அத்தியாயம் 2
அவர்கள்
ஒரு அதிசயமான மாமியார் – மருமகள் தான்
"குழம்பு கரண்டிய, சாம்பார்ல போடாதே.. சாம்பார்
கரண்டியை ரசத்துல போடாதே" என அல்பமாய் மருமகளை விரட்டும் மாமியார் அல்ல,
பரசுவின் அம்மா.
" இந்தாடி சாவி. இதுவரைக்கும் நான் ஓட்டுனேன்.
இனிமே நீ ஓட்டு. உன்னால முடியலன்னா சொல்லு.. நான் பாத்துக்கறேன். இது உன் புருஷன்.
உன் குடும்பம், உன் வண்டி...பாத்துக்க" அவள் ஒதுங்கி விட,.
" அத்தை நீங்க?"
" நான்
ஜன்னல் சீட்டுல கன்னம் பதிச்சி தூங்கற சாதராண , சௌகர்யமான பயணி. .அவ்ளோ
தான்" பர்சுவின் அம்மா நாசுக்காக
விலகிவிட்டாள். ஜெயகாந்தனை கையில்
எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.
அந்த வீட்டில் பரசுவும் அவளும் சுதந்திரமாக ஆட்டம்
போட்டார்கள். வருஷம் திரும்பும் முன்னே கையில் குழந்தை.. ஊரே மெச்சியது. 'என்ன
கொடுப்பினை?' என சிலாகித்தது.
'அந்த திருஷ்டியே வினையாகி விட்டது.
"டக்குன்னு இன்னொன்னை பெத்து தொலைக்காதே..பால்
ஒன்னுக்கு குடுத்துகிட்டே இன்னொன்னு வயித்தால போறதை அள்ளனும்" விஜியை அவள்
குடும்பம் உருட்ட., அந்த அலுப்பே அவஸ்தையாகி விட்டது.
அவர்கள் பிள்ளை செல்வத்தை தள்ளிப் போட .மூனு வருஷம் நிர்மலாமாக ஓடிப் போக., அதன் பின் எந்த விசேஷமும்
வரவில்லை. அய்யோ என்னாச்சு..? கடவுளே!
"தப்பு பண்ணிட்டோம். அப்பவே வர விட்டிருக்கனும்..."
பரசுவும் கூட புலம்பினான்.
"அட இவளுக்கு பேச்சு துணைக்கு ஒரு புள்ளையை
தரலையே"
"புள்ளை பாவம், ஒத்த ஆளா சுவத்துக்கிட்ட
பேசிகிட்டு, பந்து போட்டு விளையாடுது" விஜிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
குடும்பம் சென்னையிலிருந்து குண்டூருக்கு
நகர்ந்தது. அத்தோடு நிற்கவில்லை.
பரசுவுக்கு அடிக்கடி பணி நிமித்தம் இடம் மாற்றல்,
ஓயாத பணி, கடும் அலைச்சல், நாள்கள் ஓடி, ஆண்டுகள் ஓட., பத்து வயதில் பூரிப்பாய்
ஷிவானி வளர்ந்து நிற்க.,
பரசுவுக்கும்
'சர்க்கரை' லேசாய் எட்டி பார்க்க.,
அத்தோடு ரெண்டாவது குழந்தையைப் பற்றி
அவர்கள் யோசிக்கவில்லை.
ஆனால், ஷிவானியை பாக்கவே கண்கள் போதவில்லை. அவள் வீடு
முழுக்க நிறைந்திருந்தாள். அவர்களை விட பாட்டி, தன் பேத்தி ஷிவானி மேல் உயிரையே
வைத்திருந்தாள்.
இருந்தாலும்,
"அத்தை.. காப்பி" என நொட்டென தரையில் வைத்து விட்டு விசிறலாக போகும்
வழக்கமான மருமகளாக விஜி இல்லையென்பதால் , அந்த வீடு ஒற்றை பெண் பிள்ளையோடு
மகிழ்ச்சியாகவே இருந்தது.
அதற்கு நன்றியாகத்தான் விஜியை பரத நாட்டியத்தில்
புகுத்தினாள் பரசுவின் அம்மா. ஆம் விஜியின் தங்கை ஷோபனா அடிக்கடி விஜி வீட்டுக்கு
வரப்போக இருக்க, சில முறை மாதக்கணக்கில் அக்கா, மாமா வீட்டுடன் ஷோபனா தங்க, அவள்
மூலமாகத்தான்., அக்காவின் மாமியாருக்கு, விஜியின் பரத நாட்டிய திறன் பற்றி தெரிய வந்தது.
“அக்கா விஜி காலேஜ்லயே நிறைய கிளாசிக்க்ல டான்ஸ்
காம்படிஷியன்ல டிராபி வாங்க்கியிருக்கா..”
“அட
சொல்லவேயில்லையே.. பாட்டு தான் கத்துண்டிருக்கான்னு நினைச்சோம்...”
“பாட்டும் வரும். ஆனா டான்ஸ் தான் அவளுக்கு பிரைம்..
மேரேஜுக்கு முன்னாடியே டான்ஸ் கிளாஸ் நடத்திண்டிருந்தா.
மாசம் எட்டாயிரம் வரும்..”
“அட இத பார்ரா? ஏன் சொல்லல?" பரசுவின் வீடு
வியந்தது.
குண்டூர், ஜெய்ப்பூர் என நகர்ந்து டெல்லியில் போய்
விழ, அங்கே வேறொரு விஜி உதயமானாள். எல்லாம் அத்தை கைங்கர்யம்.
விஜி சொல்ல சொல்லக் கேளாமல், டெல்லியில் இருக்கும் போது
பரசுவின் அம்மா நாட்டியப் பயிற்சிப் பள்ளி பலகை ஒன்றை வீட்டுக்கு முன்னாடி மாட்டி
விட்டாள்.
“எதுக்கு அத்தை? இப்ப போய் இதெல்லாம், அவரு
எதுனாச்சும் சொல்ல போறாரு” விஜயலட்சுமி தயங்க.,
“அடசும்மா இருடி., பொம்பளை பிள்ளைகளுக்கு தானே கத்து
தர போறே? அதும் வீட்டோடு தானே?” அவள் உறுதியாய் நிற்க,
இருபது பேர் வரை வந்து அரசாங்க கோர்ட்ரஸ் மொட்டை
மாடியில் வந்து ‘தைய தக்க தாத்தோம் தோம்
தீம்..’ என குதித்து விட்டு போனார்கள். பரசு சார் ஒய்ப் என்னும் சொலவடை போய், 'விஜயலட்சுமி
மேடத்தோட ஹஸ்பேன்ட்' என ஆகிப் போனது..
அத்தை அத்தோடு நிற்கவில்லை ‘டெல்லி தமிழ் நாட்டிய
சங்கம்’ போய் பேசி சபாவில் ஸ்டேஜில் ஆட,
விஜயலட்சுமிக்கு ஒரு டேட் வாங்கப் போராடினாள். பரசுவுக்கே ஆச்சரியம்.
ஆனால் அது நடக்கவில்லை; விஜியை விட அத்தைக்கு பயங்கர
வருத்தம்,. விஜி அத்தையை கட்டிக் கொண்டாள். ;
"போறூம் போங்க..இதுக்கு மேல என்ன ஆடறது?. ஊருக்கு
ஏண் ஆடனும் நீங்க என் மேல இவ்ளோ ஆசை வெச்சிருக்கீங்களே.. அது போதும்..”
“போடி. பைத்தியம்... அவ அவ அம்பது வயசுல தாம் தோம்னு
குதிக்கிறா? உனக்கென்னடி..?.” விடாமல் அவள் யாரை யாரையோ போய் பார்த்தாள். ஒன்றும் பலனிக்கவில்லை.
பரசும் செல்வாக்கை பயன்படுத்திப் பார்த்தான்.
எல்லாரும் வணிகமயமாக இருந்தார்கள். விஜயலட்சுமிக்கு வாய்ப்பு தரவில்லை.
"சார் .25 வயசுக்கு மேல நாங்க யாரையும் மேடை
ஏத்தறதில்ல. இப்ப உங்க மேடத்துக்கு சரின்னு சொன்னா., நிறைய விஐபி வீட்டுல இருக்குற
பொம்னாட்டிகள் எல்லாம் கிளம்பி வந்துடும். எப்பாவோ ஆடுன ஆட்டத்த பெருசா பேசி
சான்ஸ், ரெக்கமண்ட் லெட்டர் வந்து
நிக்கும்.. அவங்களுக்கென்ன ஆடுவாங்க. கூட்டம் பாக்கனுமில்ல. சாரிங்க”
“கலைக்கு வயசில்லையே”
“ஆமா.. ஆனா. இப்ப கலைக்காக யாரு ஆடறா.?, புருஷன்
பெரிய பதவில இருக்கார்ங்க்கிர திமிரு. உங்களை சொல்லலை. அவங்களுக்கு சொல்றேன். அதை
சாக்க வெச்சி.. நான் நினைச்சா நான் நாட்டிய சபாவில ஆடுவேன்னு சவால் விட்டு
ஒரு 55 வயசு பொம்பளை உடம்பை தூக்க முடியாம
தூக்கிட்டு வந்து சபாவில சான்ஸ் கேட்டா. கையில மினிஸ்டர் லெட்டர்”
“அப்புறம்?”
“மினிஸ்டர் சம்சாரத்துக்கே இங்க சான்ஸ் இல்ல’ன்னு
சொல்லி அனுப்பி வெச்சோம்” அந்த சபா செகரட்டரி பரசுவுக்கு நேரடியாக தன் பதிலை
சொல்ல., அத்தோடு விஜயலட்சுமியின் மேடை
நாட்டிய பக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
யூட்யூப், ஆல்பம், டான்ஸ் ஸ்கூல் இது போதும் ‘ என
அவளும் மனதை ஆற்றிக் கொண்டாள்.
ஷிவானி பிளஸ்டூவை
தொடும் போதே, பரசு ஷிவானியின் காலேஜ் & மேரேஜ் எல்லாம் சென்னையில் தான் இருக்க
வேண்டும் என தீர்மானித்திருந்தான். அம்மாவும் சென்னை, மயிலை என பிடுங்கிக்
கொண்டிருந்தாள்
அவளுக்காகவே 5 ஆண்டுக்கு முன்பாக பரசு குடும்பம் சென்னை
வந்து சேந்தாச்சு.
'ஷிவானிக்கு மாப்பிள்ளை தமிழ்நாட்டுல தான்.."
விஜி கூட உறுதியாக சொன்னாள். விஜிக்கும் எப்போடா சென்னை போவோம்? என இருந்தது.
சென்னை போனால் பிறந்த வீடு ரொம்ப பக்கம். அடிக்கடி
போகலாம், வரலாம். இந்த ஷோபனா கூட அடிக்கடி வரலாம். டெல்லியாக இருந்தால் வரபோக
ரொம்ப சிரமம்.
டெல்லி அதிக குளிர். அதிக வெப்பம். ச்சீ ஊரா இது? ஊர்
மட்டுமல்லம் ஆட்களும் விஜிக்கு பிடிக்கவில்லை. சின்ன சின்ன ஆம்பளை பசங்களுக்கு கூட
திமிர் ஜாஸ்தி. கேட்டால் கல்ச்சர் மிஸ்மேட்ச்சாம். நல்ல கூத்து,.
டெல்லியில் ஷிவானியின் பர்டே பார்ட்க்கு பிளா ஸ்டூ
படிக்கும் அவளது ஆண் பெண் நண்பர்கள் வீட்டுக்கு வர,
"ஷி இஸ் மை மாம்..டான்சர். பரத நாட்டியா."
ஷிவானி சூல்ல
" ஓ பகுத் அச்சா...". வியந்து போன அதில்
ஒரு பதினெட்டு வயசுப் பையன் சல்வார்
கமிஈஸ் போட்டிருந்த ஷிவானியின் அம்மா விஜய லட்சுமியை தடாலென கட்டிப்பிடித்து
வணக்கம் சொல்ல முயல " சீ " என விலகி போய் அவனை தள்ளி விட, அவன் நேரே
போய் டிவி ஸ்டாண்டில் போய் முட்டி, வழுக்கி கொண்டு தரையில் விழுந்தான்.
' ராஸ்கல்ல்ல்ல்' கடுமையாக அதிர்ந்து போனாள். விஜி.
அதை விட அவளது நண்பர்களுக்கு பெரிய அதிர்ச்சி.
"க்யா ஹோகையா?"
"என்னம்மா இப்படி பண்ணிட்டே.. ?"
"போடி அறையாம விட்டேனே"
"அய்யோ பட்டிக்காட்டு அம்மாவா நீ? ..ஜஸ்ட்
ஹக்கிங்க் தானேம்மா.. அவன் சின்ன பையன் இல்லே"
"ப்ச் மீசை முளைச்சா அது ஆம்பள தான்.. என்னால அவனுங்க
கூட கை கூட கொடுக்க முடியாது"
"போம்மா.. அதுக்கு போயி அவனை உதறிட்டியே..நல்லா
பயந்துட்டான்"
"நல்லா தவடையில ஒன்னு கொடுத்திருக்கனும். அவன்
அம்மாவை இப்படி கட்டி பிடிப்பானா?
"ஆமாம்மா.. இது அவங்க கல்சர்..உனக்கு கல்ச்சர் மிஸ்
மேட்ச்"
"ச்சீய் என்னால் முடியாது.. உன்
சினேகிதிகங்களை கூட என்னால கட்டி புடிக்க
முடியாது.. தூர இருந்தே வணக்கம், சொல்ல சொல்லு.. இல்ல வெளிய இது"
"இட்ஸ் ஆட்ராஷியஸ் மம்மி.."
"போடி.."
பாவம் அவன் ரொம்ப ஷாக் ஆயிட்டான்..
"தீபக் சாரி. என் ஒய்ப் .. கொஞ்சம்
கன்சர்வேடிவ்.."
"கொஞ்சம் இல்ல ., ரொம்பவே.,"
டான்ஸுல இடுப்பு தெரியாம டற ஒரே லேடி., இவங்களும்
இவங்க சிஸ்டரும் தான்...எங்க சித்தி ஷோபனா"
ஷிவானி
அலட்டாலாய் சொல்லி தோளை குலுல்க..
"எனாஃப் ஷிவானி.பர்டே பார்டியை பாரு.."
பரசு அதட்ட
"போங்க டாடி எனக்கு பர்டே மூடே போச்சு..."
"அதெல்லாம் ஒன்னுமில்ல, சியர்ஸ் பரசு தான் ஈடு
கொடுத்தான்.
அன்று இரவுகூட, அந்த சம்பவத்தை நினைத்து வீட்டில்
பரசும் ஷிவானியும் மாறி மாறி பேச.
" அட விட்றா.விஜிக்கு யார்டா தெரியும்? யாரு
பழக்கம். ? நாம தான் உலகம். அவ நம்மளை
தாண்டி யார்கிட்ட பழகியிருக்கா சொல்லு.. இங்க பாரு ஷிவானி கண்ணு. யாரையும்
வீட்டுக்கு அழைச்சிட்டு வராதே.. உங்கம்மாவுக்கு பிடிக்காது.. விஜியை யாரும் ஒன்னும்
சொல்லாதீங்க. அவ வளப்பு அப்படி. சொக்கதங்கம் " அத்தை சிபாரிசுக்கு வந்து
விஜியை காப்பாற்றினாள்.
கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "
என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.
Authornv(dot)com
என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..
thirumbudi(dot)blogspot(dot)com
இந்த நாவலினை விமர்சனம் செய்ய.
Naveenavathsayana(at)gmail.com
Thalaivare KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum KKK part 4 vendum.
ReplyDelete