ஷ்யாமின் படம் வேகமாக மளமளவென வளர்ந்தது. ஒரு சிறு கிராமத்தில் 20 வீடுகள் கொண்ட செட் போட்ட போது.,
"எதுக்கு செட்? நிஜ வீடுகளே
கட்டிடுங்களேன்..ஷுட்டிங்க் முடிச்சப்பறம்., இந்த கிராமத்து ஜனங்களுக்கு வீட்டை
கொடுத்துடலாமே" என்றான் ஷ்யாம்
"அதுக்கு அதிக
செல்வாகுங்களே..?" ஆர்ட் டைரக்டர் தலியை சொறிய,.
"எவ்ளோ ஆகும்? "
"எக்ஸ்ட்றா 45 பர்சன்ட்
ஆகும். "
"சரி அதை நான்
கொடுத்துடறேன்..என் சாலரில டிடக்ட் பண்ணிடுங்க " ஷ்யாம் டக்கென சொன்னான்.
இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
"ஸூப்பர் சார்.. ஷ்யாம் நகர்னு பேரு வெச்சுடலாம் சார்."
" நோ நோ..என் பேரு எதுக்கு?
இங்க பெரிய லீடர்ஸ் பேரு வையுங்க.."
அவன் உத்தரவிட்டான். செய்தி வெளியே
பரவி., பரபரப்பானது. சமூக வலை தளத்தில் டிரென்டிங்க் ஆனான்.
" ஒரே சமயத்தில் 300
கிராமங்களை தத்தெடுத்து மீட்டுருவாக்கம் செய்ய போகிறார் ஷ்யாம்.. " யாராலோயோ வதந்தி
பரப்ப பட்டது. மக்கள் கொண்டாடினார்கள்.
" நேத்து வந்தவன் ஒரு
கிராமத்தையே புதுசா கட்டி தரான். நீ முப்பது
வருசம் புடுங்கி கிட்டே இருக்கே" உச்ச நட்சத்திரங்களை கேள்வி
கேட்டு மீம்ஸ் போட்டார்கள்.
"என்ன சார்.. 300 வில்லேஜ்
மேட்டர் அது உண்மையா? " என பிரஸ்ஸில் கேட்ட போது ஷ்யாம் மறுக்கவில்லை.
"அது ஒன்றும் கடினமான
காரியமில்லை" என்று தான் சொன்னான்.
"கையை கொடுங்க பாஸ்.
கொன்னுட்டீங்க" என்றான் பாலா.
வெளியே விஷயம் பரபரப்பாக பேசப்பட.,
ஆளும் கட்சிகாரர்கள் போன் போட்டு "என்ன
விஷயம்?" என விசாரித்தார்கள்.
"என்னயா படம் ரிலீஸ்
ஆகறதுக்கு முன்னாடியே., அரசியல்ல துண்டு போடறானா கன்னடத்தான்?'
"அய்யய்யோ இல்லீங்க., அவன்
ஆர்வ கோளாறுல பண்றாங்கய்யா" தயாரிப்பாளர் நடுங்கினார்.
" நான் அவர்கிட்ட சொல்லி
மேட்டரை ஆப் பண்றேன்யா"
"வேணாம் வேனாம் அப்புறம்
எங்களால தான் நல்ல மேட்டர் ஸ்டாப் ஆகிடுச்சின்னு நீயே நாளைக்கு சொல்லுவே.. சரி
.,மெயின் ரோட்டுல இருந்து அந்த ஊரு எவ்ளோ கிலோ மீட்டர்? "
" இருக்கும் சார்..
ஏழுட்டு"
" அந்த தூரத்துக்கு ரோட்
போட்டு., தெரு விளக்கு வெச்சிடலாம்.. மாவட்ட செயலாளர் பேசுவார் உங்க கிட்ட.. படம்
முடிஞ்சப்பறம் தலைவர் பிறந்த நாள்ல ஓபன் பண்னி எல்லாருக்கும் வீட்டு கீ
கொடுத்துடலா.. ஊருக்கு தலைவர் பேரை வெய்யிங்க"
"செஞ்சிடலாம் சார்"
விஷயம் கேள்விப்பட்டு ஷ்யாம்
கொதித்தான்..
"பேஞ்சோத். வீட்டை கட்டி தரது
நான். அவனுங்க வந்து சாவி கொடுப்பானுங்களா?
"விடுங்க பாஸ்., ஜனங்களுக்கு
விஷயம் தெரியும்.. நீங்க மோதல் போக்கை விட்டுடுங்க. உங்க முதல் படம் ரிலீஸ்
ஆகறதுக்குள்ளயே நீங்க இங்க அஸ்திவாரத்தை அசைச்சிட்டீங்க அப்புறம் என்ன?
இப்போதைக்கு பிரஸ்ல எது கேட்டாலும் நீங்க ஒரு வார்த்தை தான் சொல்லனும்.."
"என்ன?'
" மக்களுக்கு நல்லது நடந்தா
சரி"
அவன அதையே எல்லா இடத்திலும் சொன்னான். மக்கள் புரிந்து
கொண்டார்கள். படத்திலும் அந்த வசனத்தை சொன்னான்.
படம் பொங்கலுக்கு பலத்த
எதிர்ப்பார்ப்புகளிடையே வெளியானது. ஷ்யாமின்
திடீர் புகழ் கண்டு பெரிய தொகைக்கு அந்த படத்தை பெரிய நிறுவனம் கைப்பற்றியது.
