மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, August 23, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1827

அது எழுவது வருசத்து வீடு. ஆனால் அற்புதமாக பரமாரித்து வந்தார்கள்.

அந்த வீடு, பெரிய வீடு, நடுவில் ஒரு கல்யாணம் செய்யும் அளவிற்கு முற்றம். அதனை ஒட்டி பெரிய ஹால். சுற்றிலும் பெரிய ஐந்து அறைகள், பெரிய கிச்சன் அறை.  ஓட்டு வீடு ஆதலால், ஆங்காங்கே வெளிச்சத்திற்காக கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. மேலே தளத்தில் நடுவில் ஒரு 500 சதுர அடியில் சிறிய மொட்டை மாடி தளமும் இருந்தது . அதற்கு போக படிக்கட்டு.

வீட்டைப் பார்த்தபிறகு கோபால் அவளை வீட்டு பின் பக்கம் தோப்புக்கு கூட்டி போனான். அவர்களது இடம் வீட்டை சுற்றி மொத்தம் எட்டு ஏக்கர்

செவ்வக வடிவ நிலம். அதில் பின்புற நான்கு  ஏக்கரை தோப்பாக்கி இருந்தார்கள். அதற்கு சமமாக கீழ்பக்க நாலு ஏக்கரில் மூனு ஏக்கரை தோட்டமாகவும், ஒரு ஏக்கரில் விஸ்தாரமாய் வீட்டையும் அதற்கு முன் பக்கம் காலி இடம், திண்ணையை கட்டி இருந்தார்கள்.

தோப்பை சுற்றி சுற்றி காமினியின் கால் வலித்தது.

தென்னை, மா, புளியமரம், கொய்யா, ஆப்பிள், என எப்படியும் ரெண்டாயிரம் மரங்கள் இருக்கலாம். ஐந்தாறு ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்..

போதும் கோபால் கால் வலிக்குது எனக்கு அங்கே ஒரு சிமென்ட் பெஞ்சில் காமினி உட்கார கோபால் சிரித்தான்.

அஞ்சு வருஷம் முன்னாடி., நீ வந்திருந்தா கதறி இருப்பே போல.”

ஏன்..”

தோ அந்த ஆத்து வரைக்கும் எங்க நிலம் தான்.. பன்னெண்டு ஏக்கர் நிலம் வித்துட்டோம்.. இப்ப மீதி எட்டு ஏக்கர் தான்

மை காட் ஏன்?”

நிறைய ஹெல்த் இஷ்யூஸ்.. அப்பா முதல்ல இருந்தே விவசாயம், பிசினஸ் பாக்கல., இதெல்லாம் பரம்பர சொத்து., எங்க சித்தி கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்தப்ப நூறு ஏக்கர் இருந்துச்சாம்

ஓ மை காட் .. சொல்லாதீங்க.. எனக்கு மயக்கமா இருக்கு

அவன் சிரித்தான்

உங்கம்மா எப்படி இறந்தார்கள்? தன்னை விட 24 வயது அதிகமானவரை மணக்க ஏன் உங்கள் சித்தி ஒத்துக் கொண்டார்கள்? என்றெல்லாம், கேட்க நினைத்தாள். ஆனால் கேட்கவில்லை. அவன் தவறாய் நினைக்க கூடும்.

சரி வா., தோட்டத்துக்கு போவாம்.” அவன் அழைக்க, அவர்கள் தோப்பிலிருந்து ஒரு சிறிய முள் வேலியை தாண்டி தோட்டத்திற்குள் நுழைய.,

இன்னும் எவ்ளோ தூரங்க?” அவள் சிணுங்கினாள்.

அவன் பெருமையாக சிரித்தான்.

அந்த தோட்டம் தோப்பிற்கு நேர் கீழே, வீட்டிற்கு அருகில் இருந்தது. கோபால் அவள் கை பிடித்து அந்த தோட்டத்திற்கு அழைத்து சென்றான். உள்ளே நுழைந்த காமினிஅப்படியே  விக்கித்து நின்றாள்

வாவ்வ் என்ன்ங்க இது?”

அது ரோஜா தோட்டம். ஒரே மஞ்சள் ரோஜா மலர் தான். சீரான உயரம், ஒரே அளவு, அபரிதமான நறுமணம். தோட்டம் முழுக்க பிரம்மாண்டமான மஞ்சள் புடவை போர்த்தியது போல மஞ்சள் நிறப் பூக்கள் மலர்ந்திருந்த.

தான் வழி தவறி ஒரு பூலோக சொர்கத்தில் நுழைந்தாற் போல தடுமாறினாள்.

..இது என்ன பூ ?” காமினி கேட்டாள்

இது  நுனியா  கார்டன், ஹலுதா நுனியான்னு சொல்வாங்க.  நுனியான்னா ரோஜா.  மஞ்சள் ரோஜா. ரொம்ப ரேர்.”

ரொம்ப ரொம்ப., ஓவ்வ் மை காட் ரொம்ப அழகா இருக்கு. நான் செல்பி பிடிச்சே ஆகனும்.. வாங்க..  அவன் சிரித்து கொண்டே போஸ் கொடுத்தான்.

"அய்யோ என் பிரண்ட்ஸ் பாத்தாங்கன்னா விடவே மாட்டாங்க.."

அவர்கள் தோட்டம் முழுக்க நடந்தார்கள்.

 “என்ன கோபால்  நீங்க ஒரு தடவை கூட., இந்த நுனியா கார்டன் பத்தி சொல்லவே இல்லியே? அய்யோ என் ப்ரண்டுக்கு தெரிஞ்சா பிச்சி போட்டுருவாளுங்க

ஒரு சர்ப்ரைஸ் தான் . இது உனக்கு பிடிக்குமுன்னு தெரியும்..”

ச்சீ சே,. இப்படி ஒரு சீனரி. காஷ்மீர், நேபாள் மாதிரி இருக்கு. இதை நான் சிட்டியில் பார்த்ததே இல்லை..ஆவ்வ்வ் ரோஜா படத்துல ., காஷ்மீர் பனிமலையை பாத்து மதுபாலா ஆச்சரியப்படு வாங்களே..அந்த மாதிரி எனக்கு ஸ்டன்னிங்கா இருக்குயப்பா வேற லெவல் போங்க

சிட்டில இந்த பிளவர் ரொம்ப இருக்காது. இது வட இந்தியாவில் உத்தரகாண்ட்.உத்தராஞ்சல்.  கோயிலுக்கு  நிறைய நாங்க அனுப்புறோம். காஷ்மீர் ,டெல்லி கூட போவுது. உபில கூட இது விளையுது. ஆனா இந்த கலர், இந்த சைஸ் அங்கெல்லாம் கூட இப்படி இருக்காது.. ரொம்ப வருஷம் முன்னாடி இதுக்கு எங்க வீட்டு பெரியவங்க போட்ட உரம் அந்த மாதிரி.. அது இந்த மண்ணுல ரொம்ப வருஷமா ஊறி இருக்கு.

அது இல்லாம மிருஸ்'ன்னு ஒரு உயிரினம் அணில் மாதிரி இருக்கும்.. இப்ப அது இனமே அழிஞ்சி போச்சு. அது ஒரு காலத்துல இங்க நிறைய இருந்திருக்கு. அதுங்க இறந்து , இங்க சிதைஞ்சி உரமானதால் இந்த மண்ணுக்கு  இப்படி ஒரு உயிர்சத்து இருக்கறதாகவும் சொல்வாங்க..

..ஐ சீ..வெரி இன்ட்ரஸ்டிங்க்.. பாக்க., சூரிய காந்தி மாதிரி இருக்கு

இல்ல சூரிய காந்தி.. ஆரஞ்சு கலர்.. வாசனை இருக்காதுஇது ப்யூர் மஞ்சள்,. வாசனை ஒரு பர்லாங்க் அடிக்கும்.. நீ இப்ப பாக்கற சைஸ் ஃபைனல் சைஸ் இல்ல. இன்னும் வளரும்…”

"அட தேவுடா"

"இந்த  தோட்டத்தை நம்பியே ஒரு குடும்பம் எங்களுக்காக இருக்கு. உரம் தயாரிக்கறதே பெரிய வேலை. தாவரம், பாக்கு, கிச்சலிகாய் இன்னும் நிறைய பேர் தெரியாத மூலிகை எல்லாம் கலந்து அதோ பார் பெரிய தொட்டி.."

"ஆஅமா"

"அதுல கலந்து தயர் பண்ணி வேர்ல ஊத்திகிட்டே இருப்பாங்க.."

“ மைகாட்.. வெரி ஸ்ட்ரேஞ்ச்

அதனால தான் இது இவ்ளோ பெரிய சைசா இருக்கு. இதுக்கு இவ்ளோ கிராக்கி. இந்த மஞ்சள் ரோஜா இந்த கிராமத்துல வேற எங்குமே கிடைக்காது. எங்கும்  கிடைக்காது. காமினி இது ரொம்ப அபூர்வமான ஒரு ரோஜா. வருஷத்துல ஒரு சீசன் தான். நீ பாக்குற ரோஜா. இளம் பருவம். இன்னும் இதை கிள்றதுக்கு  நாலு மாசம் ஆகும். ப்ளவர் ஜாதியில ரொம்ப லேட்டா பூக்கறது இது தான். விதைபோட்டு முளைக்கவே மூனு மாசம் ஆகும்

பிரமிப்பா இருக்கு. எவ்ளோ தகவல் சொல்றீங்க.”

