கேயே இருந்து விடுவதுதான். அவன் அடுத்த நாள் பெட்டியோடு நங்க நல்லூருக்கே போய்விட., ஷிவானி குடும்பம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது.

“வந்தீங்களா வழிக்கு” ஷிவானி பழிப்பு காட்டினாள்.

'அட மாப்பிள்ளை உங்க வீட்டுக்கே வந்துட்டாரா? உன்னையும் உன் குழந்தையும் பாத்துக்க" அக்கம் பக்கம் கேலி, கிண்டல் செய்ய பூரித்தது.

"உன் புருசன் பாக்க ரொம்ப அமைதி. நல்ல டிக்னிட்டி., ரொம்ப பொறுமை..அலட்டல் இல்லாத ஆளு.." எல்லாரும் புகழ,. அவள் இந்னும் ஒரு சுற்று பூரித்து பெருத்தாள்.

அவள் வயிற்றில் கரு முழு வளர்ச்சியை அடைந்து, ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் ஷிவானிக்கு பெண் குழந்தை பிறந்தது. இயல்பான பிரசவம். வீடே திருவிழாக் கோலம் பூண்டது. ரகு ஆபிசுக்கு ஒரு வாரம் லீவு போட்டான். ஆபிஸ் நண்பர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். ஷோபனாவும் வந்து தங்கி ஓரிரு நாளில் திரும்பினாள். ரகுவின் பெற்றோரும் வந்து குழந்தையை பார்த்து விட்டு  நீராட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு, கொஞ்சி கொஞ்சி களைத்துப் போய் திருப்தியாக போனார்கள்.

"அஞ்சாம் மாசம்  நாங்க வந்து மருமகளை அழைச்சிட்டு போறோம்.." என சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். குழந்தையை பார்த்துக் கொள்ளவே, ஷிவானிக்கும், விஜயலட்சுமிக்கும் னேரம் சரியாக இருந்தது. ரகு அங்கே இரண்டாம் பட்சமானான். மூன்று மாதங்கள் சந்தோஷமாக கழிந்தன. நிறைய வலி, மருந்து மாத்திரை, களைப்பிலிருந்து விடுதலையானாள் ஷிவானி. உடலில், பொலிவும் அழகும் மீண்டும் ஏற கணவனுடன் கூடலுக்கு அவள் தயாராக ,.

அவள் பூவும் பொட்டும் பவுடரும் சென்டு வாசமும் பார்த்து  தடுத்தாள் விஜயலட்சுமி.

"எல்லாம் உங்க வீட்டுல போயி வெச்சுக்க. இன்னும் உடம்பு தேறட்டும்.." அம்மா தான் எச்சரிக்கை செய்தாள்.

"ஆனா தள்ளிப் போடாதே. அடுத்ததை சீக்கிரமே பெத்துக்க,."

ஒருவருக்கொருவர், அன்பும், அனுசரனையுமாக நாளும் கிழமையும் போய் கொண்டிருந்த அந்த குடும்பத்தில் முதல் கறை அந்த நாட்டிய சபாவில் விழுந்தது. அது விழுந்திருக்க கூடாது. ஆனால் விழுந்து விட்டது.

தப்பான  நேரமும், சூழ்நிலையும் அமையும் போது தான் மனிதர்கள் மிருகமாகிறார்கள். அனிச்சையாக தவறு செய்கிறார்கள். தங்கள் நிஜ முகங்களை வெளிப்படுத்துகிறார்கள். 

மண்டப வாசலில் ரகுவின் அப்பா சொன்னது சரி. காலம் ஒரே மாதிரியாக இருக்காது. பூமி சுழலுவதும் அதற்காகதான்.

காலங்கள் பருவங்கள், கிரகங்கள் மாறிக்  கொண்டே இருக்கும். அது மாற மாற மனிதர்கள் மாறுவார்கள். காட்சிகளும் மாறும். அந்த குடும்பத்திற்கும் அது தான் நடந்தது.



 கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "




என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.

Authornv(dot)com

 

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..

thirumbudi(dot)blogspot(dot)com

 

இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

Naveenavathsayana(at)gmail.com