சீமைக்குப் போய்விட்ட புருஷனின்
‘நா ’ படாது இறுக மூடிவிட்ட,
இளம் மனைவியின் யோனிக் கதவுகள்
முற்றிலும் இறுகிவிடாமல்
அவ்வப்போது தடுக்க வேண்டியே
அவனுக்கு ‘உம்’ சொன்னேன்.
எங்கோ படித்த கவிதை , வரி வரியாய சங்கீதாவின் மனதில் ஓடிற்று. மரியாவுக்கும் அது கேட்ட்டிருக்க வேன்டும்.
“அ.ய்யோ.. என்ன மன்னிச்சிடு சங்கீதா. நான் தான் தப்பு பண்ணிட்டேன்
“ அவள் முகத்தைப் பொத்திக் கொண்டு அழ.,
“ஏண்டி”
“என்னால அதை மறைக்கவும் முடியல . உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல.
உன் கிட்ட சொன்னாதான் எனக்கு ஆறுதல் கிடைக்கும்னு சொல்லிட்டேன்டி. அய்யோ கல்யாணம் ஆகி புள்ளையை வச்சிகிட்டு.. நான்..
ச்சீ.. எவ்ளோ பெரிய அசிங்க. கறை?”
“........................”
“அதை நான் தான் பண்ணேன்னு தைரியமாக சொல்லவும் தெரியல. அதான் அந்த
ரேவதியை உனக்கு தெரியாது நெனச்சு, தெரியாத ஒருத்தி மேல பழியை போட்டு தப்பா சொல்லிட்டேன். பட் நவ்.
ஐ ஆம் ஆன் வெரி ஷேம்’ அவள் முகத்தை பொத்திக்கொண்டு வீறிட்டு அழுதாள்.
அவளை பார்க்க பரிதாபமாக இருந்தது. மரியா மிகவும் போல்டானவள். எதற்கும் அவள் இப்படி
அழுதது இல்லை.
அவள் உடம்பு, அவள் லைப்,
நாம் யார் அதைக் கேட்க? என்று தான் சங்கீதாவுக்கு தோன்றியது.
“சரி என்ன மரியா? ஏன் இப்படி பண்ண? நீ ரொம்ப கண்ட்ரோலா இருப்பியே? நினைச்சிருந்தா எப்போ
வேணாலும் நீ தப்பு பண்ணி இருக்கலாம். கல்யாணம்
ஆகி எத்தனை வருஷம் கழிச்சு இப்படி பண்ணனும்னு அவசியம் இல்லையே.”
‘................ஐ டன் பிக் மிஸ்டேக்கன் “
“ சரி விடு. அந்த பசங்க புத்தி இப்படி? இப்படி கொத்தும் கொலையுமா?
செழிப்பா இருக்காளே? தனியா வந்திருக்காளே? குடிச்சிட்டு தடுமாறுறாளேன்னு மேல கையை வெச்சிருக்கானுங்க. நீயும் ஸ்லிப் ஆயிட்டே? இனிமே, தனியா இங்கெல்லாம்
போகாதே” என சொல்ல ,
“இல்ல சங்கீதா, இதெல்லாம்
சப்பைகட்டு. இதுக்கு நான் எந்த சமாதானமும் சொல்லவே முடியாது. என் மேல கண்டிப்பா தப்பு
இருக்கு. பீகாஸ் ஐ நீட் இட். என் உடம்பு கேக்குதா? என் மனசு கேட்குதா இல்ல? பெண்ணுக்கு அடையாளம் இருக்கக்கூடிய அந்தந்த உறுப்புகள்
கேட்கிறதா அப்படின்னு சொல்ல முடியாது?”
‘ ஏன்டி இப்படி எல்லாம் பேசுற ?”
“இல்ல சங்கீதா . அதான் உண்மை.
நம்மளை சுத்தி நடக்குற விஷயம், பாக்குற விஷயம், அதுல எல்லாத்துக்கும் செக்ஸ்
தான் மறைமுகமா ஒளிஞ்சிசிட்டு இருக்கு. ஒரு ஜட்டி விளம்பரம். பிரா விளம்பரம், சென்ட், காண்டம் , ஷேவ் க்ரீம் விளம்பரம் எல்லாத்தையுமே அதுதான் சுத்தி சுத்தி
அடிக்குது. “
“.......................”
“ எனக்கு எல்லாமே நிறைவா இருந்தாலும் பரவாயில்லை, இல்லைன்னா, கவனம் செலுத்த ஆயிரம் விஷயம் இருந்தாலும், இதெல்லாம்
பெருசா தோணாது. எத்தனை தடவை இதை மறக்க நினைத்தாலும் நெனப்பு சுத்தி சுத்தி இதுக்கு
மேலே தான் வருது. மல்லாக்க படுத்தாலும், கவுந்து
படுத்தாலும் தொடைக்கும் நடுவுல தலகாணி இல்லன்னா இல்லாட்டி தூக்கம் வரல. இதெல்லாம் போய் நாம் யார்கிட்ட சொல்ல முடியும்?”
‘........................”
“எல்லா ராத்திரியும் அப்படி இல்லை தான்,. ஆனா மாசத்துல ஒரு பத்து
பதினைந்து நாள் ராத்திரி உடம்பு போட்டு படுத்தி எடுக்குது. ஏ உனக்கு கூட இது இல்லைன்னு சொல்ல முடியாது . அப்படி
உனக்கு வந்தா கூட மினிமம் உடம்ப போட்டு தேச்சொ சாந்த்தபடுத்த ஒரு ஆம்பள உடம்பு வீட்டுல இருக்கு “
‘..............”
