மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, September 12, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 138


“மது! ஒரு பொண்ணுக்கு கருத்தரிப்பு நிகழலைண்னா, அவளை பொறுத்த வரைக்கும் முதல் பிரச்சனை இர்ரெகுலர் பீரியட், அதாவது ஒழுங்கற்ற மாதவிடாய், அதுக்கப்புறம் தைராய்டு சம்பந்தமான நோய், நம் உடம்பில் இருக்கிற எல்லா அமிலங்களும் சரியான அளவுல சரியான நேரத்தில் சுரந்தா தான் அந்த கருத்தரிப்பு நிகழும்.”

“..................”

“லேடீஸ் உடம்புல அதிக அளவு  அமிலம் சுரந்தாலும் கருத்தரிப்பு நிகழாது. அதனால உன்கிட்ட இதெல்லாம் நான் டெஸ்ட் பண்ண வேண்டியதா இருக்கு அது மட்டும் இல்ல ஆணோட உறுப்பில் இருந்து வெளிவர விந்தணு, உன்னுடைய கருப்பையை கரெக்டா போய் அடையனும். ஒருவேளை கருப்பைக்கும் உன்னுடைய வெர்ஜினா பகுதிக்கும் நடுவில் இருக்கக்கூடிய கருக்குழாயில் சின்ன சின்ன வியர்குரு சைஸ் கட்டிகள் இருந்து அடைச்சிக்கிட்டா அத கருக்குழாய் அடைப்பு என்று சொல்கிறோம் “

‘................ஓ அதை தான் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை மூலமாக நம்ம அதை சுத்தம் செய்யணும் னு சொல்றீங்களா டாக்டர்? “

“பாத்தியா?  அவசரப்படுறே?, கர்ப்பப்பை கட்டி என்பது வேற கருக்குழாய் அடைப்பு என்பது வேற. உனக்கு என்ன பிரச்சனை என்று டெஸ்ட் பண்ண தானே தெரியும்“ ஒன்னுமே பலனளிக்கலனா தான் லேப்ரோஸ்கோப்பி . மத்தபடி டேப்லடே போதும்,”

“ பயமா இருக்கு டாக்டர்”

‘ ஒன்னும் பயப்படறதுக்கு இல்ல, உங்க வீட்டுக்காரர் உடம்புல இருந்து விந்தணுக்கள் முழுமையாக இருக்கிறது. 100% ஆரோக்கியமா இருக்கு கவுண்டிங் சரியா இருக்கு. ஆனா அது உன்னுடைய கருப்பையில ஏன் சேர மாட்டேங்குது தெரியல. அத பத்தி எல்லாம் நம்ம டீடைலா ஆராய்ச்சி பரிசோதிச்சா தாணே நமக்கு தெளிவா புரியும்” என்றாள்.

“இங்க பாரு மதுமதி கருத்தரிப்பு நிகழ்ந்தா ஆணும் காரணம், பெண்ணும் காரணம்,  கருத்தரிப்பு ஆனாலும். ஆணும் காரணம், பெண்ணும் காரணம்,. ஒருத்தருக்கு நார்மலா பீரியட் வந்தாலும், மாதம் மாதத்திற்கு ஒருமுறை வர கருமுட்டை தரமா இல்லன்னாலும், நீரிழிவு , பிரஷர் மாதிரி பல பிரச்சனை இருந்தாலும். ஏற்கனவே கரு குழாயில் ஏதாச்சும் சிகிச்சை எடுத்து இருந்தாங்க அப்படின்னும் போதும் இந்த பிராப்ளம் வரத்துக்கு சான்ஸ் இருக்கு. எது இருந்தாலும் செக் பண்ண தான் முழுசா தெரியும்

உன்னைப் பொறுத்தவரை உடல் ரொம்ப பெர்பெக்ட்டா இருக்கு,  நோ பிரஷர், நோ சுகர், நோ செரிமாண கோளாறு., “

“யெஸ் டாக்டர்’

‘ஆனா உள்ள தான் என்னமோ பிராப்ளம் ., “

“ சரிங்க டாக்டர் என்னை செக் பண்ணுங்க டாக்டர்.” என அரைமனதாய் தலையசைத்தாள் மதுமிதா. டெஸ்ட் செய்துவிடு இரண்டு நாள் கழித்து போனாள்,

“ உனக்கு  நீர்க்கட்டி இருக்கும்மா”

“டாக்டர்”

“கருக்குழாய் அடைப்பு.. அதுக்கு சிகிச்சை எடுத்துக்கனும்”

“லேப்ரோஸ்கோப் பண்ணனுமா டாக்டர்?”

