அந்த ஆளுங்கட்சித் தலைவர் மறுநாள் காலை அந்த தனது உதவியாளரை அழைத்தார். அந்த அறையில் இருந்த மேஜையின் மீது அன்றைய தினத்து தமிழ் நாளிதழும் ஆங்கில நாளேடுகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன .
அத்தனை சீக்கிரம் அவர் அதை எல்லாவற்றையும் மேலோட்டமாக படித்து முடித்து இருந்தார்
" யோவ் அந்த பத்மா விவகாரம் என்ன எனக்கு சுருக்கமா சொல்லு' என்றார் .
அந்த உதவியாளர் தனக்கு தெரிந்ததை சொன்னார்.
' ஏற்கனவே அந்த ஷியாம் இங்கு வந்து அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்கான் அய்யா. அடுத்த மாசம் தமிழ்நாட்டுல ஒருங்கிணைந்த ரசிகர் மன்றம் ஒன்றை ஆரம்பிக்க போறேன்னு' சொல்றான். பிரஸுக்கு
நியுஸ் கொடுக்கிறான். இவனையெல்லாம் வளர விட்டா ஆபத்து. அப்புறம் பச்சை தமிழன் அப்படின்னு வந்து நிற்பானுங்க. கொடி பிடிப்பானுங்க..
" சரி. அது அவன் இஷ்டம். அதைவிடு. அவன் கேரக்டர் எப்படி ?"
"தனிப்பட்ட விஷயத்துல அவன் மோசமானவன் தான் சொல்றாங்க. ஏற்கனவே அவன் மேல பெங்களூர்ல நிறைய கம்ப்ளெயின்ட் இருக்கு அய்யா.லேடீஸ் விசயத்துல வீக். அங்க
ஆக்டரஸ் சைலஜா, இங்க அந்த டைரக்டர் அர்ஜூனன் சம்சாரம்
இப்ப லேட்டஸ்டா நடிகை ரேனுகாவோட அம்மான்னு
ஜெகஜ்ஜோதியா இருக்கான்"
"ம்ம்ம்ம்"
"இங்க கூட படம் எடுக்கும்போது வீடுகளை செட் போடறதுக்கு பதிலா, நிஜமா
இருவது வீட்டை கட்டி ஜனங்களுக்கு இலவசமாக கொடுத்து இம்ப்ரஸ் பண்ண பார்த்தான். ஒரு கோடியில வீடுகளை கட்டி கொடுத்துட்டு பத்து கோடின்னு கணக்கு சொல்லிக்கிட்டு இருக்கான் . இருவது இல்லியாம் இருனூறாம். இன்னும் தமிழ்நாடு முழுக்க ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுப்பேன் அப்படின்னு போற இடத்துல எல்லாம் சொல்லிட்டு இருக்கான் . எப்படியாச்சும் தமிழ்நாட்டு அரசியல் நுழைய பார்க்கிறான் "
"நல்லது செய்றவங்க யாரா இருந்தாலும் அரசியல் வரட்டும் அதைப்பத்தி தப்பில்லை, ஆனா இந்த மாதிரி அயோக்கனுங்களை நம்ம வளர விடக்கூடாது."
" ஆனா அவன் மேல கைய வெச்சா நமக்கு கர்நாடகா பாலிடிக்ஸ் இருந்து கொஞ்சம் ப்ராப்ளம் வர வாய்ப்பு இருக்கு.,
அவங்க மாமனார் ஒரு பெரிய கட்சியில இருக்கார்."
" எந்த பிராப்ளம் வந்தாலும் பாத்துக்கலாம் . ஷ்யாம்'னு பேரு தெரிஞ்ச அப்புறம் எதுக்கு விட்டு வச்சிருக்கீங்க? புடிச்சு உள்ள வைங்க" அவர் பேசும்போது காவல் அதிகாரி அப்பாஸ் உள்ளே நுழைந்தார்
"குட் மார்னிங்க்
சார் "
"குட் மார்னிங்க்
. ஆக்டர்ஸ் பத்மா மேனன் கேஸ்ல, அந்த ஷ்யாமுக்கு எதிராக எவிடன்ஸ் என்ன ? என்றதை சீக்கிரம் ரெடி பண்ணுங்க .இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள அவனை அரெஸ்ட் பண்ணி வைக்கனும் ரைட்?"
"ரைட் சார்"
தமிழக போலீஸ் சுறுசுறுப்பானது.