“ஆனா எனக்கு....? வீடியோ கால்ல துணி அவுத்து போடுன்னு சொல்றாரு வின்சென்ட். அவிழ்த்து போட்டு? அப்புறம்?” அவள் மறுபடியும் அழுதாள்.
இதை நான் வெட்கத்தை விட்டு யார் கிட்டயாவது சொன்னா, ‘அரிப்பெடுத்தவ, கொழுப்பெடுத்தவ’ இப்படி தான் சொல்லுவாங்க. நீ நம்ப மாட்டே. இப்பல்லாம்
காரம்,. உப்பு, புளி எல்லாம் சேத்துக்கறதே இல்ல., நான் வெஜ் கிடையவே கிடையாது. வெஜ்
தான்.. ஆனாலும்”
‘...............................”
“ கல்யாணமான புதுசுல, எங்க வீட்டுக்காரர் நிறைய பார்ட்டிக்கு அழைச்சிட்டு
போவார். அவர் கூட போறப்ப எல்லாம் என்ன ரொம்ப
பேரு கடிச்சு திண்றப்போல பார்ப்பானுங்க.
அதுக்கே உடம்பு ஆடி போயிடும். அவரு பிரண்டுங்க கிட்ட வந்து பேசுவாங்க.
மாரை வெறிச்சி பாப்பாங்க. யாருக்கும் தெரியாம,
தொடுவானுங்க. எங்க வீட்டுக்காரர் இருக்கும்
போது கூட அவருக்கு தெரியாமல் என்னை எவ்வளவு பேரு பின்னால வந்து பட்டும், படாமா தொட்டிருக்காங்க.,
அமுத்தி பிசைஞ்சு இருக்காங்க. இதெல்லாம், முதல்ல
எனக்கும் அது தப்பா தெரிஞ்சது.
ஆனா, அதில ஒரு திரில்லும் சந்தோஷமும் எனக்கு இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அவரு ஊருக்கு வெளிநாட்டுக்கு போன
பிறகு கூட, ஏதாச்சும் , பிசினஸ், கம்பெனி,
பார்ட்டின்னு அவருக்கு ஒரு இன்விடேஷன் வந்தா, அவர் எனக்கு அனுப்புவார். போரட்ச்ச்சா
போய்ட்டு வாயேன்.. ஃப்ரீயா இருந்தா போய்ட்டு வானு அவரே சொல்வார். நானும் அப்பப்போ போய்ட்டு கலந்துக்குவேன். “
“...................................”
“அந்த பார்ட்டிக்கு கிளம்பறப்ப
போடற டிரஸ்., கிளாமார இருக்கும். பார்ட்டியில அத்தனை பேரும் பே’ ன்னு முழிச்சி பாக்கரப்ப,
என் ஈகோசாடீஸ்ஃபை ஆன மாதிரி ஒரு ஃபீலிங்க். அவ்ளோ தான். அதை தாண்டி நான் எந்த வம்பு
தும்புக்கு போனதில்ல. இது புடிக்குதா? பிடிக்கலையா தெரியல. ஆனா மாசம் ரெண்டு பார்டிக்கு
போய்ட்டு தான் இருந்தேன். புருசன் இல்லாத ஆம்பலைங்க பார்வை பட கூடாது, தொட விடக் கூடாதுன்னு
ஏன் நான் பார்டிக்கு இவ்ளோ செக்சியா டிரஸ்
பண்னிகிட்டு போகனும். ஏன்னா, எது எனக்கு வேணுமுன்னு எனக்கு தெரியல. ? ” அவள் நிலை பரிதாபமாக இருந்தது.
“...................................”
“ அப்பவும் ஹோட்டல்ல இந்த
மாதிரியான விஷயங்கள் அங்க, இங்க சந்துல இருட்டுல ஓப்பனா நடந்திருக்கு. எனக்கு தூக்கி
வாரி போடும். ஆனா நான் கண்டும் காணாத மாதிரி
வந்துடுவேன். நிறைய பாய்ஸ் எங்கிட்ட டிரை பண்ணுவாங்க . சில பேரு ஓபனா கேப்பாங்க. ஆனா
ஒரு நாள் கூட, நான் எவன் கூடவும் படுத்ததில்லை
. போன வராம் தான் ,ஃபர்ஸ்ட் டைம் ஒரே ஒரு முறை
தப்பு செஞ்சேன். அப்ப கூட நான் எதுவும் செய்யல. எவனையும் படுக்க கூப்பிடல. ஆனா அவங்க
என்ன தொடப்ப தடுக்கல., நான் கத்தல . அமைதியா
இருந்துட்டேன். அவங்களுக்கு இணங்கி போய்ட்டேன்’
” என்னடி ஆச்சு ? எத்தனை பேரு.? “ சங்கீதா பதறி போய் கேட்க,
சங்கீதா மரியாவின் கண்களை பார்த்து கேட்க, மரியா கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தன. அதற்கு மேல் அவளை துன்புறுத்த சங்கீதா விரும்பவில்லை.
‘சரி போ’ என சொல்லி அனுப்பி விட்டாள்.
இந்த மரியாவின் தாம்பத்ய வாழ்க்கை இப்படித்தான் ஒரு முட்டுசந்தில்
வந்து முட்டும் என சங்கீதா எதிர்பார்த்தது தான்.
நடை தளர்ந்து உடை நெகிழ்ந்து, கேசம் கலைந்து சோக சித்திரமாய அந்த பணக்கார மனைவி காரில் ஏறி போனதை பார்க்க சங்கீதாவுக்கு மனது கஷ்டமாக தான் இருந்தது.