மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, June 1, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1762


 ஈஸ்வர் திடுக்கிட்டு போனான். எப்படி வீட்டை கண்டுபிடித்தான்?. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்திருந்தான். அங்கே அவனால் எந்த உருவத்தையுமே, எந்த நிழலையுமே பார்க்க முடியவில்லை.

ஆனால், அங்கே சமரன் இருப்பதாக நம்பினான்.  சமரனி ஆன்மா அது.

உண்மையில் ஆன்மாக்களுக்கு ஒளி இல்லை, ஓசை இல்லை, மொழி இல்லை, முப்பரிமான உடலும் இல்லை.  உள்ளுணர்வு மட்டுமே .

எனவே தன் மனதை நிலைநிறுத்தி, கடினப்படுத்தி, திடப்படுத்தி கூர்ந்து கவனித்தான். அங்கே ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த சமரனின் ஆன்மா பேசும் மொழியை கேட்க முயன்றான். கேட்டது. அந்த உள்ளுணர்வை அவன் புரிந்து கொண்டான். அதிர்ச்சி அடைந்தான். எப்படியோ தன்னை தேடிக் கொண்டு வந்துவிட்டது. மாமிச உடம்பாக இருந்தால் என்னை கண்டுபிடிப்பது கடினம். ஸ்தூல வடிவமாக வந்திருக்கிறது. அவன் கதவை திறந்து பார்த்தான். அது எந்த வடிவமும் இல்லாமல் படிக்கட்டிலிருந்து பாதரச துளி போல  நழுவிக்கொண்டிருந்தது. அதன் அமைப்பும் நகர்வும் பார்த்து அதிர்ச்சியானான். இது..இது....உயிரற்ற உடலில் இருந்து வெளியேறியா ஆத்மா போல் இருக்கே? அட...

அட சமரன் இறந்துவிட்டாரா என்ன?.  அட பாவமே

மறுநாள் அதிகாலை ஒரு ஷேர் ஆட்டோவைப் பிடித்து சமரன்  வீட்டு வாசலில் இறங்கி நிற்க தெருவின் வாசலில் சாந்தமாக சமரனின் ஆன்மா எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருக்க., அவன் அதைக் கடந்து அந்த  நீள் சந்தில் போனான்,. சமரனின் உடல் அவன் வீட்டு ஹாலில் கிடத்தப் பட்டிருந்தது. சுற்றிலும் பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

சமரனின் உயிரற்ற உடலுக்கு மாலை அணிவித்தான்.

"இந்த ஆளோட பொண்டாட்டி பத்து வருஷம் முன்னாடியே தனியா போயிடுச்சு. இந்த ஆளு தனியாளா தான் இருந்தான். ஏதோ ஆவிகளை பற்றி, பேய்களை பத்தி புக் எழுதுகிறேன் என சொல்லிட்டு இருந்தான். ரென்டு மூனு வாரம் சாப்பிடாம கொள்ளாம வெறிச்ச மாதிரி இருந்திருக்கான்.

 அப்புறம் பார்த்தா திடீர்னு நேத்து என்ன பண்ணிட்டு இருக்கான்னாவீட்டை விட்டு வெளிய வந்து,  திறந்திருக்கிற பாதாள சாக்கடையில் இறங்கிட்டான். எதுக்கு இறங்கினான்?, என்ன பண்ணனானே தெரியல. எடுத்து எடுத்து சேத்தை வாறி இறைச்சுக்கிட்டே இருந்தான்.. அப்புறம் உள்ளே போய்ய்டான்... ரொம்ப நேரம் வரல..."

"அய்யோ"

"காப்ர்பரேசன் காரன் வந்துதான் வெளிய தூக்கி போட்டான்..இவன் பைத்தியமா, லூசா, முக்கால் லூசா, முழு லூசா தெரியல, பொண்டாட்டிக்கு செய்தி சொல்லி இருக்கு., அவ வர மாட்டென்னுட்ட்டா " என விசாரித்தபோது சொன்னார்கள்.

ஈஸ்வர் வருத்தப்பட்டான்., அநியாயமாக நம்மால் ஒரு உயிர் போய்விட்டதே? நம்மோட பேராசை காரணமாக சமரன் இறந்துவிட்டாரே.. பேசாமல் அவரோட இணைந்தே நாம் இதை பண்ணியிருக்கலாமோ..

இல்லை அவர் சரியாக வரமாட்டார்.

கையில் பெரிய பொக்கிஷத்தையே வைத்து கொண்டு காசாக்க தெரியாத அப்பாவி அமம்ஞ்ச்சி அவர். யார் ஜெயிப்பார்கள்? ஜெயிக்க என்ன தேவை? எங்கே மழை வரும்? எங்கே விபத்து நடக்கும் இதெல்லாம் நமக்கே நமக்கு மட்டும் தான் தெரியவேண்டும். எல்லோருக்கும் சொல்லி கொடுத்து விட்டு  பிறகு,  நான் என்ன செய்வது? இந்த சமரன் பிழைக்க தெரியாதவர்.  நாம் செய்தது தான் சரி.

அவன் மெதுவாக கிளம்பி வந்தான். தெருமுனையில் சமரனின் ஆன்மா சுவற்றோடு சுவராக உருவம் இல்லாமல் நின்று கொண்டிருப்பதை அவனது உள்ளுணர்வு கவனித்தது. சமரனின் மரணத்திற்காக வருத்தப்பட்டான்.

ஆனால், அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. இது மிகப்பெரிய பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தை அக்குளில் வைத்துக் கொண்டு இந்த ஆள் பைத்தியக்காரன் போல் அலைந்து கொண்டிருக்கிறான். இந்த உலகத்தில் எதையுமே விற்க வேண்டுமென்றால், மார்க்கெட்டிங் தேவை. கடவுளுக்கே மார்க்கெட்டிங் தேவைப்படுகிறது. கோவில்களுக்கும் மார்க்கெட்டிங் தேவைப்படுகிறது. இந்த ஆளுக்கு மார்க்கெட்டிங் தெரியவில்லை.

அப்பப்பா எப்பேர்பட்ட உழைப்பு.?, கணிப்பு.., உண்மையில், இந்த உலகத்தால் தூக்கி கொண்டாட பட வேண்டியவன் இந்த சமரன். ஆனால், நல்ல தேர்ந்த மொழியறிவும், படிப்பறிவும், உலக ஞானமும் தெரியாததால் இந்த சமரன் ஒரு சாக்கடை மூடிக்குள் இறங்கி விழுந்துவிட்டான் என்பது தான் ஈஸ்வருக்கு நினைக்க தோன்றியது.

தனது வித்தைகளை விற்கும் வித்தை  தெரியவில்லை. எனக்கு தெரிந்திருக்கிறது.  நான் மார்கெட்டிங்க் ஆள். இனி நான் இதை விற்பேன் என்ன கிளம்பி வந்தான்.

"போய் வருகிறேன்" என்றான் மௌனமாக

"என்னை ஏமாத்திட்டேல்ல.." அது பின்னாலயே வந்தது. அதற்கு ஆதங்கம் தீரவில்லை.,

".சாரி..ஆனா எனக்கு வேற வழிதெரில்ல ...' அவன் நடந்து கொண்டே அதனிடம் முனுமுனுத்தான்.

"உன்னை முழுசா நம்புனேன். என் பிள்ளை போல ., என் தம்பி போல நம்பினேன்."

"......"

"அதான் உன மனசுல இருக்குற துரோக  எண்ணம் என் உள்ளூணர்வுக்கு உறைக்கல.. உன் கிட்ட நான் ஏமாந்துட்டேன்"

"ஆஹ்ஹஹா  இப்ப கூட உள்ளுணர்வுக்கு  ஒரு புது தியரி சொல்லி இருக்கீங்க..."

அவன் தெருமுனையை தாண்ட., ஏனோ சமரனால் எல்லையை தாண்ட முடியவில்லை.

"என் உடம்பை  தண்ணீரால் குளிப்பாட்டுகிறார்கள். நான் போகிறேன்.."

"என்னை மன்னிச்சிடுங்க  சமரன் சார்.."

சீக்கிரம் நான் உன்னை சந்திப்பேன் ஈஸ்வர். அப்போது நீ பெரிய துக்கத்தில் இருப்பாய். உன் உடம்பை நீயே நகர்த்த முடியாமல் கிடப்பாய்

அப்படியா., உங்கள் ஆசீர்வாதம் சார்

அவன் வீடு போய் சேர்ந்தான். அடுத்த கொஞ்ச நாளில் அவன் முழுதாக மாறி போனான்.. தான் செய்து வந்த வேலையை விட்டான்.


 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1761

 இந்த உலகில் எதையுமே புதிதாக ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் கடினம். ஆனால், ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளை ஆய்வுகளை அபகரித்துக் கொள்வது மிகவும் எளிது. அதுதான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஓர் அற்புதமான் ஸ்காலரின் ஒட்டுமொத்த வாழ்க்கை  யையும் செலவு செய்து கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுகளை ஒரே நொடியில் தூக்கிக் கொண்டு வந்து விட்டான் ஈஸ்வர்.

திருவொற்றியூரில் இருந்து கிளம்பி நிறைய பஸ்கள், ஆட்டோக்கள் மாறி வேளச்சேரியில் தனது ரூமுக்கு வந்து சேர்ந்தான். வந்தவுடனே தனது கட்டிலில் படுத்து எல்லாவற்றையும் பரப்பிக்கொண்டு ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தான். ஆனால், இதெல்லாம் சாதாரணமான ஆட்கள் படித்தால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு, சமரனால் அனைத்தும் எழுதப்பட்டு இருந்தது. ஆனால். ஈஸ்வருக்கு அந்த எழுத்துக்கள் அனைத்தும் புரிந்தது. அதில் சொல்லப்படிருந்த விஷயங்கள், வரைபடங்கள் அனைத்தும் புரிந்தது.

அவனால் எந்த புத்தகத்தையுமே, பாதியில் படித்து வைக்க முடியவில்லை. ஒரே மூச்சாக படித்துக் கொண்டிருந்தான். கிட்டதட்ட 10 நாட்களாக எல்லா புத்தகங்களையுமே, அவன் படித்து முடித்தான்.

சமரன் அவனைப் பார்த்த போது நேரில் சொல்லாத பல விஷயங்கள் அவனுக்கு புரிந்தது.

சாவு வீட்டிற்கு சென்றால் தானாகவே ஏன் அழுகை வருகிறது?. சாவு வீட்டுக்கு சென்றுவிட்டு ஏன் நேராக கோவிலுக்கு செல்லக்கூடாது?. வீட்டில் ஒரு மூலையில் உப்புகல்லை ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், அந்த வீடு சுபிட்சமாக விளங்கும்ஒரு வீட்டில் எப்போதும் அமைதியின்மை நிலவுவற்கான காரணம் என்ன?, என எல்லாமே ஆய்வும் ஆதாரத்தோடும் எழுதியிருந்தார் சமரன்.

ஒவ்வொரு மனிதனை சுற்றி இருக்கக் கூடிய ஆன்மா என்கிற ஒளிவட்டம்  ஏன் படைக்கப்பட்டிருக்கிறது?, அதற்கான பின்னணி என்ன என்பதை இன்னொரு புத்தகத்தில் விலாவாரியாக சொல்லியிருந்தார்

