சென்ற வாரம் தான் அந்தக் கரு மதுமிதாவின் கருப்பையில்
பத்திரமாக வைக்கப்பட்டது. நாளுக்கு ஒரு நாள் தன் உடலில் ஏதேதோ மாற்றங்கள் உண்டாவதாக மது, ஷில்பாவிடம் தினம் தினம் சொல்லி சந்தோஷப்பட்டாள்.
“இப்ப யார்கிட்டயும் மூச்சு விடாதே? ஒரு நாலு மாசம்
போவட்டும்” ஷில்பா கூட அவளை எச்சரித்திருந்தாள். “பத்திரம்., பத்திரம்டி., வேலைக்கார
அம்மாவை சீக்கிரமே வர சொல்லிடு,... தடால் படால்னு எதையுமே தூக்காதே., நடக்காதே., பறக்காதே.,
நோ வெய்ட்/., நோ...டிராவல்.,.” என்றெல்லாம் எத்தனை எத்தனை எச்சரிகைகள்?
ஆனால்., ஆனால்?. அந்த பத்திரமான கருப்பை தான் ,
அவர்களது உலகத்திற்கு ஒரு புதிய வரவாக வரும் என நம்பிக்
கொண்டிருந்த கருப்பை தான்.,
இனி அவளுக்கு மலடி என்ற பெயர் திரும்ப வராது' என அவள்
நிச்சயம் நம்பிக் கொண்டிருந்த அந்த கருப்பை தான் ,
இன்று அதிகாலை கர்ப்பபை பலமிழந்து கருக்கலைந்து வெளியேறி
விட்டது. எல்லாம் தூள் தூளாகி போயிருந்தது.
அந்த சோகம் தாங்காமல் தான் மது அழுது கொண்டிருந்தாள். நேராக உட்கார கூட தெம்பில்லாமல் தரையில் சரிந்தவாறு
படுத்திருந்தாள். வெகுவாக இடிந்து போயிருந்தாள்.
அவள் சொல்ல சொல்ல .,
“என்னடி சொல்றே? “ ஷில்பாவும் அதிர்ச்சியானாள். தன்
கர்ப்பம் கலைந்தது போல் ஒரு பிரமை.
“என்னடி சொல்ற? பாவி" " அலறியபடி அவளை பிடித்து
உலுக்கினாள்
“நீயும் திட்டு., இப்பதான் அவரும் என்னை அதிர்ஷ்டம்
கெட்டவன்னு திட்டிட்டூ போனார்.. நீயும் திட்டு”
.”அடிப்பாவி! கவனமா இருக்க கூடாது” ஷில்பாவுக்கும்
அழுகை வரும்போல இருக்க.,
“இதுக்கு மேல நான் என்ன டிரை பண்ண முடியும்? கருக்குழாய்
அடைப்புன்னாங்க, அப்புறம் சினை முட்டை தரமில்லைனாங்க,. இப்போ என் கருப்பையும் சரியில்ல
போல” அவள் மாய்ந்து மாய்ந்து அழுதாள்.
“எவ்ளோ டென்ஷன்? எவ்ளோ டைம்? எவ்ளோ காசு எல்லாம் போச்சு,.
என்னால தாங்க முடியல ஷில்பா. ஏன்டா பொம்பளையா பொறந்தோமுன்னு ஒரு விரக்தி”
“ எனக்கு பொருளை தான் உருப்படியா செய்ய தெரியல., கிடைச்ச
பொருளைக் கூட எனக்கு பத்திரமாக பாத்துகக் தெரியலடி, என் கருப்பை கூட வலுவில்ல., இனிமே
எனக்கு புள்ளை பொறக்க வாய்ப்பே இல்லையா? அய்யோ இதுக்கு மேல எப்படி என்னை ஆண்டவன் சோதிப்பான்.
சொல்லு. யாரோட திருஷ்டி., யாரோட சாபம் தெரில”
“.........................சரி விடு... மது”
“இல்ல ஷில்பா... அய்யோ! உன் சினை
முட்டை., கருவாகி என் கருப்பைல வளர்ந்து, எவ்வளவு
அழகான ஒரு குழந்தையா., உன்னை உரிச்சி வெச்சி எனக்கு பிறந்து இருக்கும்? நான் என்னென்ன
கனவு எல்லாம் கண்டேன் தெரியுமா? எல்லாமே போச்சுடி? எவ்ளோ பெரிய தண்டனை?”
“சரி.. ரிலாக்ஸ்
மது.. நம்ம கையில ஒன்னுமில்ல”
“சே. ப்ரண்டுங்கிற
முறையில் நீ கருமுட்டை தந்தே? யாருமே இந்த தியாகத்தை பண்ண மாட்டாங்க., ஆனா நீ இந்த
தியாகத்தை பண்ணே., அதுக்கு கூட ஒரு மரியாதை இல்லாம ஒரு அர்த்தமில்லாம போயிடுச்சு. ஒரு
பொம்பளை எத்தனை தடவை தான் இதுக்கு ஒத்துகுவா? எங்க வீட்டுக்காரர் நல்லா பொலிகாளையாட்டம்
இருக்காரு. ஆனா நான்தான் அவருடைய விந்து வாங்கி
கருப்பையில் வைச்சி குழந்தையாக கொடுக்கறதுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கேண்..”
‘...........................”
“அய்யோ இப்படிபட்ட புருஷன பார்க்க முடியுமா? எத்தனை
தடவ அபார்ஷன் ஆனாலும் கருத்தரிப்பு தோல்வி அடைஞ்சாலும், அவர் கொஞ்சம் கூட கவலைப்படல
ஷில்பா., “பரவால்ல விடு பாத்துக்கலாம்., கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்ற ஒரு நல்ல புருஷனுக்கு
என்னால ஒரு குழந்தையை பெற்றுக் கொடுக்க முடியலையே”
‘............................”
“ அவரும் எத்தனை வருஷம் தான் என் கூட பொறுமையா குடும்பம்
நடத்துவார் சொலு. நான் சொல்றதெல்லாம் அவர் செய்றார். அவரு சொல்றதை நான் கேக்குறேன். அவர் கூப்ட்டபல்லாம்
கட்டிலுக்கு போறேன். ஆனா,குழந்தை மட்டும் என்னால் பெத்து கொடுக்க முடியல. போதும் போதும்கிற வரைக்கும். கட்டில்ல அசர அடிக்கிற
ஆம்பளை அவரு. எத்தினி பொம்பள வந்தாலும் வரிசையா புள்ளை கொடுப்பார்,”
ஷில்பா இதைக் கேட்டு தலைகுனிய,
“ஆனா அவரை ஆம்பளையா?ண்னு இந்த ஜனங்க பாக்குற பார்வை
இருக்கே? இந்த அப்பார்ட்மெண்ட்ல குழந்தை இல்லாம என்னால வெளிய வர முடியல “
“சரிடி விடு. கவலைப்படாத “
‘ஐயோ அந்த சங்கீதா மேடத்தோட பொண்ணு இருக்காளே பார்கவி,.
அவ கூட கல்யாணம் ஆகி ஒரு வருஷம் இரண்டு வருஷம் குழந்தை இல்லைன்னு சொன்னாங்க. அவ கூட
இப்போ எதுவும் உண்டாகி இருக்கான்னு கேள்விப்பட்டேன். என்ன விட சின்னப் பெண் அவ இப்போ
வயித்த சாய்ச்சு வந்து நிக்க போறா? எனக்கு பகீர்னு இருக்கு,,.”
“..............................”
“எனக்கு ஏன்டி ஒரு குழந்தை உருவாகல? கூச்சபடாம சொல்றேன்.
ஐயோ அந்த ஆளு என்னன்னா கட்டில் போட்டு நல்லா சாய்க்கிறான். திணற திணற என்கூட படுக்கிறான். காட்டு சிங்கம் மாதிரி
சிலுத்துகிட்டு நிற்கிறான். வள்ளல்டி அவன்.
ஆனா அவன்கிட்ட குழந்தை வாங்க துப்பில்லாமல் நிற்கிறேன் “
“சரி சரி விடு மதுமிதா.. எல்லாம் சரியா போகும், இன்னும்
நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு”
“ இனிமேல் நான் ரெஸ்ட் எடுக்குறதுக்கு என்ன ஆக போவுது?
இனிமேல் எனக்கு குழந்தையே பிறக்காது. அந்த ஆள் வேற கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லது.”
“ஏய்ய்ய் வாயை மூடு”
“இல்ல ஷில்பா! நான் பேசாமல் அவரை டைவர்ஸ் பண்ணலாம்னு
நினைக்கிறேன்”
“ வாய மூடு என்ன இப்படி எல்லாம் பேசுற?”
“ ஆமாண்டி ஒரு பொம்பளைன்னா புருஷன் கூட பறந்து புள்ள
பெத்து தரணும். எனக்கு அந்த யோக்கிதை இல்லையடி”
“ வாயை மூடு என்ன பேசுற? பொம்பளைன்னா புள்ள பெத்து தர மெஷினா? அதை தாண்டி
அவளூக்கு சாதிக்க தெரியாதா? எவ்வளவோ விஷயம் இருக்கு ? நீ ஏன் அப்படி உன்ன தாழ்த்துகிறே
லூசு? “
“எவ்வளவோ விஷயம் இருக்கு தாண்டி, ஆனால் கல்யாணம் கட்டி
புருஷன் கூட குடும்பம் நடத்துற பொம்பள பண்ணக்கூடிய அதிகபட்ச சாதனை என்ன? புள்ள பெத்துக்கறது
தானே? அதுக்கு ஏத்தா போல ஆரோக்கியமா தானே நான் உடம்ப வச்சுக்கணும்? என் உடம்பு ஏன்
இப்படி மாறி போச்சுன்னு தெரியலையே?
என்னை கல்யாணம் கட்டிக் கொடுக்கற வரைக்கும், நான்
ஆரோக்கியமான உணவு தான் சாப்பிட்டேன். இந்த சிட்டில வந்து தான் நான் கிடைச்சதை சாப்பிட்டு
அய்ய்யய்யோ.. பாழாய் போனா மைனூஸ், சிக்கன் ப்ரைட் ரைஸ் அய்ய்யய்யோ எப்ப பாத்தாலும்
தப்பானதே சாப்பிட்டு, உடம்பே தப்பா போச்சு “
‘..........................”
“அய்யோ அப்படி சாப்பிட்டு சாப்பிட்டு தான் என் உடம்பு
இப்படி ஆயிருக்குமோ? ஐயோ அடிக்கடி அந்த பானிபூரி, மைநூஸ் பிரஞ்ச் பிங்கர்ஸ் ,கிரில்
சிக்கன் பத்தாதுக்கு சவர்மா.. அய்யோ கடவுளே! உன் தப்பு எதுவுமில்ல, எல்லாம் என் தப்புதான்
“ அவள் அரற்றினாள்
“நான் தான் என் உடம்ப கெடுத்துக்கிட்டேன். ஷில்பா
இனிமே எனக்கு குழந்தையே பொறக்காதா? என் உடம்ப நானே நாசம் பண்ணிட்டேனா?”
“ஏய்ய் போதும் ,.நீ கண்டதையும் போட்டு குழப்பிக்காத.
நீ தான் அதையெல்லாம் இப்ப சாப்பிடறது எல்லாம் விட்டுட்டல்ல? இனிமேல் உன் உடம்பு நல்லபடியா மாறும்” இன்னும் என்ன
சொல்லி, அவளை தேற்றுவது?’ என தெரியவில்லை.
“நான் எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா? இனிமேல் என்
பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுச்சு. என் வயித்துல ஒரு குழந்தையை பெத்து எடுக்க போறேன்.,
அப்படின்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்னு தெரியுமா? இப்ப நான் என்னுடைய குழந்தையை பறிகொடுத்து நிற்கிறேன்.”
“ஏன் அப்படி எல்லாம் சொல்ற? இது ஒரு அபார்ஷன் தானே
மது... விடு”
“என்ன சொல்ற ஷில்பா ? குழந்தை பிறந்து எடுத்து வெளியே
வந்தாதான் அது என்னுடைய குழந்தையா? அப்போ தான் அது ஒரு உயிரா? என் வயித்துக்குள்ள இருந்தா
அது உயிர் இல்லையா? அந்த உயிரை நானே இப்போ விட்டுட்டேன்? என்ணோட கருப்பை சரி இல்லையா?
நான் தப்பு தானா? அப்ப என்னால தானே ஒரு உயிர் போச்சு?” என அவள் உருக்கமாக பேசியழ, ஷிள்பா அவளை தன்னுடைய
வயற்றோடு சேர்த்து அமர்த்தி பிடித்துக் கொண்டாள்
“ அழாத. மது! விடேன்., எனக்கும் கஷ்டம் தான்.. விடு பரவாயில்ல”
“மனசு கேக்கல ஷில்பா”
“ப்ச்.. அழாத மதுமிதா! சொன்னா கேளு! உடம்ப இன்னும்
கெடுத்துக்காதே, நீ முதல்ல ரெஸ்ட் எடு. சாயந்திரமா நம்ம அந்த ஹாஸ்பிடல் போலாம். சொல்றது கேளு .நீ படு “
“ஐயோ என்னால மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு போய் பெட்ல
படுக்க முடியாது .உன்னையும் என்னால அழைச்சிட்டு போக முடியாது. உன்ன கூட கூட்டிட்டு
போகலாம். ஆனால் என் புருஷனை கூட்டிட்டு போய்..திரும்ப..... ஐயோ ...ஷில்பா! அந்த செமனை
எடுக்க நாங்கள் பட்ட பாடு இருக்கே., ஐயோ என்னால மறுபடியும் முதல்ல இருந்து செய்ய முடியாது.,”
அவள் கண்டபடி பேசி அழ, அதை பார்ப்பதற்கு ஷில்ஃபாவிற்கு பரிதாபமாக இருந்தது.
“ஈவ்னிங்க் போய் பாப்போம்.. ஏதாச்சும் சாப்பிட்டியா?”
அவள் ‘இல்லை’ என்றாள்
ஷில்பா வீட்டுக்கு போய் டிபன் எடுத்து வந்து கொடுத்து
அவள் தலையை தடவி விட்டாள்.
“நீ சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு. நாம போயி
நளினி கிட்ட போய் என்ன ஏதுன்னு கேட்கலாம். “
“நான் மறுபடியும் எங்க வீட்டுக்காரரை அங்க அழைச்சிட்டு
வரமாட்டேன். ஏன்னா லாஸ்ட் டைம் அவருடைய சம்மதம் நான் வாங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்.
அவரை மறுபடியும் ஹாஸ்பிடலுக்கு கூப்பிட முடியாது”
“ மது முதல்ல போய் பார்ப்போம்,. அவங்க என்ன சொல்றாங்கன்னு
கேப்போம். முதல்ல நீ தூங்கு”
அப்போதைக்கு மது
தூங்கினாள். மாலை வந்ததும் ஷில்பா மதுமிதாவை கிளினிக் அழைத்து போனாள்.