ரம்யா அதற்கு பிறகு பல நாட்கள் வீட்டில் சும்மாவே கிடந்தாள். அவளால் எந்த நிறுவனத்துக்கும் வேலைக்கு போக பிடிக்கவில்லை. சத்யா ஹோம் அப்லையன்ஸ் நிறுவனத்தில் ஷோ ரூம் மேனஜர் வேலைக்கு வாய்ப்பு வந்தது. வேண்டாம் என்றுவிட்டாள். ஜிஎம், கிளர்க், மேனஜர் இந்த செட் அப் உள்ள வேலையே வேண்டாம் என அவள் நினைத்தாள்.. நிறைய படித்தாள். பரீட்சைகள் எழுதினாள். கல்யாணம் ஆகி புருஷன். பிள்ளைகள் என செட்டில் ஆகலம என பார்த்தால், ஜாதக பிரச்சனை காரணமாக கல்யாணம் தள்ளிக் கொண்டே போனது. மீறி வந்த வரண்களும் அவளுக்கு பிடிக்கவில்லை.
விளையாட்டாய் இரண்டு ஆண்டுகள் ஓடிப் போயின.
வீட்டில் போரடிக்கவே,
அப்பாவுக்கு தெரிந்த ஒரு ஆடிட்டருக்கு உதவியாளர்
தேவை என்றதும் அங்கே போய் சேர்ந்தாள்.
திருமணமாகும் வரை ரம்யா அந்த வேலையில் தான் இருந்தாள்.
அந்த
வேலையில் சேர்ந்து மூன்று மாதம் ஆனப்பின்பு அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
அல்லது வசந்தம் அல்லது புயல் எதுவோ வந்தது
வந்ததற்கு காரணம் அவளது புதிய ஈவி. ஸ்கூட்டர்.
அவள் பணி புரியும் ஆடிட்டரிடமிருந்து
ஒரு முக்கியமான ஃபைலை திருச்சியில் இன்னொரு
மூலையில் இருக்கக்கூடிய நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆபீஸில் வேலை செய்யும் கலெக்ஷன்
பையன் கிடையாது.
“ குடுங்க சார் நானே போய்
கொடுத்து விடுகிறேன்” என சொல்லியபடி ரம்யா தனது புதிய ஈவி வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்தாள்.
ஏனோ, அவளுக்கு
எங்காவது பயணம் செய்ய வேண்டும் போல இருந்தது.
“உன் ராசி
நட்சத்திரத்துக்கு இந்த பையனையும் வேனாமுன்னா, அப்புறம் கன்னியாவே இருக்க
வேண்டியதுதான்” வீட்டிலும் சரி, ஆபீசுக்கு வந்தாலும் சதா அம்மா போனிலேயே
நச்சரித்தது அவளுக்கு பிடிக்கவில்லை.
“அம்மா பிடிக்கலன்னா
விடேன்”
“ஏன்டி புடிக்கல?
அவன் உன்னை விட 8 வயசு அதிகம்கிறது தான் பிரச்சனையா? உங்கப்பாவுக்கும் எனக்கும்
பன்னென்டு வயசு கேப்.. நாங்க வாழல?”
“அம்மா அது உங்க
காலம்”
“என்னடி பொல்லாத
காலம்,. அப்படி வயசு வித்தியாசம் இருந்தாதான்., நாப்பதில நீ ஆஞ்சு ஓஞ்சா ஆம்பளையும் ஓஞ்சு ஓரமா போய்டுவான்.
ஒரு வயசு, ரெண்டு வயசு, வித்தியாசமுன்னா.,
நீ சீக்கிரம் எல்லாத்தையும் நிறுத்திக்குவ., அவன் வாடின்னு கூப்ட்டு சீறிகிட்டு
இருப்பான். நல்லாவா இருக்கும்?”
“அம்மா அசிங்கமா
பேசாதே’
‘இருவத்து நாலு
வயசாச்சிடி., இப்ப விட்டுட்டு எப்படி பண்னிக்குவே”
“நான் எப்பவும்
பண்னிக்க போறதில்லை விடு..’
அவள் போனை கட் பண்ணி
கோபத்தில் இருக்க, எங்காவது வெளியில் போகலாம் என நினைக்க., அப்போது தான் இந்த
ஃபைலை அவள் கையில் ஆடீட்டர் கொடுத்தார்.
“போய்டுவியாமா
இருவத்தஞ்சி கிலோ மீட்டர்?” தனது நண்பரின் மகள் என்பதால் வாஞ்ச்சையாக கேட்டார்
ஆடிட்டர்.
“ஒன்னும் பிராப்ளம்
இல்ல அங்கிள்”
“சரி கொடுத்துட்டு
கால் பண்னு. நீ அப்படியே வீட்டுக்கு
போய்டு” அவள் தலை ஆட்டிவிட்டு கிளம்பினாள்.
கூகுளில் மேப்பை பார்த்து
வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள். இடையில் ஒரு ஏடிஎம் வர அவளுக்கு பணம் எடுக்க வேண்டுமே
என்கிற ஞாபகம் வந்தது.
ஈவி ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு
ஏடிஎம்மில் போய் கியூவில் நின்று பணம் எடுத்துக் கொண்டு திரும்ப வந்தாள்.
வண்டி நகரத்தைவிட்டு கொஞ்சம்
நகர்புறத்தை தாண்டி செல்லச் செல்ல வண்டியில் ஏதோ அடைப்பு ஏற்படுவது போல இருந்தது. வண்டியின்
பேட்டரி சத்தும் விட்டுவிட்டு கேட்டது.
ஈவி அறிமுகமான புதிது. பலருக்கும்
அதை ரிப்பேர் செய்ய கூட தெரியாது.
‘ அய்யோ வண்டி ஏதாவது
மக்கர் செய்து விட்டால் என்ன செய்வது?’ அவளுக்கு பகீரென இருந்தது. சிட்டி என்றாலாவது
பரவாயில்லை, போன் செய்தால், ஈவி க்கு மெக்கானிக் உடனே ஓடி வருவான். ‘இவ்வளவு தூரம்
வந்து விட்டோமே! அவள் யோசனையாக வண்டியை ஓட்டினாள். பேசாமல் டவுனுக்கு வண்டியை திருப்பலாமா?
என யோசித்தபோது வண்டி சுத்தமாக ஆஅப் ஆகி நின்றது.
“அட கடவுளே.!” அவள்
என்னென்னமோ செய்து பார்த்தாள்
‘அடடா யாரிடம் எதை எப்படி
தெரிவிப்பது?” என்று ஒன்றும் புரியவில்லை. வண்டியை எங்கே விட்டு செல்வது? கையை பிசைந்து கொண்டு நின்றாள்.
அசத்தலான வெளிற்
மஞ்சள் நிறத்தில் டாப்சும். புளு கலரில் பாட்டமும் என இளமை பந்துகள் கனக்க
நின்றிருந்த அந்த மஞ்சள் ரோஜாவை பார்த்தபடி நிறைய கார்களும் பைக்குளும் அவளை கடந்து
சென்றன.
‘ஹெல்ப் வேணும்’ என கேட்டால்
, நிச்சயம் யாராவது வந்து உதவி செய்வார்கள். ஆனால், முன்னே பண்ணி தெரியாத ஆளிடம் எப்படி
உதவி கேட்பது?’ என அவள் யோசனையாக இருந்தாள்.
மதியம் தாண்டி மாலை
நோக்கி நேரம் ஓட, வண்டியை ஓரம் தள்ளி ஸ்டாண்ட் போட்டு சீட்டு எல்லாம் கழட்டி “ஏதாவது
ஒன்றை செய்தால் வண்டி ஓடிவிடாதோ’ என்று நாப்பாசையில்
ஏதோ கைதேர்ந்த மெக்கானிக் போல அவள் பழுது பார்க்க ஆரம்பிக்க, ம்கூம்... எந்த ஒயர்?
எதற்கு?’ என தெரியவில்லை. வண்டி ஸ்டார்ட்
ஆகவே இல்லை.
அவளை தாண்டி சென்ற புல்லட்
ஒன்று மட்டும் 50 மீட்டர் தூரத்திற்கு போய் நின்று விட்டு அதில் இருந்து ஒரு இளைஞன்
இறங்கினான்.
‘அவளை நோக்கி வரலாமா?
வேண்டாமா? என அவன் யோசிப்பது அவளுக்கு நன்று தெரிந்தது என்றாலும், அவனை கண்டுகொள்ளவது
போல் ஈவி வண்டியிலேயே கவிழ்ந்து எந்தெந்த ஒயரையோ பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தாள்.
அவன் அவளிடம் வர நிறைய
தயங்குவது அவளுக்கு புரிந்தது. இவ்வளவு தயங்குகிறான்? என்றால் கண்டிப்பாக நல்ல பையனாகத்தான்
இருக்க வேண்டும். சரி! இவனும் போய்விட்டால்? அவள் திரும்பி அவனை பார்த்தாள். அவனும்
அவளை பார்த்தான். துப்பட்டாவை இழுத்து தன் பஞ்சு பந்துகளை மறைத்தாள்.
அவன் துணிச்சலை வளர்த்துக்கொண்டு
தயக்கத்தோடு அவளை நோக்கி வந்தான் ‘’மேடம் வண்டியில் ஏதாச்சும் பிராப்ளமா?” என கேட்டான்.
அவன் அவளை நிமிர்ந்து
பார்த்தாள். . திடமான உயரம், அதற்கேற்ற உடல் வாகு. அவள விட கலர் கம்மி என்றாலும்
களையாக இருந்தான். உடல் பூசினாற் போல் இருந்ததால் கன்னங்கள் எல்லாம் உப்பலாய் இருந்தன.
மீசையை அடர்த்தியாய் இல்லாமல் டிரிம் செய்திருந்தது அவனை படித்தவனாக காட்டியது.
முன் நெற்றியில் அடர்த்தியான
தலை தேசம் படர்ந்து ஒரு தனி அழகைக் கொடுத்தது. அவன் தலை வாரி இருந்த விதமும் நெற்றியில்
சந்தனமிட்டிருந்த பாங்கும் அவனுடைய வளர்ப்பையும் அவனது தேஜசையும் அவளுக்கு சொன்னது.
அவன் வயது தான் அவனுக்கு இருக்கும் என தேவையில்லாமல் நினைத்தாள்..
“வண்டியை நீங்களே சரி
செய்து விடுவீர்களா? எனது உதவி ஏதாவது தேவையா?” என அவன் ஆங்கிலத்தில் கேட்ட விதமே அத்தனை அழகாகவும் கண்ணியமாகவும்
இருந்தது . அவள் பிரச்சனையை அவனை பார்க்கமாளேயே., சொன்னாள்.
“இந்த எலக்டிரிக்
ஸ்கூட்டரே பெரிய தலைவலி. என் சிஸ்டருக்கு கூட ஒரு ஈவி வாங்கி தந்தோம். மூனு
மாசத்திலயே சார்ஜிங்க் பிராப்ளம் வந்துடுச்சி..”
அவன் பேட்டரியை செக்
செய்தான்.
“ஒரு டெக்னாலஜி வரப்ப உடனே வாங்கிட கூடாது. அஞ்சு
வருசம் வெய்ட் பண்ணனுமுன்னு எங்க டாடிI அடிக்கடி சொல்வார்” அவன் சொல்ல, அவள்
அவஸ்தையாய் நெளிந்தாள்.
’இங்க பக்கத்துல மெக்கானிக் ஷாப் இருக்குமா?”
“அடடா இங்க பக்கத்துல
எதுவும் மெக்கானிக் ஷாப் இருக்காதே! சார்ஜ் போடறப்ப சவுன்ட் வந்துச்சா மேடம்”
“தெரியலையே “என சொல்லிய
படி அவள் நெற்றியை சுருக்க., அவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றான். ம்கூம்.. அவனால் இயன்ற எல்லாவற்றையும் செய்து பார்த்தான்.
‘இருங்க எனக்கு தெரிஞ்ச
பிரெண்ட்ஸ்ல நான் மெக்கானிக் யாராச்சும் கூப்பிடுறேன் ‘
“வருவாங்களா?’
“இல்லன்னாலும், போன்
பண்னி ஆன் லைன்ல ஹெல்ப் கேக்கலாம்”
என்ன சொன்னபடி அவன் யார்
யார்க்கோ கால் செய்தான். வண்டி மாடல்,
பிராப்ளம் எல்லம் சொன்னான்.ஓவி எதுவும்
நடக்கவில்லை.
“நானும் இவி வண்டி
ரிப்பேர் பண்னதில்ல., இப்ப என்ன பண்றது? எனக்கும் டைம் ஆகுது. உங்களையும் தனியா விட்டுப்
போகவும் மனசு இல்ல. கொஞ்சம் கொஞ்சமா இருட்டாகுது. வேற. நீ எங்க போகணும்?” என சரளமான ஆங்கிலத்தில் கேட்டான்.
அவள் சொல்ல,” சரி
வண்டி விட்டு ஆட்டோல வீட்டுக்கு போய்டுங்க., இங்க எங்காயாச்சும் உங்களுக்கு
தெரிஞ்ச இடத்துல பார்க்கிங் விட முடியுமான்னு பாக்கலாம். நாளைக்கு வந்து ஸ்கூட்டர்
எடுத்துகங்க’
“அய்யோ எனக்கு இங்க
யாரையும் தெரியாது. என்னால வீட்டுக்கும் போக
முடியாது. இந்த முக்கியமான ஃபைலை ஒரு கம்பெனியில் கொடுக்கணும் “ என அவள் சொல்ல அவன்
யோசனையாய்.
“ சரி ஒன்னு பண்ணலாம்.
நீங்க வண்டிய ஓட்டுங்க. நான் கால்ல தள்ளிக்கிட்டு வரேன். டோ பண்ணிக்கிட்டே வரேன்.
“
“ரொம்ப தூரமாச்சே?”
“என்ன பண்றது? முதல்ல
அந்த கம்பெனில ஃபைலை கொடுப்போம். அதுக்கப்புறம் வழியில, ஏதாவது மெக்கானிக் ஷாப்ல ரெடி
பண்ன முடியுமான்னு பாக்கலாம்.” என்றான்.
அவன் கண்களில் எந்தவிதமான
கயமையும் பொய்மையும் இல்லை. கண்டிப்பாக இவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மட்டுமே
இருந்ததாக அவள் நம்பினாள்.
‘வண்டியை ஓரமா விட்டுட்டு
என் கூட வண்டியில் வா’ ன்னு கூப்பிடலையே, வண்டியை ‘டோ’ தானே பண்றான்” என அவள் தனக்கு
தானே சம்மதம் சொல்லிக்கொண்டு தனது ஈவி வண்டியில் ஏறி உட்கார, அவன் பின்னாடி
இருந்து தனது பலம் வாய்ந்த நீளமான வலது காலால் உந்த, அவள் வண்டி நகர்ந்தது.
கிட்டத்தட்ட,ஏழு கிலோ
மீட்டர் வரை எந்த மெக்கானிக் ஷாப்பும் இல்லை. அவள் போக வேண்டிய நிறுவனம் மட்டும்
வந்தது.
“ நீங்க உள்ள போய்
ஃபைலை கொடுத்துட்டு வாங்க. முடிஞ்சா ரெடி பண்ணுவோம். இல்லன்னா.. இந்த ஆபிசுல வன்டிய விட்டு போங்க” அவன் சொல்வது அவளுக்கு
நல்ல யோசனையாய் இருக்க., அவள் ஃபைலை கொடுத்துவிட்டு , வெளிய வந்தாள்,
வெளியே, அவன் அவள்
வண்டியை மல்லாக்க போட்டு ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.
“எ..என்ன
பண்றீங்க?”
“ம்ம்.. ஸ்டார்ட்டர்
தான் பிர்சன்னை போல,அதான் துடைச்சி போடுறேன்..” சொன்ன போது அவன் கைகள் கிரீஸ்
கரையாக இருந்தது. இது தமக்காகவா? இல்லை தன்னை இம்ப்ரஸ் செய்யவா? அவள் தடுமாற,
அவன் வண்டியை
நிறுத்தி ஸ்டார்ட் செய்ய., முக்கி முக்கி
ஒரு வழியாய் ஸ்டார்ட் ஆனது.
“ஓ கிரேட்” அவள்
ஆச்சரியப்பட்டாள்.
“சே.. இதை முதல்லயே
நான் செஞ்ச்சிருந்தா., காலை வெச்சி டோ பண்னி இவ்ளோ தூரம்,வலிக்க வலிக்க வந்திருக
வேணாம்..”
“அய்யோ சாரிங்க..
ரொம்ப வலிக்குதா?”
“வலில்லாம் ஒரு
பக்கம் இருக்கட்டும். ஒரு பொண்ணோட பேர தெரிஞ்சுக்கறதுக்கு இந்த கஷ்டம்
கூட படலைன்னா எப்படி?” அவன் கேட்ட தொனியும், பாவனையும் அவளுக்கு சிரிப்பை
வரவழைத்தது..
அவள் தன்னைப் பற்றி
எல்லாவற்றையும் சொன்னாள். அவனும் பேர் சொன்னான்.
“என் பேர்.,
ஜானகிராமன், ப்ரண்ட்ஸ் ஜே கே ன்னு கூப்பிடுவாங்க. எம்.ஐ டியில எம் டெக்..ஃபைனல்
இயர் இப்பத்தான் முடிச்சேன்.”
“எம் டெக்கா?” அவள்
வியந்தாள்.
“இஸ்ரோல என்டர்னஸ்
எழுதனும் அடுத்த மாசம்”
அவன்
இன்னும் பேசி பேசி அவளை ஆச்சரியப்படுத்தினான்.
மொபைல் எண்ணை பரிமாறாமல் முகனூல் ஐடிக்களை மட்டும் பரிமாறிக் கொண்டார்கள்..
முதல் சந்திப்பிலேயே மொபைல் எண்ணைக் கேட்க இருவருக்குமே தயக்கம் இருந்தது.