மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, December 19, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 30 Episode No. 1944

சென்னையில் சுரேஷைப் பார்க்கும் முன்.. பெங்களூரில் அவனது அண்னன் ஹரீஷை தொட்டு விட்டு வரலாம்..

------------


பெங்களூரில்.,

ஹரிஷீன் கார் நகரின் ஒதுக்குப்புறமான லஷ்மி புரத்தை நோக்கி விரைந்தது. அது கோடீஸ்வரர்கள் வாழும் பகுதி. கண்ணன் சார் வீட்டுக்கு தான் ஹரீஷின் கார் போய் கொண்டிருந்தது. அவரிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பேச வேண்டும் ஒரு வேளை அவர் ஏற்காமல் போகலாம். ஏற்காது போனால் என்ன செய்யவேண்டும் என அவன் மாற்று திட்டத்தை வைத்திருந்தான்.

ஒரு வார காலமாக இது ஓடிக் கொண்டிருக்கிறது. உள்ளூக்குள், வெளியில் கன்ணன் வீட்டில் சதா புகைந்து கொண்டிருக்கிறது. இன்று முடிவு கட்ட வேண்டும். கோட் பாக்கெட்டில் இருந்த மது பாட்டிலை எடுத்து சில மிடறு குடித்தான். கண்னண் ஏற்பாரா?  தெரியவில்லை. ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

எனக்கு ஒன்று வேண்டும்  என்றால் ,  கட்டாயம் வேன்டும். அதை யாரும் தடுக்க முடியாது.  திவ்யா எவ்வளௌ அழுதாலும் சரி.. நான் பின்வாங்க மாட்டேண்.

இப்போது கண்ணன் சார்  வீட்டில் தான் அவளது மூத்த மகள் திவ்யா அதாவது அவனது தாலி கட்டியும் அங்கீகாரம் இல்லாத மனைவி திவ்யா இப்போது இருக்கிறாள். அதாவது ஹரீஷ்- திவ்யாவுக்கான தனி வீட்டை விட்டு,  ஹரீஷ் மீதான கோபத்தில் இங்கே வந்து அப்பாவின் வீட்டில் வந்து தங்கி இருக்கிறாள்.

முதலில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினாள்> இப்போது அப்பாவின் வீட்டில் போய் உட்கார்ந்திருக்கிறாள். நேரில் வருகிறேன்.. உனக்கு அவ்வளவு திமிரா?

அவன் மீண்டும் தொண்டையில் விஸ்கியை சரித்தான்.

 

ங்கே ஹரீஷின் கார் நுழைந்து., வலதுபுறம் திரும்பி ஒரு பெரிய வில்லா வீட்டின் முன் நுழைந்தது. ஹரீஷின் கார் ஹாரன் ஒலி எழுப்ப காவலாளி ஓடி ஓடிவந்து கதவை திறந்தான்.

காரிலிருந்து இறங்கி ஹரீஷ் வீட்டிற்குள் நுழைய ஹாலில் இருந்த திவ்யா அவனை முறைத்து விட்டு, ரூமிற்கு சென்றாள்.

ஹேய்ய் திவ்யா

அவள் கதவை சாத்தி கொண்டாள்.

இன்னும் கோபம் தீரவில்லை. போல.,

அவன் குரல் கேட்டு, இன்னொரு ரூமில் இருந்த கண்ணன் ஹாலுக்கு வந்தார்..

வாங்க வாங்க ஹரிஷ் என்றபடி உட்கார்ந்தார் . அவரும் கோபத்தில் தான் இருந்தார்.

உம்மென இருந்தார். அவனது வருகை அவருக்கு பிடிக்கவில்லை. சொல்லப் போனால் அவனது மூஞ்சையே அவனுக்கு பிடிக்கவில்லை. மூத்த மகளை மடக்கி, மிரட்டி., வலுக்கட்டாயமாக மணமுடித்தும் நாங்கு ஆண்டுகள் திரூட்டு தனமாய் குடித்தனம் நடத்தி

ஆமா.. இந்த ஹரீஷ் என் மாப்பிள்ளை என தைரியமாய் வெளியில் சொல்ல முடியாமல்..

 ச்சே.. அவரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. காரணம் ஹரிஷீன் பணம், அதிகாரம் செல்வாக்கு..

லட்டு மாதிரி பொண்ணு இருந்தா., லைப்ல கவலையே இல்லப்பா

ஆஅமா.. கண்ணன் சார் மாதிரி

ஆபீசில் முதுகுக்கு பின்  கிண்டல் செய்கிறார்கள்

எல்லாத்துக்கும் காரணம் இந்த ஹரீஷ்..  அவனது காமம்..

அதனால் தான் பொதுவாக ஹரிஷ் வீட்டிற்கு அவர் எப்போதும் அவன் இருக்கும் போது போனதில்லை. அவருக்கு அது சங்கடம். தன் மகள் தனது பாஸுக்கு இப்படி திரை மறைவு மனைவியாக இருக்கிறாளே என்று.

 ஹரிஷ்ஷை சிறுவயதிலிருந்து கண்ணன் சார் பார்த்திருக்கிறார்.

ஹரிஷ்க்கு சிறுவயதிலிருந்தே பெரிய முதலாளி என்ற பந்தா வோடு தான் நடந்து கொள்வான். வேலைக்காரர்களை ஊழியர்களை ஏதோ பாகுபலி அரசாட்சிகுட்பட்ட பாவப்பட்ட மக்கள் போல பாவிப்பான்.

உயிருக்குரான நண்பனும் முதலாளியுமான கிராண்டனி போனபின் அவரது அண்ணன் சேர்மன் பொறுப்பேற்றார். கொஞ்ச காலத்தில் ஹரீஷ் எம்.டி பொறுப்பிற்கு வந்தான். கம்பெனி இன்னும் நல்ல நிலைக்கு வந்தது.

பெரியப்பா பேரளவுக்கு தான் சேர்மன், ஆனால் எல்லா முடிவுகளும், நிர்வாகமும் ஹரீஷ் தான். மெல்ல மெல்ல டைரக்டர்கள், பங்குதாரர்களை ஈர்க்க தொடங்கிவிட்டான்.

புதியவனான ஹரீஷ்க்கு எல்லா விஷயத்திலும் கண்ணன் சார் வழிகாட்டியாக இருந்தார். ஆனால், ஹரீஷின் அந்தரங்க நடவடிக்கைகள் அவருக்கு பிடிக்கவில்லை.  பங்களா மேனஜர் நீலா, வீணா விவகாரம் கேள்விப்பட்டு அவனுக்கு புத்திமதி சொல்லப் போக. ஹரீஷ் அவரை வறுத்தெடுத்து விட்டான்.

பிசினஸில் அவன் கில்லியாக இருந்தாலும், குடி, கூத்தி, ஹரீஷின்  ஒழுக்க கேடான விஷயங்களால் கண்ணன் சாருக்கு ஹரீஷ்ஷை மிகவும் பிடிக்காமல் இருந்தது. அவருக்கும் அங்கே சரியான மரியாதை இல்லை. ரொம்ப காலமாகவே கம்பெனி சீப் கன்சல்டன்ட் என்ற டம்மி பதவியிலேயே இருந்தார்.

தனது  இரு மகள்களை நல்ல இடத்தில் கல்யாணம் கட்டி கொடுத்த பின், கிரான்டனி நிர்வாகத்தில் இருந்து விலகி விட அவர் நினைக்க..

ஆனால், தனது இரு மகள்களில் மூத்த மகளான திவ்யாவிற்கு தான் பணிபுரியும் கிரான்டனி  நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும், அதுவும் தனக்கு பிடிக்காத ஹரீஷிடமே செக்ரட்டரியாக வேலை செய்யும் நிலை வந்துவிடும் என்றெல்லாம் கண்ணன் சார் நினைத்ததில்லை.

ஆனால் விதி அப்படி அமைந்துவிட்டது. 5 ஆண்டுகளுக்கு முன் அவளது மகள் திவ்யா கல்லூரியில் ஆர்க்கிடெக்சர் படிப்பு படித்துக்
கொண்டிருந்த போது, அவள் செய்த பில்டிங் பிராஜக்ட் ஒன்றிற்க்கு கல்லூரி கேம்பஸில், மின் இணைப்பைக் கொடுத்திருந்தாள்.

அதில் ஏற்பட்ட ஒரு தவறு காரணமாக மின் விபத்து ஏற்பட்டு கல்லூரியில் ஒரு பகுதியில் மிகப் பெரிய தீ சேதம் ஏற்பட்டது.

விஷயம் ஹரீஷ் காதுக்கு போக, ஹரிஷ் தான் தலையிட்டு அந்த கல்லூரி வழக்கை சமரசமாக மாற்றி நஷ்ட ஈடு கொடுத்தான்.

அதுவரை தனது மகள்களை ஹரிஷீன் கண்ணில் படாமலேயே பார்த்து கொண்ட கண்ணன் சார் அந்த பெரிய விபத்திற்கு பிறகு ஒன்றும் செய்ய இயலவில்லை.

அப்போதுதான் திவ்யா ஹரிஷின் கண்ணில் பட்டாள். அவன் திவ்யாவை பற்றி விசாரித்துவிட்டு அவளது படிப்பு, மார்க்குகள் எல்லாம் பார்த்துவிட்டு, திவ்யாவிடம்,

“ படிப்பு முடிந்தவுடன் என்ன செய்யப் போகிறாய்?’ என கேட்க அவள் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் எனக்கு ஆஃபர் செய்திருக்கிறார்கள் சார் என சொல்ல

 அதையெல்லாம் தூக்கி குப்பையில் போடு. நேரா கிரான்டனியில் ஜாய்ன்ட் பண்னுஎன உத்தரவிட்டு சென்று விட்டான்.

கண்ணனால் மறுக்க முடியவில்லை.  ஹரீஷை பகைத்துக் கொண்டு நாம் எதுவும் செய்ய முடியாது.

வெளியில்  ஏதோ ஒரு கம்பெனியில்  சேர்வதற்கு பதில், இங்கே சேர்ந்தால் என்ன தவறு டாடி?’ என திவ்யா, கண்ணனை உதாசினம் செய்தாள்.

சரி கிரான்டனியில்,  கணினியில் ஏதேனும் ஒரு பிராஜக்டில் ட்ரெய்னிங் ஆர்கிடெக்ட் ஆக திவ்யாவிற்கு அப்பாய்ன்ட்மெண்ட் கொடுப்பார்கள் என கண்ணன் நினைத்திருக்க., யாருமே எதிர்பாராத வகையில் திவ்யாவை தனது சொந்த செக்ரட்டரியாக வைத்துக்கொண்டான். அது தான் கொடுமையாக அமைந்துவிட்டது.

திவ்யா அழுதாள். என் படிப்புக்கு  இந்த வேலையா?’ என அப்பாவிடம் சண்டை போட்டாள். ஆனாலும் தட்ட முடியவில்லை.

முதல் மூன்று மாத காலம் ஹரிஷ் திவ்யாவிடம் மிகவும் கண்ணியமாக தான் நடந்து கொண்டான். ஆனால் திவ்யாவின் அழகில் மயங்கித் தான் அவளைத் தனக்கு இணையாக வேண்டும் என்ற நோக்கில் தன் எனக்கு செக்ரட்டரியாக போட்டான் என்பது அப்போது திவ்யாவுக்கு தெரியாது.

நாளாக நாளாக , ஹரீஷின் அருகிலிருக்கும் போது அவன் கம்பீரமும், வசீகரமும் அதிகமாக இருப்பதாக திவ்யா நினைத்தாள். அவனது அணுகுமுறையும், பணிவான பேச்சும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஹரீஷ் அவளை அனுமதியுடன் அனுபவிக்க ஒரு திட்டம் போட்டான்.


திரும்புடி பூவை வைக்கணும் 31.32  ஆம் பாகம் நிறைவு பாகம்  பிளாக்கரில்   இடைவெளி விட்டு  அவ்வபோது வெளிவரும் .

உடனே படிக்க பாகம் 31  &  பாகம் 32

No comments:

Post a Comment