எல்லாருக்குமே லாபம்.
ப்ரிவியூவில் கூட்டம் அலைமோதியது.
முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்கள்
கூட்டம் கரை புரண்டது. 27 மாவட்டங்களுக்கு ரசிகர் மன்றங்கள் கேட்டு
விண்னப்பித்தார்கள்.
"என்ன முத்துன்ணே? எப்படி என்
ஆளு?" அந்த கருத்த பையன் முத்துவை
கலாய்க்க. முத்துவும் வெளிறிப் போயிருந்தான்.
விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை மையமாக சொல்கிற சினிமாவாக அது இருந்தது. கிராமத்திலுள்ள விவசாயிக்கு பிரதிநிதியாக தண்ணீர் கேட்டு அவன் தலைநகருக்கு மனுவோடு வருகிறான். ஆனால் அவனிடம் மிகப்பெரிய மந்திரியின் ஹவாலா பணம் 2000 கோடி சிக்கிக் கொள்கிறது. அவன் மந்திரியையும் சிபிஐ-யையும் ஏமாற்றி எப்படி அதை சினிமா அதை கிராமத்திற்கு கொண்டு வருகிறான் என்பது தான் கதை .
கிராமத்து மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கோபமாக இருந்தார்கள். 'இப்படி தான் டா உன் கிட்ட இருக்கிற பணத்தை எல்லாம் என்கிட்ட கொண்டு வரணும்' என ரெடியாக இருந்தார்கள். அந்த உள் மனதின் வெறிக்கு தூபம் போடுவது போல அந்த படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது.
கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத அந்த படம், விறுவிருப்பான திரைக்கதையால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஷ்யாமின் சாகச காட்சிகளும் திரைக்கதை திருப்பங்களும், கதை சொன்ன விதமும் மிக புதிதாக இருந்தது .தீம் மியூசிக் வீட்டுக்கு
வந்தாலும் காதில் எதிரொலித்தது.
அவன் முதல் படத்திலேயே சிக்சர்
அடித்திருந்தான். தமிழ் சினிமாவால் நன்று உற்று பார்க்கப்பட்டான். "என்
மக்களுக்கு எதாச்சும் ஒன்னுன்னா நான் வந்து
நிப்பேன்டா' நா தழு தழுக்க அவன் டப்பிங்க் பேச தியேட்டரில் வெறி பிடித்து
கத்தினார்கள்.
அந்த திரைப்படத்தில் அவனுக்கு இரு நாயகிகள். கிராமத்தில் ஒரு மனைவி, சிட்டியில் ஒரு காதலி, இரு பெண்களிடம் அவன் பாடல் காட்சிகளில் நெருக்கமாக நடித்திருந்தாலும் , அவன் தான் உண்டு தன் சூட்டிங் உண்டு என இருந்தான் .
ஷூட்டிங் தாண்டி அந்த இரு நடிகைளையும் அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தனியாக அழைத்து போய் பேசவில்லை. ஹோட்டல் ரூம் தந்து வர
சொல்லவில்லை.
மிகுந்த தொழில் பக்தியுடைய முன்னணி நடிகர் போல அவன் சாமர்த்தியமாகச் செயல்பட்டான். நடிகைகள் அவனிடம் வலியவந்து பேசினாலும்.,
அவன் ஏதோ ஆங்கிலத்தில் தத்துவ புத்தகங்களை சீரியசாக படித்துக்கொண்டிருந்தான்.
சிகரெட்., ஒயினை சுத்தமாக விட்டான். மனைவியும் சந்தோஷப்பட்டாள். இடையில் ஓரிரு
முறை வந்து பார்த்து விட்டு போனாள்.
அதனாலேயே அவன் அந்த இடத்தில் பெரிய ஹீரோ போல மதிக்கப்பட்டான்.
" யோவ் இந்த ஆளைப் பத்தி என்னென்னமோ சொன்னாங்கய்யா., ஆனால் இவன் அப்படி இல்லைய்யா. தான் உண்டு என் வேலை உண்டு அப்படின்னு இருக்கான். கண்டிப்பா தமிழில் இல்ல பெரிய ஆளா வருவான் . தேதி குறிச்சு வச்சுக்கோ மூணு வருஷத்துல இவன் ஒரு தனி ஆளா இந்த ஃபீல்டை ஆளப் போறான் என சொல்ல," முத்து சிரித்தான் .
'' அவன் சுயரூபம் தெரியாம புகழாதீங்க... தன்னோட பலவீனம் எதுன்னு தெரியாதவன்
தான் ரொம்ப பலவீனமானவன்"
"அப்படின்னா"
"ஏண்டா.,! தேன் எங்க இருக்குன்னு தெரிஞ்சிட்டதால அதுக்காக எல்லா நேரமும் நாக்கை தொங்க போட்டுகிட்டு இருக்க முடியுமா ? பல்லை கடிச்சுக்கிட்டு நடிக்கிறான். சான்ஸ் வந்தா வேட்டையாடப் போடறான்."
" அவன் வயசு அப்படி.. விடுங்க"
"அவன் வயசு இல்ல. அவன் புத்தி
அப்படி" முத்து திருத்தி சொன்னான்,.
அதன் பின் முத்து சொன்னது போல தான் நடந்தது.
MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360
Now only Rs.290
Get Coupon code : mtpart35
Limited days Only
பல உண்மைகள் மறைமுகமாக சொல்லப்படும் கதையாக இது காணப்படுகிறது மேலும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ReplyDelete