" யாரு சுரேஷ் கிராண்டினியா?"
" என்ன அண்ணே மறந்துட்டீங்க? , ரொம்ப நாளா தேடிக்கிட்டு
இருந்தோமே? "
" இவனையா?'
" ஆமா ., அன்னைக்கு மங்களூரில் ஒரு ஹோட்டல்ல, ஒரு பொண்ணை ஃபாலோ பண்ணும் போது இவன் தானே உள்ள பூந்து கெடுத்துட்டான் "
"ஆமாண்டா ., த்தா என்னை மாடியிலருந்து தள்ளி என் காலை உடைச்சவன்டா.."
"போலீஸ்ல வேற மாட்டி வுட்டுட்டானே?"
"இப்போ அவனே நல்லாம் தனியா வகையா மாட்டுணான்டா, "
"போட்டு பொளக்கனும் சிலுவை"
"அவனுக்கும் இந்த பொண்ணுக்கும் என்னடா சம்பந்தம்?"
"ஏய் சிவா.. நீ கார்ல இரு, இந்த பொண்ண பாத்துக்கோ .,,நாங்க மூணு பேரும் அவன கவனிச்சிட்டு வந்துடறோம்.." சிலுவையும் அவனது ஆட்களும் தப தபா வென'
தங்கள் பழிவாங்கலின் மிச்சத்தோடு கோபமாக கத்தியோடு இறங்கினார்கள். சுரேஷை நோக்கி
ஒடினார்கள்.
"ம்மவனே செத்தேடா நீ?"
அந்த நெடுஞ்சாலை வலது புறம் வாகனங்கள் வேகவேகமாக சென்று கொண்டிருந்தன. யாருக்கும் தங்கள் வண்டியை நிறுத்தி இவர்களது பிரச்சினை என்னவென்று கவனிக்க நேரமில்லை. 'சர்' சரென
அதிவேகத்தில் வாகனங்கள் அவர்களைக் கடக்க.
தன்னை நோக்கி ஓடி வரும் ரவுடி ஆட்களை உற்று பார்த்தான்
சுரேஷ் . பார்த்தவுடனே இவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொண்டான் . அட இந்த கோமாளிகள் , பத்மாவை என்ன
செய்கிறார்கள்?
அவனால் மூன்று பேரை சமாளிக்க முடியும் தான். ஆனால் கையில் ஆயுதங்களோடு இருக்கிறார்கள் . அதில் ஏதாவது ஒரு வீச்சில் நம் மீது பட்டு விட்டால் கூட எப்படி சமாளிப்பது? என யோசித்தான் . ஓடி வரும் ஆட்களில் பலவீனமான ஒரு
ஆளை தேர்த்தெடுத்து கொண்டான். இவனை
அடித்து வீழ்த்தி பாஸ்ட் டிராக்கில் போட்டால் போக்குவரத்து ஸ்டாப் ஆகி
ஸ்தம்பிக்கும். கூட்டம் சேரும். அதுதான்
நமக்கு வேண்டும்.
அவன் தான் நமது இலக்கு. கைகளை
உறுதியாக வைத்துக் கொடு அவனுக்காக காத்திருந்தான். எந்த வினாடியில்? எங்கே தாக்க
வேண்டும்? என கணக்கு போட்டான்.
அவனுக்கு தெரிந்த ஒரே வழி நெடுஞ்சாலையில் போகிற வாகனங்களை நிறுத்துவது தான் . அவன் திடமாக நிற்க காரில் இருந்த
பத்மா காரில் இருந்த படி. சுரேஷை முழுமையாக பார்த்தாள்.
இந்த ஜெர்கின் அணிந்த இளைஞனை
திருவேற்காட்டில் பார்த்தோமே? டிரவைர் சந்தோஷ் கூட திட்டினானே? யாரிவன்? எனக்காகவா
இவர்களுடன் சண்டை போட போகிறான்? ஏன்?
கார் ஓரம் கட்டி நிற்க அவளுக்கு
கொஞ்சம் தைரியம் வந்தது. இந்த கார் டிரைவர் சப்பானியாக இருக்கிறான். அவர்களுக்குள்
கைகலப்பு ஏற்படும் போது நாம் டக்கென கதவை திறந்து வெளியே ஓடலாம். அவள் சுரேஷை
பார்த்தாள்.
