மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, August 20, 2026

செங்குருதி ஆட்டம் : காமப்புனலின் மறுவடிவம் - நீண்ட நாவல் (Tamil Edition)



காமபுனல் நாவல் இப்போது வேறு ஒரு பரிமாணத்தில்,.
'செங்குருதி ஆட்டமாக'

எனது ஆறாவது நாவலாக., மற்றுமொரு நீண்ட நாவலான ' காமப் புனல்" நாவலை 8 பாகங்களாக எழுதி வெளியிட்டிருந்தேன்.
செங்குருதி, வன்முறை, தொழில்போட்டிகள் நடுவே பெருங்காமம் கொப்பளிப்பதையும் இந்த காமப்புனல் விவரிக்கும். முற்றிலும் ஒரு புதிய பரபரப்பான வணிகமயமான கதைக்களத்தில் இது அமைந்திருக்கிறது.
வடசென்னை பாரிமுனை தான் கதையின் முக்கிய அமைவிடம்.
அனேகமாக பாரிமுனை, பிராட்வே, பூக்கடை, சௌகார்பேட்டை, துறைமுகம், மண்ணடி, மின்ட் போன்ற பகுதிகளை மையமாக வைத்து வியாபாரிகள், மார்வாடிகள், சேட்டுகள், குஜராத்தி பனியாக்கள், சாலுராக்கள் போன்ற பிற சமூகத்தினர்களைப் பற்றியும் அங்கே வர்த்தகம் செய்யும் தமிழ் தொழில் முனைவோர்களைப்பற்றியும் சொல்லி உருவாகிற முதல் நாவலாக இது இருக்கும்.
சென்னைவாசிகளுக்கு இது எளிதாக புரியும். பிற ஊர்க்காரர்களுக்கு இப்படி ஒரு ஊரா?' என வியப்பு மேலிடும்.

காமத்தை மட்டுமல்ல.,பெரும் வர்த்தகத்தையும், அடியாள், கூலிப்படை சமூகத்தையும் இது அசலாகவே சித்தரிக்கும்.
எனது வழக்கமான கதைகளில் இருந்து இது 100% மாறுபடும் என்பது மட்டும் உண்மை.
காமம் தூவப்பட்ட, 8 பாகங்களாக நான் எழுதிய 'காமப்புனல்' நாவலைப் பொருத்தவரை காமம் தான் அதை நகர்த்திக் கொண்டு போகும்.
ஆனால் இந்த 8 பாகங்களையும் படித்த தமிழ் திரை வெப்சீரிஸ் உதவி இயக்குனர் ஒருவர் இந்த எட்டு பாகங்களில் காமம் சொரிந்த பாகங்களையும் பகுதிகளையும் எடுத்துவிட்டு மீதி உள்ள கதையை ஒரே நாவலாக திரைக்கதை அமைத்து தர முடியுமா? எனக் கேட்டிருந்தார்.
அதை செய்து பார்க்கலாமே என நானும் முயன்றேன்.
ஆனால், அப்படி செய்யும்போது கதையையே மாற்ற வேண்டி இருந்தது. பல கதாபாத்திரங்களை நீக்க வேண்டியதாகவும் இருந்தது . சில கதா பாத்திரங்களின் தன்மையை மாற்ற வேண்டியதாக இருந்தது.

அதாவது மீரா, தாரிணி, சுகன்யா, ரேஷ்மா, ஸ்வேதா, பூர்ணிமா, விஜயா போன்ற பெண் கதாபாத்திரங்களும் ஏராளமான ஆண் கதாபாத்திரங்களும் நீக்கப்பட வேண்டியதாக போயிற்று. கார்த்திக்- நந்தினி, கார்த்திக்- பூரணி, தீனா- ரேஷ்மா, தீனா- ஜெயஸ்ரீ, உஸ்மான்- பூர்ணிமா, போன்ற பல எரொடிக் பாகங்கள் விடுபட்டது.
காமப்புனல் நாவலில் ஒன்று, இரண்டு பாகங்களும் கடைசி பாகத்தை மட்டுமே சேர்த்து இந்த 3 பாகங்களை மட்டுமே வைத்து ஒரு திரைக்கதையை ரீரைட் செய்ய வேண்டியதாக இருந்தது. இது போல நிறைய மாற்றங்களுக்கு பிறகான திருத்தப்பட்ட கதை இது.
கிளைமாக்சில் கர்ணாவுக்கு எதிராக புது அவதாரம் எடுக்கும் பார்கவிக்கு பதிலாக இதில் வேறு ஒரு கேரக்டர் .

இதுபோல பல திருத்தங்களை செய்து வட்டு அதாவது காமம் செறிந்த பல பகுதிகளை நீக்கிவிட்டு படிக்கும் போது, இந்த நாவல் சீரியஸாக வேறு ஒரு யதார்த்தமான ரியாலிட்டி மிகுந்த புதிய பரிணாமத்தில் வந்திருப்பதாக தோன்றுகிறது.

இது புதுநாவல் அல்ல, ஆனால், காமப் புனல் நாவலின் இன்னொரு வடிவம் என்று வேண்டுமானாலும் இதை சொல்லலாம் .
அதே சமயத்தில் காமப்புனல் நாவலைப் படித்தவர்கள் இதைப் படிக்கும் போது கண்டிப்பாக வேறு ஒரு அனுபவம் கிடைக்கும்.

(மேலும், காமம் நிறைந்த அந்த காமப்புனலின் அந்த ஒரிஜினலான 8 பாகங்கள் வேண்டுமெனறால் , அதை நமது இணையதளத்தில் வாங்கிப் படித்துக் கொள்ளலாம். அந்த எரோடிக் பாகங்கள் அமேசானில் கிடைக்காது)

எந்த ஒரு நாவலாசிரியரும் தங்கள் படைப்பில் செய்யாத ஒரு புதுமை இது.
இது படித்து பார்த்தால் உங்களுக்கு இது நன்றாக புரியும்.

- நவீன வாத்சாயனா


குறிப்பு : இந்த செங்குருதி ஆட்டம் நாவலில் வரும் வன்முறைக் காட்சிகளுக்காக இளையோர் இந்த நாவலை படிப்பதை தவிர்க்கவும்.

( மேலும், இதை தொடர்ந்து எனது முந்தைய நாவல்களில் பலவற்றை காமப் பகுதிகளை நீக்கி விட்டு,  சென்சார் செய்யப்பட்ட  பாகங்களை தனி நாவலாக தரலாமே'என கூட நினைக்கிறேன்.
 எல்லா தரப்பு வாசகர்களும் படிக்கலாம் அல்லவா? மேலும்,  அமேசானில் வழிகாட்டு முறைகளை கடை பிடிக்கவும் அது உதவும்..
ஆனால் அதே தலைப்பை வைத்து வெளியிடாமல் வேறு தலைப்பை இட வேண்டும். பார்க்கலாம் முயற்ச்சிகிறேன்)

1 comment:

  1. It is good that you converted to normal novel .. your talent should go to real world much more .. my request you give different author name for normal novels going forward

    ReplyDelete