கடவுள் ஒரு மனிதனை படைத்த பிறகு அந்த மனிதன் சர்வசாதாரணமாக என்ன செய்து கொண்டிருக்கிறான்?. அவன் நல்லது செய்கிறானா?, கெட்டது செய்கிறானா? என்பதை எல்லாம் அவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்காக ஒவ்வொரு உயிரையுமே, அதன் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆன்மா  என்கிற வளையம். அது நல்லது செய்திருந்தால் வலுப்பெறும். தொடர்ந்து தீய செயலை செய்து இருந்தால் வலு குறைந்துவிடும். பிறகு, அதுவே அந்த உயிரை அழித்துவிடும். அதாவது ஒவ்வொரு உயிருக்கும் அந்த உயிரை சுற்றியிருக்கும் ஆன்மா வளையமே அதன் மேலதிகாரி. அதாவது, கடவுளின் பிரதிநிதி.

நல்லது செய்தால் அணைத்து கொள்கிறது. கெட்டது செய்தால் அழித்துவிடுகிறது. சுருங்கச் சொல்லப்போனால் ஒவ்வொரு உயிருக்குமான சிசிடிவி கேமராவாக அந்த ஆன்மா வளையம் இருந்தது. அந்த ஆன்மா ஒவ்வொரு மனிதனையுமே  சுற்றிக்கொண்டு இருக்கிறது.

அப்படியென்றால் உள்ளுணர்வு?. அந்த ஆன்மாவில் இன்னொரு ஆன்மா குறுக்கிடும் போது ஏற்படுகிற அசாத்தியமான உணர்வுதான் உள்ளுணர்வு. அப்படியென்றால்,   சிறுவயதில் ஊரில் நம் வீட்டில் இன்னொருவன்; இருக்கிறான் என்பதை எப்படி புரிந்து கொண்டோம். ஏற்கனவே, அங்கே அம்மாவின் அனுமதிக்கப்பட்ட ஆன்மா இருக்கிறது. கூடவே எனது ஆன்மா வளையம் இருக்கிறது. ஆனால், இது இல்லாத இன்னொரு புதிய ஆன்மா வளையம் அந்த வீட்டிலிருந்து இருந்திருக்க அது எனக்கு உறுத்தலாக இருந்திருக்க எனவேநான் உள்ளுணர்வு ஊன்றப்பட்டு இன்னொரு ஆள் இருக்கிறான் என முடிவுக்கு வந்தேன். அப்படியென்றால் எல்லாவற்றிற்குமே காரணம் இந்த உள்ளுணர்வும், உள்ளுணர்வால் நிரப்பப்பட்ட ஆன்மாவும்; தான். அப்படியென்றால் ஒவ்வொரு மனிதன் தோல்வியடைவது தொடர்ந்து சோம்பேறியாக இருப்பது, ஊதாரித்தனம் செய்வது இதற்கெல்லாம் காரணம் அவனது ஆன்மா சீரழிதல் தான். ஒருவன் தொடர்ந்து தரித்திலிருந்து இருந்து கொண்டிருப்பான் என்றால், காமம், பொறாமை, கோபத்தில் என்று இருந்தால் அவனது ஆன்மா மிகவும் சீர்கெட்டு இருக்கிறது என்றுதான் பொருள்.

அப்படியென்றால் இதை இயற்கையான முறையில் எந்த வகையில் ஆன்மாக்களை மேம்படுத்தலாம் என்பதை பற்றி இன்னொரு புத்தகத்தில் படித்திருந்தான்.

அதில் ஏகப்பட்ட உபாயங்கள் சொல்லப்பட்டிருந்தன. அனைத்துமே சமரனால் பல்வேறு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட புத்தகங்கள் ஆகும். அனைத்துமே கண்களில் ஒற்றிக் கொண்டான்.

இதை வைத்து இதை வைத்து... ஆம் காசு பண்ணலாம்.. பெரும் காசு பண்னலாம். யெஸ் சொல்லி கொடுப்பதற்கு காசு. அவன் அந்த புத்தகங்களுடனே வாழ்ந்தான்.

அன்றிலிருந்து எட்டாம் நாள் இரவு சமரனின்

குரல் அவனது ரூமின் வெளியே கேட்டது.

 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்