பத்மா பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் படுக்கையில் சுருண்டு தான் கிடந்தால் அவளுக்கு எழுந்திருக்கவே பிடிக்கவில்லை . மனசு அவளை உடம்பு அவளை எழுந்திருக்க விடவில்லை. மனசு அவளை பாரமாக அழுத்தியது .
காரணம் நேற்று இரவு சுஷ்மிதாவின் தங்கை சந்தியா போனில் மாதேஷ் பற்றி சொன்ன விஷயம்.
சென்னை பைனான்ஸியர் ரங்கராஜின் இரண்டாவது மகள் சந்தியாவிற்கும் பத்மாவிற்கும் அப்படி ஒன்றும்நெருக்கமான சினேகம் கிடையாது .
பத்மாவிற்கு சுஷ்மிதா தான் நெருங்கிய தோழி. சந்தியா , சுஷ்மிதா நடித்த ஒரு படத்திற்கு ரங்கராஜன் பைனான்ஸ் செய்ய முடியாது' என மறுத்து விட. தனது படம் தடைபட்டது என்பதற்காக ஒருமுறை சுஷ்மிதாவிடம் பேசி உதவி
கேடடாள் பத்மா.
அதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு விருது அளிக்கும் விழாவில் பார்த்துக் கொண்டதுதான் . அந்த பழக்கத்தை வைத்துக்கொண்டு பத்மா சுஷ்மிதாவிடம் உதவி கேட்க, உடனே சுஷ்மிதா அப்பாவிடம் சொல்லி அந்த அவளது படத்திற்கு பினான்ஸ் உதவியை செய்ய சொல்லி இருந்தாள்.
அதற்குப் பிறகு அவர்களது நட்பு நன்றாக வளர்ந்திருந்தது சென்னையில் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் பல நாள் மாலை நேரங்களில் சுஷ்மிதவுடன் நேரத்தை செலவழிப்பது தான் பத்மாவிற்கு ரெகுலரான பொழுதுபோக்கு. சினிமாவின் பல நுணுக்கங்களைசுஷ்மிதா சொல்லிக் கொடுத்திருக்கிறாள்.
அவளே ஒரு முறை கேட்டிருக்கிறாள். சின்ன ஹீரோக்கள் கூட நடிக்கிறே? ஆனால் ஏன் என் கணவர் மாதஷே கூட நடிக்க
மாட்றியாமே?' என சொல்ல,
' அதுக்கென்ன நடிச்சா போச்சு.. நல்ல கதை கிடைத்தால் நான் நடிக்க மாட்டேனா?" என்றாள். ஆனால் அவளுக்கு தனது கனவனுடன் நடிக்க விருப்பமில்லை என்பதை சுஷ்மிதா தெரிந்து கொண்டாள்.
அதுவும் நல்லதுதான். இப்போது
பீல்டில் இருக்கும் எல்லாரையும் விட இவள் பிரமாதமான மலையாள அழகியாக இருக்கிறாள். இவள் மாதேசுடன் நடிக்காமல் இருப்பது தான் நமக்கு நல்லது.,; என சுஷ்மிதா கூட அப்போது நினைத்திருந்தாள்.
சுஷ்மிதா ஒரு பிரபலத்தின் மகள், பத்மாவும் தமிழ் சினிமா உலகத்தின் முன்னணி நடிகை. ஆனால் இருவரும் எந்த வித ஈகோ இல்லாமல் மணி கணக்கில் பேசிக்கொள்வார்கள். சுஷ்மிதா மூலம் அவளது தங்கை சந்தியாவும் பத்மாவிற்கு அறிமுகமானாள்.
ஆனால், சந்தியாவிடம் பத்மா அத்தனை நெருக்கமாக பழகியதில்லை என்றாலும் , அதே சந்தியா தான் நேற்று இரவு திடீரென அவளுக்கு போனில் தனக்கு நேர்ந்த தனது வாழ்க்கையின் வன்முறை பற்றி மாதேஷின்
மனமத லீலையை விலாவரியாக சொல்லி விட்டாள் .
மாதேஷுடன் அவள் தொடர்ந்து வந்த, அந்த அங்கீகரிக்கப்படாத படுக்கையை உறவை பத்மாவிடம் சந்தியா
புட்டு புட்டு வைக்க ,. பத்மாவிற்கு அது பேரதிர்ச்சி..
' தினேஷ் எப்படியோ எங்களை பாத்துட்டான். ஆனா அசிங்கபடுத்தாம விலகிட்டான்.
அவன் மனுச தெய்வம் தான். இந்த விஷயம். எங்கள் மூனு பேரை தவிர வேறு யாருக்கும் தெரியாது ' என தான் விவாகரத்து வாங்கிய கதையை சோகத்துடன் சொன்னாள்.
"அவன் செஞ்ச தப்பு பத்தி கேக்க
யாருமில்ல .,என்னை எல்லாரும் வீட்டுல ஒதுக்கி
வெச்சுட்டாங்க.. நான் தான் தினேஷை வேணாமுன்னு சொல்லிட்டேன்னு என் அக்கா கூட
என் கூட பேசறதில்ல.. பத்மா"
"...................."
"என் மேலயும் தப்பு
இருக்குதான். முதல்லயே மாதேஷை கண்டிச்சிருக்கனும்,, ஆனா..?"
"...........சரிவிடு
சந்தியா.........:"
"அந்த நேரத்துல நான் அவனுக்கு கொடுத்த இடம் அவன் அதை யூஸ்
பண்னிகிட்டு.. இப்ப என் லைபே போகிடுச்சி.. பத்மா"
அவளை பத்மாவால் தேற்றவே
முடியவில்லை.
அதைக் கேட்டதிலிருந்து இரவு பத்மாவால் தூங்க முடியவில்லை அதிகாலையில் தான் தூங்கவே ஆரம்பித்தாள்.
பெண்களின் காமம் மட்டும் ஏன்
தண்டனைக்குரியதாகவே இருக்கிறது?
'கனடா மாப்பிள்ளை தினேஷ் மூலம் தனக்கு கிடைக்காத புருஷ சுகத்தையும் தேக சுகத்தையும் , பெற தனது சொந்த அக்காளின் கணவர் நடிகர் மாதேஷிடம் தன்னை இழந்து போன அவளை என்ன சொல்லி தேற்ற முடியும்?
இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இன்னொரு குடும்பத்தின் நுழைந்தால் அந்த குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும்? என்பதை தெரியாமல் தங்களுடைய இச்சைகளை தீர்த்துக் கொள்ளும் வெறியில் தான் இருக்கிறார்கள் .
சந்தியாவிற்கும் அறிவு இருந்திருக்க வேண்டும். கணவன் துணையோடு தான் காமத்தை வென்றாக வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி . அதை மீறிகிற எல்லோருக்குமே வாழ்க்கை இனிப்பாக இருந்தது இல்லை.
சந்தியா பருவ கோளாறின் காரணமாக மாதேஷ் தொட்டவுடன் மடங்கி விட்டாள். அவனுக்கு படுக்கையில் இடம் கொடுத்திருக்க கூடாது . 'எழுந்து போடா நாயே' என விரட்டி
இருக்க வேண்டும்.
இப்பொழுது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறாள். அந்த தினேஷ் நல்லவன். அதனால் தான் இதை யாரிடமும் சொல்லாமல் விவாகரத்து மட்டும் வாங்கிக்கொண்டு போய்விட்டான்.
வேறு யாராக இருந்தாலும் சந்தியாவையும் அவரது அப்பா ரங்கராஜையும் அவமானப்படுத்தி இருப்பார்கள்.
அதனால் அந்த குடும்பம் தலையை தூக்காமல் போயிருக்கும் .
ஆனால் , எல்லோரும் தினேஷ் போல இருப்பதில்லை. மாதேஷ் போலவும் இருக்கிறார்கள். எப்பொழுது எவ கிடைப்பாள்? என அலைகிறார்கள். மாதேஷ்க்கு கிடைக்காத பெண்களா? அவனுக்கு கிடைக்காத நடிகைகளா? எல்லாவற்றையும் விட்டு சொந்த மச்சினியின் வாழ்க்கையேசூறையாடிவிட்டானே ? இப்போது அவன் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.ஆனால் சந்தியா ? பத்மாவுக்கு அவளுக்கு வருத்தமாக இருந்தது.
இந்த மாதேஷ் சரியான பொறுக்கி தான் என சினிமாவில் பேசிக் கொள்கிறார்கள் .அதனால்தான் தன்னுடைய உதவியாளன் பாபுவே மாதேஷ்க்கு ஜோடியாக நடிக்க சொல்லி எந்த தயாரிப்பாளராவது வந்தால், அருகே சேர்ப்பதில்லை.
மாதேஷ் மட்டும் அல்ல அதேபோல ஒரு கன்னட நடிகனும் இருக்கிறான் ஷியாம் . இந்த இருவருக்குமே ஒரே குறி என்னை அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வைப்பது தான் .
ஆனால் ஒருக்காலும் இந்த ரெண்டு பேருடன் எத்தனை கோடி கொடுத்தாலும் என்னால் நடிக்க மாட்டேன்.
போன் அடிக்க அவள் சிந்தனை
தடைபட்டது. அட ரேணுகா.
"ஹாய்ய ரேனு "
"பத்மா.. ஷூட்டிங்க்ல
இருக்கியா?"
"இல்ல சொல்லு...
"பத்மா."
"என்னடி சொல்லு?"
' உன்கிட்ட ஒரு பர்சனல் விஷயம் சொல்லணும்.
" சொல்லுடி என்ன ஆச்சு?"
" சொல்லவே ரொம்ப அசிங்கமா இருக்கு "
"பரவால்ல சொல்லு அந்த ஷ்யாம் கூட நடிக்கிறீயே ? ஏதாச்சும் பிரச்சினையா? ரொம்ப தொந்தரவு பண்றானா ?
"................."
"நான் முதல்லயே சொன்னேன். கேரியருக்காக அட்ஜஸ்ட் பண்ணாத. அப்படி பண்ணா கடைசி வரைக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்லயே போய்கிட்டு இருக்கனும்னு. "
"..............."
"அவன் கூட படம் ஒத்துக்காதேன்னு சொன்னேன் நீ கேட்டியா?" சொல்லு என்ன பண்றான் ஷ்யாம் ? என்ன ட்ரபிள் தரான்? "அவள் அடுத்தடுத்து கேட்க, ரேனுகா மறுபடியும் ஏதும் சொல்லாமல் அழுதாள்.
"ஏய் லூசு சொல்லிட்டு அழு,. சொல்லுடி என்ன ஆச்சு? மேல கைய வச்சானா? கேரவானுக்கு வா,
ரெசார்ட்க்கு வான்னு கூப்ட்டானா?'"
" ஆமாண்டி கேரவானுக்கு தான் கூப்டான். ரெசார்டுக்கு
கூப்ட்டான்.. ஆனா என்னை இல்லடி என மம்மியை"
"என்னது?"
"ஆமான்டி " ரேனு பலமாய்
அழ.
"என்னடி சொல்றே? விஜி ஆன்டி
அப்படி பட்டவங்களா?"
"......"
" அவங்களை இவன் டார்ச்சர்
பண்ணி கார்னர் பண்னிட்டானா?'"
ரேனுகா தாங்க முடியாமல் அழுதாள்.
"அவன் கூப்டா இவங்களும் ஓடறாங்கடி"
பத்மாவுக்கு தலையே சுற்றியது.
" லூசு என்னடி சொல்ற ? விஜி ஆன்டியா? அய்யோ எங்கம்மா வயசு . அவங்களை
கூட ஷ்யாம் பொறுக்கி விடலியா?"
" ஆமா பத்மா"
"அவன் ஷூட்டிங்ல என் கூட ரொம்ப க்ளோசா இருந்தான், தொட்டு தொட்டு
நடிச்சான். சீன் முடிஞ்சாலும் ஷூட்டிங் அவன் ஸ்டாப் பண்ண விடவே இல்லை , என்னால கண்டினியூ பண்ண முடியல , அது விஷயமா அம்மா பேசுறதுக்காக போனாங்க, அப்போ ஆரம்பிச்சிருச்சின்னு நினைக்கிறேன் . அன்னிலருந்து, இந்த ஒன் வீக்கா அவனே கதின்னு கிடக்குறாங்க "
"................"
"அவன் போன் பண்ணா சின்ன பொண்ணு போல போன் எடுத்துக்கிட்டு தனியா போய் பேசுறாங்க"
"................ஓ மை காட் .
நிஜமாவாடி சொல்றே? "
" பார்க்கவே கஷ்டமா இருக்கு . கண்றாவியா இருக்கு . இது எப்படி ஸ்டாப் பண்றதுன்னு தெரியல பத்மா? அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு . ஏற்கெனவே பிரிஞ்சி இருக்கார். இது வெளியே தெரிஞ்சா ரொம்ப அசிங்கமா ஆயிடும். என் கேரியருக்கும் பிரச்சனை ஆயிடும். "
"...ம்."
" அம்மாவுக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலடி? என சொல்ல பத்மா தலையில் கை வைத்து கொண்டாள்.
ஆ ஹா.. பத்மாவுக்கு இது இரண்டாவது
நியூஸ். நேத்து மாதேஷ்.. இன்று ஷ்யாம். இது முன்பை விட மோசம். அவனாவது மச்சினியை
கரெக்ட் செய்தான். இவன் ரேனுகாவின் அம்மாவை போய்.. ச்சீ சொல்லவே நாக்கு கூசுது..
எப்படி அவனிடம் மடங்கினாள் விஜி?
அவளுக்கு விஜயலட்சுமியை நன்றாகவே தெரியும். குடும்பப்பாங்கான பாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவள். விஜயலட்சுமி ஒரு சில மலையாள சீரியல்களிலும் நடித்து இருக்கிறாள். பத்மாவின்
அம்மாவின் நெருங்கிய தோழியின் கூட.
'ஐயோ நமது அம்மாவுக்கு இது பற்றி தெரிந்தால்? சினிமாவில் ஏன் ஆண்கள் இப்படி இருக்கிறார்கள்? மகளும் வேண்டும்? அம்மாவும் வேண்டுமா? மகள் கிடைக்கவில்லை என்றால் அம்மா வேணுமா? இது எல்லாம் என்ன விதமான ஃபார்முலா? அவளால் இப்படிபட்ட
ஆண்களின் உளவியலையும் , ஆளுமை மிக்க ஆண்களின் காமத்தையும் புரிந்து கொள்ளவே முடியவில்லை .
நேற்று தான் சந்தியா ஒரு பெரிய பிரச்சினையை சொல்லி இருந்தாள். இப்போது இன்னொரு புதிய பூகம்பம் வெடிக்கிறது. இதுபோல நிறைய பிரச்சனைகள் அத்துமீறல்கள் சினிமாவில் நிறைய நடக்கிறது. வெளியே தெரிவது ஒரு சில விஷயங்கள் தான்.