'அவனை அடி கிருபா" சௌம்யா ருத்ரமாய் சொல்ல, அவன் புது ரத்தம் பாய்ந்தது போல கதவை திறந்தான்.
பேச்சே இல்லை. மேனஜருக்கு ஒரே கை
வெட்டு தான். நேராக தாடையில் பட்டு தாடை கிழிந்தது. கீழே விழுந்த மேனஜரை
காலால் உதைத்து மேலேறி நின்றான் கிருபா.
"த்தா... ரோட்டையா பிளாக்
பண்ரீங்க வாங்கடா? " கிருபா
முஷ்டியை முறுக்கினான். கூட வந்த ஆளும்
கிருபாவை அடிக்க பாய.,
"அவனையும் போடு" சௌம்யா கிருபாவை இயக்க,.
கூடவந்தவனுக்கு வெட்டு அல்ல, குத்து கழுத்திலும் . வயிற்றிலும்
பலமான குத்துகள்.ஃ அவன் எகிறி விழ.,
அவனது உக்கிரமும்., பலமும்
பார்த்து ஷூட்டிங்கின் ஒரு பகுதி பின்வாங்க. ஒரு சிலர் மட்டும் அவனை நோக்கி
வந்தார்கள்.
"போதும் உக்கார் கிருபா.,
சமரசம் பேச வந்தா போவோம்..அடிக்க வந்தா அடிப்போம்" சௌம்யா காத்திருக்க.கிருபா
காரில் உட்கார்ந்து கதவை மூடினான்.
"ஏம்பா.. தொழில் பண்ற இடத்துல
கலட்டா பண்றியே" ஒரு ,மத்திம வயது ஆள் கத்தினான்,.
" யோவ்... உங்களை ஷுட்டிங் நடத்தட்டும் வேணாம்னு சொல்லல. ஒரு
பக்கமும் வழி விட்டு நடத்துங்க,. இந்த கேரவானை தூக்கி ஓரம் நிப்பாட்டுங்க. ஒரே ஒரு
கார் போறதுக்காவது வழி விடலாம்ல "
"அதுக்கு அடிப்பியா?"
"வண்டையா பேசுனா வாய்லதான் போடுவோம்..இது எவ்ளோ
முக்கியமான ரோடு . ரோடை அடைச்சிட்டு அராஜகம் பண்றீங்க... ? நாங்க கச்சேரிக்கு கரெக்ட்
டைமுக்கு போக வேணாமா?"
"கச்சேரியா? என்ன கச்சேரி"
ஷூட்டிங்க் கூட்டத்தில் ஒருவன் கேட்க
" அம்மா ஆருன்னு நினைச்சுக்கிட்டே.,
" அவன் கார் வின்டோவை எட்டி கீழிறக்க.,
கூட்டம் குனிந்து பார்த்தது.
சௌம்யாவின் அழகை பார்த்து விசிலடித்தது.,
அபர்ணாவை பார்த்து சைட் அடித்தது. அந்த கூட்டத்துக்கும் கர்னாடக சங்கீதத்துக்கு
எந்த தொடர்பில்லை. சௌம்யாவை அவர்களுக்கு
தெரியவில்லை.
"ஏய்ய் இவளுங்களும் நடிக்கறவளுங்கப்பா"
அபர்ணா காதுகளை பொத்திக் கொண்டாள்.
"ஆமாண்டா மினுக்கி ,மினுக்கி
பாட்டுக்கு ஆடுவாளே" சௌம்யா திகிலடைய..
"ஏய்ய் என்னடா
சொன்னீங்க" கிருபா கூட்டத்தை தள்ள, சுற்றி இருந்த கூட்டம் சிதறி ஓட.,
ஷூட்டிங் ஆள்கள் மட்டும், அவனை எதிர்த்தார்கள்.
" யோவ் இங்க இத்தனை பேரு
வெய்ட் பண்றாங்க.. உனக்கு என்ன மயிறு
அவசரம் ?'
"ஏய் மரியாதையா பேசு., அம்மா
இருக்காங்கன்னு பாக்கறேன்.. உனக்கு மேல நான் பேசுவேன். புரிதா"
"எவடா உங்க முதலாளி? " அந்த
ஆள் குனிந்து பார்த்தான் .
"எங்கடா இவளுங்களை தள்ளிகிட்டு போறே?" என ஒரு மாதிரியாக
சொல்லி சிரிக்க.,
"ஏய்ய்ய்ய்"
'அடிச்சு மூஞ்சை உடை கிருபா"
கிருபா கட்டுப்பாட்டை இழந்தான். படாரென
கதவை திறந்து அந்த ஆளை அடித்தான்,. மரண அடி. அவன் அடித்த ஒரே அடியில் வேகம்
தாலாமல் அவன் சாலையில் படுத்து உருண்டான்.
ஒரே கலவரமானது. யார் யாரோ
வந்தார்கள் . சரமாரியாக அடி வாங்கினார்கள். கிருபா அத்தனை பேரையும் சமாளித்தான். கிருபாவை
யாராலும் நிறுத்த முடியவில்லை. வருகிறவர்களையெல்லாம் அடித்துக் கொண்டே இருந்தான். பல
பேர் அடிவாங்கி காயமானார்கள். சினிமா ஷூட்டிங்கை விட அது இன்னும் தத்ரூபமாக
ஆக்ரோஷமாக இருந்தது.
"இது வழிவிடாததுக்கு.."
"இது எங்க மேடத்தை தப்பா பேசுனதுக்கு" என
ஒவ்வொன்னுக்கும் சொல்லி நிதானமாக அடித்தான்.
"நல்லா போடு வாத்யாரே., ரேஸ்மியை
காட்டுன்னா., அசிங்கமா திட்றான்.. நல்லா கவனிச்சி செஞ்சு விடு தலைவா" கூட்டம்
கத்த., அங்கே இருந்த இரும்பு ராடு அவன்
கைக்கு கிடைக்க., கிருபா இரும்பு ராடால இன்னும்
பல பேர செமத்தியாக கவனித்தான். மொத்..மொத்'தென அடி வாங்கினார்கள். கத்தியபடியே
சிதறினார்கள்.
"வாங்கடா.. வாங்கடா., இன்னும்
எத்தனை பேர்டா வருவீங்க?"
இடையில் இந்த சண்டைக்கு
சம்பந்தமில்லாத ஒரு ஒல்லி ஆள்..திபுதிபுவென
"ஏய்ய் என்னப்பா... என்னப்பா"
என ஓடிவர
"மயிருப்பா" அவன்
இடுப்பையும் கிருபா நின்ற இடத்திலேயே எட்டி
உதைத்தான்.
" அய்யோ டைரக்டரை
அடிச்சிட்டான். டைரக்டர் வுழுந்துட்டார்" யாரோ கத்த,
"ஏய்ய் என்னப்பா யார்பா அது
எல்லாரையும் அடிச்சிகிட்டுருக்கான்? " சந்தன போட்டு வைத்த ஒரு ஆள் கடைசியில்
ஓடி வந்தார்.
"ஒரு காட்டான் எங்க எல்லாரையும் அடிச்சிட்டிருக்கான்
சார்.."
"ஏன்.,, சபாபதி இல்ல?"
" அவன் முதல்ல அடிச்சி
போட்டதே சபாபதி சாரை தான்."
"யோ.. வ் என்னப்பா
கலட்டா?" அவர் கலவரமானார்.
அவர் தான் புரட்யூசர்., கிருபாவை நோக்கி
பதட்டமாய் வர., அதற்குள் இரண்டு மூன்று யூனிட்
ஆட்கள் கிருபாவிடம் மோசமாய் அடி வாங்க., புரட்யூசர் அதிர்ச்சியில் திடுக்கிட்டார்.
"யோவ்வ்.. ப்ளீஸ் ., யார்
நீங்க... ஸ்டாப் அடிக்காதீங்கோ."
ஓடி வந்து கிருபாவிடம் கை கூப்பினார் .
"சமூகம் மன்னிக்கனும்..
கோவத்த விடனும்"
'அட போய்யா" அவன் யாரையும்
பார்க்கவில்லை. அவனுக்கு ஏற்றி விட்ட கோபம் இறங்க வழியில்லாமல் திண்ற.. "
வாடா மச்சி.. வாழக்கா பஜ்ஜி.. த்தா இதை ஷூட்டிங்க் எடுங்கடா" ராடை
சுழட்டியபடியே கிருபா புரட்யூசர் சட்டையை பிடித்து தூக்க.,
" நோ.. கிருபா ஸ்டாப்ப் லீவ் ஹிம்" அபர்ணா கத்தினாலும்
அவன் விடவில்லை.
"கிருபா என்ன பண்றே?..போதும்..
