மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, January 11, 2024

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 82

பெங்களூரில் எல்லா ஸ்டார் ஹோட்டல் பார்ர்டிகளிலும் அவள் சுதந்திரமாக உலா வந்தாள். வீணாவின் கேரியர் கிராஃப் உயர்ந்து கொண்டே போன அந்த நாளில்.,

சென்னையில்., ஜீவாவுக்கு  அவன் மனைவி மலர் விழியுடன் திருமணம் நிச்சயமாக மணப்பெண் மலர்விழிக்கு புடவை வாங்க  தி. நகருக்கு சுகன்யா, பிரபு, வான்டுகள்  என 10 பேருக்கு
ம் மேலாக கும்பலாய் வந்தார்கள்.

சுகன்யாவுக்கு போன் வீணாவிடமிருந்து,.
“ஏய் சுகன்யா எப்படி இருக்க?”
“ஹாய்ய் வீணா. என்னடி பெங்களூருக்கு போனப்பறம் பெரிய ஆளாயிட்டே போல., மாசம் ஒரு பிளாட் வாங்குறியாம்..”
“ ச்சே அதெல்லாம். இல்லடி, ..இப்ப நீ எங்க இருக்கே?”
“ஏன் டி. நகர். குமரன் சில்க்ஸ்ல. நீ?”
“ம்ம்ம் இல்ல.,ஒரு விஷயம் உன் கிட்ட பேசனும்”
“என்ன?”
“ உன்னை ரத்தன் சேட் பாத்தாராம் குமரன் சில்க் வாசல்ல.,”
“……………….”
“என்ன  சுகன்யா? எதுவுமே சொல்ல மாட்டேங்க்கிற?”
“ரத்தன்   சேட்டா?”
“…ம்ம் “
“வேணாம் வீணா.. ரொம்ப தப்பு… காசு முக்கியம் தான். ஆனா., இது ரொம்ப தப்பு…”
“எனக்கு தெரியுது ஆனா அவரு தான் பாவம் கிடந்து அல்லாடுறாரு.. உன்னை யாரு அவர் கண்னில பட சொன்னது?”
“………………”

“எனக்கு அவ வேனும்னு பிடிவாதம் பிடிக்கிறாரு..”
“ நோ வே வீணா.. ஹஸ்பென்ட், பேமிலி , ரிலேஷன்ஸ் கூட இருக்காங்க”
‘சரி இந்த ஆறு மாசத்துல நீ அவரை ஒரு தடவை கூட நினைக்கலியா?’
“..இ.. இல்ல”
“பொய் சொல்லாதே சுகன்யா., அவரை நீ மறந்துட்டேண்னு”
“…………………….”

“ இப்ப தான் கொஞ்சம கொஞ்சமா மறந்துட்டு சராசரி பொண்ணாயிட்டு வரேன்,…குற்ற உணர்வு என்னை கொல்லுது”
“ஏண் உனக்கு வேணாமா?”

“எது?”
“அஞ்சு லட்சம்”
“அஞ்சு லட்சமா? திரும்பவுமா?”
“ம்ம்ம் உன்னை பாத்தாராம் .. உன் மேலேயே  மனசு அடிச்சுக்குதாம்..”
“அடிக்கும்.., அடிக்கும்”
“அவரே  வந்து உங்கிட்ட வந்து பேசியிருப்பார்.

 பேமிலியா வந்திருக்கா’ ன்னு எனக்கு போன் போட்டு  சொல்றார்.. உனக்காக வாசல்ல கார்ல வெயிட் பண்றார்..”
“எனக்கு யாரும் வெயிட் பண்ன வேனாம் , எதுவும்  வேணாம்.. என்னை விட்டுடு வீணா”
“சரி அவர் வேணாம். அவரு தந்த பணம்? அது வேணும் தானே?”
“………………………”
“திரும்ப கொடுத்தா வேணாமுன்னா சொல்வே நீ ? ”
“எ னக்கு கண்டிப்பா வேணாம் வீணா”
“ஓகே அஞ்சு லட்சம்னா வேணாம்.. பத்து லட்சமா?’
“பத்து லட்சமா?”
“கத்தி பேசாதே., உங்க சொந்தக்காரங்க காதுல விழ போவுது”
“என்னடி சொல்றே?”

