என் மாறாதஅன்புக்குரிய வாசகர்களே!
திபூவையின் இந்த 35 ஆம் பாகம், திபூவை தொடருக்காக நான் எழுதும் நிறைவு
பாகம்.
வழக்கத்திற்கு மாறான காமகதையாக அல்லாமல் காமத்தை வழிகாட்டும் ஒரு
நீண்ட நெடியநூலாக, இயல்பான நடையில் நமது 'திபூவை'
35 பாகங்களாக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.
2500 எபிசோடுகள், 20 ஆயிரம் பக்கங்களில் அமைந்திருக்கும் தமிழின்
., ஏன் உலகின் நீண்ட நாவலும் இதுவே.
இதில் நான் சொல்ல நினைத்த சிலபாத்திரங்களின் உணர்ச்சி போராட்டங்களை,
முக்கிய நிகழ்வுகளை அன்றைய கதை ஓட்டத்தில் என்னால் சொல்லமுடியாமல் போய்விட்டது.
நான் முன்பே சொன்னபடி அதுபோல விடுபட்ட பாத்திரங்களை வைத்து, மற்றுமொரு
பெரிய பாகத்தினை இப்போது படைத்திருக்கிறேன். நியாயமாக இந்தபாகம் திபூவையின் கதைப்படி,
27க்கு பின் வரவேண்டியது.
அதாவது, ஈஸ்வர் சந்திரனை , சுரேஷ் விசாரிக்க போய் மலர் விழி வாயிலாக
பாலாவை அணுகும் போது துவங்க கூடிய பாகம் இது. அங்கிருந்து இந்த தனிபாகம் துவங்கும்.
இதில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட புதிய பாத்திரங்கள் வரக்கூடிய சாத்தியமிருப்பதால் அதை அப்போதைக்கு தவிர்த்தேன்.
பல டிராக்குகளை கொண்ட ஒரேபாகமாக
அதிகமான பக்கங்களில் வெளியாகி இருக்கும் இந்த 35 ஆம்பாகம் எனக்கு முழு நிறைவினை தந்த
பாகமாகும். 85 எபிசோடுகளைக் கொண்டது.
சினிமா தொடர்பான ஒரு தனி பாகம் பெரிய நாவல் ஒன்று திபூவை வை தொடரில்
வரப் போகிறது என்றதுமே எல்லோருமே "சினிமாவை மையமாக கொண்ட நாவல் எப்போது வெளிவரும்?"
என கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
நண்பர்களே!
இது சினிமாவை மையப்படுத்திய
நாவல் அல்ல, சினிமாவை சொலும் நாவல் அல்ல., அதை பலபேர் எழுதி விட்டார்கள்.
சினிமாவைப் பற்றி இதற்கு முன்பு பல எண்ணற்ற எழுத்தாளர்கள் அதை நுட்பமாக சொல்லி இருக்கிறார்கள். பல்வேறு புத்தகங்களை
எழுதி தள்ளி விட்டார்கள். அவர்களை தாண்டி என்னால் சினிமாவை பற்றி ஏதும் சொல்ல இயலாது. எனவே நான் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையை,
அதன் உண்மையான பின்னணியை அலசி ஆராய்ந்து, முற்றிலும் வேறு ஒரு புதிய கோணத்தில் சினிமாவை
இந்த நாவல் மூலம் அணுகி இருக்கிறேன்.
சினிமா ஒரு கடலுக்கு ஒப்பானது. அதில் ஒரு துளிதான் இந்த நாவல். இங்கே
ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ஒரு கதை, தோல்வி அடைந்தவருக்கும் தனி கதை. வெற்றியின் உச்சியில் இருந்து காணாமல் போனவர்க்கும்
தனிகதை. அதைத்தான் இங்கே தொகுத்திருக்கிறேன்.
'சினிமாவில் உள்ள நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கைகளும் அவர்களது
கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைகளையும் அதனால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளை பற்றியும் சொல்லுகிற
கதை இது.
ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால், எப்படி பல்வேறு குடும்பங்கள் சிதைந்து போகின்றன? என்பதை எனது பாணியில் சொல்லி
இருக்கிறேன்.
இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல, முழுக்க முழுக்க நிஜமும்
அல்ல, நீங்கள் கேட்ட பார்த்த கேள்விப்பட்ட மற்றும் அறிந்தே இருக்காத பல்வேறு நிகழ்வுகளின்
தொகுப்பாகத்தான் இந்த நாவல் உருவாகி இருக்கிறது.
இந்த நாவலை படிக்கும் போதே
உங்களுக்கு இது தொடர்பான இயக்குனரோ, நடிகரோ, நடிகைகளோ உங்களுக்கு நினைவுக்கு வந்துவிடக்
கூடாது, என்பதற்காக நான்கு ஓரிரு நட்சத்திரங்கள் செய்த பல அட்டகாசத்தை தொகுத்து ஒரே
பாத்திரமாக்க முயற்சிக்கிறேன். நீங்கள் கேள்விப்பட்ட ஒரு நடிகரின் குணாதிசயத்தை இங்கே
கதையில் தயாரிப்பாளராக மாற்றி இருக்கிறேன். ஒரு டைரக்டர் பற்றி கேட்ட விஷயத்தை, இங்கே ஒரு நடிகராக மாற்றி இருக்கிறேன்.
ஏனென்றால் நாவலை படிக்கின்ற
பல வாசகர்கள் தங்களது அபிமான நட்சத்திரங்களாக சில பேரை மனதில் வைத்திருப்பார்கள். அவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்த கூடாது என்பதற்காக
தான் நான் இதை செய்திருக்கிறேன்.
நான் அதை மறைத்தாலும்
நிஜம் என்ன என்பது உங்களுக்கும் தெரியும்.
மற்றபடி இந்த பாகத்தை
நீங்கள் முழுக்க முழுக்க கற்பனை கலந்த காமரசமிக்க
நாவலாகவே பார்க்க வேண்டும்.
எந்த ஒரு நிஜ நட்சத்திரங்களுடன்
சேர்த்து வைத்து இதைப் பார்க்காதீர்கள், படிக்காதீர்கள்.
நீங்கள்
தமிழ் திரையுலகில் அறிந்த, அறியாத, கேட்டிராத
விஷயங்கள், உண்மைகள், வதந்திகள், கிசுகிசுப்புகள், திரைக்கு பின்னால் நடந்த வெளிவராத
நிஜங்கள், ஹிட் அடித்த சம்பவங்கள் கேள்விப்பட்டவை
இதெல்லாம் தொகுக்கப்பட்ட பிரம்மாண்ட நாவல் தான் இது.
நீங்கள் நன்றாக அறிந்த நாயகர்களின், நடிகைகளின், வில்லன்களின்
மற்றும் திரையுலக பிரபலங்களின் வெளியுலகிற்கு உரைக்கப்படாத மர்மங்கள் .,மூடி வைக்கப்பட்ட நிஜங்கள்.
இவற்றை இன்ஸ்பிரேஷனாக எடுத்து இந்த நாவலில் எழுதி இருக்கிறேன். அதே சமயம் இந்த நிஜ
மனிதர்கள் மத்தியில், நமது 'திபூவை' யின் ஃபேவரிட் கதா பாத்திரங்கள் சுரேஷ், பத்மா,
ஷ்யாம், பாபு, அகல்யா அப்புறம் பாலா ஆகியோர் எப்படி கதையோடு இணைகிறார்கள்? என்பதை பாருங்கள்.
நான் முன்பே சொன்னபடி இருப்பதிலேயே இது தான் ' ஹைப்பர்
பேன்டஸி ' நாவல்.
பாகம்
27 மற்றும் 28 க்கு இடையே , இதை விரிவாக எழுத நினைத்து, இதன் பிரம்மாண்டத்தை கவனத்தில் கொண்டு
தான் அப்போதைக்கு தவிர்த்து விட்டு விட்டேன்.
இது நான் எழுத நினைத்ததை விட சிறப்பாக வந்திருப்பதாகவே கருதுகிறேன்
நிச்சயம் திபூவையின் எல்லா பாகங்களிலும் இது மிகப்பெரிய
மணிமகுடமாக இருக்கும். அதே சமயம் வாசகர்களுக்கு தீனியும் (!) இதை வழங்கியிருக்கிறேன்
என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த கதையின் இந்த நாவலை
முழுவதும் நீங்கள் உள்வாங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வரியும் விடாமல் படிக்க வேண்டும்.
இந்த நாவல் முழுதும் படித்து முடித்து விட்ட பிறகு உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகள்
நிச்சயம் விவரிக்க முடியாத அளவிற்கு உங்களை உணர வைத்து இருக்கும். அது உறுதி.
எதிர்பாராத திருப்பங்கள், சுவையான பாகங்கள், லாஜிக்கான நகர்வுகள்,
சுவாரசியம் விறுவிறுப்பு எல்லாம் கலந்த இந்த பாகத்தினை முந்தையை பாகமெல்லாம் படிக்காமல்
படிக்காதீர்கள். அட்லீஸ்ட் 27, & 28 ஆவது பாகத்தை படிக்காமல் இதை படிக்காதீர்கள்.படிக்கப்
படிக்க சுவாரஸ்யம் குறையாத இந்தபாகத்தில் வருகிற எல்லா காட்சிகளும் உங்களது எதிர்பார்ப்பை
பெருமளவு ஈடுசெய்வதாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இதில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகள் உங்களை திகைக்க வைக்கும்.
நிஜத்தின் வீச்சை பளீரென சொல்லும்.
மறக்காதீர்கள்! இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன
அல்ல.,
- என் வி
No comments:
Post a Comment