அப்ரணா,
அதே சந்தோஷத்துடன் ஊருக்கு போய் அப்பாவிடம் விஷயத்தை சொல்ல அப்பாவும்
ஆச்சரியப்பட்டு போனார்.
" பரவாயில்லையே, கர்நாடக
மியூசிக்கும் உன்னுடைய கார்ப்பரேட் செகரட்டரி படிப்பும் சேர்ந்து உனக்கு நல்ல
சம்பளத்தை வாங்கி தந்திருக்கு." அவர் மகிழ
" ஆனா ஒன்னு எவ்வளவு சம்பளம்
கொடுத்தாலும் சரி. இன்னும் மூணு வருஷம் தான் உனக்கு டைம் . அப்புறம் இங்க வந்து
சேர்ந்திடனும். " அம்மா கண்டிப்பாக சொல்ல.,
" அப்பா பாருங்கப்பா"
"ஆமாம் அபர்ணா., உனக்கு 26
ஆகுறப்போ கல்யாணம் செஞ்சு பார்த்துடனும்லே., "அதெல்லாம் அப்புறம்மா. முதல்ல நான் இந்த மார்த்தாண்டம் வேலையில ஜாயின் பண்ணனும்"
அவள் .,அடுத்த இரண்டு நாட்கள்
தனக்கு தேவையான புதிய உடைகள் அணிகலன்கள் எல்லாம் வாங்கினாள். அம்மா மிளகாய் பொடி,
ஊறுகாய் எல்லாம் பேக்கிங் செய்து கொடுத்தாள்.
அப்பாவும் மகளும் கிளம்பி
மார்த்தாண்டம் வந்து சேர்ந்தார்கள். அப்பா தன்னுடைய மகள் தங்கும் வீட்டையும்
சௌமியாவையும் பார்த்து பேசி விட்டு ஞாயிறு மதியம் கிளம்பி போனார்.
அவளைப் பார்த்ததும் சந்திரா,"
வணக்கம் மேடம். என் பேரு சந்திரா.. கண்டிப்பா நீங்க செலக்ட் ஆவிங்கன்னு நான்
முதலில் நினைச்சேன்....”
“தாங்க்க் யூ”
“ எந்த ஹெல்ப்னாலும் என்னை
கூப்பிடுங்க..."
என சொன்னபடி காப்பி கொடுத்துவிட்டு
போனாள்.
அபர்ணா அந்த வீட்டைச் சுற்றி வர
அவுட் ஹவுஸில் தங்கி இருந்த கிருபாகரன்
பணியனில் இருந்தபடியே வந்தான்
அவளை பார்த்ததும் சிரித்தான்.
" ஹலோ கிருபாகரன் எப்படி
இருக்கீங்க?
" நல்லா இருக்கேன் மேடம்.,
நீங்க எப்படி இருக்கீங்க?"
"இங்க ஜாய்ன்ட்
பண்ணிட்டேனே?"
" தெரியும். நெனச்சபடியே
நீங்க வேலையில சேர்ந்துட்டீங்க மேடம்.. நீங்க தான் எங்க மேடத்துக்கு சரியான்
பிஏ"
" அட! அதென்ன எல்லாமே அதையே
சொல்றீங்க?"
" அப்படி இல்ல., உங்கள
பார்த்த உடனே நீங்க இங்க வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். மத்தவங்க கிட்ட
இருந்த பந்தா, அலட்சியம்லாம் உங்க கிட்ட இல்ல. ஆனா நீங்க எங்க மத்தவங்க
மாதிரியே ரிஜெக்ட் ஆகிடூவிங்களோன்னு பயந்தோம். அதான் நானும் சந்திராவும் சேந்து
அந்த கொஸ்டின் பேப்பரை உங்களுக்கு கொடுத்தோம்"
" கொஸ்டின் பேப்பரா?"
"ஆமா"
" என்ன சொல்றீங்க?"
" என்னங்க தெரியாத மாறீ கேட்கிறீங்க?
எங்க மேடம் என்ன எதிர்பாக்குறாங்க, நீங்க
எப்படி நடந்துக்கணும்னு சொன்னேணே., மறந்துட்டீங்களா ?"
சௌமியாவுக்கு சுளீரென
உரைத்தது. அப்படி என்றால் இவன் உதவி
இல்லையென்றால் இங்கு வந்திருக்க முடியாதா? யோசித்துப் பார்த்தாள். ஆம்
அப்படித்தான் நடந்திருக்கும்.
இன்டர்வியூவில் யார் என்ன
தப்பாய் செய்கிறார்கள் சொல்கிறார்கள்? என தெரியாமலேயே நான் பாட்டுக்கு
உள்ளே போய் தத்துப்பித்து என ஏதோ உளறி, கர்னாடிகா
பாட்டு எல்லாம் பாடி சௌமியை
பார்த்து கும்பிடு போட்டு ,செல்பி எடுத்து, ஒரே நாரசாரமாக போயிருக்கும் .
இன்டர்வியூவில் அத்தனை பதவிசா நான்
நடந்து கொண்டதால் தான் இந்த வேலையே கிடைத்தது.
அப்படி என்றால் இந்த வேலைக்கு காரணம் இவனாக கூட
இருக்கலாம். இருக்கலாம் என்ன? கண்டிப்பாக இவன் தான்.
அதை எடுத்த எடுப்பிலேயே சொல்லி கொஞ்சம்
நம்மிடம் கெத்து காட்டுகிறான்.
முதலில் இவனை பகைத்துக் கொள்ளக் கூடாது. விட்டு
தான் பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு அவள் மெல்ல சிரித்தாள்.
"மே பீ கிருபாகரன் நீங்க கொடுத்த டிப்ஸ் தான் உதவியா
இருந்தது. அது மட்டும் இல்லாம மேடம் எனக்கு நல்ல ஒரு சம்பளம் ஆஃபர் பண்ணாங்க. அதான்
உடனே ஒத்துக்கிட்டேன் ..சரி நீங்க எல்லாம் இங்க தான் தங்குகிறீங்களா? " என
ஒரு அதிகாரி போல கேட்டாள்.
தோட்டத்தை அவுட்டர் பில்டிங்கை பார்வையிட்டாள்.
உள்ளே சௌம்யாவிடம் வர.,
"அபர்ணா இன்னிக்கி எதுவும் நீ
ஒர்க் பண்ண வேனாம். உன் ரூம் மட்டும் நீ
ரெடி பண்ணிக்க., சந்திரா ஹெல்ப் பண்ணுவா" என சொல்லிவிட்டு சௌமியா சென்று விட்டாள்.
சந்திர மாலை 5 மணிக்கு மேல் தான் வந்தான் அவள்
அறையை சுத்தம் செய்ய உதவி செய்தாள். பழகிய
கொஞ்ச நேரத்திலேயே சந்திராவை பற்றி நன்றாக தெரிந்து கொண்டால்.
சந்திராவுக்கும் கிட்டத்தட்ட
சௌமியா வயது தான். ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வீட்டில் வேலை
செய்கிறாள். சௌமியாவின் அப்பா காலத்தில்
இருந்து அவளுக்கு இந்த வீடு கூடவே வைத்திருக்கிறது .
அவளை கட்டிய கணவன் மும்பையில்
வேலைக்குச் செல்ல அங்கேயே இன்னொரு பெண்ணை பார்த்து செட்டில் ஆகிவிட்டதாக கேள்வி .
வேலைக்காரியாக இருந்தாலும் அவளுடைய
பேச்சும் உடையும் பளிச்சென சுத்தமாக
இருந்தது. வீட்டின் பின்புறத்தில்
இருக்கும் அவுட் அவுசில் சில ஆண்கள் தங்கிக் கொள்கிறார்கள். அதனால் சந்திரா அந்த
வீட்டுக்குள்ளேயே இருக்கக்கூடிய ஒரு தனி ரூமில் தங்கிக் கொள்கிறாள்.
கொஞ்ச நாளிலேயே அபர்ணா அந்த
வீட்டின் முழு பின்னணியும் தெரிந்து கொண்டாள் .
சௌமியாவுக்கு ஏற்பட்ட தோல்வியில்
முடிந்த மண வாழ்க்கையும் அவள் புரிந்து கொண்டாள்.
சௌம்யா சொன்ன, சொல்லாத எல்லா வேலைகளையும் செய்ய பழகிக்
கொண்டாள். சௌம்யா உடன் கச்சேரிக்கு போவது,
அப்பாயிண்ட்மெண்ட் செட் செய்வது ப்ராபர்ட்டி மேனேஜ்மென்ட், யூட்யூப் வீடியோ
போஸ்டிங் என எல்லா வேலையும் செய்தது போக மீதி இருக்கும் நேரத்தில் சௌம்யாவின் படுக்கை அறையையும் நன்றாக இனிடிரியர் செய்து அலங்கரித்தாள்.
'பரவாயில்லையே கையில நிறைய வித்த
வச்சிருக்கியே வெரி குட்" என சௌமியாவின் பாரட்டை பெற்றாள்.
கார் பயணங்ககளின் போது கிருபாகரன்
வண்டியை ஓட்ட, பின் சீட்டில் உட்கார்ந்து சௌம்யாவுடன் மணிக்கணக்கில் அரட்டை
அடித்தாள். தனக்கு பிடித்த ஒரு விஐபி
பாடகியுடன் கூட இருப்பதே பெரிய விஷயம் என்றால் அதற்கு சம்பளமும் கிடைக்கிறது ‘ என்றுதான்
அந்த வேலையை அவள் முழு துடிப்புடன் செய்தாள்.
நாட்கள் ஓட, அவ்வப்போது கார் பயணம், ரயில்
பயணம், விமான பயணம் என மாறி மாறி
சௌமியாவின் உயிர் துணையாக , நிழலாக அபர்ணா மாறிப் போனாள். அவளுக்கு மார்த்தாண்டம்
வீடும் பிடித்திருந்தது, சௌம்யாவும் பிடித்திருந்தது . அங்கு பணிபுரியும் சக
ஊழியர்களின் அணுகுமுறையும் அவளுக்கு ரொம்பவே பிடித்து போனது .
இப்படி ஒரு வேலை எல்லோருக்கும்
கிடைக்குமா?’ என அவள் மகிழ்ந்திருக்க அதே
போல் நமக்கு வாய்த்த மூன்று வேலைக்காரர்களும் அற்புதமானவர்கள். இப்படி விசுவாசமும்
திறனும் இருக்க கூடிய ஊழியர்கள் இருந்தால் எப்படிப்பட்ட முதலாளியும் எல்லா
கவலைகளையும் மறந்து சந்தோசமாக இருக்கலாம் என நினைத்தால் சௌமியா .
ஆனால் இந்த வாழ்க்கையும் சரி .கால
பயணம் சரி .நமக்கு எல்லா நேரமும் நமக்கு பிடித்தாற் போல இருப்பதில்லை. அதுதான்
பிரச்சனையே.
அபர்ணா அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஆறாவது
மாதம் தான் அந்த சம்பவம் நடந்தது.
மதுரையில் ஒரு முக்கிய ரெண்டு
கச்சேரியில் கலந்து கொள்ல சௌமியாவும் அபரணாவும் ரெயிலில் சென்றார்கள் , முதல் நாள் கச்சேரி முடிந்தவுடன் ரென்டாவது
நாள் கச்சேரி ரத்தாகி விட்டது' நிகழ்ச்சி ஏற்பாட்டாளரில் ஒருவருக்கு நெஞ்சுவலி.
கவலைக்கிடம்' என சொன்னார்கள். ஆனால் அபர்ணாவிடம் முழுப் பேமென்டும்
வழங்கப்பட்டது, அவர்கள் முன்னதாகவே ஊர் திரும்பினார்கள்.
சௌமியா அபர்ணாவுக்கு லீவு
கொடுத்து மதுரையில் அவள் வீட்டிற்கு
அனுப்பி விட்டு, அவள் தன்னந்தனியாக ரயிலில்.,
தான் திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாக
திரும்பினாள்.
வீட்டுக்கு அருகே ஆட்டோவில் வந்து
மாலை அஞ்சு மணிக்கு மழைத்தூறலில்
இறங்கினாள். அந்த நேரத்துக்கே வானம்
இருட்டிவிட்டது.
மாளிகை முழுக்க கிட்டத்தட்ட இருளாக
இருந்தது. வீட்டில் ஆள் இல்லை என்றால்
யாருமே வேலையை சரிவர செய்வதில்லை என குறைபட்டுக் கொண்டாள்.
லக்கேஜுடன் நேராக தன் அறைக்குப்
போக இருந்தவள் சமையலறையின் பின்னால் வரும் சத்தத்தை கேட்டு திகைத்து நின்றாள் .
இது என்ன பேச்சு குரலா? ஏதேனும் சதிக் குரலா? யாரேனும் ரகசிய திட்டம் போடுகிறார்களா ? எதற்கு இத்தனை மர்மம்?
ஏய்ய்ய்ய் என குரல் கொடுக்கலாமா? என
நினைத்தாள்.
குரல் சத்தமாகி அது முனகலாக., இது
சல்லாப சத்தம்?. ஆம்...
பரபரப்பாகி., குரல் வந்த அறைய நோக்கி சென்றாள். அது
சந்திராவின் அறை. மூடி இருந்தது.
உள்ளேயிருந்து ஆணின் பேச்சு சத்தம்.
சந்திரா ஏதாச்சும் கிளினிங்
செய்கிறாளா என்ன?
"ஏய்ய் எரும.... அய்யோ..ச்சீ'
சௌம்யாவுக்கு உடல் வெலவெலத்தது.
போலாமா? வேணாமா? யாரது குரல்
கொடுக்கலாமா?
நம் வீட்டு ஆட்களா? இல்லை வேரு யாரவதா?
ஏனோ அவளுக்கு தன் தாலி கட்டிய கணவன்
மனோகரன் ஞாபகம் வந்தது. அய்யோ அவனாக இருந்தால்? அவன் ஏன் இங்கு வரப்போகிறான்?
அவள் தயக்கத்துடன் அறை ஜன்னலை திறக்க.
அறை முழுக்க இருள் தான், பேச்சு சத்தம் இல்லை .மூச்சு சத்தம்.
சந்திராவின் அருகில் ஒரு ஆணா? ஐயோ அது யார்? அவள் ஜன்னலை இன்னும் திறந்து பார்க்க உள்ளே
இருந்தது ..
டிரைவர் கிருபாவா? இல்லை
முருகேசனா?
அய்யோ யார்
அடப்பாவி கிருபா போல இருக்கிறதே ?
No comments:
Post a Comment