மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 9, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 74

 

பத்மாவுக்கு தெரிந்தே ஒரு விஷயம் நடந்தது.

பாடல் காட்சிகளில் குரூப் டான்ஸ் ஆடும் ஒரு பெண் மிக அழகாக இருந்தாள். அதனாலயே பத்மா அவளை கூப்பிட்டு அடிக்கடி பேசுவாள்.  அவள் பெயர் ஜெயந்தி. திடீரென ஒரு வாரம் ஆளையே காணவில்லை. ஏனென்று கேட்டால் மாதேஷ் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட சென்றாளாம். பாடல் முடிந்ததும் அவளை மாதேஷ் கூப்பிடுகிறான் என ஓட்டலுக்கு அனுப்பி விட்டார்களாம். அந்த மாதேஷ் அவளை எடுத்த உடனே ஒரே ஒரு கேள்விதான் கேட்டானா?

" நீ வெர்ஜினா இல்லையா"

அவள்" வெர்ஜின் தான்" என சொன்ன உடனே அவளை வலுக்கட்டாயமாக அனுபவித்து இருக்கிறான் .

இரவு முழுக்க ஜெயந்தியை அனுபவித்து இருக்கிறான் . ஏன் இப்படி சினிமாவில் பெண்களுக்கு மரியாதை இல்லாமல் இருக்கிறது ?  பாதுகாப்பிலலமல் இருக்கிறது என தெரியவில்லை.

 முதல் நாள் மாதேஷ், அடுத்த நாள் டைரக்டர் ,அடுத்த நாள் டான்ஸ் மாஸ்டர் என எல்லோருமே அவளை பயன்படுத்தி இருக்கிறார்கள் . கடைசியில் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து 'வெளியே சொல்லாதே ' என சொன்னார்களாம் அவள் அழுது கொண்டே சொல்கிறாள்.

' வெளியில் சொன்னால் இதை யார் நம்புவார்கள்?" ஆனால் இந்த அயோக்கியர்கள் இதைத்தான் இத்தனை காலம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இவர்களின் கொட்டத்தை அடக்க என்னால்  முடியவில்லை .

இவ்வளவு ஏன்?

மன வலிமை மூலம் இன்னொரு ஆளை கட்டுப்படுத்தக்கூடிய ஈஸ்வர் சந்திரன் என்கிற திருடன் என்னையே சில காலம் ஆட்டி படைத்தானே?

 எங்கேயோ , எப்போதோ என்னை பார்த்துவிட்டு என்னை அடைவதற்காக , அந்த மந்திரஜாலம் தெரிந்த ஈஸ்வர் சந்திரன் ஒவ்வொரு நாள் இரவும்,  என் படுக்கை அறையில் அருவமாக ஸ்தூல வடிவாக வந்து எனது உடைகளை விலக்கி வலுக்கட்டயமாக என்னை ஆட்கொள்ளவில்லையா ? நேரில் தொடுவதைப் போல ஒரு பிரமையை அவன் ஏற்படுத்தவில்லையா ?  

கடைசியில் அந்த ஈஸ்வர் சந்திரனிடம் உதவியாளன் பாபுவை அனுப்பி சமரசம் பேசி ஒரு பெரிய தொகையை கொடுத்த பிறகு தானே அவன் என்னை விட்டு அகன்றான்?

 அவனை நம்மால் என்ன செய்ய முடிந்தது ? இன்னமும் அதே போல தன்னுடைய மந்திர சக்திகள் தூள் வடிவாக அவன் இன்னும் எத்தனை பெண்களின் வாழ்வை கெடுத்துக் கொண்டிருக்கிறானோ? தெரியவில்லை.

ஈஸ்வரன்ன் சந்திரன் மட்டுமா?  ஒரு மிகப்பெரிய பிரபலமான நட்சத்திர தம்பதிகளுக்கு மகளாக பிறந்த எனக்கே எத்தனையோ பேர் ஜாடை மாடையாக படுக்கைக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள். எம் எல் ஏ சற்குணம் என்பவன் இப்படித்தான் சினிமா எடுக்க வந்து, என்ன புக் செய்து, கடைசியில் , என்னுடன் படுத்தால் தான் பேமென்ட் கொடுப்பேன் என சொல்லவில்லை?

அவனை ஏமாற்றிவிட்டு தப்பித்து  நான் கற்பு கெடாமள் வரவில்லை.?  ஒருவேளை நான் அதற்கெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து நடித்திருந்தால் இன்னும் பெரிய இடத்திற்கு வந்திருக்க முடியுமோ இல்லையோ தெரியவில்லை . ஆனால் அதை என்னால் எப்போதும் செய்ய முடியாது . அவளுக்கு யோசித்து யோசித்து தலை வலித்தது.

இந்த சந்தியாவும் சரி, ரேனுகாவின் அம்மாவும் சரி கோழைகள். உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள். தப்பெல்லாம் செய்துவிட்டு கடைசியில் தற்கொலை பற்றி யோசிப்பவர்கள். நாம் ஏன் சாக வேண்டும்? எல்லா தப்பையும் செய்துவிட்டு தினம் ஒரு பெண்ணைக் கெடுத்து கொண்டு இவர்களே ஜாலியாக திரியும்போது நாம் ஏன் அஞ்சி ஒளிய வேண்டும்? நத்தையாய் சுருங்க வேண்டும்?

அவள் ஷாம் , மாதேஷ் இந்த  இருவருக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தாள்.  இவர்களது மிகப்பெரிய பலமே பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் தவிப்பது தான். இது மானம் சம்பந்தப்பட்ட விஷயம். இதை நாம் தான் அம்பலப்படுத்த வேண்டும்.

வெளியில் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்கு தெரிய வேண்டும். முதலில் ஷாமின் குடும்பத்திற்கு இவன் செய்யும் அழிச்சாட்டியம் பற்றி சொல்ல வேண்டும்.

 காதும் காதும் வைத்தாற் போல , அதாவது விஜயலட்சுமியின் பெயர் வெளியே தெரியவில்லாதபடி இந்த விஷயத்தை கையாள வேண்டும் . இதுதான் நாம் ரேணுகாவுக்கு செய்ய வேண்டிய உதவி ரேணுகா போல இருக்க கூடிய எத்தனையோ பெண்களுக்கு செய்ய வேண்டிய உதவி என நினைத்துக் கொண்டாள்.

 உதவியாளன் பாபு மூலமாக ஷ்யாமின் மனைவி நம்பரை வாங்கி போனில் பேசினாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம். தனக்கு பிடித்த அபிமான நடிகை அவளை தன்னை தொடர்பு கொள்கிறாள்' என்று.  'உங்களை நேரில் பார்க்க வேண்டும் ஒரு முக்கியமான விஷயம் 'என சொல்ல ,  ஷ்யாமின் மனைவி பத்மா தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வந்துவிட்டாள்.

ஷாமின் மனைவியை தன் அறையில் உட்கார வைத்து உபசரித்து அதன் பின் மெல்ல ஷ்யாம் செய்து வரும் அட்டூழியத்தை ஒவ்வொன்றாக சொன்னாள். கடைசியாக தனது தோழியின் அம்மாவிடம் அவன் கொண்டிருக்கும் முறைகேடான உறவையும் விலாவாரியாக சொல்ல ஷாமின் மனைவி அதிர்ந்து போனாள்.

 ரேணுகாவிற்கு ஃபோன் போட்டு ஷ்யாமின் மனைவிடம் பேச வைத்தாள் . அவளும் அழுது கொண்டே அவளிடம் ஒப்பித்தாள்.

ஷ்யாமின் மனைவி வெகுவாக கலங்கி போனாள். ஷ்யாம் இத்தனை மோசமானவனா?

அவள்  ஷ்யாம் பற்றி  ஓரளவு கேள்விப்பட்டிருந்தாலும் கூட அவளது அப்பா தான் தலையிட்டு அவளை சமாதானப்படுத்தினார். இதற்கு முன்பு டிவி சீரியல் நடிகை சைலஜா வுடன் அவன் அடித்த லூட்டியின் காரணமாக , கிட்டத்தட்ட அவனது மார்க்கெட்டே சீர்குலைந்து விட்டது. கையில் படங்கள் இல்லாமல், இருந்த பல படங்கள் கேன்சல ஆகி,  பல நாட்கள் அவன்  வீட்டில் இருந்தான். அவனுக்கு கன்னட சினிமா உலகம் 'ரெட் கார்டு' கொடுத்து ஒரம் வைத்தது.

 அதைப் பார்க்க அவளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால், அவன அதன் பிறகு மெல்ல மெல்ல முயன்று மறுபடியும் ஃபீல்டின் உச்சத்திற்கு வந்திருக்கிறான் .

ரீ-என்ட்ரீக்குப் பிறகு அவனைப் பற்றி பெரிதாக எந்த புகார் இல்லை . ஆனால் சென்னைக்கு போன பிறகு கோடம்பாக்கம் சினிமாவில் நுழைந்த பிறகு மறுபடியும் இதே போல லூட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறான் . இவனை எல்லாம் திருத்தவே முடியாது போல.

 போயும் போயும் ஒரு நடிகையின் தாயுடன் கேரவானில் குடித்து விட்டு,  பட்டப் பகலில் வைத்து உறவு கொள்கிறான் என்றால், அவன் எப்படிப்பட்ட காமந்தனாக இருக்க வேண்டும் ? இத்தனைக்கும் அவன் மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தை அல்லவா? இருந்தும் ஏன் புத்தி இப்படி போகிறது? ஒரு அழகான பெண்ணை பார்த்த உடனே அவளை படுக்க வைத்து அனுபவித்து விட வேண்டும் என்பது என்ன விதமான கற்பனை?  ஏன் இவனது புத்தி இத்தனை மட்டமாக இருக்கிறது?

ஷ்யாம் மனைவி அவனை ஒழித்து விடுவதாக சொல்லிவிட்டு கோபமாக எழுந்து போனாள். அவளது கோபம் அவளுக்கு மட்டுமல்ல தனக்கும் என்ன மாதிரியான விளைவுகளை கொண்டு வரும் என அப்போது பத்மாவுக்கும் தெரியாது.

பத்மாவை சந்தித்து விட்டு ஷாமின் மனைவி சென்ற அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஷ்யாமிடம் இந்த சந்திப்பு பற்றி  யாராலோ சொல்லப்பட்டது. ஷ்யாம் யோசனையய நெற்றியை சுருக்கினான்.

தன்னை பற்றி பத்மா, தன் மனவியிடம் பேச என்ன இருக்கிறது? என யோசித்தான் ஷ்யாம்.

No comments:

Post a Comment