என்னை விட என் தம்பி இதை பத்தி இன்னும் சொல்வான். கதை கதையா சொல்வான். அவனுக்கு இந்த கார்டன்னா உயிரு..அவனை விட எங்க தோட்டகாரன் சோனு இது கூடவே வளந்தவன். அவங்க பரம்பரைக்கே இந்த தோட்டம் தான்  சாமி…”

“ கேக்கவே பிரமிப்பா இருக்குங்க

எங்களுக்கு அவ்ளோ பெரிய தோப்புல, அந்த மரங்கள்ல., எவ்வளவு வருமானம் வந்தாலும், இந்த மஞ்சள் ரோஜாவால வர வருமானம் தான் ஜாஸ்தி. ஏன்னா இந்த ரோஜா மூட்டை ஒன்னு நாலாயிரம் ரூவா போகும்

அட மொத்தம் எத்தனை மூட்டை?” அவள் ஆர்வம் தாங்காமல் கேட்க.

வரும்., 400 மூட்டை.”

மை காட்.. வெறும் இந்த பிளவர்ல மட்டும் ,. 15, 16 லட்சமா? எனக்கு ஷாக் ஆகி ஆகி மயக்கமா இருக்கு…”

 ‘அதனால தான் இத கவனிச்சுக்க,.துக்காக தனி ஆளையே போட்டு இருக்கோம். வாரத்துல ரெண்டு நாள் இதுக்கு உரம் போடனும்,. சனிக்கிழமை, புதன்கிழமை கண்டிப்பா உரம் போடனும். அது மட்டுமில்ல., அறுவடை பண்ற வரைக்கும் இதுக்கு உரம் போட்டுகிட்டு இருக்கனும்னா பாத்துக்க என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டே தோட்டம் கடைசியில் போக. அங்கே.,  மூலையில் மர நிழலில் ஒரு பெரிய புதர் தாண்டி செடி, கொடிகள், துணிகளால் சிறிய பந்தல் போடப்பட்டிருக்க. கீழே இலை தழை   போடப்பட்டு துணியாலான மெத்தை விரிக்கப்பட்டு அங்கே யாரோ படுத்திருக்கிறார்கள்.

ஏய்ய் சோனு.” கோபால் எட்டி பார்த்து குரல் கொடுக்க.

..அய்யா

அந்த வேலையாள் பதறியபடி சட்டையில்லாமல் வேட்டியை இடுப்பில் பிடித்தபடி எழுந்து ஓடி வந்தான். பெரிய உருவமாக இருந்தான்

அய்யா.. களைப்பா இருந்துய்யா அதான்..”

அந்த சோனு மத்திம வயதுக்காரனாக இருந்தான். நெடு நெடு உயரம், பருமனான தேகம். பற்களெல்லாம் பாக்கு கரை. மேல் உதட்டை மறைக்கும் கனத்த மீசை ஒழுங்கில்லாத அடர்த்தியான தாடி., அழுக்கேறிய வேட்டி..

காமினியை பார்த்ததும் உடம்பில் துண்டை போர்த்தி கொண்டான்.

மன்னிச்சுக்கங்கய்யா . நீங்க வரப்ப நான் கண் அசந்துட்டேன்

பரவாயில்ல.. என்ன உரம் போட்டு முடிச்சுட்டியா? “

பாதி ஆச்சுய்யா. வெயில் குறைஞ்சப்பறம் பாதி போடனும்

“ காமினி இவன் சோனு.. இவங்க அப்பா தான் இங்க வேலை பாத்தாரு.. நான் சொன்னேன்ல அந்த  உரம்.. அதெல்லாம் எங்க தாத்தாங்க இவங்க அப்பாக்கு சொல்லி தந்தாங்க, ஆனா எங்கப்பாக்கு அதில இன்ட்ரஸ்ட் இல்ல. விட்டுட்டாரு.. 

உர தயாரிப்பில் நிறைய மூலிகை, நிறைய மெத்தட் அதுல இருக்கு. இன்னிக்கு தேதிக்கு இந்த சோனுக்கு தான் அது பூரா தெரியும். சுருக்கமா சொன்னா இந்த நுனியா கார்டன் முழுக்க இவன் கை வண்ணம் தான்.. இவனை தவிர இந்த தோட்டத்தை யாராலும் பராமரிக்க முடியாது. உரம் தயாரிக்க முடியாது. வாரா, வாரம் வந்து உரம் தயாரிச்சு கார்டனை பரமாரிப்பான்.. இவன் கூட இவன் ஒய்ஃபும் வந்து வேலை பாப்பா.,  எங்க உங்க ஒய்ப்.? “

இப்ப தான் , வேலை முடிச்சி பம்ப் செட்டுல குளிக்க போனா.. “

சரி வரட்டுமா? ‘

நல்லதுங்க  அய்யா

அவன் குழைந்து வணக்கம் சொல்ல., அவர்கள் வீட்டுக்கு திரும்பினார்கள்.

எனக்கு இந்த தோட்டம் ரொம்ப பிடிச்சிருக்குங்கஎன்றபடி அவனை அணைத்து கொண்டாள்.

ரு என சொன்னபடி ஒரு மஞ்சள் ரோஜாவை பறித்து அவளது தலையில் வைத்தான்.

யப்பா எவ்ளோ பெருசு..பிக் சர்க்கிள் அன்ட் டயா., ”

இல்ல காமினி. இது பாதி வளர்ச்சியடைந்த பூ..தான். நாலு மாசம் கழிச்சி பாரு இது சைஸு,ம்வாசனையும்.., இப்ப முகத்தை காட்டு என்றான்.

அவள் திரும்பி அவனைப் பார்த்து சிரித்தாள். அவள் அந்த மஞ்சள் ரோஜா பின்னணியில் பிரம்மிக்கத்தக்க அழகாக இருந்தாள்.

எனக்கு இன்னும் வேணூம் பிரிச்சி தாங்க

ம்கூம் வேணாம் போதும்

ஏன்?’

இன்னிக்கு நம்ம கட்டில் அலங்காரம் முழுக்க இந்த மஞ்சள் ரோஜா தான்

என்னது ? வாவ்வ்வ்

வீட்டுக்கு போலாமா? தேட போறாங்க… “

உங்க தம்பி எங்க . என் கண்ணுலயே படல

அவன் ரூம்ல இருப்பான். இல்லண்ணா தோப்புல இருப்பான்..வா

வழியில் வீட்டுக்கும் தோட்டத்துக்கும் இடையே இருந்த இடைவெளியில் பெரிய அகலமான இடத்தில் தண்ணிர் தொட்டியும் அதை ஒட்டி மோட்டார் ரூமும் இருக்க., 

மோட்டார் ரூமை திறந்து சோனுவின் மனைவி வெளியே வந்து அவர்களை பார்த்து திகைத்தாள்

..அய்யா” வணக்கம் சொன்னாள்.

வெள்ளை பிலௌசில் பளீரன அழகில் மருண்ட பார்வையுடன் சிரித்தாள்.

என்ன ஜமூனா.?. ஜமுனாதானே உன் பேரு..”

ஆஅ..ஆமாங்கய்யா.. வணக்கமுங்க

ம்ம். இவ தான் என் மனைவிகாமினி

வணக்கம்மா…” அவளும் அவள் கணவனைப் போலவே பணிவாய் குனிந்து வணக்கம் சொன்னாள்.

அந்தப் பெண் அழகு சொட்டும் களையாக இருந்தாள். சிவந்த நிறத்தில்,  நீளமான முடி திடமான உடலுடன்  ஒல்லியாக இருந்தாள்.  நாற்பது வயதை கடந்த காட்டான் சோனுவுக்கு இவளா மனைவி? இந்த ஊரில்  இப்படித்தான் போலிருக்கிறது. அழகை வறுமை தின்று விடுகிறது.

அவளுக்கு இரண்டு குழந்தைகள், அவர்களுக்கு படிப்புச் செலவை கூட கோபாலின் அப்பாதான் ஏற்றுக் கொண்டிருப்பதாக கேள்வி.

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள்..

இந்த தோட்டமுன்னா, என் தம்பிக்கு உசுரு.. மணிக்கணக்கில போய் உக்காந்துப்பான், ஏன்னா எங்க உயில்ல எனக்கு தோப்பும் அவனுக்கு தோட்டமும் எழுதி வெச்சிருக்கு. இந்த தோட்டத்துக்கு அவன் தான் முதலாளி ”  சொல்லி விட்டு கோபால் சிரிக்க.,

எனக்கு தோப்பை விட , தோட்டம் தாங்க புடிச்சிருக்கு”  என்றாள் காமினி.




 வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)

3 comments: