மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, December 24, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 30 Episode No. 1949

 

டுத்த புதன்கிழமை ஹரீஷ் வீட்டிற்கு வந்த போது திவ்யா இல்லை. போன் அடித்தாலும் எடுக்கவில்லை.

அதனால் தான் இப்போது கண்ணனைப் பார்க்க கிளம்பி வந்து இதோ கண்ணன் முன் கால் மேல் கல போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தான். வீட்டுக்குள் நுழைந்ததுமே ., இதோ அவனை பார்த்ததும் திவ்யா முறைத்துவிட்டு ரூமிற்குள் சென்று விட்டாள்.

வீட்டில் ஆர்த்தி இருக்கிறாளா? இல்லையா? என தெரியவில்லை

கண்ணன் மட்டும் அவனுக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்து கொண்டு வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.

 

யாருக்குத்தான் கோபம் வராது. தான் பெற்ற இரண்டு பெண்ணையும் நீ வைப்பாட்டியாக  நானே வைத்துக் கொள்கிறேன் என்றால்? என நினைத்து சிரித்தான்.

அவன் இங்கு வருவதற்கு முன்பு அடித்திருந்த விஸ்கி போதை அவனை தைரியமாக இருக்கச் செய்து.

என்ன கண்ணன் சார் ரொம்ப கோவமா இருக்கீங்க போல என கேட்க அவர் எதுவும் பேசவில்லை

கண்ணன் சார் இதுல கோபப்படுவதற்கு ஒண்ணுமே இல்ல, உங்களுடைய திவ்யாவை எந்த அளவு எனக்கு பிடிச்சதோ,  அதே அளவுக்கு,.  சொல்லப்போனா., அதைவிட அதிகமாக எனக்கு ஆர்த்தியை புடிச்சிருக்கு. அவளை நான் என்னை கட்டிக்கிறேன்

“………….”

அவ கிட்டயும் சொன்னேன். அவள் யோசிச்சு சொல்றேன்னு சொன்னா. வேனுமுன்னா கூப்ட்டு  ஒரு வார்த்தை கேளுங்க ., அவ சம்மதத்தை கேளுங்க

அவகிட்ட நான் என்ன கேட்கிறது . உங்களுக்கு இது அசிங்கமா தோணலயா?”

எதுங்க அசிங்கம்? ஊர்ல உலகத்தில் நடக்காததை நான் கேட்கலையே. பவிக்கும் ஆண் குழந்தை பொறக்கல., உன் பொண்ணுக்கு ஆண் குழந்தை இல்ல., எனக்கு ஆர்த்தி ஆண்குழந்தை பெத்து கொடுக்கட்டும்.. வேனுமுன்னா ஆர்த்தி குழந்தையை , கிராண்டனி வாரிசாக்குறேன்..

அவர் அவனை உற்று பார்க்க.

என்ன சுரேஷ் வருவான்னு பாக்கறீங்களா? அவனெல்லாம் காலத்துக்கும் கிரான்டனி குரூப்புல நுழைய முடியாது.,”

ஹரீஷ்., நீ ரொம்ப பெரிய பணக்காரன் .னக்கு செல்வாக்கு இருக்கிறதால என் வீட்டில் வந்து நாட்டாமை பண்ணாத. இது உனக்கு நல்லதல்ல என சொல்ல

கண்ணன் . மிஸ்டர் கண்ணன்.  இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க.  எனக்கு ஆர்த்தியை ரொம்ப புடிச்சிருக்கு. அவ மேல நான் உயிரா இருக்கேன். அவ எனக்கு வேணும்.”

“……….”

இந்த உலகத்தில் அழகான விஷயம் எல்லாம் எனக்கு மட்டும் தான்னு  நினைக்கிறவன் நான். “

“………….”

அதிகம் போனா அவளை  யாருக்கு கட்டி கொடுப்பீங்க. ஒரு பெரிய கோடீஸ்வரனுக்கு கட்டி கொடுப்பீங்களா? என்ன அவன்கிட்ட 10 கோடி 20 கோடி இருக்குமா? 20 ஆயிரம் கோடிக்கு அதிபதி ஒரே அதிபதி நான் தான்.. இந்த ஹரீஷ் கிராண்டனி. தி ஒன் அன்ட் ஒன்லி கிங்க்.

“………….”

நான் நினைச்சா எப்படிப்பட்ட நடிகைகளும் பொண்ணுங் களையும் என் பெட்ரூமுக்கு கூட்டி வருவேன்.

“….”

