மொத்தம் ஒன்னரை மணி நேரம். அதில் 30 நிமிடம் விஜி சோலோ.. பெர்பாமன்ஸ் அவள் தங்கை ஷோபனா 10 நிமிடம் , இருவரும் சேர்ந்து 10 நிமிடம், பிளான் செய்தார்கள். மற்ற லோக்கல் பரத நாட்டிய டான்சர்கள், பக்க வாத்தியங்கள் அனைவரையும் அழைத்து அடிக்கடி ரிகர்சல் பிராக்டீஸ் செய்தார்கள். வீடே கல்யாணம் போல் களை கட்டி இருந்தது. கூட்டம், சங்கீதம், இசை , நாட்டியம். அந்தவீடு உச்சக்கட்ட சந்தோஷத்தில் மிதந்தது. தெருவுக்கு தனி அழகினை கொடுத்தது.
"எல்லாம் சரிப்பா. ஆனா சபாவில கூட்டம் வரல்லைன்னா
நல்லா இருக்காதே. அது பெரிய சபா. 1,200 பேர்
இருக்குற சபா . அதுல குறைஞ்சது ஒரு ஆயிரம் பேர் இருந்தா தானே மரியாதையா இருக்கும்?"
பரசு திடீரென குண்டை தூக்கி போட, அது ரகுவிற்கும் நியாயமாகப்பட்டது.
"மாமா கவலையேப்படாதீங்க கூட்டத்தை வர வைக்க வேண்டியது
என் பொறுப்பு." ரகு அடுத்த ஒரு வாரம் லீவு போட்டு தீயாக வேலை செய்தான்.
தெரிந்த நண்பர்களுக்கு உறவுகளுக்கு அழைப்பிதழ் அனுப்பினான்.
டிக்கெட் அச்சடித்து விலைக்கு தந்தான். மாமாவிடமும் கொடுத்தான்.
"மாமா இது டொனேஷன் புக் இல்ல, கூச்சமே
படாதீங்க., உங்க மனைவியோட திறமையை வெளிய கொண்டு வரது உங்க கடமை.."
"சரிப்பா" டிகெட்ட் கட்டை வாங்கிக் கொண்டு
பரசு, பையை எடுத்தார்.
"இந்தா என் ஷேர் " என ரெண்டு லட்சம் பரசு
நீட்ட,
" அட வையிங்க,. மாமா நாம ஏன் காசு கொடுக்கனும்?.
அத்தையோட டான்சை பார்க்க இந்த ஊரு தான் காசு கொடுக்கனும். "
"என்னப்பா சொல்றே?"
"சபாவுக்கு வெளிய பாருங்க என் ஆட்டத்தை?."
ரகு மார்க்கெட்டிங் மற்றும் புரோமஷனில் வல்லவனாக இருந்தான்.
ஃபேஸ்புக்கில் ஈ டிக்கெட் விற்றான். பல குழுக்களில் போஸ்ட் செய்தான். நல்ல ரிசல்ட்
கிடைத்தது. வெப்சைட்டான 'புக் மை ஷோ'வில் பணம் கட்டி ரிஜிஸ்டர் செய்தான்.
எல்லா ஈவன்ட் ஷோக்களில் ஷோபனா, விஜி படம் போட்டு விளம்பரம்
தர, என்கொயரி பிச்சிக்கொண்டு போக. ஷிவானி அவற்றை நிர்வகித்தாள்,
ரகு கூடவே ஆன் லைன் டிக்கெட் கொண்டு வந்தான். தன்
செல்வாக்கை பயன்படுத்தி எஃப் எம் ரேடியோவில் மணிக்கொரு முறை விளம்பரம்
வெளியிட்டான். தெரிந்த மிகப்பெரிய
யூட்யூப் சேனல்களை வீட்டுக்கு வரவழைத்து விஜியை பேட்டி கொடுக்க செய்து ஹிட்
அடித்தான்.
மாலை பேப்பர்களில் முதல் பக்கத்தில் மூலைகளில் மேலே பவர்
ஜாக்கெட் விளம்பரம் தந்தான். சபாவை ஒட்டி பிரதான சாலைகளில், விஜி போட்டோவை லேம்ப்
போஸ்ட் ஆட் வரிசையாக ஒட்டினான்.
முக்கிய சந்திப்புகளில் ஷோபனா, விஜி படம் பேனர்கள்
வைக்கப்பட, எல்லாரும் அவள் அழகை கண்டு, 'யார் யார்? என விசாரித்தார்கள். இந்த
சபாவில் இதற்கு முன்பு பிரபல டான்சர்கள் ஆடிய போது கூட, இப்படி புரோமேட்
செய்யவில்லையே என அங்கலாய்த்தார்கள்.
நாளிதழ்கள் விஜயலட்சுமி நடனம் பற்றி தனி கட்டுரை
எழுதியது.
ஒரு டிவி சீரியலின் மொத்த யூனிட்டுமே லம்ப்பாக
டிக்கெட்டை வாங்க ஷிவானியிடம் பேரம் பேசியது.
அதில் அமுதம் பத்திரிகை சபா செகரட்டரி சக்திவேலை
பேட்டி கண்டு 'விஜி நடனம்' பற்றி கேட்டது தான் கொடுமை. சக்திவேல் செம்மை கடுப்பில்
இருந்தான்.
ரகு சளைக்காமல் வேலை செய்தான். ஏர்போர்ட் எதிரே
பத்துக்கு இருபது பெரிய சைஸ் பேனர் ஒட்ட, அடிக்கடி விமான நிலையம் வரும் போகும்
மனதில் விஜயலட்சுமி- ஷோபனா முகங்கள் நன்றாக பதிவாகின.
சிறிய தொலக்காட்சி நிறுவனங்களின் செய்தியின் நடுவே விஜியின் நடன நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பினை கொடுத்துக்
கொண்டே இருக்க., விஜி தான் திக்கு முக்காடினாள்.
"எதுக்கு உங்க வீட்டுக்காரர் இவ்ளோ செலவு
செய்றார்.? டிக்கெட் விக்கலன்னா? கூட்டம் வரலன்னா எல்லாம் லாஸ் தானே. நாம நம்ம
திருப்திக்கு தானே ஆடறோம். எனக்கு என் அம்மா, புருஷன் , மாமா வந்தா , அவங்க பாத்தா
அது போதும்"
"அப்படியெல்லாம் இல்ல அத்தை. காசு வரலன்னா
பரவாயில்ல.. ஆனா உங்க டான்ஸ்சை பாக்க கூட்டம் வரனும். .வரவெக்குறேன். " அவன்
பம்பரமாய் சுழன்றான். ஷோபனாவுக்கும் இந்த விளம்பர தடாலடி அதிர்ச்சியாக இருந்தது.
தன் ஊரிலிருந்து ஆட்களை வரவழக்க பிளன் செய்தாள்.
ரகு தனது நிறுவன கட்டிடம் அமைந்திருந்த அனைத்து பிளாக்குகளுக்கும்
செய்தியை அனுப்பினான். டிக்கெட்டை அவனாகவே கணக்கில்லாமல் அச்சடித்து எல்லோருக்கும்
விநியோகித்தான்.
" என்னங்க ஒரு டிக்கெட் 200, 300 ரூபான்னா யாரு
வருவாங்க?' ஷிவானி கேட்க,
"வருவாங்களாவா? லூசு இது வரைக்கும் ஆயிரம்
டிக்கெட் மேல வித்திருக்கு. டிக்கெட்லாம் பெரிய காசு இல்ல. நான்
கூட்டத்துக்கும், டிக்கெட் விக்கவும் தான் ஓடறேன்னு நினைச்சியா? நெவர். எல்லா
டிக்கெட்டும் ஓசியில கொடுத்து கூட கூட்டத்தைக் கூடலாம். எதுக்கு இவ்ளோ செலவு செய்யறேன். நான் பிளான்
பண்றது பெரிய டார்கெட்."
"என்னாங்க?'
"கம்பெனி ஸ்பான்சர் தான் யோசிக்கிறேன்.."
"அட" ஷோபனாவும் வியக்க.
அவன் மிகப்பெரிய நிறுவனங்க்களுக்கு ஸ்பான்சர் கேட்டு
மெயில் அனுப்பினான். நிறைய பேருக்கு அவனை தெரிந்திருந்தது. அவன் செய்த பெரிய
விளம்பர தடாலடிகள் அந்த நிறுவனங்களை அசைத்து பார்த்தன. அந்த நாட்டிய நிகழ்வுக்கு தாராளமாக
முன்வந்து உதவி செய்தார்கள். ஒரு மசாலா
பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம தடாலென 10 லட்சம் எடுத்து கொடுத்தது. " டிவி
ஆட் னடிச்சி கொடுக்க சொலுங்க.. வி நீட் போத் சிஸ்டர்ஸ்' என்றது.