அவள் சினிமாவில் பல சண்டை
காட்சிகளை பார்த்ததுண்டு. எல்லாம் அபத்தமாக இருக்கும். இதில் ஹீரோவின் சாகசத்தை வேறு
வாய் பிளந்து ஆச்சரியப்பட்டு பார்ப்பது போல நடிக்கவும் வேண்டும். இங்கே ஒரு நிஜ
வீரன் எனக்காக நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறானே?
சுரேஷ் தயாராக இருந்தான். சினிமாவில் போல் ஒவ்வொருவராக
அல்லாமல் மூன்று பேரும் ஒரே சமயத்தில் சுரேஷ் தாக்க வந்தார்கள். அதில் அவன் லாவகமாக விலகி அவன் இலக்காக
அந்த ஒருவனின் கையை மட்டும் வலுவாக பிடித்துக் கொண்டு இழுத்து ஒரு சுற்று சுற்றி இழுத்து நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லக் கூடிய டிராக்கில்
வீச, அவன் சாலையில் வழுக்கிக்கொண்டு சென்டர் மீடியனில் போய் மோத .வேகமாய் போன சில
கார்கள் பிரேக் பிடித்து அவசரமாய் நின்றன.
அவனது வியூகம் புரியாமல் சிலுவை நடு ரோட்டில் கத்தி வீச., சுரேஷ் அவனை மடக்கி
அசையவிடாமல் பிடித்து கொண்டான். தாக்க வந்த இன்னொருவனை சுரேஷ் எட்டி உதைத்தான்.
கீழே விழுந்த கத்தியை எடுக்க போக,.
அதே சமயத்தில் காரில் இருந்த பத்மா தனக்காக யாரோ ஒரு இளைஞன் சண்டை போடுகிறான் என்பதை தெரிந்தவுடன் அவளுக்கு தைரியம் வந்தது. கார்கள் வரிசையாக
நிற்க.,
உள்ளே இருந்த டிரைவர் ஆளை பிடித்து தள்ளிவிட்டு, கதவை படார் எனதிறந்து ஓடி வந்தாள். நடுரோட்டில் கைகளை விரித்து ஹெல்ப் பண்ண கத்தினாள். கூட்டம்
கொஞ்ச கூட எதிர்பார்க்கவில்லை.
நடுரோட்டில் பத்மா என்னும் நடிகையை பார்த்து விட்ட வாகனங்கள் க்ரீச்ச்..ச்.ச் என பிரேக் அடித்தபடி நின்றன.
ஷூட்டிங்கா.. இல்லை ஏதோ கலாட்டா என்பதை புரிந்து கொண்டார்கள் . வாகனங்கள் சேர தொடங்கியது. கத்தி எடுத்து வந்தவன் சுரேஷை
பார்த்து வீச., அவன் கத்திக்கு சிலுவையை கேடயமாக கட்ட., கத்தி சிலுவையின் வயிறு,
தொடையை கிழித்தது..
அய்யோ...." சிலுவை அலற., கூட்டம் சேர்ந்தது.
:ஏய்ய் ஏதோ சன்டைடா.. பத்மாவை
அடிக்கிறாங்கடா..'
அவன் மறுபடி வீச., கத்தியின்
நுனி.. சுரேஷின் மணிக்கட்டை லேசாய் கீற ' ஆஸ்ஸ்ஸ்" அவன் கை உதறி கத்தி
வீசியவன் மீது கோபமாக பாய., கூட்டம் தன்னை நெருக்குவதை கண்டு...அவன் சென்டர்
மீடியனை தாண்டி எதிர்பக்கம் ஓடினான்.
அதற்குள் காரில் இருந்தவன கத்தி எடுத்து கொண்டு காரை விட்டிறங்கினான்.
தனது கடைசி முயற்சியாக சுரேஷின் முதுகிலோ மார்பிலோ, கத்தியால் பிளந்து விட வேண்டும் என கத்தியை வீச
முயல., கூட்டம் அவனை வளைக்க அவன் கத்தியை போட்டு விட்டு தாவி ஓடினான்..
"சிலுவை வந்துடு அப்புறம்
பாக்கலாம்."
சுரேஷ் துரத்திக்கொண்டு அவர்களைப் பிடிப்பது என்பது இப்போது இயலாத காரியம் என நினைத்து கார் பக்கம்
வர கூட்டம் பத்மாவை நெருக்கியது
"என்ன மேடம் என்ன
பிராப்ளம்..?'
"கொள்ளை கும்பலா அது?'
"அழகா இருக்கீங்க... என்ன
படம் மேடம் இப்ப நடிக்கிறீங்க?'
"அன்பு கூட நடிப்பீங்களா
மேடம்?"
