மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, September 13, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 139

30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டுக்கு, இரண்டு குழந்தை போதும்’ என கருத்தடை மையங்கள் ஆங்காங்கே உற்பத்தி ஆகின.

சரியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு, கருத்தடை மையங்களுக்கு பதிலாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் வர துவங்கி விட்டன. எல்லாமே   திட்டமிட்ட கார்ப்பரேட் சதி. உலகின் எந்த மூலையும் விட தென்னகத்தில் தான் வீட்டுக்கு பத்து குழந்தைகள், பதினைந்து குழந்தைகள் பெற்ற மூதாதையர்கள் இருந்தார்கள். மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப  உணவினையும் பால் வளத்தையும் பெருக்காத அரசுகள் மாறாக பிள்ளேபேறுக்கு கத்தரி போட்டது. கருத்தடை என்னும் நாகரீக வில்லன் பெற்ற குழந்தை தான் இன்று நாம் காணும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்.

இப்போதெல்லாம் திருமணம் ஆன பிறகு சாதாரணமாக கணவன் மனைவியாக வாழ்ந்து இயற்கையான முறையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதிகளுக்கு முன்னோர்களைப் போல போலவே இயற்கையாக குழந்தைகள் பிறப்பது என்பது அரிதாகி விட்டது. பத்து திருமணங்கள் நடந்தால் அதில் இரண்டு பேருக்கு தான் வருடம் திரும்புவதற்குள்ளாகவே குழந்தை பேறு உண்டாகிறது.

மற்றவர்களுக்கெல்லாம் தாமதம் ஆகிறது அல்லது சிகிச்சைக்கு பிறகு தான் குழந்தை பிறக்கிறது. அதுவும் முடியாத போது இருக்கவே இருக்கிறது செயற்கை கருத்தரிப்பு மையங்கள்.

 குழந்தைப்பேறின்மைக்கு எல்லா தம்பதியருக்குமே உடற் சார்ந்த பிரச்சினைகள் தான் என அறுதியிட்டு சொல்ல முடியாது. உடலுறவு செய்வதில் ஏற்படக்கூடிய முறைகள், கோணங்கள், சூழல்கள் இருவருக்கும் உண்டாகக்கூடிய மனக்கிளர்ச்சி, அதில் ஏற்படக்கூடிய குறைபாடு என நிறைய காரணங்கள் இருக்கிறது.

அவர்களுக்கு முறையாக, முழுமையாக அறிவுறுத்தினால் அவர்களுக்குள் இயற்கையாகவே கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் பெரும்பான்மை மருத்துவர்கள் அப்படி சொல்வதில்லை. நகரத்தில் உருவாகியிருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் பல மிகவும் ஆபத்தானவை. பயங்கரமானவை.

ஒரு பெண்ணுக்கு கருத்தரிப்பு நிகழாமல் போய்விட்டால் அவளுக்கு வேண்டுமென்றே செயற்கையாக மாறுவதற்கு தள்ளி போவதற்கு மாத்திரை கொடுத்து தொடர்ச்சியாக இரண்டு மூன்று மாதங்கள் அவளுக்கு அப்பெண்ணுனுக்கு மாதவிலக்கு தள்ளிப் போக
“ ஆஹா பாருங்கள் நாங்கள் சரியான முறையில் மருத்துவம் உங்களுக்கு உங்கள் வயிற்றில் குழந்தை நிற்க வைத்து விட்டோம்’ என சொல்லி தற்காலிக சந்தோஷத்தை அளிப்பார்கள். நம்ப வைப்பார்கள். அதற்குப் பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு மாதவிலக்கு உண்டாக, “ நாங்கள் என்ன செய்ய முடியும்? கரு நிக்க  வெச்சோமில்ல?”  என சொல்லி காசு பிடுங்குவார்கள்.

இது போன்ற சில ஆபத்தான கருத்தரிபு மையங்கள் சத்தமில்லாமல் தங்கள் வேலையை காட்டிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் நமது வயிற்றில் கபட நாடகம் ஆடுகிறார்கள் என்கிற உண்மை கூட தெரியாமல் மறுபடியும் அவர்களிடமே போய் ட்ரீட்மென்ட் எடுத்து கொள்கிறார்கள் தம்பதிகள்.

