அபர்ணா அவளின் உயரத்துக்கும், உடலமைப்பிற்கும் ஏற்ற கண்னை உறுத்தாத ஒரு வெளிர் நீல நிறத்தில் சுரிதாரை அணிந்திருந்தாள். இயல்பிலேயே அழகு என்பதால், அதிக அலங்காரம் இல்லை. பாசாங்கு இல்லை. போலி மரியாதை இல்லை .அவள் அவளாகவே இயல்பாக இருந்தது சௌமியாவுக்கு பிடித்திருந்தது . மூக்கும் முழியும் இவ்ளோ லட்சணமா?
அந்த வெளிச்ச அறையில் நடு நாயகமாக தங்க நிலவு போல ஜொலிக்கும் சௌமியாவை பார்த்தவுடன் அபர்ணாவுக்கு உள்ளுக்குள் பேரதிர்ச்சியாக, பெரும் திகைப்பாக இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இயல்பாக வணக்கம் சொல்ல.,
" உட்காரும்மா உன் பேரு அபர்ணா. மதுரை ஓகே. என்ன படிச்சிருக்க ? ஓ.. பிஏ கார்ப்பரேட் செகரட்டரியா ? இதுக்கு முன்னாடி பிஏவா ஒர்க் பண்ண அனுபவம் இருக்கா ?" பைலை பார்த்துக்கொண்டே கேட்டாள்.
"அனுபவம் இல்ல மேடம் பட் மார்க்கெட்டிங்கில் தான் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இரண்டு வருஷமா மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருந்தேன். "
" சோ யூ நோ வெரி வெல், அபௌட் ஹவ் டு அப்ரோச் அதர்ஸ் "
"எஸ் மேடம் ஓரளவு"
அபர்ணா அவளுடைய கல்வி குடும்பம் பற்றியெல்லாம் அவளிடம் சுருக்கமாக சொல்லிக் கொண்டே இருந்தாள்.
எல்லா கேள்விகளுக்கும், கேட்ட பிறகே, கருத்தூன்றி கவனித்து பதில் சொல்வது சௌமியாவுக்கு பிடித்திருந்தது. பேசும்போதே இடைமறித்தால் கூட, சட்டென பேச்சை நிறுத்தி கேட்கும் அவளின் பழக்கம் சௌம்யாவை கவர்ந்தது,
இந்த பத்து நிமிடத்தில் ஒரு முறை கூட அவள் சௌமியா பற்றியும், கர்நாடக இசை பற்றியும் பேசாமல் இருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது.
" பி ஏ இண்டியன் மியுசிக் படிச்சுட்டு., நம்ம பக்கம் வராம, ஏன் மார்கெடிங்க் சைட்? ஏன் இப்படி டபுள் மைண்ட்? "
'இல்ல மேடம் அப்பா நாயன வித்துவானா இருக்காரு . ஐ மீன் இருந்தாரு, அதனால எனக்கு கர்நாடகா சங்கீதம்னா ரொம்ப பிடிக்கும். அது இயல்பாக கத்துக்க ஆரம்பிச்சேன் .ஆனா அப்பா தான் சொன்னாரு வெறும் கர்நாடக இசை பாட்டு சோறு போடாது.என்ன மாதிரியே கஷ்டப்படுத்தும் அப்படின்னு சொன்னாரு .ஏன்னா அவரு நாயனத்தால காசு சம்பாதிக்கல."
" ஆனா பணம் சம்பாதிக்க கலைய தேர்ந்தெடுக்கக்கூடாது இல்லையா ?"
"உண்மைதான் மேடம் ஆனா சோறு கூட போடலைன்னா அந்த கலையை வைத்து என்ன பண்றதுன்னு எங்க அப்பா கேப்பாரு. இருக்கறவங்களுக்கு கலை அங்கவஸ்திரம்., இல்லாதவங்களுகு அது வேட்டின்னு சொல்வாரு"
'.....ம் கிரேட். வாஸ்தவம் தான் எல்லாருக்குமே எல்லாமே அமைஞ்சிடாது ."
" அப்பா ரொம்ப கேட்டுக்கிட்டார்ன்னு அவருக்காக பிஏ கார்ப்பரேட்ஷிப் படிச்சேன். ஆனா, எனக்கு பிடிச்சது இந்தியன் மியூசிக். நான் ரெண்டுத்துலயுமே ரொம்ப கம்பார்டபிளா இருக்கிறதா நினைக்கிறேன் "
' சரி. ஒரு ஜென்ரலா பிஏக்கு ஒர்க் என்னவா இருக்கும் ?"
"அது பாஸை பொறுத்து இருக்கும் மேடம். அவரோட டிரேட், ரொட்டின் ஒர்க் பேஸ் பண்னியும் இருக்கும். சில பேர் கூட, ஒர்க் அதிகமா டென்ஷனா இருக்கும். சிலருக்கு அது இல்லாமயும் போகும் :'
"புரியல"
" ஒரு அரசியல்வாதியுடைய வேலை வேறு விதமாக இருக்கும். அதுவே ஒரு தொழில் முனைவோர் அதான் ஆன்டர்பியுனர்க்கு பிஏ வேலைன்னா, அப்படியே வேறு விதமாக இருக்கும். பாய்ஸ் படத்துல செந்தில் சாருக்கு வர தூக்குச்சட்டி பையனும் பிஏ தான். கூகுள் பிச்சைக்கு வர்ர அமிர்தராஜூனும் பிஏ தான். ஆனா ரெகுலர் பிஏ ன்னா, அதுக்கு எல்லாம் நிறைய ஆளுங்க மார்க்கெட்ல இருப்பாங்க.. உங்க ரெக்யூர்மென்ட் கொஞ்சம் ரேர் தான்"
'சரியா சொல்றே?"
" கர்நாடக இசை, சங்கீதம், மேடை ,கச்சேரி, பார்ட்டி., வீடுன்னு இருக்கிற ஒரு ஃபேமஸ் விஐபி லேடிக்கு பிஏவா இருக்கிறது ஈசி இல்ல மேடம் .ரொம்ப கடினம்"
" ஏன்?"
" ஏன்னா நாங்க உங்க சார்பா பேசணும். உங்கள பாதுகாக்கணும் . ஈவன்ட் பிக்ஸ் பண்ண்னும். சாலரி , ரெம்யூனீஸ்ரேஷன் பேமென்ட் ஃபாலே அப் பண்ணனும், உங்களை வெளியே கூட்டி அழைச்சிட்டு போயி ரொம்ப பாதுகாப்பா கூட்டிட்டு வரணும். அதுவுமில்லாம லேடிஸ் அப்படி என்றதால அவங்களோட சேப்டி எல்லாம் அந்த பிஏ தான் பாத்துக்கணும்" சொன்னதும் அவள் சிரித்து விட்டாள்.
" அப்படி எல்லாம் நீ ஒன்னும் பயப்படறாப் போல இருக்காது "
'இல்ல மேடம் பொதுவா சொன்னேன் "
'என்னுடைய டிரைவரே ஒரு பவுன்சர் போல என்னை பாதுகாப்பா பாத்துக்குவான்."
"எஸ் மேடம்! இருந்தாலும் அவர் ஒரு ஆண் என்றதால் எல்லா இடத்துலும், அந்த ஆளு உங்க கூட இருக்க முடியாது. நான் பிஏ ஆகிட்டா., அந்த பவுன்சர் கூட, என்னுடைய பாதுகாப்பு வளையத்தின் மீதுதான் உங்ககிட்ட வர முடியும்"
' ரொம்ப வாய் பேசுற பொண்ணா இருக்கே ?" என்றதும் இருவரும் சிரித்து விட்டார்கள்.
" சரி ரொம்ப தாங்க முடியாம கேக்குறேன் ., என்னை பத்தி கேள்விப்பட்டு இருக்கியா? இல்லையா? என் கேரியரை கண்டுக்கவே மாட்டிறியே"
" மேடம் உங்கள பத்தி தெரியாம என்ன? இந்த ஜென்ரேஷன்ல உங்கள பத்தி தெரியாம ஒருத்தர் கர்நாடக சங்கீதம் பாட முடியுமா? ரொம்ப நல்லா தெரியும் மேடம்"
" சரி கர்நாடக இசை ?"
"ஓரளவு தெரியும் மேடம்"
" எதுமே பாடி காட்டலயே நீ? என்ன பத்தியும் எதுவும் நீ சொல்லலயே. அதாவது என்ன இம்ப்ரஸ் பண்ணவே இல்லையே நீ"
" ஏன் மேடம் நான் உங்களை இம்ப்ரஸ் பண்ணனும்? நான் உங்களுக்கு பிஏவா உதவ தானே வந்து இருக்கேன்? உங்களுக்கு போட்டி பாடகியாவா வந்து இருக்கேன்?" அபர்ணா சொன்னதும் சௌமியா அழகாக சிரித்தாள். அந்த சிரிப்பு ஒன்றே போதும், சம்பளம் கூட ரென்டாம் பட்சம் என தோன்றியது அபர்ணாவுக்கு. அம்மாவிடம் போய் இதெல்லாம் சொல்லி வாயடிக்க வேண்டும் என நினைத்தாள் அபர்ணா,.
" மேடம்! இப்போ உங்களுக்கு தேவை உங்க கூட ஒத்சாசையா, உதவியா, சினேகிதியா இருக்கக்கூடிய ஒரு அசிஸ்டன்ட். உங்க யூட்யூப் ஸேனல், புக்ஸ் ஒர்க்ல ஹெல்ப பண்ணனும்., டிராவல்ல கேரிங்கா இருக்கனும். அவங்க லேடியா இருந்தா நல்லது. அதிலும் உங்கள பத்தி தெரிஞ்சவங்களா இருந்து கர்நாடகா மியூசிக் தெரிஞ்சிருந்தா ரொம்ப ரொம்ப நல்லது .நீங்க அப்படிப்பட்ட ஒரு பொண்ணு தான் தேடிட்டு இருக்கீங்க"
" ஓ அது நீயா?"
"அப்படின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் நானாவும் இருக்கலாம் "
மறுபடியும் சௌமியா சிரித்தாள்
"சரி என்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்ற,. என் பாட்டெல்லாம் கேட்டு இருக்கேன்னு சொல்ற., என்னைப் பார்த்த உடனே என் கூட ஒரு போட்டோ கூட பிடிக்கனும் உனக்கு தோணவே இல்லையே"
" மேடம் .,மேடம் எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லைன்னு யாரு சொன்னா. இதுவே உங்களை வெளியே இடத்தில பொது இடத்தில் பார்த்தேன்னா விழுந்தடிச்சு போட்டோ எல்லாம் பிடிச்சி உங்கள ரொம்ப தொந்தரவு பண்ணி இருப்பேன். ஆனா இங்க வந்திருக்கிறது நான் என் வேலைக்காக . இங்க என்ன விட உங்கள விட, எனக்கு இப்ப வேலை தான் முக்கியம். வேலை கிடைச்ச அப்புறம் உங்க கூட செல்பி எடுத்துட்டா போச்சு. " என்றாள்.
"அய்யய்யோ உன் கூட பேசியே ஜெயிக்க முடியாது போல இருக்கே ? தேங்க் காட்! அபர்ணா! காலைலிருந்து செல்பி, எடுத்துக்கிறேன் குரூப் போட்டோ எடுத்துக்கிறேன்னு சொல்லி ஒரே தொந்தரவு .ஏன்டா இப்படி ஒரு ஓபன் இன்டர்வியூ பண்ணேண்னு தெரியல. ஓகே பை த வே நீ கிளம்பலாம்"
' சரிங்க மேடம் ரொம்ப தேங்க்ஸ் மேடம் "
' நீ செலக்ட் ஆயிட்டியா இல்லையா அப்படின்னு எதுவுமே கேட்கலையே"
" செலக்ட் ஆனீங்கன்னா ரிஜஸ்டர் போஸ்ட்ல ஆர்டர் அனுப்புவீங்கன்னு கேள்விப்பட்டேன். சோ ஐ அம் வெயிட்டிங் ஃபார் யுவர் ஆடர் "
சௌமியா விழுந்து விழுந்து சிரித்தாள்.' நீ ரொம்ப கிளவர் அதேசமயம் இன்னொ சென்டா இருக்குற போல நடிக்கிற. நீ அப்பாயின்மென்ட் ஆயிட்டேன்னு உனக்கு உனக்கே நல்லா தெரியும் "
'மேடம் அப்ப ஆர்டர், அந்த பார்மாலிட்டிஸ் எல்லாம்.?"
" வேணாம் . சரி உனக்கு யூட்யூப் சேனல், வீடியோ எடிட்டிங்..பேஜ் டிசைனிங் இதெல்லாம் நல்லா தெரியுமா? ரேஸ்யூம்ல சொன்னதெல்லாம் நிஜம் தானே? இல்ல பேஜ் பில்லிங்கா?"
" நல்லா தெரியும் மேடம். எங்க பழையை கம்பெனி யூ ட்யூப் சேனல்., சோசியல் மீடியா போஸ்டிங்க்லாம் நான் தான் பாத்துப்பேன். புரஷர் டிசைனிங்க் நான் தான். இன்ட்சைன், கோரல்டிரா எல்லாம் அத்துப்படி. த்ரி இயர்ஸ் எக்ஸ்பீர்யன்ஸ் "
"ம்ம் எங்களுக்கு லேன்ட், பங்களா, பிராப்பர்டி, பெட்ரோல் ஏஜென்சி இதெல்லாம் இருக்கு., கலக்ஷன் போகனும். அக்கவுன்ட்ஸ் பாக்கனும்.. என் அப்பாய்ன் மென்ட்ஸ்லாம் பாக்கனும்... "
"கண்டிப்பா மேடம். அட்மின் அன்ட் பீல்ட் ஒர்க் ஆல்வேஸ் ஆசம்'
அவளது நேர்மறையான பதில்கள் சௌம்யாவுக்கு பிடித்து போக
" சரி.. நாளைக்கு அஷ்டமி அதுக்கு மறுநாள் நவமி. சோ திங்கள்கிழமைல இருந்து நீங்க ஜாயின் பண்ணிக்க , " என்றதும்
"அய்யோ மேடம் நான் செலக்ட் ஆவேன்னு நம்பிக்கை இருந்தது. ஆனா வெளியே இருந்த கூட்டத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன் . ஆனாலும் உள்ள மனசுல ஏதோ ஒன்னு சொல்லுச்சு கண்டிப்பா உங்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன்., அப்படின்னு என சொல்லி, அவள் கை நீட்ட, சௌம்யா அவள் கையை நட்புடன் பிடித்துக் கொண்டாள் .
"மேடம் இங்க தங்கறதுக்கு ரென்ட்டட் ஹவுஸ்லாம் கிடைக்கும்ல?'" தயங்கி தான் கேட்டாள். சௌம்யா சிரித்தாள்.
"ஏன் ரென்ட் ஹவுஸ்? இவ்ளோ பெரிய வீடு போறாதா உனக்கு?"
"இ..இ...ங்கேயா?' ஒருவேளை அவுட் ஹவுஸை சொல்கிறாளோ?
" யெஸ் ஆறு பெட்ரூம்ஸ் இருக்கு. இதுல எதுன வேணா தங்கிக்கலாம். என் ரூமை தவிர:"
இந்த வீட்டுக்குள்ளேயாவா?
"மேடம்..?' அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள்.
சம்பளம் எவ்வளவு என கேட்கலாமா?.. என்று நினைத்தாள். கேட்டால் நம்மை அல்பமாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? அதற்காக பத்தாயிரம் கொடுத்தால் வாங்கிக் கொள்வதா? என அவள் குழப்பம் அடைந்தாள். மறுபடியும் அவளுக்கு வணக்கம் சொல்லிவிட்டு திரும்ப.,
" இரு அபர்ணா., கொஞ்சம் வெயிட் பண்ணு., ஒர்க் கன்பர்ம் ஆர்டரோட போனா, உங்க அப்பா அம்மா சந்தோஷப்படுவாங்க இல்ல?" என சொல்லி அவளே ஆர்டரை ரெடி செய்து கொடுத்தாள்.
ஆர்டரை படித்துக் கூட பார்க்காமல் சௌமியாவுக்கு சிரித்தபடியே வணக்கம் சொல்லிவிட்டு பையோடு அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
சாலையில் இறங்கி நடந்த உடனே ஆர்டரை பிரித்து பார்த்தாள். அட..!
சம்பளம் 60 ஆயிரம் இருந்தது.
அய்யோவ்வ்வ்வ்
அவளுக்கு தார்ச்சாலை தங்கச்சாலையாக ஜொலித்தது.
‘அப்பனே முருகா உனக்கு ஒரு கோடி நன்றி?’ என்றாள்.
Enna oru thelivaan narration?
ReplyDeleteEnakkE velai kitaicha maathiri oru feellling.. NV.,is the best writer in Characterization
ReplyDelete