எபிசோடு : 21
மைதிலி எம் காம் படித்தவள். திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தையை வைத்திருப்பவள் . அப்பா செக்யூரிட்டி. நோயாளி வேற.
சுமாரன வருமானம் . அம்மா டெய்லர். மைதிலி ஒரே பெண்.
மைதிலி மாநிறத்து அழகு என்றாலும் சிறு வயதிலிருந்தே அவள் பார்வைக்காக, அணிந்திருந்த கண்ணாடி அவளின் அழகை வெகுவாக குறைத்து இருந்தது .
மைதிலி இதற்கு முன்பு ஒரு ரியல் எஸ்டேட்
நிறுவனத்திற்காக வேலை செய்யும் போது உடன்
பணி புரிந்த சிவா என்பவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். வீட்டில் மறுப்பு ஏதும் சொல்லவில்லை.
சைவமா இருந்தா போதும் என்றார்கள். சக்திக்கு
மீறி கல்யாணம் செய்துவைத்தார்கள். ஆனால் அதுவே குறை என சொல்லியது சிவாவின் வீடு.
அந்த சிவா கல்யாணமான முதல் நாளில் இருந்தே ‘ உங்க வீட்டில் சவரன் பாதிதான் போட்டார்கள். சீர் செனத்தி கம்மி “ என குத்திக் கொண்டே இருந்தான். அப்போ ஏன் லவ் பண்னி கட்டிகிட்டான்?’
என்பது தெறியவில்லை.
ஒரு குழந்தை பிறந்தும் அவன் திருந்தவில்லை .
வேலைமேல் பிரச்சனை. கையாடல் செய்துவிட்டதாக புகாரில்
அவன் மீது வழக்கு போட, மைதிலி தான் வளையல் விற்று அவனை வெளியே கொண்டு வந்தாள்.
வெளியே வந்ததுக்கு மகிழ்வான் எனப் பார்த்தால்,
“ யாரை கேட்டு வளையலை வித்தே?” என கன்னத்தில்
அறைந்தான். அவன் வேறு எந்த வேலைக்கும் போகாமல் மாமியார் வீட்டிலேயே இருக்க., தவறான
ஆளை பிடித்து விட்டோமே என மைதிலி அழ., இவள் சோகம் கண்டு அப்பாவுக்கும் நோய் அதிகமாகி, சீக்கிரமே மேலே போய்
சேர்ந்தார்.
ஆம்பளை இல்லாத வீடு சிவாவுக்கு இன்னும் அதிர்ஷ்ட
வீடானது. வீட்டிலேயே குடிக்க
ஆரம்பித்தான். தினம் தினம் அவளுடன் சண்டை.
குழந்தை ஒன்ரு பிறந்தும் அவன் திருந்தியபாடில்லை.
“கவர்ன்மென்ட் வேலைக்கு வெயிட்டிங்டி. அப்புறம் பாரு உன் கடனையெல்லாம்
செட்டில் பண்றேன்.. இப்ப ஒரு நூறு ரூவா கொடு”
என்றான்.
ஆனால், நிஜமாகவே, அரசு வேலைக்கு பரீட்சை எழுதி காத்துக் கொண்டிருந்த சிவாவுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் கழித்து கவர்மெண்ட் வேலை வர , அந்த
விஷயத்தை கூட மைதிலிக்கு சொல்லாமல், டேராவை காலி செய்தான்.
‘அவனது வீடு மைதிலியை விட, ஒரு நல்ல பெண்ணை பார்த்தால் வசதியாக இருக்கலாம்’ என ஆசையை காட்டியது .
‘காதலாவது கத்திரிக்காவது’ என அவன் மைதிலியை புறக்கணிக்க நினைத்தான். சோடா புட்டி., என திட்டினான். அவன் மைதிலியை திட்டி அடித்து கொடுமைப்படுத்த ஒரு கட்டத்தில் மைதிலி குழந்தையை வைத்து கொண்டு அவனை விரட்ட,
“டேய்ய் உன்
பொண்டாட்டி கம்ப்ளேயின்ட்கொடுத்தா, கவர்ன்மென்ட் ஜாப் புடிங்கிக்கும்..அவளை
டைவர்ஸ் பண்னு,. அதுவரைக்கும் புள்ளை நம்ம பக்கம் இருக்கட்டும்.. ஆம்பளை புள்ளையை விட்டுட முடியாது. பிள்ளையை இட்டா” என்றது
வீடு.