நான் அதுக்காக ஆசைப்படல மாமா. உன் பொண்ணோட சாத்வீகமான அழகுல நான் விழுந்துட்டேன். அவ என்கூட இருந்தா .இந்த உலகில் ஜெயிக்க முடியும்னு நெனைக்கிறேன் தயவுசெய்து அவளை எனக்கு கட்டி வையுங்க.  அதுவும் வர வாரம் வெள்ளிகிழமை

ஹரீஷ்..?”

யெஸ் .. டேட் எல்லாம் பாத்துட்டேன்.. மாத்த முடியாது

ஹரீஷ்

நான் ரொம்ப கிளியர்அ யாம் சென்ட் பர்சன்ட் ஷ்யூர்.. நல்ல இடம் இது. பிகு பண்னாம ஒத்துக்கங்க

“……”

இத மிரட்டலா? திமிரா கேட்கலை .ஓகே.. ரொம்ப பணிவா தான் கேட்கிறேன். என்கூட ஆர்த்தி இருந்தா. ரொம்ப சந்தோஷப்படுவேன். திவ்யாவும் ஆர்த்தியையும் நான் சந்தோஷமா பார்த்துகிறேன்.”

“……………”

என் மேல நம்பிக்கை வைங்க மாமா என சொல்ல கண்ணனுக்கு கோபம் அதிகமானது

எவ்வளவு அருவருப்பா பேசுறீங்க. அப்படி பேசுது கூட தெரியாம நீங்க பேசுறீங்க . உங்கள  நான் என்னத்த சொல்றது?  அவளை நான் கோடீஸ்வரனுக்கு , லட்சாதிபதிக்கு  கட்டி வைக்கப் போதில்லை. மாச சமபளக்காரனுக்கு கட்டி வெப்பேண். பையனெல்லாம் பாத்துட்டேன். நீ கீளம்பு

கண்ணன் அங்கிள் ?”

கிளம்பு ஹரீஷ்

கண்ணன். விளையாடதே
அவன் ஒரு சாதாரண ஏழையா கூட இருக்கட்டும். ஆனால் நேர்மையான, கம்பீரமான ஆளா இருக்கணும். அதுதான் முக்கியம். அவளுக்கு பிடிச்ச ஆளா இருக்கணும். அதுதான் முக்கியம். அப்படி ஒரு ஆளைத் தேடி பிடிச்சு நான் கட்டி வைக்கிறேன். அவன் பணக்காரனாக இருக்கணும்னு அவசியம் இல்ல. தயவு செய்து இந்த எண்ணத்தை இப்படி விட்டுட்டீங்க.”

“……….”

முதல்ல தான்.,  ஏதோ தெரியாம நாங்க ஒரு பாழுங் கிணற்றில் விழுந்துட்டோம். மறுபடியும் மறுபடியும் அதே தப்பை நாங்க செய்ய முடியாது. போய்டுங்க என சொல்ல

என்ன கண்ணன் மரியாதையா கேட்கிறேன். உங்களால் ஆர்த்தியை கட்டி வைக்க முடியுமா? முடியாதா?”

முடியாது

முடியாதுன்னா அதுக்கு வர பின்விளைவுகளை கொஞ்சம் யோசிச்சு பாருங்க

என்ன பின் விளைவுகள் வரும் . வேலையில்லன்னுன்னை வீட்டுக்கு அனுப்பிடுவீங்க. தத்தான் நான் எதிர் பார்த்திட்டு இருக்கேன். இனிமேல் உங்க கூட என்னால இந்த கம்பெனியில் ட்ராவல் பண்ண முடியும்னு எனக்கு தோ. போறும்

ஹ்ஹ்ஹ ஹா என்ன மிஸ்டர் கண்னன்? . சுரேஷ் கம்பெனிக்கு வந்து ஜே எம் டி ஆயிடுவான்ன்னு பார்க்கிறீர்களா ? அந்த கனவு மட்டும் நிச்சயம் காணாதீர்கள். அவன் திரும்ப கிரான்டனியில கால் வைக்க மாட்டான்

அது உங்க அண்ணன் தம்பி சண்டை. அதுக்குள்ள நான் வர மாட்டேன்.”

யெஸ். அது உங்களுக்கு நல்லா தெரியும்லே.தையும் தெரிஞ்சு வச்சிக்கோங்க.  அதேசமயம் இன்னொரு விஷயம் சொல்றேன். உங்களை வீட்டுக்கு அனுப்புது மட்டுமில்லாம, ரிட்டியர்ட்மென்ட்டுக்கு அப்புறம் உங்களுக்கு வரக்கூடிய எந்த சலுகையும் வராம என்னால தடுக்க முடியும்.  வீடு, கார் எல்லாம் உஷ்ஹ்ஹ்ஷ்ஷ்என சொல்லி கையை  மேலே   காட்டினான்.

