மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, May 15, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 77

 

பெங்களூரில் இருந்து தனது நிழல் வேலைகளை செய்யும் சிலுவை என்பவனை ஷ்யாம் கூப்பிட்டான். விஷயத்தை சொன்னான் .

அவன் இன்னும் மூன்று பேரை கூப்பிட்டு புதன்கிழமையே காலை சென்னை வந்து சேர்ந்தான் . சென்ட்ரல் பெரியமேட்டில் ரூம் எடுத்தான். சிம் மாற்றினான். டிரெயின் பிடித்து கிண்டியில் இறங்கி மணப்பாக்கம் போனான்.

 இரண்டு நாட்கள் அவர்கள் பத்மாவின் லக்சரி அபார்ட்மென்ட் குடியிருப்பை நோட்டமிட்டார்கள்.  பத்மாவும் அவளது உதவியாளர் பாபுவும் காரில் போவதை பார்த்து பின் தொடர்ந்து இவர்களும்  கூட போனார்கள் .

அவரது தினசரி ஷெட்யூல் என்ன? என்பதை ஆராய்ந்து ஷ்யாமிடம் ரிப்போர்ட் செய்தார்கள்.

 அதைப்போலவே மாதேஷும்  இன்னொரு பக்கம் சில வேலைகளை செய்தான் .

தனது ரசிகர் மன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு நம்பிக்கையான ஆளை கூப்பிட்டான் .அவன் பெயர் கர்ணா .அவனிடம் பத்மாவை பற்றி சொன்னான் .'ரேப் 'வீடியோ என்றெல்லாம் சொல்லாமல் ஜஸ்ட் அவளை கிட் நாப் செய்து மிரட்ட போகிறோம் என்று மட்டும் சொன்னாம்.

"செஞ்சிடலாம் வாத்தியாரே,  நமக்கு பிரச்சனை கொடுக்கிறவ இருந்தா என்ன?  இல்லாட்டி என்ன? "  அவன் நம்பிக்கை கொடுத்தான்.

"என் பேரு வெளிய வரக்கூடடஹு"

"அறுத்து போட்டாலும் வராது"

" எனக்கு அவ சைடுல இருந்து கவனிக்க வேண்டியது இரண்டு விஷயம் ஒன்னு டிரைவர் .இன்னொன்னு அவளுடைய அசிஸ்டன்ட் பாபு. எனக்கு என்ன பண்ணுவே தெரியாது.  அந்த பாபு அவ கூட கார்ல சனிக்கிழமை வரக்கூடாது . அப்புறம் அந்த டிரைவர் நாம சொல்ற இடத்துல கார் நிறுத்திட்டு ஓடிடனும்.  இந்த ரெண்டும் எனக்கு சரியா அமையனும்"

"சரி வாத்யாரே"

" நீ இதுல நேரடியா தலையிடாதே கருணா "

"ஓகே சார் எனக்கு பாபுவோட அட்ரஸ்,  டிரைவரோட அட்ரஸ் மட்டும் கொடுங்க" என்றான்

அவனிடம் அட்ரஸ் கொடுத்துவிட்டு பத்து லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்தான் மாதேஷ் .

கருணா இது போல பல நிழல் வேலைகளை மாதேஷ்க்காக செய்து இருக்கிறான். அழகான குரூப் டான்ஸ்ர்களை மாதேஷ்கு செட் பண்ணும் வேலை தான் அவனது பிரதான வேலை .

அது மட்டும் இல்லாமல் லோக்கல் பார்ட்டிகளில் நிகழ்ச்சிகளில் பவுன்சர்களை ஏற்பாடு செய்து மாதேஷ்க்கு பாதுகாப்பு தருவான்.

 அது தவிர மாதேஷ் படங்கள் வெளியாகும் போது தனது ஆட்களை சென்னையில் எல்லா தியேட்டர்களையும் தியேட்டர்களுக்கும் அனுப்பி ரசிகர் போல வர வைத்து அந்தப் படத்தை புகழ்ந்து பேச செய்வான்.

 அவன் செய்யும் இந்த வேலைக்கு பல லட்சங்களை கூலியாக பெற்றுக் கொள்வான். அது மட்டும் இல்லாமல் இதுபோல ஒன்றிரண்டு கிரைம் சம்பந்தப்பட்ட வேலைகளும் மாதேஷ் அவனை கூப்பிட்டு கொடுப்பதுண்டு.  இதுவரை எந்த விஷயமும் இவன் பக்கம் இருந்து லீக் ஆகாது.  வேலையில் அத்தனை கனகச்சிதம்.

அவன் பணத்தைப் பெற்று கோண்டு உற்சாகமாக கிளம்பினான்.

 

 கர்ணா முதலில் டிரைவர் சந்தோஷை போய் பார்த்தான். அவனது வீடு வட சென்னையில் முல்லை நகரில் பாலத்திற்கு அருகே இருந்தது . அங்கே இருந்த ஒரு லோக்கல் ரவுடி மூலமாக அவன் சந்தோஷை அணுகினான்  .அவனது வீடு மிக சாதாரணமான குடும்பம் . மூன்று லட்சம் என்றதும் அவன் வாய் பிளந்து விட்டான்.

' ஒன்னும் பிரச்சனை இல்ல சந்தோஷ்.  உங்க மேடத்தை நாங்க ஒன்னும் பண்ண போறது இல்ல,  சும்மா கூப்பிட்டு ஒரு மணி நேரம் வச்சிருந்து மிரட்டிட்டு அனுப்பிடுவோம். வணடலூர்ல இருந்து ஓரகடம் பிரியற மெயின் ரோடு வரைக்கும் நீ  ரெகுலர் ரூட்டுலேயே வா.. அதுக்கப்பறம் ஸ்டூடியோ செட்டுக்கு போற வழி மண் பாதையில் கார் போவும் இல்ல.  அங்க ரென்டாவது போஸ்டுல கார் ரிப்பேர் ஆகிடுச்சீன்னு காரை நிறுத்து"

"சரிங்கண்ணே"

"எங்க ஆளுங்க வந்தப்பறம், காரை நிறுத்திட்டு ஓடிடு. "

". சார் அதுக்கு அப்புறம் என் வேலை என்ன சார் ஆகுது?"

" சரி வேணும்னா ஒன்னு பண்றோம் . அவ எதிரிலேயே இரண்டு அடி அடிச்சிட்டு உன்ன முட்டி போட வைக்கிறோம் . நீ மயங்கி விழுந்து ஏதாச்சும் புதர்ல படுத்துக்கோ.. நாலு ஹவர் கழிச்சி தான் நீ அம்மா காணோமுன்னு யூனிட்ல சொல்லனும். அதுக்குள்ள அவளை விட்டுடுவோம்.. என்ன?'

"சரிங்கண்ணே"

" இந்த விவாகரெல்லாம் முடிஞ்சா அப்புறம் நீ பழையபடி அவ கிட்ட வேலைக்கு சேர்ந்திடலாம்"

"ஓகே" என்றான். சந்தோஷ் .

அடுத்து டிரைவர் பாபு.  அவன் இருந்தது அடையாறில் ஒரு நெரிசலான குடியிருப்பு . ஆனால் பாபு பற்றி விசாரித்தால் அவனை நேர்மையானவன் என சொல்கிறார்கள்.  மலர்விழி என்கிற ஒரு  படித்த பெண்மணி அவனுக்கு ஆதரவாக இருக்கிறாள் . பாபுவுக்கு அகல்யா என்கிற ஒரு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறார்கள்.  பணத்திற்கு மயங்க மாட்டான் . இவன் பிரச்சினையாக இருப்பான்? என்ன செய்வது என கருணா யோசித்தான்.

 தினம் காலை 7:00 மணிக்கே அவன் வீட்டிலிருந்து கிளம்பி கிண்டி மணப்பாக்கத்தில் உள்ள பத்மாவின் வீட்டிற்கு சென்று விடுவான் அங்கிருந்து 8 மணிக்கு பத்மாவின் கார் கிளம்பி 9:30க்கு வண்டலூருக்கு சென்று விடும்.  

ஆனால் சனிக்கிழமை  காரில்  பத்மாவுடன் பாபு போகக்கூடாது .

அப்படி போகக்கூடாது என்றால் அவனுக்கு ஒரு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் . என்ன பிரச்சனை? வீட்டை விட்டு வெளீயே அகல்யா வர,

அவனது மனைவி மூலமாக பிரச்சினையை ஏற்படுத்தினால் என்ன? அவன் பாபுவின் மனைவி அகல்யாவை பின் தொடர்ந்தான்.

 தினமும்  பாபு வேலைக்கு கிளம்பிய பிறகு அவள் வீட்டிலிருந்து ஸ்கூட்டியில் கிளம்பி அருகே உள்ள மலர் விழியின் அலுவலகத்திற்கு வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தாள்.

 10 டூ 6 அலுவலகம். ஆபீஸ் முடிந்த பின் வரும் வழியில் அவளது  ஸ்கூட்டியை ஆட்டோ விட்டு மோதி ஒரு சிறிய விபத்தை ஏற்படுத்த கர்ணா திட்டமிட்டான்.

சரியாக வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கு அகல்யா மலரின் அலுவலகத்தில் இருந்து கிளம்ப,  அவள் பின்னாடியே வந்த கர்ணாவின் ஆட்டோ வேகமாக மோத, ஸ்கூட்டி  சென்டர் மீடியனில் கொண்டு போய் அவளை  இடித்தது.

 பெரிய அடி இல்லை . ஆனால் கைகால் எல்லாம் ரத்தம் .கூட்டம் சூழ்ந்து கொண்டது.

' அச்சச்சோ மன்னிச்சுக்கம்மா மன்னிச்சுக்கம்மா ' என் மேல தான்மா தப்பு. லெப்ட் பார்த்தேனே தவிர ம்  ரைட் பாக்கலம்மா , மன்னிச்சுக்கோ மன்னிச்சுக்கோ" என சொல்லி ,  அதே ஆட்டோவில் அகல்யாவை ஏற்றினார்கள்.

அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் . விஷயம் பாபுவுக்கு தெரிவிக்கப்பட,  அவன்  பதறியடித்து பத்மா மேடத்திடம் சொல்லி விட்டு வண்டலூரில் இருந்து வேகமாக ஓலா காரில் விரைந்து வந்தான் .

"ஐயா பாபுவை ஆப் பண்ணியாச்சு.  நாளைக்கு அவன் பத்மா கூட கார்ல போக மாட்டான்.  ஹாஸ்பிடல்ல அவன் பொண்டாட்டி கூட இருப்பான்." போனில் மாதேஷ்க்கு கர்ணா ரிப்போர்ட்  சொல்ல

"வெரி குட்" என்றான் மாதேஷ் . வலை வேகமாய் பின்னப்பட்டது.

No comments:

Post a Comment