“டைவர்ஸ் பத்திரத்துல கையெழுத்து போட்டு, ஜீவான்ம்சம்
வேனாம்ணு சொல்ல சொல்லு. குழந்தையை கொடுத்துடலாம்.. குழந்தை தான் துருப்பு சீட்டு.
விடாதே” சட்டம் தெரியாமல் திட்டம் தீட்டினார்கள்.
சிவாவும் இரண்டு மூன்று முறை வழியில் மைதிலி பார்த்து கேட்டான் . அவள் வேலை பார்க்கும் ரியல்
எஸ்டேட் கம்பெனியில் போய் சண்டை போட.,
அவள் குழந்தையை கொடுக்க முடியாது என உறுதியாகச் சொன்னாள்.
” போடா டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு அப்ளை செய் .அதன் பிறகு உனக்கு யார் வேண்டுமோ ? அவளை கல்யாணம் செய்து கொள் ! குழந்தை எங்க இருக்கனும்னு கோர்ட் சொல்லட்டும். நான்
கேட்டுக்கறேன். இல்லனா உன் ஆபீஸ் ரீஜனல் மேனஜர்கிட்ட புகார் கொடுப்பேன்” என சொல்லிவிட,
கோவமான அவன் வெளியில்
விளையாடிக் கொண்டிருந்த வந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து விட்டான் . அவள் அம்மாவுக்கும் போதிய
தெம்பில்லை.
மைதிலி சார்பாக, யார் போய் பேசினாலும் அவர்கள் குழந்தையை தருவதாக இல்லை. இவள் நடத்தையை சுட்டிக்காட்டி பேசினார்கள்.
“ எவன் எவனுக்கோ
நிலம் காட்றேன்னு கார்ல போறா., எவனுக்கு என்னாத்தை காட்றாளோ.. என் புள்ளை
தானா அவளுக்கு பலி? என் புள்ளை என்ன பேருக்கு புருஷனா?” பஞ்சாயத்துக்கு போனவர்களே
மைதியிய சந்த்தேகப்படும்படி
அழுது நடித்தார்கள்.
“புள்ளையை விட்டுரும்மா. அவங்க இன்னும் அசிங்கபடுத்த
பாப்பாங்க” அம்மா விலகச் சொன்னாள்
இந்த சமயத்தில் தான் மைதிலி ரியல் எஸ்டேட்டை விட்டு, ஆல்பா லாஜீஸ்டிக்கில் வேலைக்கு சேர்ந்தாள்.
வேலைக்கு வந்த ஆன பின்னும் தனது குழந்தையை பார்க்க முடியாத சோகம் அவளுக்கு இருந்தது. கணவன் சிவாவை விட தன்னுடைய பிள்ளை தனக்கு கிடைத்தால் போதும் என மைதிலி மனதுக்குள் புழுங்கிக் கொண்டு கொண்டு இருந்தாள்.
அதன் காரணமாகவே அவள் அந்த நிறுவனத்தில் யாருமே பேச பேசாமல் எப்போதும் தனியாக சுறுசுறுப்பாக இருந்தாள். அந்த கம்பெனி ஜி.எம் கூட மைதிலியின் நிலையை அறிந்து மெல்ல அவரிடம் கொக்கி போட்டு பிராக்கெட் போட பார்த்தார். ஆனால், மைதிலி யாருக்கும் மசியவில்லை . அப்படி மைதிலியை முயன்று கிடைக்காத ஆண்கள் மெல்ல அவளுக்கு கருப்பு ராணி, சோடாபுட்டி என்றெல்லாம் பெயர் வைத்து கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள் .
ஆனால் அந்த அழகான கருப்பிலும் ஒரு அசாத்தியான களை இருக்கிறது என்பதை கண்டுபிடித்தது ஜாக்கி தான். ரம்யா வருவதற்கு முன்பு மைதிலி தான் அந்த லோடுமேன்களில் நேரடி இன்சார்ஜ், மைதிலி எப்போதுமே அந்த லோடுமேன்களை விரட்டி கொண்டிருக்க,
“தல இவளை அடக்கனும் தல ரொம்ப ராங்கி பண்றா?”
“உன்னால தான் இவளை அடக்க முடியும். உன்னால தான் இது முடியும் . இவ அடங்கினாதான் நம்ப இங்க ஜாலியா இருக்கலாம்., இல்லண்னா ஒரே நாளைக்கு மூனு லோடு ஏத்த சொல்றா . பேமென்ட் ஏத்தி தர மாட்டேங்கிறா “ என்றார்கள்.
ஜாக்கி என்கிற அந்த ஜே.கே அவளைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான். அவளிடம் தானாகவே போய் பேச்சு கொடுத்தான். அவள் அவனிடமும் சிடுசிடுப்பாக ., நெருப்பாக இருந்தாள்.
நெருப்பு தான் ஆனால் ஈஸியான அணைத்து விடலாம் என அவன் நினைத்தான். அவளை அடிக்கடி
இம்ப்ரஸ் செய்ய நினைத்தான்.
அவனை விட ஐந்தாறு வயது அதிகமாக இருந்தாலும் ஆண் துணை இல்லாமல் வாழ்கிற மைதிலிக்கு தான் இதமாக பேசினாலே நெருங்கி வருவாள் என அவன் கணக்கு போட்டான் . ஆரம்பத்தில் எதுவும் அவனுக்கு கைகூடவில்லை. பத்து ஜோக்கு சொன்னால், ரெண்டு
ஜோக்குக்கு தான் சிரித்தாள். மற்றபடி
பாராமுகம் தான்.
ஒருவேளை லோடு மேன் என்பதால் இளக்காரமாய்
நினைக்கிறாளோ. ஒரு பெரிய பாக்கெட் முந்திரி பருப்பை தன் கடையிலிருந்து லவட்டிக் கொண்டு போய் இனாமாக
கொடுத்தான்.
“ஒன்னும் இல்ல முந்திரி சாப்ட்டா ஸ்கின் சாஃப்டா ஆகும், கலர் ஆகும்’னு சொன்னாங்க. டிரைபண்ணி
பாருங்களேன்..”
அவள் முறைக்க,
“அட பிரீதான் மேடம்.. நம்ம ஓன் கடை”
‘போடா எடுத்துகிட்டு..”
டெம்போவில் வைத்து மூவரும் தான் தின்றார்கள்.
21 வயது ஆரம்பத்தில் இருந்த ஜே கே விற்கு அதெல்லாம் அவன் வயதுக்கு மீறிய செயல் . இருந்தாலும் அவளிடம் வலிய வலிய போய் பேசினான்.
ஒருமுறை தொடர்ச்சியாக அவன் வீட்டில் சகோதரிக்கு
திருமணம் என ஒரு வாரம் லீவ் போட,
மைதிலி அவனது சகாக்களிடம், ‘எங்க அவன் காணோம்?” என
கேட்க
தல ., நீ இல்லன்னு அண்ணி பீல் ஆகுது தல.,’ என சொல்ல.,
அவன் ஓடோடி வந்தான். ஆனால் அவள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
“ அண்ணிக்கு கிளிப் வாங்கி கொடு தலை. தலைஅயை விரிச்சி
போட்டிருக்காங்க”
“போடா! எதை கொடுத்தாலும் வாங்க மாட்றா. ஒருவேளை தன்னை
விட சின்னபையன்னு நினைக்கிறாளோ” அவன்
துண்டு தாடியை தடவ.,
“ நீ ஏன் ஜாக்கி
கொடுக்கறே? வாங்கு. லேடீஸ்க்கு கொடுக்கத்தான் ஆசைப்படுவாங்க” ம்ம் சரிதான்.
மறுநாள் மைதிலி சாப்பிட்டு விட்டு மீதியை கொட்ட, “ அய்யோ மீதி சாப்பாட்டை ஏன் மேடம் வேஸ்ட் பண்றீங்க? இவ்ளோ சாப்பாடை போட்டுட்டீங்க கொடுத்திருந்தால் நாங்க சாப்பிட்டு இருப்போம் இல்லையா ?” என்றான் .
அவளுக்கு ஷாக்காக இருந்தது.
‘ ஏன் இப்படி எல்லாம் பேசுகிறார்கள். சாப்பாடு காசு கூட கஷ்டமாக இவர்களுக்கு?” என அவள் நினைத்துக் கொண்டாள்.
மறுநாள் மைதிலி சாப்பிடும் போது அவளுக்கு பாதி டிபன் பாக்ஸ் கூட இறங்கவில்லை.
ஒருவேளை ஜாக்கி இருந்தால் கொடுக்கலாமே ?” என்றபடி அவள் படிக்கட்டு விட்டு இறங்க, அவன் படிக்கட்டின் கீழே தான் நின்றிருந்தான்.
‘ எஸ் மேடம். வாங்க நீங்க வருவீங்க எனக்கு தெரியும் தேங்க்யூ” என்று அந்த டிபன் பாக்ஸ் வாங்கி கொண்டு போய் விட்டான். அவளுக்கு அவனது செயல் விசித்திரமாகவும் புதுமையாகவும் அதே சமயத்தில் சிரிப்பாகவும் இருந்தது.
அவன் சாப்பிட்டுவிட்டு பத்து நிமிடத்தில் டிபன் பாக்ஸை கொடுத்தான் .நன்றாக சுத்தமாக கழுவி கொடுப்பான் என்று பார்த்தால் ,அப்படியே சாப்பிட்ட எச்சில் டிபன் பாக்ஸை தருகிறானே ’ என கோபமாக அவள் முறைத்து பார்க்க
‘ஏன் மேடம் கழுவலன்னு பாக்குறீங்களா? கழுவுனா உறவு போய்டும்” என்றான் .
‘என்னது உறவா?’
அவன் சிரித்துக் கொண்டே விளையாட்டாய் ஓடுவது அவளது அவளுக்கும் சிரிப்பாக இருந்தது. பேசாமல் தினமும் ஒரு டிபன் பாக்ஸ் செய்து எடுத்து வரலாமா” என்று நினைத்தாள்.
வேண்டாம் யாராவது பார்த்தால் தப்பாக நினைத்து போல நினைத்துக் கொள்வார்கள் என்ன இருந்தாலும் அவன் ஒரு வயது ஆண் பிள்ளை. நாம் இருக்கும் நிலையைப் பார்த்தால் கண்டிப்பாக கதை கட்டி பேசுவார்கள் என நினைத்தாள்
மறுநாள் அவள் டிபன் பாக்ஸில் சாப்பாடு மீதியாகவில்லை. அவன் கீழே சாப்பட்டுக்கு காத்திருப்பான் என அவள் நினைத்தாள். வைராக்கியமாக மேலே இருந்தாள்.
ஆனால், மாலை அவள் கீழே இறங்கி வர அவனது சகாக்கள் மட்டும் இருந்தார்கள் ‘ஜாக்கி இல்லையா? வேலை நடக்குதா இல்லையா? இரண்டு பேரு தான் இருக்கீங்க” இன்னொருத்தன் எங்கே ? அந்த பையன் எங்கே “ என அதட்டலாய் கேட்க,
“ அவந் போயிட்ன்
மேடம் .லீவு வீட்டுக்கு போயிட்டான்’
‘ ஏன் வீட்டுக்கு போயிட்டான்?.”
“அவன் மத்தியானம் சாப்பிடல மேடம்” ஜாக்கி சொல்லி கொடுத்ததை அவர்கள் சொல்ல.,
‘ ஏம்பா சாப்பிடலைன்னா என்ன? ஹோட்டல் எங்கயாச்சும் வாங்கி சாப்பிட வேண்டியதானே ?”
“இல்ல மேடம் அவன் எங்க போனாலும் வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுவான். அவன் என்ன எங்களை மாதிரியா மேடம்? அப்பா
பெரிய சூப்பர் மார்க்கெட் வெச்சிருக்கார். ஆனா வீட்டுல எப்பவும் தகராறு”
“ஏன்?”
“அவன் பெரிய வஸ்தாது மேடம். எவ்ளோ பெரிய ஆளான்னாலும்
கை நீட்டிடுவான். தப்புனா தட்டி கேப்பான். அவனுக்கு வீட்டுக்கும் ஒத்து வரல
மேடம்.. அவன் நிறைய படிச்சி கலெக்டர்
ஆகனும்னு துடிச்சான். அப்பா சூப்பர் மார்க்கெட் பாத்துக்கங்கிறார். இவன்
தனக்குன்னு ஒரு ரூட் போட்டுக்கனும்னு நினைக்கிறான். சொந்தக்கால்ல நிக்கனும்னு
பாக்கறார்” சொல்லிகொண்டே அந்த பையன் அவளை ஓரக்கண்னால் பார்த்தான் . அவளது ஷாக்கான
ரியாக்ஷனாய் கவனித்தான். ஆஹா சூப்பரா
ஒர்க் அவுட் ஆகுதே.
“அவன் யார்கூடவும் அவ்ளோ சீக்கிரம் சிங்க் ஆக
மாட்டான் மேடம். நேத்து கூட கோயில்ல ஒரு
பொண்ணு அவன் கிட்ட வந்து உன்னிய புடிச்சிருக்குன்னு அழுவுது.. தல வேணாம்
போ;’ன்னுடார்..அவரு யாரையோ மனசில நினைச்சிருக்கார் மேடம்”
“போதும் நிறுத்து.
அவன் ஹிஸ்டரியா நான் கேட்டேன்?..
சாப்பாடு வெளிய சாப்பிட பிடிக்கலன்னா,.
வீட்டில இருந்து கொண்டு வரது தானே?”
“எப்பவும் வீட்டிலிருந்து கொண்டு வரது தானே மேடம். ஆனா, அவன் வீட்டுல சொந்தக்கார பொண்ணை கட்டிக்கங்கிறாங்க.. இவனுக்கு
பிடிக்கலை. இத்தனைக்கும் பொண்ணு ரொம்ப சிவப்பு. அழகு ”
“ஏன் கட்டிக்கறது தானே?”
“ மனசுக்கு பிடிக்கனுமில்ல மேடம்.. அவனுக்கு பொண்னு
மானிறமா இருந்தா போதுமாம். ஆனா தலை முடி தொடை வரைக்கு., போகனுமாம்” மைதிலி முடியை எடுத்து முன்னால்
போட்டாள்.
“..........................”
“ அதான், மூனு நாளா வீட்ல சண்டை போட்டு எங்க கூட வந்து வேலை செய்றான். மத்தபடி
அவன் ரொம்ப நல்ல பையன் மேடம் “ என்றான்
“சரி சரி சர்டிபிகேட் எல்லாம் ஒன்னு கேக்கல. இவ்வளவு நாள் எங்க சாப்டுட்டு இருந்தான்?”
“ இவ்வளவு நாள் வீட்டில் இருந்து கொண்டு வருவான் மேடம் . இப்போ ரெண்டு மூணு நாளா வீட்ல சண்டை போட்டாரு. அதனால இனிமேல் சாப்பாடு கொண்டு வர மாட்டேன்னு சொல்லிட்டாண். நாங்க கொடுத்தாலும் சாப்பிடல மேடம் நாங்க ஹோட்டல்ல இருந்து வாங்கி கொடுத்தாலும் சாப்பிடல மேடம்” என்றான்
அவளுக்கு தவிப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒருவேளை நாம் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருந்தால் சாப்பிட்டு இருப்பானோ ?’என நினைத்தாள்.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6