 

ரொம்ப சந்தோஷமா இருக்கு ஹரீஷ். இது தவிர வேறு எந்த நல்ல விஷயத்தை நான் உங்கிட்ட எதிர்பார்க்க முடியும்?”

அவள் எந்த அஸ்திரத்துக்கு ம் அஞ்சாமல் இருக்க.,

அது மட்டும் இல்ல சார். நீங்க சுரேஷ்க்கு இல்லீகலா நிறைய தடவை நிறைய வெண்டார்ஸ் பேர்ல அடிக்கடி பணம் ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்கீங்க..” என அவன் சொல்ல அவர் பயந்து போய் திகைத்து நின்றார்.

மை காட்? இது எப்படி இவனுக்கு தெரியும்.

எனக்கு தெரியாதுந்னு  நினைச்சி இருக்கீங்க.  ஆனா எனக்கு இந்த விஷயம் ரொம்ப நல்லாவே தெரியும். தெரிந்தும் கண்டுக்காம விட்டேன். ஏன்னா, கன்ன்டினீயூவா உங்கள தப்பு செய்ய வைக்கிறது காகத்தான் நான் அமைதியாக இருந்தேன்.”

.. ஆனா  அந்த பணம் என் தேவைக்காக எடுக்கலயே.. என் உபயோகத்திற்காக பபயன்படுத்த இல்லை. எல்லாமே உங்க சொந்த தம்பிக்கு தான் செலவுக்கு கொடுத்திருக்கேன்

மே பீ  ஆனா அது சுரேஷ்க்கு கொடுக்கிறதுக்காக சொல்லிட்டு  அதை நீங்களே எடுத்துக்கிட்டேன்னு ரிப்போர்ட்ல எழுதுவேன்

“…..ஹரீஷ்

அதுமட்டுமில்லாம., கிரான்டனி சௌத் ஜோன்ல நீங்களும் மனோவும் சேந்துகிட்டு.,  கம்பெனி லாபத்தில் ., யெஸ் பெரும்பாலான பணத்தை திருடிட்டீங்கன்னு.,  குற்றம் சாட்டுவேன்

அவன் சொல்வதைக் கேட்டு, அவர் கோபமாக எழுந்து கொள்ள,

 யெஸ் .,  நான் அப்படித்தான் சொல்லுவேன்.  அது மட்டுமா குவாலிட்டி இல்லாத வென்டர்,  புதுசா எண்ணூர்ல  சுமந்த் ராவ்னு ஒரு சென்னை வென்டாரை போலியா ரெடி பண்ணி, அவனுக்கு ரூல்ஸிய மீறி ஆர்ற்ற கொடுத்து., “

“………….”

குவாலிட்டி இல்லாத மார்பிள், டைல்ஸ் அனுப்பி பெரிய மோசடி நடந்திருக்கு.”

‘’ ………………” தான் வகையாக சிக்கி கொண்டதாக  நினைத்தார் கண்னன்.

அந்த  மெட்டீரியல்ல கட்டுன வீட்டையெல்லாம் ஆளை வச்சி உடைப்பேன் . காரணம் அதெல்லாம் நான்- ப்ரான்ட்ட் மெட்டீரியல்., மோசடி வென்டார்னு, கண்ணனோட கைங்கரியம்னு ஈஸியா புரூஃப் பண்ணுவேன்

‘………………” அவர் திகைத்து போனார்.

அதற்கான டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ண எனக்கு அரைநாள் போதும். அடுத்த நிமிஷம் எல்லா பேப்பரும் ,சேர்மன் பெரியப்பாவுக்கு போகும். அது அடுத்த நாள் விஷயம் போலீஸ் ஸ்டேஷன், அதுக்கப்புறம் அதுக்கப்புறம் ஜெயில்.. என சொல்ல.,

உள்ளே கேட்டுக் கொண்டிருந்த அவள் மனைவி ஓடி வந்தாள்.

என்ன மாப்பிள்ளை இப்படி எல்லாம் பேசறீங்க. உங்களுக்கு இது நல்லா இருக்கா? அவரை திருடனா ஆக்கிட்டீங்களே?”

 என அவள் அழ

ஆண்டி ..ப்படிலாம் நடக்கறது., நடக்காதது எல்லாம். உங்க கிட்ட தான் இருக்கு.. உங்க ரெண்டு பொண்ணையும் பத்திரமா நான் பாத்துக்குறேன். உங்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சி தரேன்.. வருஷா வருஷம் உங்க ரெண்டு பேருக்கு, வேர்ல்டு  டூர்  போகறதுக்கு ஏற்பாடு பண்றேன். அப்படின்னு சொல்றேன்.”

