பத்மா அடுத்த சில நாட்களில் ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னைக்கு வந்தாள். சென்னை வந்தவுடன் அவள் செய்த முதல் காரியம் சுஷ்மிதாவை சந்தித்தது தான். சந்தியாவிற்கும் மாதேசுக்கும் நடந்த உறவு பற்றி சுஷ்மிதாவிடம் சொல்ல வேண்டாம் என என்று தான் பார்த்தாள். ஆனால், சந்தியாவின் கண்ணீர் அவளை சுஷ்மிதாவிடம் பேச வைத்தது. அது மட்டும் அல்ல சுஷ்மிதா பத்மாவின் நெருங்கிய தோழி அவரது கணவன் இப்படி ஒரு தப்பான வேலையை செய்திருக்கிறான். அதுவும் சொந்த வீட்டிலேயே இந்த வேலையை செய்திருக்கிறான் என்றபோது அதை சுஷ்மிதாவிடம் அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை .
தட்டு தடுமாறி மாதேஷ் செய்த அக்கிரமத்தை அவளை சோழா செரட்டானுக்கு
கூப்பிட்டு சொன்னாள்.
"என்னடி சொல்றே ? மாதேஷா? என் தங்கச்சி கூடவா " அவள் அதிர்ந்து போக.,கரத்தை தன் கைகளில் பிடித்துக் கொண்டாள் பத்மா .
"தயவு செஞ்சு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாத, சொல்றத பொறுமையா கேளு' இதுல சந்தியாவோட தப்பு எதுவுமே இல்லை அவளுக்கும் தினேஷுக்கும் இடையே இருக்கிற கேப்பை பயன்படுத்திட்டு, உன் புருஷன் குடிச்சிட்டு அவ ரூமுக்குள்ள போய் இந்த தப்பை பண்ணி இருக்கான். "
'.................."
"அதுக்கப்புறம் அதையே பல தடவை கண்டினியூ பண்ணி இருக்கா . அவளும் சின்ன பொண்ணு தானே அவளால இந்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்றது எது சரின்னு முடிவு எடுக்க முடியல அவ மனச கலைச்சு அந்த மாதேஷ் அவள நல்லா யூஸ் பண்ணி இருக்கான்"
"..............."
" ஒரு தடவை அவங்க ஒண்ணா இருக்குறத அவ புருஷன் தினேஷ் பாத்துட்டான் போல"
" அய்யய்யோ "
"அதனால தான் "
"விவாகரத்து வரைக்கும் போச்சா ?'அவள் தலையில் கை வைத்துக் கொண்டாள்.
" ஆமா உன் புருஷனால உன் தங்கச்சியோட வாழ்க்கையே போயிடுச்சு, என்கிட்ட இத பத்தி அவ பேசும் போது அவளால அந்த ஏமாற்றத்தையே தாங்கிக்க முடியல. தன்னுடைய வாழ்க்கைக்கு கெடுத்தது தினேஷா ? மாதேஷா ? இல்ல நாமளா? நாம எதிர்பார்த்த கட்டில் சுகமா? ன்னு எதுவுமே தெரியாம சந்தியா என்கிட்ட போன் பண்ணி அழுவுற சுஷ்மிதா" என்றாள் பத்மா.
சுஷ்மிதாவிற்கு மயக்கம் வருவது போல இருந்தது. உடல் படபடப்பாக இருந்தது . இதயம் தித்திக்கென அடித்துக் கொண்டது. நாக்கு உலர்ந்தது. இன்னும் இந்த மாதேஷால் என்னென்ன பிரச்சனை வரும்? என தெரியவில்லை.
இந்த மாதேஷ் , அன்று மாதேஷின் அக்காவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து மதுவை குடிக்க வைத்து தன்னை அனுபவித்தது எல்லாம் திட்டம் போட்டு தான் செய்திருக்கிறான் என்கிற எண்ணம் அவளுக்கு அடிக்கடி வருவது உண்டு.
உங்கள் அப்பாவை பெயரை கெடுக்கவும் அவரை அவமானப்படுத்தும் தான் செல்வராஜா குடும்பம் இந்த வேலையை செய்திருக்கிறது என பல பேர் அவளிடம் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் அதெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை அவள் மாதேசை பூரணமாக நம்பி இருந்தாள். அடிக்கடி அவனுடன் நடிகைகளை வைத்து கிசுகிசுக்கப்படும்போது அவள் மனதிற்குள் பலமுறை உடைந்து போனாள்.