‘வேன்டியதில்ல., ஜஸ்ட்  ஒன்னு ரென்டு தான் இருக்கு. மெடிசன்ல கரைச்சிடலாம். மூனு  மாசம் ட்ரீட்மென்ட்டுக்கப்பறம் பாப்பா  நிக்கறதுக்கு மெடிசன்  எழுதி தரேன்”

அந்த எம்.டி எம். எஸ் படித்த லேடி டாக்டர் இரண்டு விதமான மாத்திரைகள் மட்டுமே எழுதி தந்தார்.

மூன்று  மாதம், கழித்து அவள் போக அந்த டாக்டர் இல்லை. அவள் திகைத்தாள்.

“அனுராதா பாலகிருஷ்ணன் இல்லையே! அவங்க ஃபாரீன்  போய் ஒன் மந்த் ஆகுதே? வேற டாக்டர் இருக்காங்க பாக்கறீங்களா? உங்க சாய்ஸ் தான்” ரிஷப்ஷன் பெண் சொன்னாள்.

வேற வழி., புது டாக்டரிடம் போக.,

முதலில் இருந்து டெஸ்ட் எடுத்தால் தான் ஆச்சு’ என சொல்லப்பட பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவுகள், பரிசோதனைகள், அறிக்கைகள், முடிவுகள். வந்தபின்,.

“கல்யாண, ஆகி ரென்டரை வருசம் ஆகியும் குழந்தை இல்லன்னா, பெரிய பிரச்சனை தான்.. சரி.. என்னென்ன டேப்லட் எடுத்துக்கறீங்க..?” அவள் காட்ட.,

“இதெல்லாம் ப்ரீமிலினரி., உங்க பிராப்ளம் ஹெவி”

“டாக்டர்,..” அவள் அதிர்ச்சியாக,

“பயப்படாதீங்க.. லேப்ரோஸ்கோபிக்குல்லாம் போக வேணாம்.. வேற மெடிசன் தரேன்” அந்தம்மாள் நிறைய மாத்திரைகளை  எழுதி தந்தாள். எல்லாமே காஸ்ட்லியான மருந்துகள். ஒரு சிறு  பை நிறைய மாத்திரைகள் மருந்துகள், தொடர் சிகிச்சைகள மேற்கொள்ள அடுத்த ஆறு மாதங்களுக்குள் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் உண்டு அவள் மிகவும் பலவீனமாக ஒரு கட்டத்தில் மயக்கமாகி படிக்கட்டில் விழ.,அவளது அம்மா ஓடி வந்தாள்.

“அடி போடி ! குழந்தை இல்லாட்டி போனா போவுது, எங்க பொண்ண பாழ்படுத்தாதீங்க” என சொல்லி மதுமிதாவை பெருங்களத்தூர் கொண்டு சென்று விட்டாள்.

அதன் பிறகு இன்னும் ஒரு வருடங்கள் வரை அவள் ஓய்வெடுத்து விட்டு, கணவன் கெஞ்சி அழைத்தான் என, மறுபடியும் கணவன் வீட்டிற்கு வந்தாள்.

இந்த தம்பதிக்கு இந்த குழந்தையின்மை பிரச்சினையால் ஏகப்பட்ட மன உளைச்சல் ஆகிவிட்டது.
“மது குழந்தை பத்தியே கொஞ்ச நாள் பேச வேணாம். நம்ம பாட்டுக்கு இருப்போம் அது வரப்போ., வரட்டும்., நீ முதல்ல இந்தம் மெடிசன்லாம் தூக்கி எறி’,. என்றான் தீனா.. அப்போதைக்கு அதுதான் சரியான முடிவாக அதை எடுத்தார்கள். இன்னும் ஆறு மாதம் போனது தான் மிச்சம் எதுவும் நடக்கவில்லை. எவ்வளவு ஹெவியாக அவன் கட்டிலில் பெர்மாமன்ஸ் செய்தாலும், அவள் வயிற்றில் கரு தங்கவில்லை.

‘கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள்ள குழந்தை இல்லன்னா ரெண்டு பேருக்குள்ள ஏதோ ஒரு பிரச்சனைன்னு அர்த்தம். இப்ப நாலு வருஷம் ஆயிடுச்சு, நீங்க செயற்கை கருத்தரிப்பு ட்ரீட்மென்ட் போறது தான் சரி. ஏற்கனவே ரொம்ப லேட் பண்ணிட்டீங்க. இனிமேல லேட் பண்ணாதீங்க. அப்புறம் பேரன் வயசுல தான்  புள்ளைய பெத்துகிட்டு நிக்கணும் “ என சொந்தக்காரர்கள் சொல்ல, வேறு வழியில்லாமல் செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு சென்றார்கள். .

அங்கே வித விதமான அறிவு உறுத்தல்கள், விதவிதமான சிகிச்சைகள், எல்லாருமே குழந்தை பிறத்தல் என்கிற விஷயத்தை நீட்டி முழக்க பார்த்தார்கள்.


 

 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment