'கள்ளம் கபடம் காமம்'
' கள்வெறி கொண்டேன்'
ஆகிய நாவல்களுக்குப் பிறகு,
நான் எழுதும் நான்காவது நாவல் 'காமப் பெருநதி'
காமம் என்பது காட்டாறா?
சிறு நதியா? பொங்கும் அலையா? ஏதுமில்லை. அது நதி. ஆனால் பெரு நதி.,
சுனையில் உருவாகி, மலை
முகட்டில் ஓடி, அருவியில் தொபுக்கென குதித்து , பாறைகளில் பட்டு தெறிந்து பள்ளங்களை நிரவி., மேடுகளில் எம்பி குதித்து,
அகல சமவெளிகளில் அமைதியாகி நுரைத்து ஓடி ,
அடர் வயலில் பாய்ந்து., நீர்த்து ,
சமாதனமாகி பின் சமுத்திரத்தில் கலந்து போய் சேரும் ஒரு பிரம்மாண்ட நதியைப் போன்றது
தான் ஒவ்வொரு உயிரில் தோன்றும் காமமும்.
மறுபடி நீராவி, மேகம்,
மழை., அருவி, நதி., இந்த சுழற்சி
ஒருக்காலமும் ஓய்வில்லை. நிற்கவில்லை. மாறவில்லை.
அதுவே பொங்கும், அதுவே
அமைதியாகும்.
அது போலத்தான் காமமும் மாறாது. காலம்
எத்தகையகதாக இருந்தாலும் காமம் மாறாது.
இது உடல்களை தேடி
புறப்பட்டு துளைகளில் பொருந்தி நீர் சுரந்து நீர் வழிந்து நீர் நிரம்பும் வெறும்
அறிவியலாக இருக்க முடியாது?
இதைத்தான் இக்கதையில்
வரும் பாத்திரங்கள் பல்வேறு சம்பவங்களில் நமக்கு தெரிவிக்கின்றன.
அத்தனையும்
முக்கியமான பாத்திரங்கள். கதையை வீரியமாக
எடுத்துப் போகும் சம்பவங்களும் திரைக்கதையும் இதில் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.
இதுபோல நிறைய வித்தியாசமான திரை கருக்கள் மனதில் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் டெவலப் செய்து நாவல் ஆக்குவதற்கு பெரும் முயற்சியும் அதிக நேரமும் தேவைப்படுகிறது.
என்னால் இயன்றவரை விரைவாக கொடுக்க முயல்கிறேன்.
இந்த நாவலைப் பொறுத்தவரை நான் அடிக்கடி பயணம் செய்த தென் தமிழகத்தின் நாகர்கோயில், மார்த்தாண்டம் ,கன்னியாகுமரி போன்ற பகுதிகளை மையமாக வைத்து இதை எழுத எனக்கு மிகவும் ஆசை .
அதைத்தான் இதில் செய்திருக்கிறேன்.
அழகும், திறமையும், பெரும் செல்வமும் உடைய தனிமையில்
வாழும் பெண்களுக்கு ஏற்படும் சோதனைகள் இதுவரை வேறு எந்த நாவலிலுமே இத்தனை விரிவாக சொல்லப்பட்டிருக்காது .
ஆயிரத்து சொச்ச பக்கங்களை தாண்டி நீளும் இந்த பெரிய நாவலின் முதல் பகுதியை மட்டும் இப்போது வெளியிட்டு இருக்கிறேன்.
அடுத்த பகுதியில் இது முடியும்.
நாவலின் இரண்டாவது பகுதி நிச்சயம் அடுத்த ஆண்டில் வெளியாகும்.
மற்றபடி, இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு
இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
---------
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள்
மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,
நாவல் இம்மாதம் 30 அன்று வெளியாகும்.
வாங்க விரும்புவோர்கள் இங்கே கிளிக் செய்யவும்..
53 சேப்டர்கள் 580 பக்கங்கள்
BIA Via Stripe