அவன், பனங்குடியிலேயே சந்திராவின் வீட்டில், ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு, ஒருவர் பின் ஒருவராக மார்த்தாண்டம் சௌம்யா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் .
ஆனால், சௌம்யா சந்திராவிடமும் கிருபாவிடம் பழையபடி இயல்பாக பேசுவே இல்லை. அவர்கள் மூவருக்குள் அப்படி ஒரு உறவு இருந்ததாகவே தெரியவில்லை.
"என்னடா உன்னையே கண்டுக்கவே மாட்றா' அவள் கிருபாவிடம் விசாரித்தாள்.
சௌம்யா பழையபடி மிடுக்கான எஜமானி ஆகிவிட்டாள் என நினைத்தாள் சந்திரா . தான் மறைத்து வைத்திருந்த சாரங்கன் மருந்துகளை எடுத்து உணவில் கலந்து , கொண்டு போக, அவளுக்கு கொடுக்க வருவதற்கு முன்பே சௌமியா சாப்பிட்டு விட்டாள் என தெரியவந்தது .
சந்திரா அந்த புதிய சமையல்கார பெண்மணிகளை போகச் சொல்ல சௌமியா,
" நோ.. நோ அவங்க இருக்கட்டும்.. சந்திரா " என்றாள்.
"ஏன்மா?"
" இனிமே நீ சமைக்க வேண்டாம் . வீட்டை மட்டும் பாத்துக்க" என்றாள்.
" ஏம்மா? "
"இல்ல நீ வீட்டு வேலை மட்டும் பார்த்துக்க., சமைக்கிற வேலை அவங்க செய்யட்டும்., அவங்க டேஸ்ட் எல்லாம் எனக்கு ஒத்து வருது " என நேரடியாக சொல்லி விட்டாள்.
அய்யோ சாப்பாடு தான் என் ஆயுதம்? என்ன செய்வது என அவளுக்கு தெரியவில்லை.
நீண்ட நாளாக ஒரு நிறுவனத்துக்கு சப்ளை செய்து வரும் ஒரு வியாபாரி கொஞ்ச நாள் விலகி விட்டால், அந்த இடைவெளியில் அந்த வாடிக்கையாளர் வேறு வேறு புது சப்ளையரிடம் நல்ல தரத்தை எதிர்பார்த்து விட்டால், பழைய சப்ளையர் வெளியே போயிட வேண்டும்' என்கிற ஒரு சாதாரண வியாபார சூட்சுமம் அங்கே வேறு விதமாக வெளிப்பட்டது.
' தனது பிரதான இடத்தை இழந்த சந்திரா என்ன செய்வது?' என தவித்தாள். சாப்பாடு மட்டுமல்லம் காபி, ஜூஸ், சூபி
எதுவும் தயாரிக்க அவளுக்கு அவசியம் ஏற்பட இல்லை.. 'சே பத்து நாள் லீவுல போனது
தப்பா போச்சே., எங்கிட்ட என்னமோ சரியில்லன்னு இவ தெரிஞ்சுகிட்டாளே..'
இனியும் இங்கு காலம் ஓட்ட முடியாது' என்பது அவளுக்கு புரிந்தது.
' கிருபா மேட்டர் என்ன ஆச்சு மேடம்? அவனை எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க ' என கேட்பதற்கு கூட அவளால் முடியவில்லை. எப்போதுமே சௌமியா புத்தகம் கையுமாக இருந்தாள். பழையபடி அவள் சாதகம் செய்வது பாடுவது , பூஜை புனஸ்காரம் செய்வது என பிசியாக இருந்தாள். அவளுக்கு இருந்த ஒரே பிஏ அபர்ணாவும் இல்லை , இப்போது தானும் இல்லாமல் அவள் தனியாக இருப்பது போல் அவளுக்கு தோன்றியது .
பூஜை அறையில் வெகு நேரம் இருந்த சௌமியாவை அவள் பார்க்கப் போனாள்.
" என்ன விஷயம்? பூஜைல இருக்கேன்ல. எதுக்கு தொந்தரவு பண்ற?" என சௌம்யா சிடுசிடுக்க.,
'அதில்லம்மா எங்க பணங்குடி வீட்டுக்கு கிரகப்பிரவேசம் வெச்சிருக்கேன்., உங்களுக்கு முதல் பத்திரிகை வைக்கணும்,. நீங்க இப்போ ஃப்ரீயா இருக்கீங்களா "
"ஓ.." அவள் கண்ணாடி அணிந்தாள்.
'சரி சாமி படத்துகிட்ட வை"
அவள் சோகமாய் வைத்துவிட்டு ' கண்டிப்பா நீங்க வந்துடனும்மா" என்றாள். "கண்டிப்பாக வந்துடறேன் ,போ" இதான் சொன்னாள்.
ஆளே மாறிவிட்டாளே? இல்லை வேஷம் போடறாளா? கிருபாவுடன் ஒன்னும் மண்னுமாக இருந்தவள், கட்டி புரண்டவள், அவனை அம்மணமாக கட்டிக்கொண்டு ஆடியவள், இப்பொழுது வானத்திலிருந்து இறங்கி வந்த பொம்பளை தேவதை போல மினுக்கி கொண்டு இருக்கிறாளே" என அவளுக்கு ஆத்திரமாக இருந்தது .
"பத்திரிகையை கையில கூட வாங்கலியே?'
'வீடு எப்படி கட்டினாய்? எந்த லெவலில் இருக்கிறது ? இன்னும் காசு எவ்வளவு வேண்டும்" எதையாவது கேட்கிறாளா பார்.?,
" அம்மா கிருபா.." என அவள் தயங்கிக் கொண்டே இழுக்க
" கிருபாவுக்கு என்ன?' என கேட்டாள்.
' இல்லம்மா கிருபாவுக்கு , ரெண்டு நாளு பணங்குடியில எங்க வீடு கிரகபிரவேசத்துல கொஞ்சம் வேலை இருக்கு "
'...ம்"
'நீங்க சொன்னீங்கன்னா கிருபா அங்க போயி பாக்க சொல்றேன் "
'சரி போகச் சொல்லு., இங்க இருந்து அவன் என்ன பண்ண போறான் ? "
" இன்னிக்கு அவன் போகட்டும்.. நான் வர சனிக்கிழமை காலைல நானும் கிளம்பிடறம்மா . நீங்க ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக பூஜைக்கு வந்துடனும்" என்றாள்.
' சரி: என்றார்.
நானும் உன் கூட வரேன்டி என சொல்வாள் என எதிர்பார்த்து
ஏமாந்தாள். சௌம்யா அம்மா கூட ஊர்ல ஜம்பமா கார்ல போய் இறங்குனா மதிப்பா இருக்கும். என்ன செய்ய?
கிருபாகரனை அனுப்பிவிட்டு சந்திரா மட்டும் சௌமியா கூட இருந்தாள். ஆனால், அவளுக்கு ஒரு வேலையுமில்லை. வீட்டை துடைப்பது, துணி துவைப்பது தாண்டி ஒருவேலையுமில்லை. அவளது வேலைகள் வெகுவாக குறைந்துபோனது .எல்லா வேலைகளும் அந்த புதிய சமையல்கார பெண்மணிகள் பார்த்துக் கொண்டார்கள் .
அந்த வீட்டில் தான் எதற்கு இருக்கிறோம்?" என்று தெரியாமலே சந்திரா இருந்தாள்.
அங்கே அவள், தன்னோட ஊருக்கு போன கிருபா, முன்னாள் இரவு அவளுக்கு
போன் செய்தான். தன் போனுக்கு சார்ஜ் இல்லாமல் போக, சார்ஜ போட போன சந்திரா, கால்
வர, போனை அட்டண்ட் செய்தாள்.
"என்ன சொல்லு கிருபா? "
சந்திராவிற்கு கடைசி பேமெண்ட் 10 லட்சம் செட்டில் செய்தால் தான் கான்டிராக்டர சாவி கொடுப்பேன்' என சொன்னதாக கிருபா சொல்ல உடனே சந்திரா காண்டிராக்டரை போனில் பிடித்து கெஞ்ச ஆரம்பித்தாள்.
" சார் . எங்க மேடம் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் அங்க வருவாங்க ., கிரகப்பிரவேசம் முடிஞ்ச உடனே ஒரு அமௌண்ட் கண்டிப்பா கொடுப்பாங்க ., நீங்க எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதான்.,பேலன்ஸ் பணம் லோன்
கிடைச்ஸ வுடனே தரேன் சார்.. நான் உங்களை ஏமாத்திட்டு எல்லாம் வீடு கட்ட மாட்டேன் புரிஞ்சுதா ?"என்றாள்.
" அதுக்கு இல்ல மேடம்., நாங்களுமே எங்கள் கைகாசப் போட்டுத்தான் செய்றோம் "ஆமாம் சார் 30 லட்சம் பட்ஜெட் சொன்னீங்க இப்போது 40 லட்ச ரூபா ஆயிடுச்சு.."
"ஆமாங்க., நீங்களும் ஒவ்வொரு விஷயமா எக்ஸ்ட்ரா கேட்டுகிட்டே இருந்தீங்க. அப்ப காசு ஆகாதா? " என்றான் கான்டிராக்டர்.
" சரிங்க உங்க பணம் எங்கேயும் போகாது ஒன்பது லட்சத்து 88 ஆயிரம் பில்லு.. நான் 10 லட்சமா ரவுண்டா போட்டு கொடுக்கறேன் போதுமா?" என்றாள்.
" நல்லதும்மா., உன்னை விட உங்கம்மாவை நான் நம்பறேண்.."
'சரிங்க போன அவர்கிட்ட கொடுங்க" என்றாள்.
அவர்கள் போன பிறகு சந்திராவும் கிருபாவும் போன் பேசிக்கொண்டு இருக்க சந்திராவின் போன் சுத்தமாக பேட்டரி டிரெயின் ஆகிவிட்டது .
அவளுக்கு கிரபிரவேசம் ஏற்பாடுகள் பற்றி நிறைய பேச வேண்டி இருந்தது . இந்த நேரத்தில் இவனிடம் பேச போன் இல்லையே என்றபடி, அவள் ஃபோனை சார்ஜில் போட்டு விட்டு சௌமியா ரூமுக்கு போனாள்.
இதற்கு முன் பலமுறை அவள் சௌமியாவின் போனை வாங்கி சந்திரா கிருபாவுடன் பேசி இருக்கிறான்.
அந்த உரிமையில் அவள் " அம்மா தப்பா நினைச்சீக்காதீங்க... கொஞ்சம் போன் தரீங்களா ?" என்றாள்.
" எதுக்கு?"என்றாள்.
' கிருபா கிட்ட கிரகபிரேவேஷம் வேலை சொல்லணும்மா., என் போன்ல சார்ஜ் இல்ல"
"..ம்ம் எடுத்துக்கோ" என தலையாட்டி விட்டு அவள் மறுபடியும் புத்தகத்தில் ஆழ.,
சந்திரா சௌம்யாவின் போனை எடுத்துக் கொண்டு அவள் நைசாக வெளியே வந்தாள். அவனுக்கு போன் செய்தாள்.
Su
ReplyDeleteSowmya palayabadi anathe happy than inbetween just for entertainment
ReplyDelete