மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, March 22, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27 - 1703

  வீட்டுக்குள் உள்ளே ஒரு பெரிய பட்டாளமே காத்திருந்தது. மலரின் தங்கை சஞ்சனாவவின் குழந்தைகள், வாண்டுகள்  மலரை ஓடி வந்து கட்டிப்பிடித்து கொண்டன. பெரிம்மா எங்க போய்டீங்க..?" 

பெரியவர்கள்குழந்தைகள் எல்லோரும் மலரை சூழ்ந்து பரஸ்பரம் விசாரித்து கொண்டார்கள்.

என்ன ஆச்சி மலர் உனக்கு?" தங்கை சஞ்சனா கேட்க

சண்டே கரெக்டா  வீட்டுக்கு வந்துடுவே .இன்னிக்கு நீ வரவே இல்லபோனும் பண்ணல,  அகல்யாவை கேட்டா "மேடம் பத்து நாளா டல்லா இருக்காங்க அப்படின்னு சொன்னாங்.க என்ன தான் பிரச்சனை?"

மலரின் சித்தி சுஜாதா கேட்க.,

மலர் சங்கோஜமாக  தன் பின்னால் வரும் சுரேஷை பார்த்தாள்.

"அக்கா .. இன்னிக்கு குழந்தைங்க உங்களை பயங்கரமா மிஸ் பண்னாங்க..எனி பிராப்ளம்?' சஞ்சனா சோபாவில் இருந்து எழ .அப்போது தான் மலர்விழியின் பின்னால் வந்த சுரேஷை பார்த்து திகைத்தாள்.

"யா.. யார் இவன் யார் இந்த இளைஞன்இதற்கு முன்னால் இவனை பார்த்ததே இல்லையே . இவன் யார்மலர்விழியின் பின்னாலேயே வருகிறான். அதுவும் வீட்டுக்குள் உரிமையாக நுழைகிறான்." என்றபடி அவனைப் பார்த்து குழப்பம் அடைந்தாள்.

சுஜாதாவும் புரியாமல் மலர்விழியை பார்க்க.," அதெல்லாம் ஒன்னும் இல்ல சஞ்சனா எல்லாமே சால்வ்ட். ஹோட்டல்ல ஒரு பார்ட்டி அதுல ரெண்டு மூணு பேரு  என்கிட்ட மிஸ் பிகேவ்  பண்ணாங்க இவர்தான் என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தாரு. இவரு பேரு மிஸ்டர் சுரேஷ் .சுரேஷ் கிராண்ட்னி . பெரிய  பில்டர்ஸ் கம்பெனி எம்டி இவர்தான்"  என சொல்லி அறிமுகப் படுத்தினாரள்.

"ஓ கிராண்டனி பில்டர்ஸ் நல்லா தெரியுமே..நீங்களா அது? வாவ்...  நைஸ் மிட் யூ சுரேஷ்" சுஜாதா ஆச்சரியப்பட்டு நம்ப முடியாதவளாய்...  கை நீட்டினாள்.

சுரேஷைப் பார்த்து சஞ்சனாவும் வணக்கம் சொல்ல .,

"இவ என்னுடைய  சிஸ்டர் அதாவது எங்க சித்தி பொண்ணு .அவங்க  எங்க சித்தி .பேர் சுஜாதா .லாயரா இருக்காங்க"  என்று சொன்னாள்

"இந்த இ..ந்த குழந்தைங்க?"  என சுரேஷ் கேட்க .,

"இதோ இவ குழந்தை தான்" என சொன்னாள்.

"ஓ சாரி.  இது உங்க சித்தி குழந்தைங்கன்னு நினைச்சேன்" என சொல்ல சுஜாதா வெக்கபட.,

உங்க சிஸ்டர்  ஏதோ காலேஜ் போற அளவுக்கு இருப்பாங்க நினைச்சேன் .ஆனா ரியலி சாரி" என்றான் சஞ்சனாவும் வெட்கமாக புன்னகைத்தாள்நல்லா கவுக்கறான் என மனதிற்குள் நினைத்தாள்.

சுரேஷ் அந்த குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டான். அதில் நடிப்பும் இல்லை. பாசாங்கும் இல்லை .சொல்ல போனால்,  சுரேஷ்க்கு நினைவு தெரிந்த நாள் முதல்குழந்தைகளின் பரிச்சயம் ஏதும் இல்லை. அவன்  குழந்தைகளுடன் வளர்ந்ததுமில்லை. முதன்முதலாக குழந்தைகளுடன் பழகியது சென்னையில் ஷோபனாவின் குழந்தைகளுடன் தான்.

 அதன் பிறகு இப்போதுதான் சஞ்சனாவின் குழந்தைகளை பார்க்கிறான். குழந்தைகள் அத்தனை அழகு .சிறியவன் துறுதுறுவென இருந்தான். கொஞ்ச நேரத்திலேயே சுரேஷுடன் ஒட்டிக்கொண்டான். 

ஆனால் பெரியவள் வர்ஷா மட்டும் எதற்கெடுத்தாலும்யோசித்து பதில் சொல்கிறாள். மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொள்கிறாள். எதிர்வினையை மந்தமாக ஆற்றுகிறாள்.

திடுக்கிட்டு போன சுரேஷ்

என்ன இவளுக்கு?"  என சுரேஷ் பரிதவித்து கேட்கும்போது

"தெரியல, எங்களுக்கே ரொம்ப நாள்  கழிச்சி தான் தெரிஞ்சது.  மூணு வயசு ஆனா அப்புறம் தான் அவளுக்கு எதோ  மெண்டல்  போபியான்னு சொன்னாங்க.. லேட் ரியாக்ஷன் பிரெயின் அப்படின்னு  டாக்டர் சொன்னாரு. ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கோம்.  ஆனாலும் இப்போ ஓரளவு பரவாயில்லை . இப்ப அவளுக்கு ஆறு வயசு.  10 இல 12  வயசுல உள்ள நார்மலா ஆக சான்ஸ் இருக்காம். நிறைய செலவு பண்னியாச்சு"  சஞ்சனா  சொல்ல.,

"சஞ்சனா ஹஸ்பண்டுக்கு இன்சுரன்ஸ்  தான் வேலை.. பஜாஜில  ஜி.எம்மா இருக்கார். இன்சூரன்ஸ் கிளையண்ட் அப்படின்னு  வெளியூர் கிளம்பிடுவார். தோ இவ இருக்காளே...சஞ்சனா இவ ஜூவல்ரி டிசைன் கிரியேட்டர்இவ டிசைனுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.  அதனாலமும்பை பெங்களூர்கோவா அப்படின்னு தனியாகவே அடிக்கடி டிராவல் பண்ணுவா.  நான் ஒரு பக்கம் கேசுகோர்ட்,  கிளையன்ட் அப்படின்னு பிஸியா இருப்பேன் . அதனால இவங்களை எங்களால சரியாக கவனிக்க முடியாது . வீட்டுல ஒரு மெய்ட் இருக்கா.." சுஜாதா விவரிக்க

"இந்த சண்டே ஒரு நாள் தான் எல்லோரும் வீட்டில் இருப்போம்.. அப்போ கூட வர்ஷா அப்பா இருக்கிறது இல்ல..கிளையண்டை பாஅக்க கிளம்பிடுவார். இவங்களுக்கு சண்டேன்ன்னா பெரியம்மா இருக்கனும்" மலர்விழி சந்தோஷ பெருமிதம்  மின்ன  சொன்னாள்.

அப்போ  பேரண்ட்ஸ் நியர் பை இல்லங்கறதுதான்  குழந்தைகளுக்கு  பிரச்சினையாய் இருக்கும் போல.  குழந்தைகள் கூட நிறைய பேசினாலே அவங்க கூட நேரம் செலவு பண்ணாலே .. அவங்க நார்மல் சைல்ட் ஆகிடுவாங்க . எப்பவும் குழந்தை கூட இருக்கிற மாதிரி நாம பார்த்துக்கணும்.  குழந்தை கிட்ட நிறைய பேசணும் . சொல்லப்போனா அவங்களுக்கு அவர்களுக்கான உலகத்துல நம்மளோட பங்கு இருக்கணும் " என்றான் சுரேஷ்.

சரியா சொன்னீங்க. ஆனால் நடைமுறையில் தான் இது சாத்தியம் இல்ல. எல்லார்க்கும் அவங்க புரபஷனல் ஒரு பேஷனா இருக்கு... இங்கே ஆர் ஏ புரத்துல  ஏதோ மனவளக் கலை மையம் இருக்காம்..அங்க கிளாஸ் அழைச்சிட்டு போகலாம்னு ஒரு ஐடியா..அதை பத்தி மலர்கிட்ட பேசலாம்.அவ வருவான்னு வெய்ட் பண்ணோம்..அவ வரலை.. போன் பண்ணாலும் எடுக்கலை.. அதான் எல்லாம் கிளம்பி இவங்க பெரியம்மா வீட்டுக்கு வந்துட்டோம்...ஆக்சுவலா போன் பண்னி எடுக்கலன்னதும் ரொம்ப பயந்துட்டோம்." சஞ்சனா மலரை பார்த்து கொண்டே பேசினாள். 

பேசும் போதே யாரிவன்? யாரிவன்? என கண்ணால்  மலரைக்கேட்டாள். மலர் சொல்ல முடியாமல் பரிதவித்தாள்.

எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு கவலை  வர்ஷா இவ தான் .," சுஜாதா சொல்ல அந்த வீடு ஒரு கணம் அமைதியாக இருந்தது.

அ அதெல்லாம் ஒன்னும் கவலைப்படாதீங்க.  எல்லாம் சீக்கிரம் சரியாயிடும். பை த பை  ஐ ஆம் சாரி வர்ஷா பத்தி கேள்வி கேட்டு உங்க எல்லாருடைய ஹாலிடே மூடையும் ஸ்பாயில் பண்ணிட்டேன் " என சுரேஷ் மன்னிப்பு கேட்க அங்கே சுரேஷ் எல்லோருக்கும் பிடித்துப் போயிற்று .

அந்த நேரம் சஞ்சனாவின் கணவன் போனில் அழைக்க

"சரி மலர் நான் இன்னொரு நாளு வந்து சாவகாசமா பேசலாம். அவர் கூப்பிட ஆரம்பிச்சுட்டார் "என்ன சொல்லி சஞ்சனா சுஜாதா குழந்தைகள் எல்லோரும் கிளம்பினார்கள்.

அவர்கள் போன பிறகு சுரேஷ் காப்பியை குடித்து விட்டு கிளம்பினான்.

சரிங்க மேடம் அப்போ இந்த பிரச்சனையெல்லாம் சால்வ் ஆயிட்ட பிறகு ம்  இன்னிக்கு மிட் நைட்டுக்குள்ள என்னுடைய அப்ளிகேஷன் அப்ரூவல் பண்ணி விடுறீங்களா என்னுடைய நேம் பிளாக் லிஸ்ட் இருந்து எடுத்துட்டு ஜெர்மனிக்கு மெயில் அனுப்பிட்டீங்கன்னா நல்லா இருக்கும். " என்றான் சுரேஷ்

 உடனே மலர் அவன் பதைபதைப்பு பார்த்தும் சிரித்து விட்டாள். எப்பேர்பட்ட கோடீஸ்வரன்?.  அழகன்? வீரன்? எவ்வளவு பெரிய பொறுப்புகள் எல்லாம் இருக்கிறது.  இவன் நம்முடைய அனுமதிக்கும் சான்றிதழுக்கும் காத்திருக்கிறான்  என எண்ணியதும் அவளுக்கு இத்தனை நாள் இத்தனை நாள் இருந்த குழப்பம் எல்லாம் தீர்ந்து புது உற்சாகம் பீறிட்டது .

"என்ன சுரேஷ் ? யாருக்கு எந்த பிரச்சினை ஆனாலும் உங்களுக்கு உங்க வேலை ஆயிடனும் இல்லை?"  என்றாள்.

"ஆமாங்க நீங்க மறக்காம என்னுடைய அப்ளிகேஷனுக்கு அப்ரூவல் கொடுத்துடுங்க நான் கிளம்புறேன். எனக்கு பசிக்குது. லேட் ஆகிடுச்சின்னா ஹோட்டல் மூடிடுவாங்க. " என்றாள்..

