மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, January 30, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 8

 

உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணும் எப்படிப்பட்ட மனிதரும் எந்த காலத்திலும் முன்னுக்கு வந்தது இல்லை .அது அப்போது ஷ்யாமுக்கும் தெரியவில்லை, அந்த செக்யூரிட்டிக்கும் தெரியவில்லை.

ஷ்யாம் மேலே போய்விட,.  அந்த செக்யூரிட்டி வீட்டின் ஓரம் இருந்த இன்டர்காமில்  போன் அடிக்க,  கொஞ்ச நேரத்தில் சாந்தலட்சுமி  இரவு உடையில் கதவைத் திறந்தாள்.

" என்ன ?"
" ஷ்யாம் சாருக்கு தலை வலிக்குதாம்."

"அய்ய்யோ எண்ன ஆச்சு?"

" தெரில மேடம். டேப்லட் போட்டா போதுமாம்.  நம்ம வீட்டுல டேப்லட் கிடைக்குமா?" என்றான்.

" சரி இரு கொடுக்கிறேன் " என அவள் சொல்ல,

" இல்லம்மா நான் போனா உன்னையெல்லாம் யாருடா மேல வர சொன்னாங்க னு சொல்லி அய்யா திட்டுவாங்க ., வேற யாரையாச்சும் போய்க் கொடுக்க சொல்லுங்கம்மா"

"சரி நீ போ.."

அவள் உள்ளே போக.,  அவன் அந்த இடத்தை விட்டு அகன்றான். அந்தப் பெண் உள்ளே போனாள்.  உள்ளே ஹாலில் அவளது தங்கை சோபாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.  அர்ஜுனன் மனைவி நிர்மலா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

" என்னவாம் ? யாருக்கு என்ன ஆச்சு" கவலையுடன் கேட்டாள் நிர்மலா.

" வேறென்ன?  நல்லா குடிக்க வேண்டியது,  அப்ப தலை வலிக்காம என்ன பண்னும்? ஹீரோவுக்கு தலை வலியாம்"

"ம்ம் எங்க ஆளுக்கும் அதே தான். குடியை கையால தொடவே கூடாது. கேக்கவே மாட்டேங்குது" நிர்மலா கணவன் அர்ஜூனை நினைத்து அலுத்து கொண்டாள்.

" ஆனால் மூக்கு முட்ட குடிச்சிட்டு, மறுநாள் காலையில தலைவலின்னு  சொல்ற ஆளு  தான் இருக்காங்க.,  இவருக்கென்ன புதுசா.,  குடிக்கும்போதே தலை வலிக்குதுன்னு சொல்றாரே" என அவள் முனுமுனுத்த படியே. ஹால் அலமாரியில் மாத்திரைகளை தேடிக்கொண்டிருந்தாள்.

மாத்திரை  தேடி  காகித கவரில் போட்டு அருகே இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு உடைமாற்ற போனாள் .

"எங்கே உள்ள போறீங்க?" நிர்மலா கேட்டாள்

"டிரஸ் மாத்திட்டு போக வேணாமா? இப்படியேவா போறது ஆம்பளைங்க இருக்கற இடத்துக்கு?" அவள் இரவு கவுனைக் காட்டினாள்.

"அவ்வளவு தானே.. சரி மாத்திரையை என்கிட்ட கொடுங்க,.  நான் சாரில  தான் இருக்கேன்.  நான் போய் குடுத்துட்டு வர்றேன்" என்றாள்  நிர்மலா .

"நீங்களா?"

" ஆமா . அது மட்டுமில்லாம எங்க ஹஸ்பெண்ட் என்ன நிலைமைல இருக்காருன்னு பாக்கணும்.  அவருக்கு ஏற்கனவே உடம்பு சரி இல்லை .டாக்டர் குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க .அதனால தான் அவரை பார்ட்டி, அங்க,  இங்கன்னு கூட்டிட்டு போறது கிடையாது. நான் போய் மாத்திரையை கொடுத்துட்டு,  அப்படியே கொஞ்சம் பக்குவமா பேசி அவரை கூட்டிக்கிட்டு வந்துடுறேன்"  என  நிர்மலா சொல்ல

" நல்லதா போச்சு , எனக்கு டிரஸ் மாத்துற வேலை மிச்சம்.." என்று சொன்னபடி மாத்திரை கவரை நிர்மலாவிடம் கொடுத்தாள்.

 நிர்மலா கவரை வாங்கிக்கொண்டு முதல் மாடிக்கு தனது கணவனை தேடி சென்றாள்.  படிக்கட்டு ஏறி திரும்ப  வரிசையாக அறைகள் இருந்தன.  அதில் எந்த அறையில் யார்  இருக்கிறார்கள்? தெரியவில்லையே ' என்றபடி அவள் எந்த அறைகளிலும் போகாமல் , அறைகளைக் கடந்து நேராக திறந்த வெளி  தளத்திற்கு வந்தாள்.  தயாரிப்பாளர் மேஜையில் கவிழ்ந்திருந்தார் . இயக்குனர் நாற்காலியில் ஒரு சேரில் சரிந்து கிடந்தார்.

படைபாளிகள், ஜீனியஸ் என்கிறார்கள் . ஆனால் பாழாய் போன குடி போதைக்கு  அடிமையாகி.,இப்படி விழுந்து கிடக்கறதுகள். என்ன குடியோ?

 அவளது கணவன் அர்ஜுனன் தரையில் மல்லாக்க படுத்து இருந்தான். 'அடபாவி நீயுமா?'  எத்தனை சொல்லியும் இந்தாளுக்கு அறிவே இல்லையே ' என்றபடி நொந்து கொண்டாள் .

"ஏய் இங்க பாருங்க"

அவள் பலமாய் உலுக்க.

"போ தீ... ' அவன்  உளறலாய் ஏதோ சொன்னான்.

அவளும் ஒரு காலத்தில் முன்னனி  நடிகையாக இருந்தவள் தான்  படுத்துக்கிடக்கும் அர்ஜுனன், ஒரு காலத்தில் அவள் வீட்டு வாசலில் நின்று, 'எனக்கு ஒரு லைப் கொடுங்க .  என்னோட ஒரே ஒரு படத்துல நடிச்சு கொடுங்க , நீங்க சரின்னு சொன்னாதான் புரட்யூசர் ஓகே சொல்வார். இந்த படம் ரிலீஸ் ஆனா தான்,  நானும் டைரக்டர் ஆக முடியும்"  என சொல்லிக் கதற கொண்டே ,. அந்த நெகட்டிவான ரோலில் நடிக்க ஒத்துக் கொண்டாள் நிர்மலா.

' புது வழி பிறந்தது'  என்கிற கொஞ்சம் காமெடி,  கொஞ்சம் செக்ஸி , டபுள் மீனிங் கலந்து தயாரான ., அந்த  லோ பட்ஜெட் படம் மிகப்பெரிய வெற்றியை பெற,  அர்ஜுனன் வெற்றி பட இயக்குனர் ஆனான்.

கொஞ்சம் காமெடி,  கொஞ்சம் செக்ஸி , டபுள் மீனிங் என்கிற பார்முலாவை அவன் கெட்டியாக பிடித்து கொண்டான் .

அதே வரிசையில் நிறைய படங்களை எடுத்தான். அவை சுமாராகப் போனது நல்ல வசூலை வாரிக் கொடுத்தது , அவன் படம் நிறைய படங்கள் நிறைய படங்கள் சுமாராக இருந்தாலும் கூட, அர்ஜுனன் ஒரு விஷய ஞானமுள்ள டைரக்டர் என்கிற பெயரை பெற்றான் . அதனாலேயே அர்ஜுனன் வந்து ' லவ் யூ' என சொல்லி அவள் மனதைக் கேட்டவுடன், நடிகை நிர்மலா ஓகே சொன்னாள்.

அவனை திருமணம் செய்துகொண்டாள். திரையுலகின் முக்கிய திருமணமாக அது இருந்தது.  அதன் பிறகு நிர்மலா நடிப்பதையே விட்டு விட்டாள். அவனுக்காக இரு மகள்களை பெற்றுக் கொடுத்து அவர்களை கவனிப்பதிலேயே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.

அவர்கள் நீண்ட நாள்கள் வரை நீண்ட காலம் இணைபிரியாமல் இருந்தார்கள்.

எந்த பிரச்சனையும் இல்லை தான். ஆனால் அர்ஜுனனுக்கு வெற்றிகள் குறையக் குறைய மனது மனதில் நாட்டம் வேறு பக்கம் திசை மாறியது . வாய்ப்புகள் குறைய குறைய இரவிலும் பகலிலும் சதா போதையாக கிடைக்க,  குடும்ப மருத்துவர் போன மாதம் தான் கூப்பிட்டு எச்சரித்தார் .  நாலு மாசம் முன்னாடி தான் அப்பன்டீஸ் ஆபரேஷன் பண்ணி இருக்கோம். இனிமேல் அடிக்கடி இவரு உடம்பில் ஆல்கஹால் போச்சுன்னா ரொம்ப  பிரச்சனையாக இருக்கும் பாத்துக்கங்க' என சொல்லி எச்சரித்து அனுப்பினார்கள்.

' என்னை யாரும் இந்த சினிமாவுல கவனிக்கல நிம்மி.,  கஷ்டப்பட்டு நான் எடுத்த படங்க இங்கே போக மாட்டேங்குது,  திரும்பத் திரும்ப அரதப்பழசான மசாலா படத்துக்கு தான் இங்க நல்ல பேர் . எனக்கு சினிமா எடுக்க பிடிக்கல " என சொல்லி சொல்லி அர்ஜுனன் குடித்துக்கொண்டே இருந்தான்.