“ கவனிங்க..! ஒரு கப்பூள்.., நம்மகிட்ட, சைல்ட்க்கு வராங்கன்னா உடனே அவங்களுக்கு 100& ட்ரீட்மென்ட் கொடுத்துடாதீங்க., அவங்கள வெச்சு நாலஞ்சு அட்டெம்ப்ட் பண்ணிட்டு அஞ்சாவது அட்டெப்ட்ல தான் நாம புள்ள கொடுக்கலாம்’  என அங்கு இருக்கக்கூடிய தலைமை டாக்டர்கள் ஓபன் ஆகவே இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கும் அவலங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

 எப்படி குழந்தைகளுக்கான உடைகள், விளையாட்டு பொருட்கள், படிப்புகள் என்பதெல்லாம் மிகப்பெரிய வர்த்தகமாகி போனதோ, அதேபோலத்தான் குழந்தை பிறப்பது என்பதும் இங்கே மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கிறது.

இன்றைய நாகரீக நவீன யுகத்தில் கண்டதையும் சாப்பிட்டு விட்டு, நார்மலான வாழ்க்கை முறையிலிருந்து விலகி முறைதவறி இருக்கக்கூடிய இளைய தலைமுறைகள் செக்ஸில் கரை காணாலமே தவிர , பிள்ளை என்கிற முழுமையான விஷயத்தை பெறுவதில் ஏராளமான சிக்கல்கள் நடைமுறையில் உள்ளன.

கரு உருவாவதற்கு பொறுமையும், நிதானமும் இயற்கையான சரியான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற கவனம் வசதி படைத்த பலருக்கும் இப்போது  இருப்பதில்லை. இவர்களைத்தான் கருத்தரிப்பு மையங்கள் குறி வைகின்றன.

இன்னும் சில கருத்தரிப்பு மையங்கள் இருக்கின்றன. அவர்கள் பெண்ணின் கருப்பை மற்றும் கருக்குழாய் சரியான முறையில் இருந்து கணவன் விந்தணுவில் குறைகள் இருந்தால் அவற்றை சரி செய்வதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை செய்வார்கள். அதில் வெற்றி பெறாமல் போனால், அந்த தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் தம்பதியரின் அனுமதி கூட பெறாமல் வேறு ஒருவரின் விந்தணுவை எடுத்துக் கூட மனைவியின் சினைப்பையில் செலுத்தி செயற்கை கருத்தரிப்பை செய்து விடுகிறார்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதியர்கள் இதுபற்றி எல்லாம் பெரிதாக ஆராய்ச்சி செய்வதில்லை. யாரின் விந்துவையோ சுமந்து பிள்ளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இங்க பெரும்பான்மையான தம்பதிகள் குழந்தை இல்லை' என்றாலே, முதலில் அவர்கள் சொல்வது செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தான். ஆனால் அது தவறு.

அவர்கள் முதலில் தன்னுடைய குடும்ப டாக்டர் மற்றும் நம்பகமான  செக்ஸ் கிளினிக் போன்றவற்றை அணுகி அவர்கள் சொல்லும் ஆலோசனை கேட்டு அதிலும் தோல்வி,  அடைந்தால் கடைசி முயற்சியாக தான் கருத்தரிப்பு மையங்களுக்கு செல்ல வேண்டும். அதிலும் நம்பகத்தனமான செயற்கை கருத்தரிப்பு மையங்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மையங்கள் குறித்து நிறைய "கூகுள் ரிவியூஸ்" படிக்கவேண்டும். அதிலும் குறிப்பாக நெகடிவ் கமென்டுகள் எத்தனை பேர் போட்டிருக்கிறர்கள் என்பதை ஆராய வேண்டும். ஒரே நாள்,  ஒரே நேரம் போட்ட கமென்டுகள் எல்லாம் பெரும்பாலும் அந்த நிறுவனங்கள் தூண்டுதலின் படி போடுவதாகும்.

டிவியில் பேட்டியை பார்த்துவிட்டு உடனே காரை எடுத்துக் கொண்டு எனக்கு பிள்ளை வேண்டும்' என போய் நிற்பது நமக்குள்ள அவசரத்தை அவர்களுக்கு காட்டும்.  நமது அவசரம் தான் அவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்பையும் சம்பாத்தியத்தையும் பெற்று தருகிறது அதுபோல அடிக்கடி மருத்துவமனையும் மாற்றக்கூடாது. டாக்டரையும் மாற்றக்கூடாது.

இந்த விஷயத்தில் மதுமிதா, தீனதயாளன் தம்பதிகள் எல்லா தவறையும் செய்து கொண்டே இருந்தார்கள். எங்கே போனாலும் அவளுக்கு தோல்விதான் பரிசாக கிடைத்தது.

இதற்கு நடுவில் மதுமிதாவின் கருமுட்டையில் தரம் இல்லை அதன் உற்பத்தியை தூண்டவேண்டும் என சொல்லி அளவுக்கு அதிகமான ஹார்மோன் ஊசிகளையும் மாற்றி களையும் போட்டு விட, அவளுக்கு மறுபடியும் வந்த சோர்வும் அயற்சியும் அதிகமானது.

'இனி குழந்தையை வேண்டாம்'  என்ற முடிவுக்கு மது வந்துவிடும் போது தான் அவளுக்கு தெரிந்த உறவுக்கார பெண்ணை ஒரு பங்கஷனில் சந்தித்தாள்.

அவள் நளினி. அவள் டி பார்ம் படிக்கும் போது கல்லூரி செலவுக்கு அவளுடயை தாய், ‘தன் விளை நிலத்தைக் கொண்டு போய், மதுமிதாவின் தந்தையிடம் விற்பதற்காய்  நிற்க ,அட பயிர் விளையற பூமிய போய் விக்குறேங்கறே? இவளுக்கு பின்னால் பசங்க இருக்குதுல்லே”

“அம்பதாயிரம் ரூவா கேக்குறாங்களே” மதுமிதாவின் அம்மா தயங்க,

“சரி அடமானம் எழுதி தா. நா ரூவா தரேன்.. வட்டில்லாம் வேணாம் போ..கொடுத்த  காசுக்கு பாதுகாப்பா உன் நிலம் இருக்கட்டும்.. போ”

அன்று, மதுமிதாவின் தந்தை செய்த உதவி தான், நளினியை  டி. பார்ம் படிக்க வைத்து இன்று, பெரிய லேடி டாக்டரின் கிளினிக்கின் உதவியாளாராகி வைத்திருக்கிறது. புடவையில் பெரிய இடத்து பெண் போல, காட்சியளித்தாள்.

.பேசி வெகு நாளாகி விட்டது. பார்த்ததுமே ஓடி வந்து கட்டிக் கொண்டாள். திருமணத்துக்கு ஏண் வரவில்லை?’ என கோபித்துக் கொண்டாள்.

“வீட்டுக்கார் எங்கடி?”

“மும்பைல வேலை.. அப்பப்ப வருவார்”.

”எத்தனி பசங்கடி?”...

“ரெண்டுக்கா., உங்களுக்கு? “ அவள் திருப்பி கேக்க.,

அவளுக்கு முகம் சுருங்கி போனது. தன் உடல் மீது நடந்த மருத்துவ வன்முறை பற்றி சுருக்கமாக மதுமிதா எடுத்துரைக்க.,

““அக்கா எங்களுக்கு கூட முதல் வருஷம் குழந்தை இல்லை. ஆனால் இதை தள்ளிப் போடக்கூடாது அப்படின்னு நாங்க உடனேயே ட்ரீட்மென்ட் எடுத்துட்டோம். இப்போ டு கிட்ஸ். ஆனா  நீங்க எதையுமே முறையா செய்யல.  நீங்க ஒரே டாக்டர்கிட்ட போகல, இதான் உங்க பிரச்சனை. இப்ப பண்ண தப்பு எல்லாம் விடுங்கக்கா.  நீங்க எங்க கிளீங்க் வாங்கக்கா. எங்க டாக்டர் மேடம் ரொம்ப கரெக்ட்டா பாப்பாங்க”

ரெண்டு நாள் கழித்து நளினி. தன்னுடைய கிளீனிக்கிற்கு அவளை அழைத்துச் செல்ல,  பெண் டாக்டரும் பரிசோதித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு தான் அது நடந்தது. ஷில்பாதான் மதுமிதாவுடன் செண்றிருந்தாள்.


 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment