மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, May 20, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2066 ( திபூவை இறுதி பாகம்)

 

லரின் குடும்பம் எட்டிப் பார்ப்பது கூட அவனுக்கு தெரிந்தது. அவன் இப்போது பயங்கரமான தனிமையில் இருந்தான்.

கிரான்டனி எம்.எட், ஜேஆம் எம் டி. சேர்மன் எல்லாம் வெற்று வர்த்தைகளாகவே அவனுக்கு தோன்றியது. சிரிப்பு வந்தது.

தன் அழகு, கம்பீரம், ஸ்டைல், பிசிக், அவனை உருகி உருகி காதலித்த , கட்டிலில் ஈடு கொடுத்த பெண்களின் பெயர்களேல்லாம் கண் முன்னே ஓடியது.

அப்படி என்றால்,  இந்த உலகில் உண்டாகிற ஆரவாரம், கூச்சல், வெட்டி பந்தா எல்லாமே ஒரு பெண்ணை மயக்குவதற்காக மட்டும் தானா? அவளுடன் படுக்கையில் மோதி மோகித்து வருவதற்காக  மட்டும் தானா?

சரி இத்தனை வலி எதற்கு? இத்தனை வேதனை எதற்கு ? சீக்கிரம் போய்விடலாமா?  என முடிவெடுத்தபோது கிரான்டனியும் அவனது அம்மாவும் தூரத்தில் இருந்தார்கள்.

அவர்களில் தூரத்தில் இருந்தாலும் அவர்கள் பேசுவதை அவனால் உணர்வுகளால் புரிந்து கொள்ள முடிந்த்து.

அப்பா என அவன் அழைக்க அப்பா ஆமோதிக்க., அம்மா மட்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அப்பா அம்மா பேச மாட்டாங்களா?’ என சொல்ல

நீ கொஞ்ச நஞ்சம் வேலையாடா பண்ணி வச்சிருக்க?’ என சொல்ல சுரேஷ் எதுவும் பேசவில்லை.

ஏண்டா, அடிக்க வந்தா., ஒரு நாலு பேரை உன்னால சமாளிக்க முடியாததாடா. தடிமாடு ?” கோபமாக கேட்டார்.

ஆனால் சுரேஷிற்கு அவர்களை எதிர்க்க வேண்டும் என்று எண்னமே இல்லை.

ஆம் நான் தண்டிக்க படவேண்டியவன் தான் என உறுதியாக நினைத்தான். அவனது மனமும் உடலும் வேறு வேறு நிலைகளில் பிரிந்து கிடந்தது. என்னை எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்பதாக உள்மத்த நிலையில் அவன் சும்மா கிடந்தாண். இதுவே அவன் பழைய சுரேஷ் ஆக இருந்தால், அந்த நான்கு பேரையும் அந்த வயல் வெளியில் அவன் தனி ஒருவனே புதைத்து விட்டு வந்திருப்பான்.

என்னமோ தெரிலப்பா. எனக்கு தோனலைஎன்றான்

கிழவர் சிரித்தார் . அவனது அம்மா அருகே வந்தார்.

இப்ப என்ன இங்க வரனும் துடிக்கிற?”

எனக்கு தெரியலம்மா வந்தால் சந்தோஷம், போனாலும் சந்தோஷம் என சொல்ல

அப்பா இப்ப ஒன்னும் வரத் தேவையில்லை நீ உள்ளே போடா என்றார்

நெஜமாவா சொல்றீங்க ?”

ஆமாண்டா

ஏன்பா

இது ரொம்ப சீக்கிரம்.,”:

எனக்கு இங்க ஒரு வேலையுமில்லப்பா., நான் இங்க இருந்தேன்னா., என்னால இன்னும்  நாலு பொம்பளங்க..”

அதையே நினைச்சிகிட்டிருக்காதகடவுள் உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தா பயன்படுத்திக்கனும்.. அதை எப்படி பயன் படுத்திக்கறதுல தான் கடவுள் கொடுத்த வாய்ப்புக்கு மதிப்பிருக்கு

“………………” அவன் எதுவும் சொல்ல வில்லை.

சுரேஷ் உன்னால எனக்கு நிறைய வேலை ஆகனும்டா.,”

என்ன வேலை

ஏன் உனக்கு புரியாதா?” என சொல்லி அவர் கண்களைப் பார்க்க அவன் அருள்வாக்கு சொன்ன அந்த ஆசாமியின் வார்த்தைகளை இழுத்துக்கொண்டான்.

சந்தோஷம்.,  எனக்கு முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன் 

இல்லடா,.  முடியல உனக்கு முடியக் கூடாது. “

நான் இங்க  என்னப்பா பண்ண போறேன்.?,”

கம்பெனியை இன்னும்  முன்னுக்கு கொன்டு வா. பத்தாயிரம் ஊழியருங்க.. குடும்பம். அவங்களுக்கு நல்லது செய். வெளியவும் சேவை செய்.. டிரஸ்ட் ஒன்று ஆரம்பி., ஏழைங்க எண்ணிக்கையை குறை.. “

இதெல்லாம் ஹரீஷ் செய்ய மாட்டானா ?’
செய்வான். ஆனா நீ செஞ்ச எனக்கு சந்தோஷம் என்றார்

போக முயன்றான். வழி தெரியாமல் அல்லாடினான். அவன் உயிர்சுருள் அலைமோத,

அப்பா.. என்னால போக முடியல. என்னால திரும்ப போக முடியுமா ?”

அப்பா சிரித்தார் நீ இன்னும் வரலடா அங்க தான்டா இருக்கே..”

அப்பனும் பிள்ளையும் ஆனந்தமாய் பேசுவதைக் கண்டு அந்த அம்மா சந்தோஷப்பட்டார்.

 

என் பிள்ளைக்கு நல்ல புத்தி வந்து இருக்கு. அது மட்டும் இல்ல இந்த உலகத்துல ரொம்ப நாளா ஆட்சி செய்வான்னு நம்பிக்கை வந்து இருக்கு.

அப்போ நாங்க போகட்டுமாடா?” என கேட்டார் அப்பா.

அந்த வயதான தம்பதிகள் அந்த பெருத்த ஒளி வெள்ளத்தில் கரைந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அடுத்தபடியாக எங்கே போவார்கள்? என்பது தெரியவில்லை.

அவன் கண்டிப்பா போய்டுவானா?” அம்மா கேட்க.,

அதுக்கு அவனை புடிச்சி ., அங்க யாராவது இழுத்து வெச்சுக்கனும். ‘போகாதா ராசான்னு யாராச்சும் புடிச்சிக்கனும். பிரார்த்திக்கனும்

இல்லன்னா..”

வேற வழி?. போக்கிடம் இல்லாம நம்ம பின்னாடி தான் வரனும்

அவன் அவர்களை பின் தொடர்வதா? இல்லை கீழே போவதா? என ஒரு நிலையில் இருந்தான்.

 

னால் அவனை யாரோ உள்ளுக்குள் புரட்டி எடுத்தார்கள். சரமாரியாக உடல் முழுக்க  குத்தினார்கள். அவனுக்கு வலிக்க ஆரம்பித்தது.