அப்போது தான் அவள் தன் தவறை புரிந்து கொண்டாள் . மாலையிலிருந்து இத்தனை நேரம் வரை நம் கூடவே இருக்கிறான். இவன் என்ன சாப்பிட்டு இருப்பான் என நாம் யோசிக்கவே இல்லையே. என சொல்லி

"மம்மி சீக்கிரம் இவருக்கும் எனக்கும் டிபன் செஞ்சி ரெடி பண்ணுங்க " என்றாள்

"இதோம்மா உடனே செஞ்சிடுவேன்" என அம்மா கிச்சனுக்கு போக

'அய்யோ டிபன்லாம் வேணம் மேடம்..ஐ ஹவ் டூ கோ" சுரேஷ் தடுமாற.,

ப்ளீஸ் வெய்ட்  பண்னு. நான் குளிச்சிட்டு வந்துடறேன். அவள் தன் ரூமுக்கு போனாள். உற்சாகமாய் குளித்தாள்.

அவள் பிரச்சனை எல்லாம் தீர்ந்தது போல் இருந்தது. சுரேஷ் அவர்களை அடித்து துவைத்த காட்சிகள் மனதுக்குள் ஓடியது. "எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை". வாசகம் மனதுள்  ஓடியது. இந்த சுரேஷ் மட்டும் சரியான நேரத்தில் வராது போயிருந்தால்?  கடவுளே நன்றி

சுரேஷ் கம்ப்யூட்டர் செண்டரில் செண்டர் ஆப் தி அட்ராக்ஷன்,  அவனை வளைத்து காட்டுகிறேன் என பல பெண்கள்  சவால் விட்டதை அவளே அறிவாள். ஏன் செண்டரே அல்லோகாப்பட்ட அழகி சிந்து கூட சுரேஷை மடக்க முயன்றதாக கிசுகிசு எழுந்தது. 

ஆனால், சிந்து பாண்டியனை மேரேஜ் செய்து செட்டில் ஆகி விட்டாள்.  அப்படி என்ன ஒரு ஆம்பளைக்கு இங்க இவ்ளோ கிரேஸ்?.

இந்த பொண்ணுங்களுக்கு அறிவே இல்லை. ஒரேயடியா விழுகிறதுகள்..ச்சே..

 அதனாலயே சுரேஷ் மீது மலருக்கு ஏனோ ஊமைக் கோபம் இருந்தது. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவனை கலங்கடித்தாள். விரட்டினாள். எரிந்து விழுந்தாள்

ஆனால் இப்போது அவன் தான் அவளை பத்திரமாக மீட்டு வந்திருக்கிறான்.

வேறு யாராவதாக இருந்தாலும் நான் திட்டியபோது சரி தான் போடி’  என பைக்கில் ஏறி போயிருப்பான்..ஆனால் இவன் புத்திசாலி. போவது போல் போய் திரும்ப வந்து எனக்கு தெரியாமல்அவர்களையும் ஏமாற்றி  சைட்டில் புகுந்து அப்பப்பா..சினிமா போல் இருக்கிறது. 

இவன் சினேகம் இருந்தால் எந்த பிரச்சனையுமில்லை. எல்லாவற்றையும் பார்த்து கொள்வான். ரொம்ப நல்லவன். பொறுமையானவன். புத்திசாலி... என்ன ஒன்னு.. என்ன ஒன்னு...ம்ம் இந்த வயசுதான்...

நிச்சயம்.. என்னை விட கம்மியா தான் இருக்கும்...ச்சே என்ன நினைப்பு இது?

இவனுடன் பேசமாட்டாமோபழக மாட்டோமே என சின்ன பொண்னுங்க எல்லாம் அங்க தவிக்கறதுகள். இவன் என்னடான்னா. எங்க அம்மா சமையலுக்கு ஹாலில் வெயிட் பண்னிகிட்டிருக்கான்..

அவள் குளித்து முடித்து புதிய உள்ளாடை களை அணிந்தாள். நைட்டி எடுத்தாள்.. மாறி மாறி நான்கைந்து நைட்டியை போட்டு அவிழ்த்தாள். நைட்டி வேணாம்..சேலை எடுத்தாள். அதுவும் நான்கைந்து எடுத்து கட்டி கட்டி பார்த்தாள். எதுவுமே மனதுக்குள் சேரவில்லை. கடைசியாக அதிகம் உறுத்தாத லாவண்டர் கலர் உடை எடுத்தாள். மேட்சாக ரவிக்கை அணிந்து .,பெர்ப்யூம் அடித்தாள்..