"அய்யோ" விஜிக்கு மயக்கம் வராத குறைதான்.
" யெஸ். இந்த காசு சபா புரோகிராமுக்கு ஸ்பான்சர்
மட்டுமல்ல, விஜி மேடம் எங்க மசால பொருட்களுக்கு மாடலா ஒரு ஆட் பிலிம் நடிக்கனும்.
கூட ஷோபனா மேடமும் இருக்கனும்.."
"எ..என்னது?" இன்ப அதிர்ச்சி மேல
அதிர்ச்சி..
தொடர்ந்து சீயக்காய், ரெடிமிக்ஸ் புட், மூட்டு வலி
மருந்து என கம்பெனிகள் ஸ்பான்சருக்கு வர., 27 லட்ச ரூபாய்க்கு ஸ்பான்சர்ஷிப்
கிடைத்தது . யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.
"டேய்ய் ரகு இவ்வளவு நாளா எங்கேடா
இருந்தே?" பரசு ரகுவை கட்டி அணைத்து
கொண்டாட.,
"அட இது ஒரு தீப்பொறி மாமா... ஆன்ன்டி பேஸ் தான்
இங்க பிராண்ட்..ஜஸ்ட் வீ ஆர் டூல்ஸ்."
" நான் மூனு லட்ச ரூபாய், டிக்கெட் வித்தா
போதுமுன்னு நினைச்சேன்.. நீ என்னடான்னா., முப்பது லட்சத்துக்கு கொண்டு
வந்துட்டியே?" அவரால் பேச முடியவில்லை.
"பணம் விஷமில்லை ரகு. விஜிக்கு பெரிய கௌரவம்
கிடைச்சிருக்கு அதான். நான் புருஷனாய் அவளுக்கு செய்ய மிஸ் பண்ணியதை நீ செஞ்சுட்டே..ரொம்ப
தேங்க்ஸ்டாப்பா"
"அட போங்க மாமா" நாளுக்கு நாள் பணவரவு தாராளமாக இருந்தது.
ஒரு பெரிய நாளிதழின் உரிமையாளரை சபாவுக்கு குடும்பத்தோடு வரவேண்டும் என அவன் அழைக்க. அவர் புரிந்து கொண்டு முதல்
பக்கத்தில் நாட்டிய நிகழ்வு விளம்பரத்தை வெளியிட நகரமே களேபரமானது.
விஜி விதிர்த்து போனாள். அக்கம் பக்கத்தில் அவள் படு
பிரபலமானாள்.
"வீட்டுல சும்மா கிடந்து சமையல்ல மஞ்சப்பொடி
அரைச்சு கிடந்தவளுக்கு இப்படி ஒரு யோகமா? உன் புருஷனை ரொம்ப ஆட வேண்டாமுன்னு
சொல்லு ஷிவானி. எனக்கு போதுமுன்னு தோணறது" அம்மா சந்தோஷத்தில் விம்மினாள்.
"இரும்மா.
உனக்கு லேட்டா கிடைச்சிருக்கு அனுபவி..ஷோபனா சித்தி என்ன சொல்றாங்க"
"அவளும் வேணாமுன்னு சொல்றா. ஸ்ரீரங்கத்துல
அவளை செம்மையா ஓட்டறாங்களாம்"
"ம்ம் நாம இதுக்காகத் தானே
காத்துகிட்டிருந்தோம். சோலோ ஸ்டேஜ் பெர்மார்மன்ஸ்.. ? எவ்ளோ வருஷமா?"
ரகு அத்துடன் நிற்கவில்லை. கிண்டி, மண்ணிவாக்கம் ஆகிய
பகுதிகளில் வீடு கட்டு கொண்டிருந்த கட்டுமான நிறுவனங்களை அணுகினான்.
'குறிப்பிட்ட தேதியில் அதாவது டிசம்பர் 17 அன்று வீட்டினை
புக் செய்தால் ஒரு சபா டிக்கெட் இலவசம்' என அறிவிப்பு கொடுங்கள்' என சொல்லி பில்டர்ஸ் & கன்ஸ்ட்ரக்ஷன்
மார்க்கெட்டிங்க் டீமுக்கு விஜியின் நடன போட்டோவை அனுப்பினான். அவர்கள் நாட்டிய உடையில்
இருந்த விஜயின் போட்டோவை விளம்பரத்தில் போட்டு 'இன்று வீட்டை புக் செய்யும் அனைவருக்கும்
கிண்டி நாரதர் கானா விஜி- ஷோபனா சகோதரிகள் நடன ஒரு குடும்பத்திற்கான அனுமதி இலவசம்' என அறிவித்தார்கள்.
இப்படி ஒரு கலவையான காம்போ எல்லாராலும் பயங்கரமாக பேசப்பட்டது.
பஸ் பேக் பேனர்களில் தனது சொந்த செலவில் விளம்பரங்களை ரகுபதி வெளியிட்டான். எல்லாவற்றிலும்
விஜயலட்சுமியின் முகமே முதன்மையாக தெரியுமடி பார்த்துக் கொண்டான். இதெல்லாம் போக, ஒரு
டிவி நிறுவனம் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு உரிமையை வாங்கியது தான்
உச்சகட்ட ஹைலைட். அந்தசேனலே அடிக்கடி அந்த ஈவன்ட் பிரோமாவை போட்டு சிட்டியை கதற
வைத்தது..
சில நாட்களிலேயே விஜயலஷ்மியை மடிப்பாக்கம் கிண்டி புழுதிவாக்கம்,
மண்ணிவாக்கம் போன்ற பகுதிகளில் பரபரப்பான முகமாக அறியப்பட்டாள்.
'பாரத கலாச்சாரத்தின் பண்பாட்டை காட்டும், பரதநாட்டியத்தின்
காண வாருங்கள்' என ஸ்லோகங்கள் வாசகங்கள் இடம்
பெற்றன. ஆரம்பத்தில் 500 சீட்டு நிரம்பினால் போதும் என நினைத்தார்கள். ஆனால், ஆயிரத்திற்கும்
மேல டிக்கெட் விற்பனையாகி விட ஒரே ஒரு ஏஜென்சி ஓடி வந்து, மீதி இருக்கும் எல்லா டிக்கெட்டுகளையும் கொடுங்கள்'
நாங்கள் மேல் விலைக்கு வைத்து விற்பனை செய்துக் கொள்கிறோம்' என்றார்கள் .
சந்தோஷத்தில் திக்கு முக்காடி ஷிவானி எல்லா
டிக்கெட்டுகளையும் கொடுத்து விட்டாள். அவர்களீடமிருந்து அவுட்ரைடில் கள்ளத்தனமாக அதிக
விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. டிக்கெட் காசு மட்டுமே நாலு லட்சம் வசூலாகி
இருந்தது.
கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "
You have researched well on modes of make public visibility for a dance program.. happy to read various ways of advertising in this story.
ReplyDeleteYes. thats the secrete of NV Uniquenes Story
Deleteஐயா நவீன வாசாயானா அவர்களே!
ReplyDeleteஉண்மையில் நீங்கள் யார்? எழுத்தாளரா? காம காமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரா? பொறியியல் வல்லுனரா கட்டிட வல்லுனரா? மார்க்கெட்டிங் நிபுணரா? பொருளாதார மேதையா ?கிராபிக்ஸ் வடிவமைப்பாளரா? இன்சூரன்ஸில் சூரரா? எதுவுமே தெரியவில்லை.
நீங்கள் எல்லா துறைகளையும் சர்வ சாதாரணமாக தொடுகிறீர்கள். நாட்டிய நடனம் தொடர்பான உரையாடலில் பரசுவும் சக்திவேலும் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. ஒரு சாதாரண காம கதை என்றாலும் நீங்கள் அந்த களத்தைப் பற்றி விவரிக்கும் போது சிலிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு சபா நடன நிகழ்ச்சியை எப்படி எல்லாம் மார்க்கெட்டிங் செய்வார்கள் அல்லது செய்தால் நல்லது என்பதை நீங்கள் சொல்லியிருக்கும் விதம் மிகவும் அருமை.
உங்களது பன்முக திறமை திரும்புடி பூவை வைக்கணும் கதையில் மட்டுமல்ல, கல்வெறி கொண்டேனிலும் அது தொடர்கிறது. வாழ்த்துகள் பாராட்டுகள்.