" உனக்கு நான் உண்மையா தான்டா இருக்கேன்? எனக்கு ஏன் நீ உண்மையா இல்லை?" என பலமுறை அவன் சட்டையை பிடித்து அழுது இருக்கிறாள் .அப்போதெல்லாம் அவன் மாணே தேனே பொன்மானே' என்றெல்லாம் பேசி அவளை தாஜா செய்து உருக வைத்து விடுவான் .
இப்போது கடைசியாக அந்த சத்யாவின் மகள் ஸ்வேதாவுடன் அவன் அடிக்கடி காரில் ஒன்றாய் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள் என்று கூட தகவல்கள் வெளியே வந்தது .
ஒரு பிரச்சினை என்றால் கேட்கலாம். இந்த மாதிரி தினம் தினம் ஒவ்வொரு விதமான பிரச்சினை வருகிறது. எதையை நாம் கேட்பது ?' என அவளை சலித்து போய் விட்டாள்.
ஆனால் இப்போது நடந்திருப்பது பெரிய அநியாயம் எனக்கு மட்டுமல்ல, எனது தங்கைக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு ஒரு குடும்பத்தில் ஒரு தம்பதியர் இடையே இடைவெளி விழுந்தாலோ அல்லது அந்த தம்பதியர் இடையே நிறைவுறாத காமம் இருக்கிறது என வெளி ஆட்கள் தெரிந்து கொண்டாலோ மிக சுலபமாக உள்ளே நுழைந்து விடுகிறார்கள் . அப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான வேலையைத்தான் தனது கணவன் மாதேஷும் செய்து இருக்கிறான். இனி பொறுத்து பொறுத்து பலன் இல்லை என்னுடன் படுக்கும் போது என்னை மட்டும் நினைத்துக் கொண்டிருக்காமல், வேறு எவளையோ நினைத்துக் கொண்டிருக்கிறான் என்றால், அவன் மிருகத்திற்கு சமமானவன்.
நல்லவேளை இந்த விஷயத்தை எப்படி என்னிடம் சொல்வது? என தெரியாமல் சந்தியா, இந்த பத்மாவின் மூலமாக என்னிடம் சொல்லி இருக்கிறான் இருக்கிறாள் . இல்லையென்றால் மற்றவர்களைப் போல நானும் சந்தியாவை திமிர் பிடித்த ராங்கிக் காரி, புருசனை மதிக்க தெரியாதவள், தன்னுடைய திமிரால் தினேஷை விரட்டி விட்டாள். விவாகரத்து வாங்கி விட்டாள் என சொல்லிக் கொண்டிருப்பேன்.
'ஐயோ இதனாலேயே எனது ஆருயிர் தங்கையிடம் ஒரு மாத காலமாக நான் பேசாமல் இருந்தேனே ' அவளது கற்பை சூறையாடிவிட்டு அவளது வாழ்க்கையை கெடுத்து விட்டானே இந்த பாவி ? அவனை என்ன செய்கிறேன் பார் ! அவள் மனதுக்குள் சூளுரைத்துவிட்டு ஹோட்டலுக்கு
வெளியே வந்தாள்.
" நீ வீட்டுக்கு போ' என
டிரைவரிடம் சொல்லி விட்டு தானே கார் ஓட்டி கொண்டு ராகினி ஸ்டுடியோவில் ஷூட்டிங் செடுக்கு போனாள். அவள் உள்ளே நுழைந்ததுமே யூனிட்
பரபரப்பானது.
'எங்கே மாதேஷ்ஷை கூப்பிடுங்கள்" என எதிர்ப்பட்டவர்களிடம் சத்தமாக கேட்டாள். யூனிட்டே அல்லோகலப்பட்டது .
அவள் வேகமாக மேக்கப் ரூமில் நுழைந்து கதவை சாத்திக்கொள்ள, சில நிமிடங்களில் ஒரு கூலிக்காரன் வேடத்தில் இருந்த மாதேஷ் அப்படியே வந்தான்.
" என்ன சுஷ்மிதா? என்ன இந்த நேரத்துல இங்க வந்து இருக்க? நான் காலையில வந்துடுவேன் ? வீட்டுக்குப் போ" என்றான்.
" எந்த வீட்டுக்கு போறது ? உங்க வீட்டுக்கா? எங்க வீட்டுக்கா? "
" என்னடி சொல்ற ?"
"வாய பேத்திடுவேன் .இனிமேல் நான் உங்க வீட்டுக்கு போறதா இல்ல உன் கூட வாழ்றதா இல்ல "
"ஏய் என்ன ஆச்சு ?" அவன் புரியாமல் விழிக்க.,
"இனிமே என்ன ஆகணும்? போன போவுது, நீங்க திருந்துவீங்க திருந்துவீங்கன்னு நானும் ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தேன். உங்க அராஜகம் எல்லாம் மீறி போயிட்டு இருக்கு . உங்களுக்கும் சந்தியாவுக்கும் என்ன கனெக்ஷன்? சந்தியாவை என்ன பண்ணீங்க ? "
"...................சந்தியாவா?'
" உங்களால தானே தினேஷ் சந்தியா டைவர்ஸ் பண்ணான்? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்ததை அந்த தினேஷ் பார்த்தானா?"
"...................."
எப்படி சரியாக சொல்கிறாள்?
"உனக்கு ஏன் புத்தி இப்படி போகுது? என் தங்கச்சி தானே அவ? மச்சினின்னா அதோட அர்த்தம் உங்களுக்கு தெரியாதா இல்ல? இப்படிப்பட்ட நல்ல குடும்பத்துல நீங்க பொறக்கலையா?"
"........ஏய்ய்"
"திட்டம் போட்டு தானேஎன்ன குடிக்க வச்சு என்னை
கெடுத்தே? "
"..............."
" என்னை அடையறதுக்காக என் சொத்தை, அடைய தானே இந்த
பிளான்?"
"...................."
"எங்க அப்பாவ சாகடிக்க தானே இதெல்லாம்"
'இல்ல சுஷ்மிதா யாரோ உன் மனசை
கெடுத்திருக்காங்க.. சொன்னா ;கேளு"
" இப்ப நீங்க பண்ணி இருக்கிற காரியம் என்ன மாதிரி காரியம் தெரியுமா? நம்பி வீட்டில விட்ட எங்களை இப்படித்தான் அசிங்கப்படுத்துவீங்களா ? அந்த சந்தியா உனக்கு என்ன துரோகம் பண்ணா? அவ வாழ்க்கை என்ன ஆகுமுன்னு அவளை தொடறதுக்கு முன்னாடி நீ யோசிக்க வேணாமா?"
"..............."
" உனக்கு காரியம் ஆகணும்னா எங்க வேணாலும் கை வைப்பியா ? நீ எத்தனையோ பொண்ணுங்க கூடநடிகை கூட கனெக்ஷன் வைத்து சுத்துற? அடிக்கடி கார்ல கூட்டிகிட்டு முட்டுக்காட்டு ஏரிக்கு போயிடுறே? நான் எதுனாச்சும் கேட்டு இருப்பேனா ? இல்ல உன்னை செருப்பால அடிச்சிருப்பேனா?'
".................."
" போன மாசம் கூட ஜெயந்தி என்று ஒரு டான்சர் பொண்ணை என்ன பண்ணீங்க? கோயம்புத்தூர் ஹோட்டல்ல வெச்சு என்னடா பண்ண ? நீ பண்றது மட்டும் இல்லாம கேமரா மேன், டைரக்டர், ப்ரொடியூசர் ,ஏன்டா அது பொண்ணா ? இல்ல மெஷினா ? உங்களுக்கெல்லாம் என்னதான்டா வேணும் ?"
"................."
"பண்றதெல்லாம் பண்ணிட்டு அப்புறம் என்னடா வெளியில ஹீரோ வேஷம் போடுற போடுறீங்க. கோடி கோடியா சம்பளம்
வாங்குறீங்க? த்தூ.."
"சுஷ்மிதா பொறுமையாய் இரு"
" நீ பண்ன தப்பெல்லாம் வெளிய சொல்லாம பொறுமையா இருக்கோம் என்பதற்காக நீ அடுத்தடுத்த தப்ப பண்ணிக்கிட்டே இருப்பியா ? அதாண்டா சொல்லுவாங்க ஜாதிக்கேத்த புத்தின்னு:'
" ஏய் ஜாதி கீதி பேசின இங்கேயே உன்னை சாவடிச்சிடுவேன் நாயே "
"நீயா என்னையை என் மயிரை கூட
நீ தொட முடியாது. தள்ளி போடா. இங்கேயே
பொணமாகிடுவே"
அவளும் எகிற அவனும் எகிற ,அவர்களது கோபமான குரல்கள் மேக்கப் ரூமுக்கு வெளியே எல்லோருக்கும் இரைச்சலாக கேட்க., அந்த தாடி டைரக்டர் கதவை தட்டி உள்ளே வந்தார். அவரை தொடர்ந்து இரு ஆட்கள் உள்ளே வந்து, இருவரையும் மடக்கி சமாதானப்படுத்தினார்கள்
"இனிமேல் என் மூஞ்சில முழிக்காதன்னு இவன் கிட்ட
சொல்லுங்க சார் ' என சொல்லிவிட்டு சுஷ்மிதா காரை எடுத்துக்கொண்டு விருட்டென
கிளம்பினாள்.
No comments:
Post a Comment