தொடங்கும் முன்...
: கள்ளம் கபடம் காமத்தின் முதல் மூன்று பாகங்களை படித்து விட்டு ( எபிசோடு 1 முதல் 121 வரை...) இந்த பாகத்தை தொடர்வது
சிறப்பானது.
க.க.கா பாகம் 4 : எபிசோடு : 122
அடடா இன்னிக்கு திங்கள் கிழமையாச்சே?’
விழிப்பும் தூக்கமுமாய் இருந்த ஷில்பா பரபரப்பாக எழுந்தாள்.
பின்னங்கழுத்திலும், முதுகிலும் பரவி இருந்த
கூந்தலை வாரி சுருட்டி, கொண்டையை போட்டபடியே நைட்டியில் இருந்து புடவைக்கு மாறி வாசற்கதவை திறந்தாள்.
பால்கவரை எடுத்துக் கொண்டு கதவை சாத்தும் போது தான் எதிர்வீடான மதுமிதா ஃபிளாட்டின்
மூடிய கேட்டைப் பார்த்தாள்.
அட காலை 7 மணி தாண்டியும் மதுமீதாவின் வீடு இன்னும்
திறக்கப்படவில்லையே!.
இந்த முதல் தளத்தில் இரண்டு வீடுகள் தான், எதிர் எதிர்
ஃபிளாட்டுகள். ஒன்றில் ஷில்பா இன்னொன்று மதுமிதா . ரெண்டுமே மூன்று பெட்ரூம் படுக்கையறை
ஃபிளாட்டுகள். எதிரெதிர் வாசல். இருவரும், காலையில் எழுந்தவுடன் கட்டாயம் இன்னொரு வாசலில்
தான் கண்விழிக்க முடியும். ஷில்பாவின் குழந்தை காலையில் கதவை திறந்ததுமே எதிர் வீட்டில்
மதுமிதாவின் வீட்டிற்கு தான் ஓடும். லீவ் என்றால், குழந்தைகள் இல்லாத அந்த மதுமிதாவின்
வீடே கதி பிள்ளைக்கு.
மூன்று நாட்கள் லீவு முடிந்து பிள்ளையை பள்ளிக்கு கிளப்பும் அவசரத்தில் இருந்தாலும் இன்னும்
மதுமிதாவை பார்க்க முடியாத குழப்பத்தில் இருந்தாள் ஷில்பா.
ஷில்பாவின் வீட்டில் மாமனார், மாமியார் இருந்தாலுமே
ஷில்பாவின் பேச்சு, அரட்டை, பொழுதுபோக்கு எல்லாம் மதுமிதாவுடன் தான். அவளுக்கும் மதுமிதா
வீடுதான் மன மகிழ்ச்சிக்கான புகலிடம்.
' அட., புருஷன் வெளியூரில். பிள்ளை ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்துவிட்டான். பாவம் அவளுக்கும் பொழுது போவனுமில்ல’ என் அவளது மாமியாரும் கூட
எதுவும் சொல்வதில்லை.
‘ஏன் இந்த மதுமிதா இன்னும் எழுந்துக்கல?” ஷில்பா வாய்விட்டே முனுமுனுத்தாள். அந்த அப்பார்ட்மென்டிலேயே
எப்போதும் முதலில் விழித்து எழுவது மதுமிதா தான் வீடாகத்தான் இருக்கும். ஏனென்றால்
, மதுமிதாவின் கணவனுக்கு பெரிய ஐடி நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வீடு. காலையிலேயே
அவன் கணவன் தீனா. தீன தயாளன் முழுப்பேர். சினிமா பாட்டு, செய்தி என ஷில்பாவின் வீடு
வரை டிவி சத்தம் முதல் தளம் முழுக்க கேட்கும். ஆனால் இன்று எதையுமே காணவில்லை.
மதுமிதா கேட்டில் தொங்கவிடப்பட்டிருந்த பால் பாட்டில்
கூட இன்னும் எடுத்து உள்ளே வைக்கவில்லை. என்ன ஆச்சு? இந்த பெண் எழுந்தாளா? இல்லையா?
ஷில்பாவுக்கு குழப்பமாக இருந்தது. சென்ற வாரம் தான் மதுமிதாவை ஷில்பா மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்று இருந்தாள்.
அதற்குப் பிறகு வீட்டில் தொடர்ச்சியாக வேலை இருக்கவே
மதுமிதாவை என்ன? ஏது ? என்று கூட கேட்பதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. மதுமிதாவை
பிறகு பார்ர்த்துக் கொள்ளலாம். வாரத்தின் முதல் நாள் பரபரப்பில் அமிழ்ந்தாள் ஷில்பா.
“அத்தை...” குரல் கொடுத்து விட்டு, தன் அறைக்குள்
போனாள். கால் பரப்பி குப்புறப் படுத்து கொண்டிருந்த பிள்ளையை தட்டி எழுப்பி பாத்ரூமுக்கு
அனுப்பி பாலை ஊற்றி பாத்திரத்தில் வைத்து காய்ச்சினாள்.
மாமனார் , மாமியார் மகள் வீட்டிற்கு போவதாக சொன்னார்களே?
அவர்கள் இங்கு வந்து மூனு மாசம் ஆகிறது. எப்படியும் ஒரு மாதம் அங்கே தங்குவார்கள்.
ஹாலில் போடப்படிருந்த அவர்களின் துணிகளை பிரித்து, மடித்து பேக் செய்தாள். எப்போதும்
காலையில் எழுந்த உடன் ஆக்லாந்தில் உள்ள அவள்
கணவனுக்கு விடியோ போன் செய்வாள். இன்று அதெற்கெல்லாம் நேரமில்லை. எல்லாம் மதியம் பார்த்துக்
கொள்ளலாம். இப்போது முதலில் பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டும். இந்த சீனியர் சிட்டிசன்களை
மகள் வீட்டுக்கு பேக் செய்து அனுப்ப வேண்டும்.
கிளீனிங், பேக்கிங்க், குக்கிங்க் என பம்பரமாய் சுழன்றாள்
ஷில்பா.
முன்பெல்லாம் ஷில்பாவுக்கு சனி, ஞாயிறு என்றால் வேலை
அதிகமாக இருக்கும், ஏனென்றால் வாரம் ஒரு தடவை
சோழிங்க நல்லுர் காலேஜ் ஹாஸ்டலில் இருந்து இங்கே வந்து தங்கி விட்டு போகும் ஷில்பாவின்
கணவரின் தம்பி எக்ஸ்ட்ரா டிக்கெட் மனோஜ் இப்போது இல்லை. இனி அந்த மனோஜ் வரப்போவதும்
இல்லை.
ஒரு மாதத்திற்கு முன்பாக தான் கனடாவில் டாக்டர் படிப்பு
படிப்பதற்காக சென்று விட்டான். மச்சினன் மனோஜ் படிப்புக்கும் சேர்த்த்து ஷில்பாவின்
கணவன் தான் கஷ்டப்பட வேண்டி இருகிறது.
ஷில்பாவின் கணவன் பிரேம் சங்கர் ஆரம்ப கால கட்டத்தில் கல்லூரி படிப்பு செலவுக்காக கஷ்டப்பட, மாமனார் பூர்வீக
சொத்தை விற்று படிக்க வைத்தார்.
“உன்னை நான் படிக்க வைக்கிறேன். நீ தம்பியை படிக்க
வை’ என்பது அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம். அவன் கராக்பூரில் ஐஐடி யில் கணிப்பொறி
படித்தான். சம்பாதித்தான். ஆனால், அதெல்லாம் தங்கை கல்யாணம், சீர்வரிசைக்கே சரியாக
போனது. இதற்கு நடுவில் அவனது கல்யாணம், குழந்தைப்பேறு., இந்த பிளாட் என செலவு ஒருபக்கம்
அதிகமாக தம்பி மனோஜ் காலேஜில் அடியெடுத்து வைக்க., பிரேம் சங்கருக்கு செலவு மேல் செலவு.,
ஆக்லாந்த் கம்பெனியில் சம்பளம் கூட பெரிய வருமானமில்லை. 3 பெட்ரூம் 80 லட்சத்துக்கு
வாங்க, அவன் கை உயர்வே இல்லை.
பேசாமல் சென்னையிலேயே செட்டில் ஆகிவிடலாம்’ என பிரேம்
சங்கர் நினைத்தால் கூட இதோ அடுத்த வருசம், இந்த வருசம்’ என தள்ளி கொண்டே போகிறது.
“இங்க மூனு சம்பாதிச்சு., அங்கே ஒன்னரை அனுப்பறே?
ஆனா சென்னைக்கு போனா., உனகெல்லாம் ஒன்னு கிடைக்கிறதே கஷ்டம்,. அம்பாதாயிரம் கம்மி ஆகும்..
பரவாயில்லையா? எதுவா இருந்தாலும் , யோசிச்சு பண்ணு” என ஆக்லாந்தில் சொன்னவர்கள் கூட,
போனில் அவன் மனைவி ஷில்பா போட்டாவை பார்த்த பின், பின்னால் போய்,
“சங்கர் ஒரு தத்திடா,. லட்டும் மாதிரி பொண்டாட்டியை
தனியா தவிக்க விட்டு, இங்க வந்து கன்ஸ்ட்ரக்ஷன்
சாப்ட்வேர்ல மாரடிச்சிகிட்டிருக்கான் பாரு
லூசு பய.” என புறம் பேசினார்கள்.
“எனக்கெல்லாம் இப்படி ஒரு பொண்டாட்டி கிடைச்சா அவ
மடியிலேயே வேலை கிடைக்குதானுனு பாப்பேண்”
“பாத்து?”
“வரிசையா புள்ளை கொடுத்துகிட்டே இருப்பேண் ’’ அவர்கள்
ஆம்பளை திமிரில் கொக்கரித்தார்கள். ஷில்பாவை கனவு கண்டுகொண்டு படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டார்கள்.
அங்கே, அவன் தன்னம் தனியாக குடும்பத்தை விட்டு வருஷக் கணக்காக அயல்னாட்டில் தத்தளிக்க.,
சுற்றிலும் தம்பதியினராக வலம் வர, தான் மட்டும் கணவன் இருந்தும் இல்லாதத போல தனிமையில்
காலம் கழித்தாள் ஷில்பா,. இந்த பணம் தான், பணத்தின் தேவைதான் எத்தனை குடும்பங்களில்
இடையில் புகுந்து இஷ்டத்திற்கு விளையாடுகிறது? பொருள் தேடும் பொருளற்ற வாழ்வில் இளமை
தொலைந்த பின் பொருளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பிரேம் சங்கர்க்கு புரியவில்லை,.
‘ ஒரு மூனு வருஷம் பொறுத்துக்க ‘ என்கிறான். அந்த
மூனுவருஷம் என்பது எத்தனை நீளமான காலம் என்பது
இளமையின் பூரிப்பில் இருக்கும் இளம்பெண்களுக்கு தான் தெரியும். தனிமை ஒரு கொடுமணல்
பாலை என்றால், ஏளனப் பேச்சு இன்னொரு பக்கம்,
‘ புருசன் இல்ல மாமு.. அப்ராடு.. . ஃபிகர் ரொம்ப லோன்லி
மச்சி மாமு........’ என்றெல்லாம் பின்னால் பேசும் ஆண்களின் எகத்தாளம் அதனினும் கொடுமை.’ நல்லவேளை மாமனாரும், மாமியாரும்
அவளை அரணாக காப்பதால் தான் குடித்தனத்துக்கு அப்பழுக்கில்லாமல் இருக்கிறது.
மாமனார் குளித்துவிட்டு துண்டு உதறும் சப்தம் கேட்க,
இவள் காபி கொடுத்து விட்டு வந்தாள். மச்சினன்
மனோஜ் இல்லாத்தால், முன்பு போல வீக் எண்டு என்பது பரபரப்பாக இல்லை. வேலை ரொம்ப குறைவாகி
விட்டது
“வெறும் சாம்பார், கீரை, பூசணிக்காய், கோவக்காய் சாப்பிட்டு
வாய் செத்து போச்சி அண்ணி ” என புலம்பும் மனோஜுக்கு சனி, ஞாயிறு வாய்க்கு சுவையாக சமைத்து போட வேண்டும். திங்கள் கிழமை அவன் காலேஜுக்கு கிளம்பும்
போது, டிபன் பாக்ஸில் போட்டுக் கொடுக்க வேண்டும். வேலை டபுள் வேலை. அவன் டாக்டருக்குப்
படிக்க கனடா போன பின் இந்த ஒரு மாதம் வேலைகள் குறைந்துவிட்டன.
மாமனார், மாமியாரும் அதிக அளவு ஷில்பாவை தொல்லைப்படுத்துவது
கிடையாது. இன்று காலை அவர்கள் அவர்களது மகள் வீட்டிற்கு போவதாக சொல்லி இருந்தார்கள்.
மணி 8 ஆக பிள்ளையை அனுப்பிவிட்டு, 10 மணிக்கு இவர்களும் கிளம்பினார்கள்.
“எங்கடி மது? ஆளையே கானோமே? அம்மா அம்மானு வருவாளே?”
அத்தை சொல்ல.,
“தெரில வீட்டுலதான் இருக்கா போல”
“சரி கூப்டேன்.. மாமா சொல்லிட்டு போகனும்கிறார்”
“அவ வெளிய வரலையே அத்தை ? உடம்பு சுகமில்லையோ என்னமோ?
எதுக்கு தொந்தரவு பண்றது? நீங்க கிளம்புங்கோ”
இரண்டு பேரையும் ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு,
மதுமிதாவின் வீட்டிற்கு போய் என்ன ஏது என விசாரிக்கலாம்? என நினைத்தாள் ஷில்பா.
கேட்டில் இருக்கும் பால் பாக்கெட் கூட எடுத்து வீட்டில்
வைக்காத அளவிற்கு என்ன பிரச்சனை அவளுக்கு ? ஏதாவது உடல் நலக் குறைவா?
கேட்டை உற்றுப் பார்த்தாள். பூட்டு எதுவும் இல்லை.
உறுதிப்படுத்திக் கொண்டாள்.. உள்பக்கம் தான் தாய்ப்பால் போடப்பட்டிருந்தது . வாசலில் செருப்பு, ஷூ இல்லாததால் அவள் கணவன் தீனா
கண்டிப்பாக இல்லை' என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டாள்.. வேலை எல்லாம் முடித்துவிட்டு,
காலை டிபன் சாப்பிட்ட உடனே மதுமிதாவின் வீட்டிற்கு
தான் போனாள் ஷில்பா மிகப்பெரிய விபரீதங்களை நோக்கி..
கள்ளம் கபடம் காமம்- 1 - 6