ரெண்டு நாள் கழித்து நளினி. தன்னுடைய கிளீனிக்கிற்கு
அவளை அழைத்துச் செல்ல, பெண் டாக்டரும் பரிசோதித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் அது நடந்தது. ஷில்பாதான்
மதுமிதாவுடன் செண்றிருந்தாள்.
மறுபடியும் முதலில் இருந்து மதுமிதாவுக்கு, பரிசோதனைகள் எல்லாம் முடிந்த
பின்பு அந்தப் டாக்டர் மேடம் , நளினி, ஷில்பா, மதுவை உட்கார வைத்து நீண்ட நேரம் பேசினாள்.
“ உங்க வீட்டுக்காரருக்கு
எந்த பிரச்சினையும் இல்லை. இவங்களுக்கு தான் கருக்குழாய்ல, குட்டி குட்டி நீர்கட்டிகள்
உற்பத்தியாகி கருக்குழாயில பிரச்சனை இருக்கு. அதாவது அவருடைய விந்தணு உன்னுடைய கர்ப்பப்பைல
சேர மாட்டேங்குது. வெறும் கருக்குழாய் பிரச்சனைனா லேப்ரோஸ்கிபிக் பண்ணிட்டு டேப்லட்
கொடுத்தா போதும். உங்க சினை முட்டை , உங்க
ஹஸ்பேன்ட் விந்து. கிட்டதட்ட இது நார்மல் இதை கிளியர் பண்னா நார்மலாவே உங்க செக்சுல
பேபி பார்ம் ஆகிடும்...”
“...........................”
““மேல சொன்னதுக்கு ஒரு லட்சம் ஆகும்.. அடுத்த ஸ்டெப்.,
இதுக்கு பதிலா உங்க கருப்பைல டைரக்ட்டா உங்க
கணவரோட விந்தணுவை எடுத்து சேத்துடுவோம்.. அதாவது உங்க ரென்டு பேருக்கும் டைரக்ட் செக்ஸ் இல்லாமயே பேபி பார்ம் ஆகும்..”
“.............................”
“ஆனா அதுக்கு
உங்க கருமுட்டை நார்மலா இருக்கனும். தரமா இருக்கனும். “
“தரமா இல்லண்ணனா? ” அவள் நாக்கு மேல்ண்னத்தில் ஒட்டிக்
கொள்ள.,
“கஷ்டம்தான். பட் பாசிபிள். ஊசி போட்டு சினைமுட்டை குவாலிட்டி இன்கிரீஸ் பண்னனும்..ஆனா
அதுக்கு பதிலா”
“பதிலா?”
“ உங்க கருமுட்டை
சரியா இல்லன்னா, வெளியில் இருந்து ஏதாச்சும் ஆரோக்கியமான பெண்ணிடமிருந்து கருமுட்டை
தானம் நாம வாங்க முடியும். அதையும்., உங்க கணவர் விந்தினில் இருந்து நல்ல தரமான விந்து
சேத்து கருத்தரிக்க வெச்சு, அதை சில வாரங்கள் வரைக்கும் ஸ்டோரேஜ்ல சேர்த்து வச்சுக்க
முடியும்.”
“.....................அப்ப அது என் குழந்தையா” டாக்டர்
மேடம் சிரித்தாள்;
“ எல்லாத்துக்கும் ஆசைபட்டா எப்படி ? உங்க வீட்டுகாரர்
வித்து தான். உங்க கருமுட்டை இல்ல தானே, அந்த கருவை ஒரு டெஸ்ட் ட்யூப்ல குறிப்பிட்ட நாள் வரைக்கும் வளத்து., ரொம்ப சேஃபா., உங்க கருப்பைல
வெச்சிடுவோம். மசக்க, வாந்தி தலை சுத்தல்லாம் வரும். உங்க கருப்பை, உங்க கர்ப்பம்.,
உங்க குழந்தை..”
‘....................................”
“பட் இதுக்கு காசு அதிகமாகும்.. தவிர”
‘தவிர......,”
“வேற ஒரு
பொண்ணு உங்களுக்கு கருமுட்டை தானமா
தர ரெடியா இருக்கனும். லீகலா டிரை பண்னனும். ஏகப்பட்ட பார்மாலிட்டிஸ். டயம் ஆகலாம்.
உங்களுக்கும் பொருந்தனும். . உங்க ஹஸ்பேன்ட் ஒத்துக்கனும்., எல்லாத்துக்கும் மேல “
“சொல்லுங்க மேடம்”
“ அந்த கருவை பத்திரமா தாங்க உங்க கர்ப்பப்பை பலமா
இருக்கனும். அதுல இருக்கக்கூடிய சிக்கல் என்னென்ன அந்த டெஸ்ட் டியூப்லயே 40 நாள் வளர்த்து
அந்த கருவை கொண்டு போயிட்டு, மதுமிதா கருப்பையில வைக்கறப்ப, அவங்களுடைய கருப்பை அந்த
அளவுக்கு பலமா இல்லன்னா, என்ன பண்றது?“ மதுமிதா தலையில் கையை வைத்துக் கொண்டாள்.
“ பயப்படாதே அதெல்லாம் லாஸ்ட் லெவல் தான். அதை தாண்டி
இன்னும் ஒன்னு இருக்கு....அது?”
“சொல்லுங்க...”
“இப்ப வேணாம்.. அது கடைசியில பாத்துக்கலாம்.. “
‘இல்ல டாக்டர்
நீங்க சொல்லுங்க”
“உங்க ஹஸ்பேன்ட் ஸ்பெர்ம் எடுத்து. இன்னொரு பெண்ணோட
சினை முட்டைல சேத்து, அப்புறம் அந்த பெண்ணோட
கருப்பையில் வெச்சிடுவோம். அவங்க உங்களுக்கு குழந்தை பெத்து தருவாங்க”
“வாடகை தாயா?’
“எக்ஸாட்லி”
“அப்படி செய்றதுக்கு எவ்வளவு செலவாகும்?’
“ அதுக்கு பல லட்ச ரூபாய் ஆகும். ஆனா இப்போ விஷயம் அது இல்ல., அதுக்கு நல்லா திடமான
பொம்பளை கிடைக்கனும். லீகல் விஷயத்துக்கு லாயரை கன்சலட் பண்ணனும்.” அவள் சொல்ல சொல்ல
மதுமிதா அயர்ந்து போனாள்.
“அது மட்டுமல்ல, நமக்கு யாரோ குழந்தை பெத்து கொடுத்தா
இதை ஜாதி சனம், வீட்டார் கிட்ட சொல்ல முடியாதுல்ல,.? “
“ஆஅ..ஆமா”
“அதுக்கு தான் என்ன பண்ணுவாங்கன்னா., வாடகைத் தாயா
இருக்கறவ கர்ப்பம் ஆவற டைமுல அந்த பொண்ணும் கர்ப்பம்னு சொல்லி நம்ப வைக்கும்., ஆறு
ஏழாம் மாசம் வரைக்கும் வயிறு தெரியாதுலே., கடைசியில அந்த வாடகை தாயா இருக்குற பொண்ணுகூடவே
எங்கனாச்சும் ஒரு ஆஸ்பத்திரியில தங்கிட்டு
இவ புள்ளை வாங்கிட்டு., இவளே பெத்தவ மாதிரி வந்து நிப்பா”
“ அய்யோ இவ்ளோ நாடகமா?’
“எல்லாம் கள்ளம் கபடம் தான்., பலபேரு சொந்தகாரங்களை
நம்ப வைக்க வளைகாப்பெல்லாம் நடத்தி இருக்காங்கனா பாருங்களே”
“அய்யோடா”
“ இங்க நம்ம
லைஃபே மத்தவங்க மெச்சறதுக்காத்தான். காரு, பங்களா, ஏசி மாதிரி ஆகிடுச்சி இப்ப புள்ளை
பெத்துக்கறதும். நீ கூட இப்படித்தான் பண்ணனும். இல்லன்னா உன் கையில பேபி இருந்தும்.,
உன்னை மலடின்னு தானே சொல்வாங்க..”
“இவ்ளோ கஷ்டமா?”
“ஆமா. அதுக்கு தானே., நம்ம சொல்பேச்சு கேக்குற ஏழைப்
பொண்ணை வாடகை தாயா வெச்சுகுறாங்க., யார் குழந்தையையோ., நம்ம குழந்தைன்னு நம்ப வைக்க
தான் இவ்ளோ நாடககும்,.,..”