' இப்போது கூட இந்த பார்ட்டியில் கலந்து கொண்டால், அவன் நிச்சயம் குடிப்பான்' என பயந்துதான் நிர்மலா' வேண்டாம்' என எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள். ஆனால், அர்ஜுனனின் ஆரம்ப காலத்து நண்பர் இந்த ஷ்யாம் படத்தின் புரட்யூசர் என்பதால்  அவர் கேட்கவே இல்லை .

" நிர்மலா சிஸ்டர் நீங்க பயப்படாதீங்க., அவன பாட்டில் கிட்ட விடவே மாட்டேன்" என வாக்குறுதி தந்தான்.

 ஆனால் , இப்போது மேலே வந்து பார்த்தால்தான் ஊரில் கிடக்கும் சாராயம் எல்லாம் இங்கே தான் கொட்டி கிடக்கிறது.

 எப்படியும் 4 இல்ல 5 ரவுண்ட் போயிருக்கும் போல.

அவளால் அர்ஜுனனை அப்படியே விட்டு விட முடியவில்லை. 'என்னங்க என்னங்க" என்று அவள் சன்னமான குரலில்,  தனது கணவனை தட்டி எழுப்பினாள்.  சட்டையை பிடித்து உலுக்கினாள் .

தலைமயிரைப் பிடித்து ஆட்டினாள் . கடுமையாக இசித்தாள்.

" ச் சே எழுந்து வரிங்களா ?கீழ போலாமா ?  இதென்ன கூத்து வந்த இடத்துல?:ச்சீ " அவன் எழுந்து கொள்ளவே இல்லை . கண்ணை கூட திறக்கவில்லை.. அவளுக்கு ஆத்திரமாக இருந்தது .

காலால் தரையை உதைத்தாள்.  கையில் வைத்திருந்த மாத்திரை கவரை ,. அப்படியே தூக்கி அர்ஜுனன் மேலே வீசி எறியலாம்'  என  நினைக்கும் அளவுக்கு அவளுக்கு கோபம் வந்தது.

அட,.. அப்போதுதான் அவள் தன் கையில் இருந்த மாத்திரையை  பார்த்தாள். ' அய்யய்யோ அந்த  ஷாமுக்கு கொடுக்க வேன்டிய டேப்லட் இது. தலை வலின்னு சொலிட்டு போனானே'

‘எங்கே? எனத் தேடினாள். அவன் அந்த தளத்தில் எங்குமே இல்லை .பூந்தொட்டியில் பின்னால் போய் பார்த்தாள். அவன் அங்கேயும் இல்லை 'அடடா  பயங்கர தலைவலி ' என சொன்னார்களே என்று சொன்னபடி அவள் மறுபடியும் அந்த அறைகளின் பக்கம் சென்றாள்.

எந்த அறையும் பூட்டாமல் இருந்தது. ஒரே ஒரு அறையில் இருந்து சிகரெட் வாசம் வர அங்கே தான் இருக்க வேண்டும். என நினைத்தாள். உள்ளே நுழைய அச்சப்பட்டாள். வெளி கதவை தட்டினாள்.

' ஹலோ சார் உள்ள இருக்கீங்களா?"

யா..யாரு"

" நி... நிர்மலா அர்ஜூனன்":

"யாரு..?"

"மிஸஸ் அர்ஜுனன்"

" வா.வாங்க...உள்ள வாங்க" ஷ்யாம் கூப்பிட்டான்.

"எ..என்ன பண்றீங்க?"

"அட  உள்ள வாங்க வாங்க.. மேடம்  வாங்க " குரல் கேட்க., அவளுக்கு உள்ளே போக தயக்கமாக இருந்தது.

 அதனால் வெளியே இருந்தபடியே " மாத்திரை கேட்டிங்களாமே"

"ஓ.. நீங்க எடுத்து வந்துட்டிங்களா?'

"மா. மத்திரை"

".. தாங்க,.."

அவள் தயக்கமாய குரல் வந்த திசை  நோக்கி  நடந்தாள்.

ஷ்யாம் அந்த அறையின் உள் ரூமில் கட்டிலில் இருந்தான். அவள் அதற்கு  வெளியே இருந்தபடியே., ஷ்யாமை நோக்கி, டேப்லட்டினை நீட்டினாள்.

"அட வாங்க மேடம்"  என்றான் அவளுக்கு இன்னும் தயக்கம் அதிகமாக இருந்தது .


 






MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360

Now only Rs.290 
Get Coupon code : mtpart35
L
imited days Only

BUY FULL VERSION

1 comment: