பத்மா வழக்கம் போல சினிமாவில் பரபரப்பாக ஆக.,
சுரேஷிடம் ' உங்களை பாக்கணும் போல இருக்கு வீட்டுக்கு வர வர முடியுமா?" எனக் கேட்டாள்
" வரலாமே. எனக்கும் உங்க கிட்ட பேசணும். ஆக்சுவலா அந்த ஈஸ்வர் சந்திரன் எப்படி எல்லாம் ஒரு பெண்ணை அப்ரோச் பண்ணுவான்? என்னென்ன மாயாஜாலம் செய்வான்? இதெல்லாம் தெரிஞ்சுக்க தான் உங்களை பாக்கணும்னு நான் வந்தேன். கடைசில நான் வந்த வேலையை விட்டுட்டேன். நீங்களும் ரொம்ப அப்செட்டா இருந்தீங்க. எனக்கு அவன பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சாகணும்" சுரேஷ்
சொன்னான்
"ம்ம் அப்புறம்?"
" நீங்க சொல்றத வச்சு தான் ஒரு ஃபேமிலியை காப்பாத்த முடியும்"
"ம் வாங்க நேர்ல பேசுவோம் . நானும் நிறைய பேசனும்.." என்றாள்
பத்மா .
சுரேஷை முதன் முதலாக பார்த்ததில்
இருந்து இந்த மூன்று நாளாய் மனதில் ஓடிகொண்டிருந்த விஷயம்.
ம்ம். நேற்றே சொல்லி இருக்க
வேண்டும். வண்டலூரில் இருந்து செட்டில் இருந்து காரில் கிளம்பி, தாம்பரம்
வரும்போது,
"சுரேஷ் எங்கிருக்க நீ. நான்.
ஏர்போர்ட் கிட்ட இருக்கேன், பிக்கப் பண்ண முடியுமா? கார் பிராப்ளம்" என் பொய்
சொன்னாள்.
அவனும் பைக்கில் பறந்து வந்து அவள்
முன் நின்றாள்.
அப்போதே சொல்ல நினைத்தாள் ஆனால்
அவளது சுயமரியாதை அவளை சொல்லவிடவில்லை.
நடிகை என்றால் வெட்கம் இருக்க கூடாதா? ஏன் என் கண்ணில் தெரியும் காதல் அந்த
மரமண்டைக்கு தெரியாதா?
அவள் ரேணுகாவிடம் கருத்து கேட்ட
பின் அவனிடம் தன் தடுமாற்றத்தை சொல்ல நினைத்தாள். ஒத்தி போட்டாள்.
சுரேஷ் அழகன் தான் ஸ்டைலானவன் தான் .வசீகரமானவன் தான். இப்போது இருக்கும் நடிகர்களோடு ஹீரோக்களுடன் ஒப்பிட்டால் உண்மையில் சுரேஷ் தான் எனக்கு ஹீரோ .
கத்தியுடன் ஒரே சமயத்தில் பாய்ந்து வரும் மூன்று பேர்களை கண்டும் அசையாமல் கம்பீராமல் அவன் நிற்கிறான் என்றால் அவன் தான்
ஹீரோ. இந்த காட்சி எல்லாம் சினிமாவில் தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நிஜத்தில் சுரேஷ் ஹீரோ.
தனக்கு ஏன் வம்பு? என அவன் அன்று
வராமல் இருந்திருந்தால் நம்முடைய பெண்மையும் கற்பும் மானமும் எப்போதோ பறிபோயி ருக்கும். அதன் பின் எத்தனை
குண்டாஸ்? யார் மீது பாய்ந்தால் நமக்கென்ன?
ஒரு ஆணின் பலம் என்பது ஒரு பெண்ணை காப்பாற்றுவதற்காத்தான் தவிர , துன்புறுத்துவதற்காக அல்ல என்பது சுரேஷ்ஷை பார்த்தால் நமக்கு தெரிகிறது .
தன ஒரு அழகான் பிரபலமான நடிகை என தெரிந்து கூட
கொஞ்சம் கூட வழியாமல் நெளியாமல்
பதட்டபடாமல் அவளிடம்சகஜமாக பேசுகிறான். எல்லாரயும் போல கழுத்துக்கு கீழே , வயிற்றுக்கு கீழே அவன் கண்கள்
போகவில்லை.
அப்படியென்றால் அவன் மீது லவ்வா?
தெரியவில்லை. எல்லாரும் அவனை யார் என கேட்கிறார்கள் . இந்த மூனு நாளும் அவனுடன்
தான் சுற்றுகிறேன். அவன் வாசனையே தனக்கு பழக்கமாகி விட்டது,
ரொம்ப அக்கறையாக அவளிடம்
பேசுகிறான். இது போல ஆண்களை அவள் பார்த்ததிலை. பழகியதில்லை.
அவளுக்கு மாலையில்
சுரேஷ் வருகிறான் எனத் தெரிந்ததும் படபடப்பாக இருந்தது.
புரப்போஸ் செய்து விடலமா? இதை
விடவா சிறந்த துணை எனக்கு
கிடைக்கும்? எனக்கு அந்த தைரியம் வருமா?
'நீங்க வாங்க உங்க கிட்ட
பேசனும்" என பொதுவாக தான் அவள் சொன்னாள். எல்லாம் சரியாக அமைந்தால் அவனுடம்
என் காதலை சொல்லும் துணிவை கடவுள் எனக்கு கொடுக்கட்டும்.
நேற்று ரேணுகாவிடம் மட்டும் தயங்கி தயங்கி
சொன்னாள்.
"ரெண்டே நாள்ள லவ்வா?
பாத்துடி எல்லாம் அவன் செட்டப்பா இருக்க போவுது?"
"ச்சீ"
"எந்த ஊருடி? யாரு
பையன்.?."
அவள் வெட்கத்துடன் சொன்னாள்.
"நீ அவசரப்பட்டு சொல்லிட்டியா?"
சொல்ல போறேன்.. என்னால பொத்தி
வெச்சுக்க முடியல.. "
" ப்ராந்து. குட்டி...
..எனக்கு டைம் கொடு பத்மா., நான் அவனை பத்தி விசாரிக்கிறேன். டக்குன்னு லவ்வை சொல்லிடாதே"
"அப்ப இன்னிக்கு சொல்ல
வேணாமா?'
" நாளைக்கு சொல்லு. அதுக்குள்ள அவன் ஜாதகத்தையே புட்டு புட்டு வைக்கிறேன். ஆள் ஊர் பேர் தெரியாத ஆளுகிட்ட மாட்டிக்காதே"
"ம்ம் ம்,,சரி.."
என்றாள். இன்று காலையில் இருந்து அவளை அழைக்க
அவள் போனே ரீச்சில் இல்லை. ஷுட்டிங்கில் இருக்கிறாள் போல. அவள் என்ன விசாரிகிறது?
யார் எவன் என ஜாதி என கேட்டா லவ்வை சொல்றது..? வரட்டும் உன் மேல க்ரஷ் இருக்கு.
கல்யாணம் பண்ணிக்கிறியா? கேப்போம்.
என்ன வேலை செய்வான்.? ஐடி. பாங்க். ? ஈவன்ட் மேனஜர்? கம்புயூட்டர் பேக்கல்டி? ஏதோ ஒன்னு..
சரி அவனுக்கு வரதட்சணையா என்ன தரலாம்? என்ன
கேப்பான்? அவள் சந்தோஷமாக யோசித்தாள்.