மதுமிதாவால் நம்ப முடியவில்லை. என்னடா இது காக்கா,
குருவி, கோழியெல்லாம் ரொம்ப சாதாரணமா முட்டை வெக்குது. குஞ்சு பொறிக்குது., நாய், பன்னிங்க
நினைச்சப்போ புள்ள பெத்துக்குது., கிரயம் இந்த மனுசப் பயலுக்கு தான் எத்தன சோதனை? அவள்
கண்ணில் தெரிந்த மிரட்சியைப் பாத்து டாக்டர் மேடம் அவள் கையை ஆதரவாய் பிடித்தாள்.
“இருங்க ஏன் பயபடறீங்க? ஒரு பொண்ணு கர்ப்பமாகலன்னா
பொண்ணு சைடுல மொத்தம் மூணு பிரச்சனை இருக்கு. ஒன்னு கருக்குழாய் அடைப்பு, இன்னொன்னு
தரம் இல்லாத சினை முட்டை, மூன்று பலம் இல்லாத கருப்பை”
‘............................”
“ இதெல்லாம் ரொம்ப எக்ஸ்ட்ரீம் போனா தான். நாம இப்ப
லேப்ராஸ்கோப்பி போலாம்” அதே வாரத்தில், முதலில் லேப்ராஸ்கோப்பி முறையில் அவரது கருக்குழாய்வை
சுத்தம் செய்து, கணவனுடன் சேர சொன்னார்கள்.
ஆனால், தீனாவின் விந்தணு கருமுட்டையில் போய் கூடவே இல்லை. மறுபடியும் சோதித்த போது,
அவளுக்கு தரம் இல்லாத கருமுட்டை என்றார்கள்.
குடும்பமே தலையை பிடித்துக் கொண்டு கதற, கிளினிக்கில்’
உங்களுக்கு நார்மலான கருத்தரிப்பு நடக்காது. டெஸ்ட் ட்யூப் பேபி தான் சரி’ என்றார்கள்.
மதுமிதா அழுதாள். ஷில்பாவும் தோழிக்காக அழுதாள்.
இதுல ஒன்னும்
பிரச்சனை இல்ல, கணவர் விந்தணுவை வேறு ஏதாவது பெண்ணுடைய கருமுட்டைகளை சேர்த்து பேப்
பார்ம் பண்ணலாம் ஓகேவா?” என கேட்டார்கள். பல பெண்களை அணுகினார்கள். எல்லோரையும் பரிசோதித்தார்கள்.
அதிகமான விலை கொடுத்து ஒரு கல்லூரியில் மாணவி தன்னுடைய கருமுட்டையை விற்பதாக சொல கடைசி நேரத்தில் அவளது வீட்டார் அதை ஒத்துக் கொள்ளவில்லை.
“இப்படி கருமுட்டை கொடுக்கறதும் ஒன்னு, கூட படுக்கறதும்
ஒன்னு” அவர்கள் பத்தாம் பசலித்தனமாக பேச., டாக்டர் டீம் எவ்வளவு முயற்சித்தும் அவர்கள்
ஏற்கவேயில்லை.
“இப்ப என்னடி பண்றது?” மதுமிதா நளினியை கேட்க.,
“வெயிட் பண்ணுவோம்”
அதற்கு பின் எந்த கரு முட்டையும் கிடைக்காமல் பல நாட்கள்
காத்திருந்தார்கள். நடுவில் நளினியும் தன்
கருமுட்டையை தர சம்மதித்தாள். ஆனால், அவள் டெஸ்டில் பாஸ் ஆகவில்லை.
“என்னடி இது எந்த பக்கம் போனாலும், டோர் லாக் ஆகி
இருக்கே?” மதுமிதா சோர்வாக,
அப்போதுதான்
நளினி ஷில்பாவை கூப்பிட்டு ரகசியமாக சொன்னாள்.
‘அக்கா இங்க பாருங்க நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே! “
“ம்ம் சொல்லு”
“ வேற ஏதோ ஒரு பெண்ணிடம் போய் கருமுட்டையை கேட்கிறதுக்கு
பதிலா, ஏன் நீங்க உங்க தோழிக்காக கருமுட்டை கொடுத்து உதவ கூடாது?” திடீரென நளினி அந்தக்
கேள்வியைக் கேட்டாள்.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6