“ம்ம் டென் லேக்.. நான் கியாரன்டி.. கீழ போய்., அங்க  ஒரு பிளாக் ஆடி கார் இருக்கு பார் . அதுல ஏறு. நெம்பர் 1 ன்னு இருக்கும். ஒன் ஹவர்ல அதே இடத்துல விட்டுருவான்”
“விளையாடாதே. வீணா”,
““………………”
“சரி அவளுக்கு இஷ்டமில்லன்னு சொல்லிடறேன்..”
“………………………….”
“ ஏய்ய் என்ன சொல்லட்டுமா?”

“ என்ன வீணா இது. இங்க எல்லாரும் என் பக்கத்துல இருக்காங்க.. பிரபு கூட இருக்கார். நான் எப்படி விட்டுட்டு போறது சொல்லு..”
வீணா சிரித்தாள்.
“அது ஒன்னும் பெரிய மேட்டரில்ல,  கல்யாண புடவை பர்சேஸ்னா டூ ஹவர்ஸ் ஆகும். அதுக்குள்ள வந்துடலாம். காதும் காதும் வெச்ச மாதிரி.. போய்ட்டு வா”

“..பயமா இருக்கு வீணா”
“ நான் சொல்றதை சொல்லு., புடவை பாத்து கிட்டு இருங்க ., பிரண்ட் ஒருத்தங்களை பாத்துட்டு வந்துடறென்னு சொல்லிட்டு,  கடையை விட்டு கீழ வாடி”
“பயமா இருக்குடி”
“பயமா இருந்தா பத்து லட்சம் கிடைக்குமா? சும்மா வருவாளா சுகுமாரி?”
“எ..எனக்கு அய்யோ எப்படி சொல்றது?ன்னு தெரியலடி. திரும்ப அவர் முகத்தை பார்த்து…” அவளுக்கு உடலெங்கும்  நடுங்கியது.

“ நீ ஏண் அவரு முகத்தை பாக்குறே?..   பாக்கவும்., கையில புடிக்கவும் தான் ஒன்னு இருக்கே”
“ஏய்ய்ய்”
“சரி கீழே போ. நான் லைன்லயே இருக்கேன்”
சுகன்யா கையை பிசைந்தாள். அங்குமிங்கும் அலைந்தாள். என்ன செய்வது இப்போது? கைகால்கள் பரபரத்தது. 

போனை மறைத்து கொண்டு , போய் கணவனிடம் ஒரு பிரண்ட் வெயிட் பண்ணுவதாக வாய் குழறி சொன்னாள். அவனும் போக சொன்னான். சுகன்யா பிரபுவிடம்.,என்னமோ  சொல்லி விட்டு நைசாக நழுவதை ஜீவா குறித்து கொண்டான்.
சுகன்யா இங்கிருப்பதை வீணாவிடம் சொல்வதற்கு அவனும் ஒரு பெரிய பணத்தை வீணாவிடமிருந்து பெற்றிருந்தான்.

“ஏய்ய் லைன்ல இருக்கியா? கீழ வந்துட்டியா? “
“ம் வந்துட்டேன். எந்த கார்?” ரோட்டில் ஓரம் நடந்தாள்
“ஆடி., நம்பர் 9”
“ம்ம் பாத்துட்டேன்., கார் கிட்ட யாருமில்ல.,”
“நீ பின்னாடி சீட்டுக்கு போ., டோர் திறந்து தான் இருக்கு. இருக்கா”
“ஆங்க்.. பபயமா இருக்கு வீணா..”

“என்னடி பயம்.. ஜஸ்ட் அரை மணி நேரம் தானே?”
சுகன்யா போனை காதில் வைத்து கொண்டே தயக்கமாய் கதவை திறந்தாள். யாராவது வீட்டு ஆட்கள்  பார்த்து விட போகிறார்கள் என பயந்து காரில் வேகமாய் ஏற., காரில் ஏறிய பின் தான், பின் சீட்டில் பார்த்து பதட்டமடைந்தாள்.
“ஏ.எ.எ...ய்.ய்ழே… வீணா”  சுகன்யா அதிர்ந்தாள்.
“என்னடி..”

“இது,..இ.. இ… இது ரத்தன் சேட் இல்ல..” சுகன்யாவின் முகம் வெளிறியது.
“ ஹ..ஹ..லோ…. வீணா…”
“வீ.. வீணா.. ணா..”
“..ம்..சொல்லுடி”

“இ.இது ரத்தன் இல்ல்.அ இது வேற யா… யாரோ..?’
“ஆமா.. அவர் பேரு ஹரீஷ்., ஹரீஷ் கிராண்டனி. கூரையை பிச்சிகிட்டு தருவான் ” என்றாள் வீணா.

(இந்த பாகம் முற்றும்)

No comments:

Post a Comment