மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, May 10, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2059 ( திபூவை இறுதி பாகம்)

 

டுத்த ஒரு மணி நேரத்தில் ஓசூரில்  சந்திர சேகரா ஹாஸ்பிட்டலில் அவர்கள் சேர்க்கப்பட்டு., அனைவருகும் முதலுதவி செய்யப்பட., சுரேஷ் மட்டும் ஐ சி யூ வில் அனுமதிக்கப்பட்டான்.

ரொம்ப கஷ்டம். நிறைய இடத்துல அடிபட்டு இருக்கு. பல்ஸ் டவுன்ல இருக்கு,. ஹார்ட் பக்கத்துல நெர்வ்ஸ் டேமேஜ் ஆகி இருக்கு. நினைவு வேகமாக போய்கிட்டிருக்கு. வீ ஆர் டிரையிங்க் அவர் பெஸ்ட். இந்தாம்மா ரெட் சுரிதார், இவரு பேரு என்ன? பேமிலி யார்?” டாக்டர் கேட்டுகொண்டு இருக்க., எல்லாருக்கும் பகீரென இருந்தது.

இல்ல சார்.. நீங்க ஃபர்ஸ்ட் எய்ட்., மட்டும் கொடுத்து ஆம்புலன்ஸ் அரேஞ்ச் பண்னி கொடுங்க.. நாங்க பெங்களூர் போய் பாத்துக்கறோம்.” சஞ்சனா கேட்க.,

ஆர் யூ மேட். அடுத்த ஃபோர் ஹவர்ஸ் இவர் இருந்தா கஷ்டம்.. செம்மையா அடிச்சிருக்காங்க.. த்ரோட்., ஜா.., எல்லாம் அடிச்சி  நொறுக்கி இருக்காங்கடாக்டர் கத்த .,

ராப்பரிக்கு ஏன் இப்படி அடிக்கிறாங்கஇன்ஸ்பெக்டர் கேட்க.

.. இல்ல சார். இட்ஸ் நாட் ராப்பரிமலர் தீர்மானமாய் சொன்னாள்.

எப்படி சொல்றீங்க மேடம்?”

அடிக்கறதுக்கு முன்னடி ஒருத்தன் சொன்னான். மவனே. என்னையா மாடியில இருந்து கீழ தள்ளீனே? செத்தடா நீ?ன்னு சொல்லி தான் அடிச்சான்.. “

ஓ ஐ சீ

ப்ரி பிளான்ட் சார். எப்படியாவது அவரை சாகடிக்க தான் அவனுங்க டிரை பண்ணாங்க.. அதுக்குள்ள இந்த  காலேஜ் கேர்ள்ஸ் வந்துட்டாங்க

குட் பிரேவ் கேர்ள். “

அதற்குள் இன்ஸ்பெக்டருக்கு போன் வர, யாரிடமோ போனில் பேசிவிட்டு திரும்ப வந்தார்.

யெஸ் மேடம். யூ ஆர் ரைட்.. வில்லேஜ் ஆளூங்க அடிச்சதுல  எல்லாருக்குமே மயக்கம். மொத்த பேரையும் புடிச்சி.. கவர்மென்ட் ஆஸ்பிடல்ல சேத்திருக்கோம்.. ஒருத்தனுக்கு தெளிஞ்ச்சிருக்கு., இப்பதான் சொல்றாங்க.. உங்களை சென்னைல இருந்து பாலோ பண்ணியிருக்காங்க., “

மை காட்?”

அது  மட்டுமில்ல.  டூ வீக்ஸா இந்த  பையனை ஃபாலோ பண்ணி இருக்காங்க.. பெரிய கேஸ் இது. பர்சனல் மோட்டிவ் இருந்தாலும்., யாரோ சொல்லிதான் செஞ்ச்சிருக்காங்க.. விசாரிச்சதுல லிங்கப்பான்னு  பேர் சொல்றாங்க., டூ யூ நோ லிங்கப்பாஇன்ஸ்பெக்டர் .கேட்க,

எனக்கு தெரியும் சார். “ என்றாள் அந்த சிவப்பு சுரிதார் பெண்.

அன்ட் நீங்க ?”

ஐ ஆம் ஆர்த்தி. ஆர்த்தி கண்ணன்என்றது சிவப்பு சுரிதார்.