“………..”

ஆனா உங்க முரட்டு புருஷன்.தை கேட்க முடியாது.. நான் ஒரு அயோக்கியன்னு என்னை திட்டினால்? .அப்புறம் அயோக்கியன் எப்படி நடந்துக்கனுமோ., அது மாதிரி தானே நான் நடந்துக்கனும்?

மாப்பிள்ளை,  நாங்க ஆர்த்தி கல்யாணத்தை பத்தி இப்போது முடிவெடுக்க முடியாது.  எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்கஅம்மா சொல்ல

கொடுக்கிறேன். ஆனால் மாச கணக்கா கேக்காதீங்க. என்னால முடியாது.”

ஒரு ஆறு மாசம் போவட்டும்.. சொல்றோம்

 நோ.. இந்த ஃபிரைடே இல்லேன்னா.. சன்டே..”

அய்யோ.. இல்ல மாப்பிள்ளை வர்ர சன்டே. .அவ காலேஜ் டூர்  போறா அம்மா தயங்கி தயங்கி சொல்ல.,

நோ டூர்..இனிமே ஹனிமூன்தான்

ப்ளீஸ் மாப்பிள்ளைஉங்களை கெஞ்சி கேக்கறேன்..”

அம்மா அந்த காலோஜ் நோட்டீசை கையில் கொடுத்தாள். அவன் படித்து பார்த்தான்.

ம்ம்., சரி எத்தினி நாள்?”

அவ அடுத்த வாரம் டூர் போறா. போயிட்டு வரட்டும் அதுக்கப்புறமா என்ன பண்து?ன்னு யோசிச்சு முடிவு பண்ணி சொல்றேன்

வேறென்ன முடிவு? கல்யாணம் தான். வேற எதுவும் கிடையாது. இதுல மிஸ் ஆனா., தரதரன்னு இழுத்துகிட்டு தான் போவேன். போலீஸ் உங்க புருஷனை அதே மாதிரி இழுத்துகிட்டு போவும்.. ஆர்த்திக்காக நான் எந்த லெவலுக்கு போவேன்., ”

“………………’ அவர்கள் அதிர்ந்து போய் பார்க்க

நான் ஹீரோ தான் . தேவையில்லாம என்னை வில்லனா ஆக்காதீங்க. இவ்ளோ வெறியா பேசறேன்னா ஆர்த்தி மேல எவ்ளோ ஆசை வெச்சிருக்கேன்னு தான் நீங்க பாக்கனும்

ஹரீஷ் கொடுத்த ஷாக்கில் கண்ணன் தலை குனிந்தபடி இருக்க.,

ஓகே டைம் எடுத்துக்குங்க. ஆனா, நான் வந்து ஆர்த்தியை பொன்னு கேட்ட என்கிற விஷயம் கிராண்டனி பங்களாவுக்கோ,  சேர்மன் பெரியப்பாவுக்கோ.,  இல்ல வேற யாருக்கோ தெரிஞ்சதுனு வச்சிக்குங்க.. நான் சொன்ன எல்லா விஷயமும் அடுத்தடுத்து நடக்கும்

“…………..”

அதான் இல்லீல்  வென்டார். நான் ப்ரான்டிங்க் மெட்டிரியல் சப்ளை, மணி டிரான்ஸ்பர்., போலீஸ், ஜெயில், கோர்ட்,  எக்ஸட்ரா., எக்ஸட்ரா இது எல்லாத்தையும் விட., திவ்யாவும் பேக் டூ ஹோம் தான். ஞாபகம் வெச்சுக்கங்க. ஐ ரிபீட்., ஆர்த்திக்காக  நான் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவேன்…’’

என சொல்லிவிட்டு அவன் போக.,

கண்ணன் செய்வதறியாமல் உட்கார்ந்திருந்தார். அவர் உடல் ஆடி போயிருந்தது.

இவன் இத்தனை மோசமானவனா?

 ஹரிஷ் போனதும் ஆர்த்தி ஓடி வந்து அப்பாவின் காலை கட்டிக் கொண்டு ரொம்ப சாரிப்பா., என்னால தான்பா ., நான் தான் உங்க கூட சண்டை போட்டுட்டு., அக்கா வீட்டுக்கு போயி., அவர் கண்ணில் பட்டுட்டேன்

இல்லம்மா.. உன் தப்பு துவும் இல்ல., நீ ஆசையா டூர் போறேன்னு சொன்ன உடனேயே நான் அனுப்பிருக்க வேண்டும் . ஆனால் தேவையில்லாம முரண்டு பிடிச்சு,  நீ திவ்யா வீட்டுகு போயி.. இந்த  விஷயம் எவ்வளவு தூரம் விபரீதம் ஆயிடுச்சு,.  ஒன்னு பண்ணு நீ டூருக்கு கிளம்பு.   நீ போய்ட்டு வரதுக்குள்ள., முகூர்த்தம் தவறிடும். அப்ஔறம் ஆடி மாசம். திரும்ப ஒரு வளர்பிறை முகூர்த்தம் வரதுக்கு இன்னும் மூனு மாசம் ஆகிடும். அதுக்குள்ள எத்தனையோ நல்லது நடக்கலாம். எல்லாம்  அப்புறம் யோசிக்கலாம். நீ டூருக்கு கிளம்ப ஏற்பாடு பண்ணு..,என சொல்ல திவ்யாவும், ஆர்த்தியும் போன பின்.,

அவரது மனைவி அருகில் வந்து.,

இங்க பாருங்க., ஒன்னு சொல்றேன் தப்பா நினைச்சுகாதீங்க., இந்த ஹரீஷ் அயோக்க்கியன்தான் . தப்பானவன்தான். ஆனா., நம்ம பொண்ணை இவ்ளோ நாள் சந்தோஷமாகத்தான் வச்சிருக்கான்

“…………..”

10 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்து.  ஆள் பங்களா ,வசதி ன்னு  செஞ்சுதான் கொடுத்திருக்கிறான். நம்ம மிஞ்சி மிஞ்சி போனா எப்படிப்பட்ட ஒரு மாப்பிள்ளைக்கு பொண்ணு குடுக்க போறோம்? ஒரு முன்னபின்ன தெரியாதவனுகு கொடுக்கிறதுக்கு பதில்.,” அவள் இழுக்க

ச்சீ என்னடி சொல்லவர்ரே ஏய் காஞ்சனா? என்ன சொல்ற என அவர் சீ.

என்னால் உங்களை திருட்டு பட்டத்தோட  பார்க்க முடியாதுங்க..  நான் வேற எதுவும் சொல்றதுக்கு இல்லைங்க.  தெரியாத பூதத்துக்கு பதில்., தெரிஞ்ச பேயே மேலுங்க., “

‘” நீ எதுக்கும் பயப்படாதே., என்னை யோசிக்க விடு. முதல்ல ஆர்த்தியை பெங்களூர்ல இருந்து நகத்துஎதுவும் இப்போ முடிவு பண்ண வேணாம்..”

“…ம்

ஆர்த்தி டூர்லாம் முடிச்சுட்டு வர  இன்னும் 10  நாளாகும்., அந்த இடைவெளியில் என்ன வேணாலும் நடக்கலாம்.,  நல்லது நடக்கட்டும். ஒருவேளை ஹரீஷ் மனசு மாறலாம். மாறனும்  நாம காத்திருப்போம் என்றார் கண்னன்.

ஆனால் ஹரீஷ் மனம் மாறவில்லை என்பது அவர்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு ஆர்த்தி அவன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டாள்.


திரும்புடி பூவை வைக்கணும் 31.32  ஆம் பாகம் நிறைவு பாகம்  பிளாக்கரில்   இடைவெளி விட்டு  அவ்வபோது வெளிவரும் .

உடனே படிக்க பாகம் 31  &  பாகம் 32

2 comments:

  1. ரெண்டு அழகான பொண்ண பெத்த காஞ்சனாவை எப்படி விட்டு வச்சான் ஹரிஷ் அவளையும் ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்க வேண்டியது தானே.. ஆம்பள புள்ள பொறக்குமா இல்லையா னு ஜாதகத்தை பார்த்தாலே தெரிஞ்சிடும். இப்படி வரிசையா கல்யாணம் பண்ணின. ஆர்த்தி கூடவும் ஆம்பள புள்ள பொறக்கும் னு நினைக்கும் இந்த முட்டாளை என்ன னு சொல்றது. பவித்ராவும் புருஷன் கிட்ட ஆம்பள புள்ள கெடைக்காது னு கொழுந்தன் கிட்ட கேக்குறா. வந்தனா புள்ள பெத்துகிறதா வேணாமான்னு புரியாம இருக்கா. பத்தாயிரம் கோடி சொத்து இருக்கும் போது வாரிசு வேணும்னு நினைக்கிறது நியாயம். ப்ரியாவுக்கு ஆன் குழந்தை பிறந்தால் அது கிரண்டனி வாரிசு தானே.

    ReplyDelete







  2. Suresh ku udhavi seyya poyi ippo thokka maatikittan kannan.

    ReplyDelete