ஷ்யாமின் ஒரு வார கால போன் கால்கள் டேப் செய்யப்பட்டன. அவர்கள் யார் ?அவர்களை பின்னணி ? என்ன என்பது விசாரிக்கப் பட்டது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
பத்மாவின் காரில் ரௌடிகளின்
ரேகைகள் எடுக்கப்பட்டது. ஓடிப்போன டிரைவர் சந்தோசும் விசாரிக்கப்பட்டான்.
சுரேஷும் பத்மாவும்
வரவழைக்கப்பட்டு விசாரித்தார் அப்பாஸ்..
"சார் எப்படியும்
செங்கல்பட்டுல தான் அவங்க இருக்கனும். கத்திகுத்து பட்டிருக்கு. ஏதாச்சும் தனியார்
ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் போய்கிட்டு இருக்கனும்.அவங்க அட்ரஸ் வேனுமுண்ணா. மங்களூர்
காந்திபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல அவங்க புல் டீட்டெயில் இருக்கும் . ஏற்கெனவே அவங்களை
நான் தான் , அங்கே போலீஸ்ல புடிச்சி கொடுத்திருக்கேன்" சுரேஷ் ஏராளமான
தகவல்கள் சொல்ல, அடுத்த ஒரு மணி
நேரத்தில் சிலுவை உட்பட மொத்த பேரும்
செங்கல் பட்டில் ஷ்யாமுக்கு சொந்தமான வீட்டில் அப்பாஸ் தலைமையில் சுற்றி
வளைக்கப்பட்டார்கள்.
' ராஸ்கல் வீடியோ எடுத்து நெட்டுல
விடறீங்களா? ' சிலுவையை குப்புற போட்டு தடியை சொருக, அவன் ஷ்யாமின் பேரை சொன்னான்.
அன்று மாலையே ஆலப்பாக்கம் வீட்டில் ஷ்யாமை
சந்தேகத்தின் பேரில் கைது செய்ய அப்பாஸும் அதிகாரிகளும் முயல. ஷ்யாமின் லாயர் முன் ஜாமினை நீட்டினார்.
'அப்படியெல்லாம் நீங்க ஒரு பெரிய செலிபிரிட்டியை அரஸ்ட் பண்ணிட
முடியாது. எவளையோ ஒருத்தன், தள்ளிட்டு போனான்னா அவரா பொறுப்பு? " என்றான்
" சிலுவை எண்கிறவன் ஷ்யாம்
பேரை சொல்றான்.சார்"
"ஸார் அவங்களுக்கு எங்க
வீட்டை வாடைக்கு விட்டோம். அவங்க பண்ன தப்புக்கு வீடு ஓனரா பொறுப்பு?"
"சரி அவரை பாக்க
விடுங்க"
"முடியாது.. கோர்ட்ல
புரட்யூஸ் பண்றோம்"
வெறும் கையோடு ஆலப்பாக்க
பங்களாவிலிருந்து சோர்வாக திரும்பி வந்தார்கள். அதிகாரிகள்.
ஜீப்பில் ஏறி போன அப்பாஸை தடுத்தான்
பாலா.
"சார்"
"என்னப்பா?"
"சார் இந்த வீட்டுல வெச்சு
தான் ஷ்யாம்- மாதேஷ் ரெண்டு பேரும் பத்மாவை கடத்த திட்டம் போட்டாங்க... நான் தான் ஐ விட்னஸ்"
"என்னய்யா சொல்றே? மாதேஷ்
கூடவா?"
"ஆமா சார். இப்படி வகையா மாட்டுவானுங்க தான் அவங்க பேசறப்ப மொபைலை
வெச்சிட்டு போய்ட்டேண்.. அவங்க பேசனதை வீடியோ ரெக்கார்ட் பண்ணிட்டேன்"
வீடியோவை ஓட விட்டு பார்த்தார்கள் . ஷ்யாம் - மாதேஷ்
தான்.
ஏராளமான கெட்ட வார்த்தைகள். ஆனல
மாதேஷின் . முதுகு மட்டுமே அந்த கோண்த்தில் தெரிய., பரவாயில்லை.. ஷ்யாம் தெளிவாக
தெரிகிறான்
"யோவ்வ்.சிங்கம்யா நீ" அப்பாஸ்
அவனை கட்டி கொண்டார்.
"லட்டு மாதிரி எடுத்து
கொடுத்துட்டியே"
"இதை காட்டுங்க சார் அந்த லாயர்கிட்ட"
"என்னய்யா நீ எஜமானையே போட்டு
கொடுத்திட்டியே"
"மிருகம் சார்.. புடிங்க
சார்.."
"இதை முதல்லயே,.
கொடுத்திருக்கலாமே.. அந்த பத்மாவை சேவ்
பண்னி இருக்கலாமே"
"இந்த விடியோவை பாத்துட்டு,
இப்படி ஒரு சதி திட்டம் தீட்டுனதுக்கு என்ன சார் பதில் சொல்வாங்க.?. சும்மா
பேசிகிட்டு இருந்தோமுன்னு சொல்லி தப்பிச்சிடுவானுங்க...பெருசா தப்பு பண்ணி
மாட்டனும்னு தான் காத்துகிட்டு இருந்த்தேன் சார்."
அப்பாஸும் அதிகாரிகளும் , அருகே
இருந்த ஒரு நீதிபதியின் வீட்டின் கதவை தட்டினார்கள்.
எல்லா ஆதாரங்களுடன் வீடியோ
ஆதாரத்தையும் காட்ட., ' " ஷ்யாமை அரஸ்ட் செய்து , குண்டாசில் ஒரு வாரம் போலீஸ் கஸ்டடிக்கு
உத்தரவிட்டார்.
"சார்..அப்படியே
மாதேஷ்க்கும்"
" விடியோல இருக்கறது மாதேஷ்னு நாளைக்கு கோர்டுல புரூஃப் பண்ணுங்க பாப்போம்."
அவர் ஷ்யாமுக்கு மட்டும் குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட.,
அதிகாரிகள் மீண்டும் ஷ்யாமின்
ஆலப்பாக்கம் பங்களாவிற்கு விரைய, குறுக்கே புகுந்து தடுத்த லாயரை பிடித்து
தள்ளியது போலீஸ்.
"என்ன சார்
அராஜாகம்..பண்றீங்க" ஷ்யாம் கத்த
"யூ அர் அரஸ்ட் அன்டர்
குண்டாஸ் ஆக்ட்' அதிகாரி கம்பீரமாக சொல்ல.
"என்னது குண்டாசா?' பதறி வெளியே வந்தான். ஷ்யாம்
" நோ ஜாமின் நோ பெயில்" வீடியோவை காட்டினார் அப்பாஸ்.
"சார் சார் விட்டுடுங்க..
சார்.. பேசிக்கலாம் சார்..:"
" நோ வே ஷ்யாம்.. கிளம்புங்க..."
"ஸார்..சார்... நான் இல்ல
சார் எல்லாம் அந்த மாதேஷ் தான்.."
"வாங்க அவருக்கும்
குண்டாஸ்தான்.."
இரவு பத்துமணிக்கு ஷ்யாம் கைது
செய்யப்பட்டான்.
"சார்..சார். வீடியோவை
நம்பாதீக சார்.. .எல்லாம் அந்த பாலா நாய் செஞ்ச வேலை தான்:'
"அட எகிறாதீங்க"
"எங்கே அந்த நாய்..? "
ஷ்யாம் கோபமாக தன் உதவியாளன் பாலாவை தேட, பாலா வீட்டின் வெளியே ஜீப் அருகே
சிரித்தபடி , தன் கன்னத்தை தடவி
காட்டினான்...,
ஷ்யாம் எப்போதோ அன்று நடிகை
சைலஜாவுக்காக பாலாவின் கன்னத்தில் அறைந்த அந்த
நிகழ்வை ஞாபகப்படுத்தினான் பாலா.
அடபாவி..உப்பிட்டவனுக்கு துரோகமா
பண்ணே? நாயே..
சே. பொறுத்திருந்திருந்து பழிவாங்கி விட்டான்'
ஷ்யாம் தரையை உதைக்க , ஜீப்பில்
ஏற்றப்பட்டான்
காலையில் அவனை போலீஸ் கஸ்டடி
எடுத்து கொண்டு விசாரிக்க,
எடுத்த எடுப்பிலேயே ஷ்யாம், மதேஷை
கைகாட்டி விட்டான். காவல் அதிகாரிகளுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சி. இந்த விஷயத்தில் தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதேஷும் சம்பந்தப்பட்டு இருக்கிறான் என்று தகவல் நேரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்பாஸ் மூலம் உதவியாளாரால் தலைவருக்கு
சொல்லப்பட
" மாதேஷ்ஷா? அந்த ரங்கராஜன் மருமகனா " என ஒரு கணம் யோசித்தார்.
ரங்கராஜனை போனில் விசாரிக்க.,
'எனக்கு ஒரு ஆட்சேபனை ஒன்றும் இல்லை . அவன் தப்பான ஆள்தான்' என ரங்கராஜன் சொல்ல., போலீஸ் வேறு கோணத்தில் விசாரிக்க துவங்கியது.
மாதேஷின் கால் லிஸ்டில், ஷ்யாமின்
பேர் இருக்க., அவனது டவர் லொகேஷன் ஆலப்பாக்கத்தில் இருந்ததை காட்டி விசாரிக்க
சென்றார்கள். மாதேஷ் அதற்கு சரியாக பதில் சொல்லவில்லை.
'ரென்டு தட்டு தட்டினால் முழுதும்
கக்கிவிடுவான். ஆனால் எப்படி தள்ளி கொண்டு போவது?' அப்பாஸ் யோசித்தான்.
அதற்குள் 'என் வளர்ச்சியை
பிடிக்கதவர்கள் ஷ்யாம்- பத்மா விவகாரத்தில் என்னை சம்பந்தப்படுத்தி என்னை
சிக்கவைக்க பாக்கிறார்கள். ' என சமூக வலைதளத்தில் சொல்ல அவனது ரசிகர்கள் திரண்டு
மாதேஷின் வீட்டுக்கு அருகே ஆர்ப்பாட்டம் செய்ய. அதற்கு தலைமை ஏற்றான் கர்ணா. அது
டிவியில் ஒளிபரப்பாக.,.
"அய்யோ இவன் தான் என்னை
ஆட்டோவில இடிச்சது. ஸ்பிரிங்க் தலை
மூஞ்சி.. '
அகல்யா ஆஸ்பத்திரியில் கர்ணாவை பார்த்து கத்த,.
"என்னடி சொல்றே?" பாபு
அலறியடித்து கொண்டு சுரேஷ்க்கு சொல்ல., சுரேஷ் அப்பாஸ்க்கு தகவல் தர.,
''என்னய்யா கிணறு வெட்ட பூதம்கிற
மாதிரி இருக்கு. அப்ப பாபு ஒய்ஃப் அகல்யாவை
ஆட்டோல இடிச்சி தள்ளி , பாபுவை பத்மா கூட போக விடாம பண்ணி.. எல்லாமே
செட்டப்பா? அய்யோ தலையை சுத்துது.. "
காவல் அதிகாரிகள் விரைந்து வெள்ளிகிழமை
மாலை ஆறே முக்காலுக்கு, விபத்து நடந்த பகுதியின்
புட்டேஜ் எடுத்து பார்த்தார்கள்.
"யோவ் அது கர்ணாதான்யா.. ஹி
இஸ் தி கல்பிரிட். பிளான்ட் ஆக்ஸிஸ்டென்ட்
. பாரு எப்படி போய் ஆட்டோவில
இடீக்கிறானுங்க" அப்பாஸ் எழுந்து கொண்டார்.
"ஸார்..என்ன சார் இது?' சக
அதிகாரி அதிர்ச்சியில் உறைய,.
"தூக்குய்யா அந்த கர்ணாவை..."
கர்ணா சிந்தாதரி பேட்டை காவல்
நிலையத்தில் வைத்து உரிக்கப்பட்டான். கழுத்தை அறுத்தாலும் சொல்ல மாட்டேன் என சொன்ன
கர்ணா., இரண்டு மிதிக்கே சகலத்தையும் சொல்ல., அவனது தகவலின் படி முல்லை நகருக்கு
போய் சந்தோஷை வளைத்தார்கள்.
"ராஸ்கல் அஞ்சு லட்சம் வாங்கி
பத்மா மேடத்தை மாட்டி விடறயா?"
"அய்யோ அஞ்சு லட்சமில்ல.,
சார் மூனு லட்சம்தான்" அவன் கன்னத்தில் போலீஸின் தடி 80 கிமீ வேகத்தில்
பாய்ந்தது.
"சார் இது போதுமில்ல?" சக போலீஸ்
கேட்க.,
"இல்லய்யா.. இதெல்லாம் ரெண்டு
ஹியரிங்க்குக்கே தாங்காது" என அப்பாஸ்.
சொல்ல.,
அந்த ஆள் ஒரு பெண்ணுடன் அப்பாஸை
தேடி கொண்டு உள்ளே நுழைய கூட பாலா.
"யாருப்பா?"
"சார் உங்களை தேடிக்கிட்டு
தான் சார்..ஸ்டேஷன் வந்திருகேன்.. இவர் பேரு முத்து... இந்த பொண்ணு குரூப் டான்சர்
ஜெயந்தி."
"என்னது?"
ஜெயந்தி தான் கோவை ஓட்டலில் வைத்து
மாதேஷ் உட்பட நாலு பேரால் பலவந்தப்படுத்தப் பட்டதை வாக்குமூலமாக கொடுக்க. மாதேஷ் தந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் தர,
அப்பாஸ் முத்துவை கட்டிபிடித்து கொண்டார்.
"சினிமாக்கு மட்டுமில்ல,
போலீஸ்க்கும் உன்னை மாதிரி ஆளுங்க தேவைப்படுதுய்யா"
"சார் இது
போதுமில்ல?" அதே அதிகாரி அப்பாஸை கேட்க.,
"போதும்டா. ஒரு ஏழை பொண்ணை
ஒரு வாரம் ஹோட்டல் ரூமுல வெச்சி. .ஹாரஸ்மென்ட் பண்ணி இருக்கானுங்க.. ஒரு லட்ச ரூவா
கொடுத்து அனுப்பீ இருக்காங்க..சும்மா விடமாட்டேன்"
மாலை சிறப்பு நீதிமன்றத்தில் டாப் ஸ்டார் மாதேஷை குண்டாசில் கைது செய்வதற்கான,
ஆதாரங்களை தாக்கல் செய்ய,.
நீதிபதி சிரித்தார்.."அவன்
தான் கல்பிரிட்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா சட்டத்துக்கு ஆதாரம்
தேவைப்படுதே..ஆபிசர்?"
" யெஸ் சார்.."
" மாதேஷை பத்து நாள்
கஸ்டடியில் எடுத்துக்கோங்க"
"தேங்க் யூ சார்"
அன்று நள்ளிரவு மும்பைக்கு போக
இருந்த மாதேஷ் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். பத்மா கடத்தல்
விவகாரம் ஜெயந்தி பலவந்த விவகாரம் என எல்லா வழக்குகளுக்கும் சேர்த்து பல்வேறு பிரிவில் மாதேச்ஜ் உட்பட பலர்
கைதானர்கள். விடிந்ததும் சமூக வலைதளங்களுக்கு செமை தீனி காத்திருந்தது.
தமிழ் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே பத்மாவின் தைரியத்தை பாராட்டியது. போலீசையும்
பாராட்டியது.
மூன்று நாளில் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள்.
தணிகாவும், செல்வராஜாவும்
அழுதார்கள்.
"குரூப் டான்சர் மேல கையை
வெச்சதுதான் தப்பா போச்சு. முத்து தான் காட்டி கொடுத்துட்டான்.. இப்ப டான்சர்
சங்கம் கூட அவங்க கூட நிக்குது.. மாதேஷ் எக்குதப்பா மாட்டிகிட்டான் . ஏகப்பட்ட
கேசு அவன் மேல,. மாயாண்டி...........சாரி செல்வராஜா'
"கூப்பிடு கூப்பிடு..நான்
மாயாண்டிதான்.. நான் மாயாண்டியாய்
இருந்தவரைக்கும் காசு தான் இல்ல.. ஆனா ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா இப்ப? "
"...."
"என்னை மாயாண்டின்னு
நீ வாய் தவறி கூப்பிட்டப்போ., பல
முறை., உன்னை திட்டி இருக்கேன் தணிகா. ஏன்
? என் குலத்தை., சாதிய. பிறப்பை .,
அடையாளத்தை எல்லாம் மாத்திக்கனும்கிற வெறி.. ஆனா அது பெரிய தப்பு. நம்ம பரம்பரை
பேர் என்கிறது ஒரு குல அடையாளம், நம்ம மண்ணோட பூர்வீகம் ஒரு வரம். அதை அப்படி மாத்திக்க
கூடாது..அதை மாத்திக்க நினைக்கல., தொலைச்சிட நினைச்சேனே அது அசிங்கம்., அது தப்பு
தணிகா "
"....................."
"அன்னிக்கு பெரியவர்
என்ன சொன்னாரு? தன்னோட திறமையால ,
முன்னேற்றத்தால தான் ஒருத்தன் மேன்மை அடைய முடியும்ன்னு சொன்னாரு.. ஆனா நான் குறுக்கு வழியில எல்லாத்தையும் அடைய
நினைச்சேன்? என் சொந்த விருப்புக்கு என் மகன்களோட வாழ்க்கையையே பணயம்வெச்சி..
அய்யோ... நான் செஞ்சது தப்புடா? சே எத்தனை
பேரோட வாழ்க்கைடா..? ."
"...................."
"இப்ப ,.டைரக்டர்
செல்வராஜான்னா கேக்கவே அசிங்கமா இருக்குடா.. என்னை மாயாண்டின்னே கூப்பிடு
தணிகா"
தேம்பி அழுகிற நண்பனை என்ன சொல்லி
தேற்றுவது என தெரியாமல் பார்த்தான் தணிகா.
No comments:
Post a Comment