கூட்டம் சேர்ந்து அவளை
முற்றுகையிட, சுரேஷ் கூட்டத்தில்
புகுந்து பத்மாவிடம் வந்தான்.
"பத்மா நீங்க என் கூட வாங்க.
அவங்க ஓடி போயிட்டாங்க"
நீட்டிய அவன் கையை அவள் கெட்டியாக
பற்றி கொண்டாள் பத்மா. அவன் அவளை கூட்டத்திலிருந்து பிரித்தான்.
"ரொம்ப தேங்க்க்ஸ்..."
"முதல்ல இங்கே இருந்து
கிளம்பனும்..வேகமா வாங்க"
கூட்டம் அவர்கள் பின்னால் ஓடி வர,.
"நீங்க வாங்க பைக்ல போலாம்" என சொல்லி சுரேஷ் பைக்கை ஸ்டார்ட் பண்ண பத்மா ஓடிப்போய் தாவி ஏறிக்கொண்டார்
"ஹே எங்கேடா தள்ளிட்டுபோற
அவளை?" கூட்டம் பச்சையாக பேச,..சுரேஷ் எடுத்த எடுப்பிலேயே முறுக்கினான்.
"அய்யோ என் காரு?"
"வண்டில அவனுங்க ரேகை
இருக்கும்.. கலைக்க வேணாம்.. பைக்கில போலாம் ., வேணாம் வாங்க..." அவன்
பைக்கில் ஏர அவள் பின்னமர்ந்து அவனை
கெட்டியாக இறுக்க கட்டி பிடித்துகொண்டாள்.
பைக் செங்கல்பட்டை நோக்கிய
திசையில் விரைய., பல வண்டிகள் அவர்களை பின் தொடர., பல வாகனங்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு வந்தது சொல்லி வீடியோ பிடித்துக் கொண்டே வந்தார்கள் . சடாரென இடது பக்கம் வந்த ஒரு
திறப்பில் யூ டர்ன் போட்டு வண்டியை சென்னைக்கு திருப்பினான்.
யாரும் பின் தொடரவில்லை.
நெடுஞ்ச்சாலையில் ஒரு காபி ஷாப் அருகே வண்டியை நிறுத்தினான். அவள் ,
மறக்காமல் முக்காடு போட்டு கொள்ள., அவன் கூலிங் கிளாசை கொடுத்து அணிய சொன்னான்.
"இப்ப யாருக்கும் உங்களை
தெரியாது"
உள்ளெ போய் தனி அறையில்
உட்கார்ந்தார்கள். அவள் இன்னும் நடுக்கமாய் தான் இருந்தாள்.
அவள் முகத்தை மூடி முக்காடு போட்டுக்கொண்டு கண்ணாடியை அணிந்து கொண்டாள். அப்போதும் அவள் அழகாகத் தான் இருந்தாள். சுரேஷ் பத்மா நடித்த படங்களை பார்த்ததில்லை . ஆனால் பத்மா மேனன் என்கிற நடிகையை அவனுக்கு தெரியும் . அவன் பத்மாவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறான். இப்போதுதான் நேரில் பார்க்கிறான்.
வழக்கமான நடிகைகளை விடவும் இவள் பல படி
மேலே அசாதாரணமான அழகுதான் என நினைத்துக் கொண்டான்.
சுரேஷ் இரண்டு காப்பியை ஆர்டர் செய்தான் . காப்பி வைத்து விட்டு சர்வர் போன பிறகு தான், பத்மா மேனன் முக்காட்டை எடுத்தாள்.
அழகென்றால் அழகு . பத்மா அப்படி ஒரு அழகு . கோடம்பாக்கமே ஏன் கதறுகிறது? என் இபோது தான் தெரிகிறது. அவள் கண்களும் நாசியும் மேலுதுடும் தனித்தனியாக ஜொலித்து கொண்டிருக்க அப்படியே அப்படியே கடித்து கடித்து தின்றுவிடலாம் என்பது போல வெகு அழகாக மிக அழகாக இருந்தாள்.
அழகு புள்ளி மானையா அந்த ரவுடிகள் வேட்டையாடப் பார்த்தார்கள்? புன்முறுவலுடன்
அவளைப் பார்க்க
" ரொம்ப நன்றிங்க உங்க பேர் என்ன சொன்னீங்க?"
"ஐ ஆம் சுரேஷ். ப்ரம்
பெங்களூர்" என்றான் அவ:ளைப் பார்த்து மலர்ச்சியாக சிரித்தபடி.,
No comments:
Post a Comment