மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, May 19, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2065 ( திபூவை இறுதி பாகம்)


 


அந்த அறையின் கதவை திறந்து டாக்டர் வின்சென்ட் உள்ளே வந்தார். தொட்டார் அவனை புரட்டினார். ஸ்டெதஸ்கோப்-இல் வைத்து சோதித்தார். ‘லப்டப் லப் ல……..ப் ட ……ப் ‘என்ற இரண்டு சத்தங்களுக்கு இடையேயான நேரம் அதன் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வர, மானிட்டரைப் பார்த்துக் கத்தினார் அந்த அனுபவசாலி டாக்டருக்கு எல்லாம் முடிந்து விட்டது’ என்று தான் தோன்றியது.


ஸ்டெதஸ்கோப்  இருதயம் மேலே வைத்துப் பார்க்கையில் இருதயம் அடங்குவது போல தெரிந்தது.  அவன் மோசமாக அடி பட்டிருக்கிறான். முக்கியமான இடங்களில் கத்தி குத்து. பெருமளவு ரத்தம் வெளியேறி இருக்கிறது. தலையில் பலத்த அடி பட்டிருக்கிறது.  நாடித் துடிப்பினை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.


செய்த அறுவை சிகிச்சைகள் பலன் தரவில்லையா?


‘ஐயோ என்ன இது எப்படியும் காப்பாற்றி விடலாம் ‘என நினைத்தோமே.


இவனை வந்து கொண்டு சேர்த்த போது சாதாரண ஆக்சிடெண்ட் கேஸ்’ என்றுதான் நினைத்தார்கள். ஆனால், உடம்பில் பல இடங்களில் அடிபட்டிருக்கிறது. இது ஒரு கொலை முயற்சி தான். அப்படி தான் போலீசும் வழக்கு பதிவு செய்திருக்கிறது. மிகப் பெரிய குடும்பத்தைச் சார்ந்தவன் இவன். கிரான்டனி குடும்பம் என்றால் தெரியாதவர்களே கிடையாது அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனை நாம் காப்பாற்றி விட்டால், அது நமக்கு நல்லது என அந்த மருத்துவமனையின் சேர்மன் டாக்டர்  வின்சென்ட்  நினைத்தார்.


ஆனால் அதற்கு வாய்ப்பில்லை போல இருக்கிறது.


வெளியே பெருங்க்கூட்டம் காத்திருக்கிறது. இன்னும் விடிந்தால் கூட்டம் அதிகரிக்கும் என் சொல்லப்பட்டிருக்கிறது.,


ஒருவேளை இந்த பையன் இங்கு இறந்து போனால் அது ஆஸ்பிட்டலுக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும். இந்த கேஸ் பற்றி பல நாட்கள் ட்விட்டர், பேஸ்புக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். என்றெல்லாம் அவர் மனதில் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.


அவன் நிலையை பார்த்து விட்டு அவர் இன்டர்கமைல் தெரிவிக்க


ஒரு நர்ஸும் , கூட ஒரு சிறு மருத்துவர் குழுவும் பரபரவென ஓடி வந்தது.  உயிர் காக்கும் மருந்து அவனது நரம்பில் செலுத்தப்பட்டது. மானிட்டர் நெஞ்சு துடிப்பு அறியும் கருவி சோதிக்கப்பட்டது.


கொஞ்ச நேரத்தில் அந்த மருத்துவமனையின் தலைமை டாக்டர் உள்ளே வந்தார் என்ன ஆச்சு? பிரைன்ல ஏதாச்சும் ப்ளாக் இருக்கா?’ என கேட்க


“ ஆமா சார்.. “


“ நோ.. வின்சென்ட்.  மாஸ்ஸிவ் அட்டாக் என நினைக்கிறேன்” என்றார் ராமானுஜம்.


‘அப்படியா சொல்றீங்க?” என வின்சென்ட் யோசிக்க.,


“.இங்க வந்ததிலிருந்து இரண்டு தடவை கண் விழிச்சி பார்த்திருக்கிறான்.  நார்மல் விசன். அப்படின்னா அதுக்கு சான்ஸ் இருக்காது. மூளைல ஆக்சிஜன் போகலன்னா  கண்ணோட ஐ-பால் ப்யூர் ஒயிட்டா இருக்கும்.  இவருக்கு அப்படியில்ல..


சோ கண்டிப்பா,  இது மாசிவ் அட்டாக் தான்., அவனை சீக்கிரம் வார்ம் பண்ணுங்க..


 அவன் உடம்பு ஜில்லென்னு ஆகிட்டு இருக்கு., சீக்கிரம் அவனை ரீ ஆக்டிவேட்  செய்யுங்கள்.


ப்ளட் ப்ளோ ஸ்லோவா ஆகுது பாருங்க. அதை ஸ்பீட்- அப் செய்யுங்க. ஒரு லாஸ்ட் டிரை,,,,”என தலைமை டாக்டர் சொல்ல., ஆட்கள் அவனை உடலை போட்டு குலுக்கினார்கள்.  மாறி மாறி இடது, வலது மார்பில் குத்தினார்க்ள்.


அவன் உடல் வெறுமனே குலுங்கி கொண்டிருக்க. தனது நெஞ்சில் கைவைத்து குத்தும் ஆட்களை அவன் வேடிக்கை பார்த்தான். சுற்றி, சுற்றி வந்தான்.  ஒரு வார்டு மேன் அவன் உதட்டில் வாய் வத்து உறிஞ்சினான். எல்லாருக்கும் ஏதேனும் பெரிய வெகுமதி கொடுக்க வேண்டும் என அவனுக்கு தோன்றியது.


ஆனால் இங்கிருக்க வேண்டாம். போகலாம் என நினைத்தான். அவன் தன் உடலின் எடையை கனத்தை இழந்தான், போவதற்கு ஆயத்தமானான்.


ஆனால், ஏதோ ஒரு குறை ஏதோ ஒரு ஆதங்கம் அவனைச் சுற்றிக் கொண்டே இருந்தது. நமக்கு என்ன கிடைத்தது? கிடைக்கவில்லை ? என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றை நாம் சமீபத்தில் விரும்பினோம். அது நம் உள்மனதில் நிழலாக படிந்திருக்கிறது. அது நமக்கு ஏன் கிடைக்கவில்லை? அது கிடைக்காமலேயே நாம் செத்து போகிறோமா? என அவன் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்.


அவனது உணர்வு அவனை விட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.


அவனது நாடித்துடிப்பின் வேகம் குறைந்து கொண்டிருந்தது. சுற்றியுள்ள மருத்துவக் குழுவின் ஆட்களின் தலைகளை தாண்டி அவன் மேலே பறப்பது போல் இருந்தது.


சிறிது நேரத்தில் ஒவ்வொரு தலையும், காட்சியும் அங்கிருந்து மறைந்து போல அவன் உணர்ந்தான். அவனது உடல் மூச்சுக்கு தவித்தது. தன்னுடைய இருதயம் மெல்ல செயல் இழந்து இரத்தத்தை உடல்முழுக்க அனுப்பும் வேலையை குறைத்துக் கொண்டு வருவதையும் அவன் உணர்ந்தான்.  அவன் உடல் சோர்ந்து போய் அவன் உடலின் எந்த உறுப்பும் அவனது இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் அவன் உள்ளே இதுநாள்வரை துடித்துக்கொண்டிருந்த நாடிகள் மெல்ல அடங்கி கொண்டிருந்தன.


அப்படி என்றால், இதுதான் மரணமா? இது தான் பூமியை விட்டு விடை பெறும் முறையா? இப்படித்தான் எல்லோரும் இறந்து இருக்கிறார்களா? அவன் மனது மொத்தமும் திரட்டி, எது உயிர்? எது உடல்? எங்கே பிறந்து? எங்கே செல்கிறது? என்பதையெல்லாம் யோசித்தான்.


கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இருக்கும் ஏதோ ஒரு ஜோதி மிகப்பெரிய ஒளிவெள்ளத்தில் நீந்துவது போல உணர்ந்தான். ஆனால் சுரேஷின் அந்த மருத்துவ குழு விடவே இல்லை.


அவனை புரட்டி நெஞ்சிலும் முதுகிலும் அழுத்தி அழுத்தித் தேய்த்து கொண்டிருந்தார்கள். அவன் ஒரே நேரத்தில் மருத்துவமனையிலும், மிகப்பெரிய பெருவெளியிலும் நீந்திக் கொண்டிருந்தான்.


அங்கே இருப்பது எல்லாம் தன் உள்ளுணர்வால் கவனித்துக் கொண்டு இருப்பதாக அவன் நினைத்தான்.