வயசான ஆளைப் போய்.ம்ம்ம்ம். விடு" சௌம்யா பதறி போய் ,கார் கதவை திறந்து அவனை
நோக்க கத்த., அவன் பிடியை விட்டான். சௌம்யா அருகே வர கிருபா பவ்யமாய் ஒதுங்க.,
" சாரி டிரைவர் சார்..சண்டை
வேணாம் சூட்டிங் நடக்க விடுங்க 30 லட்சம் போட்டு இன்னைக்கு சூட்டிங் நடத்துறோம்
.,கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.," தயாரிப்பாளர் ,மிரண்டு போய் பணிவாய் குனிய.,
" எங்கிட்ட எதுவும் பேசாத போய்யா
" என்ன கிருபா கத்த.,
"கிருபா போதும்.. சீட்ல போய்
உக்காரு,,,"சௌம்யா குரலுயர்த்த, அந்த ஆள் சௌம்யாவை பார்த்தான்.
"..அய்யோ சௌம்யாம்மா நீங்களா?
சாரிங்க மேடம்... மேடம்.. உங்களுக்கு
சிரமம் கொடுத்துட்டோம் " புரட்யூசர் தாள் பணிந்தார்.
"ஏன் இப்படி இம்ப்ராப்பரா
ஷூட்டிங் பண்றீங்க? எவ்ளோ நியூசென்ஸ்?"
" மன்னிச்சிடுங்க
மன்னிச்சிடுங்க. .ரொம்ப சாரி
மேடம்...."
" அம்மாவை தப்பா உங்க ஆளுங்க
தான் பேசினாங்க.. இப்ப அம்மா வந்தாங்க..
இல்லண்னா வெச்சுக்க உங்களை அவ்ளோ தான்" கிருபா கர்ஜித்துவிட்டு டிரைவர்
சீட்டில் போய் உட்கார்ந்தான்.
"சௌம்யாம்மா மன்னிச்சுக்கோங்க., நீங்க போறதுக்கு, உங்க வண்டி போறதுக்கு ஒரு வழி
பண்ணி தரன்.. யோவ் சண்முகம் இங்க வாய்யா" என அவர் கூப்பிட்டார். "எதுக்குய்யா வந்த
இடதில்ல சண்டை போடுறீங்க? உள்ளூர் ஆளுங்களை
பகைச்சிட்டு சூட்டிங் நடக்க முடியுமா? "
" முதல்ல நீங்க பர்மிஷன் வாங்கினீங்களா?
இல்லையா? அதை சொல்லுங்க " சௌம்யா
கைகட்டிக்கொண்டு கேட்க.,
"வாங்கினியா இல்லையா.,
சொல்லுய்யா அம்மா கேக்குறாங்க பாரு" புரட்யூசர் குரல் கொடுக்க., அவன் தலையை சரிந்தான்
"பர்மிஷன் வாங்காம உங்களுக்கு
ஏன் இவ்வளவு திமிரு ? எவ்ளோ வண்டி பின்னாடி நிக்குது தெரியுமா?., மரியாதையா ஒரு ஒரு மணி
நேரம் உங்க சூட்டிங் நிறுத்தி வைங்க "
சௌம்யா உத்தரவிட.,
"அப்படியே ஆகட்டும்மா ., யோவ்
கிரேன் எல்லாம் ஓரங்கட்டுங்க,... சாங்
தானே ஏழு மணிக்கு மேல எடுத்துக்கலாம் டிராலி எடு... லைட்ஸ் ஆப் பண்ணு.
கிரௌவ்ட் கிளியர் பண்ணு ." மளமளவென உத்தரவுகள் பிறந்தன.
" சார் ஹீரோ சார் ரூமுக்கு போகணும்னு
சொல்றாரு."
' அவரு போனா போகட்டும். நாளைக்கு
காலைல சீக்கிரம் வர வச்சு எடுத்திடலாம்.. ரேஸ்மி ஷாட்ஸ் மட்டும் இப்ப எடுங்க"
"எங்க எடுக்கறது?.. டைரக்டர்
செமத்தியா அடிவாங்கி இருக்கார்."
"டான்ஸ் டைரக்டர் வெச்சி எடுங்க..
அந்த காரக்டர் ஆர்டிஸ்ட் இருக்கான்ல.. "
"ம்ம் கேரவான்ல இருக்கார்.. அந்த
கேரவான் வண்டியால தன இவ்ளோ பிராப்ளம்...
ரோட்ல அடைச்சிகிட்டு நிக்குது"
" எடுக்க வேண்டியது தானே.?.'
"அவரு தூங்கறாரு,. வண்டியை அசைச்சா அவர்க்கு கோவம் வரும்..."
"மயிர்ல வரும்.. அவனா இப்ப
செவுள்ல அறை வாங்கினான்.?. நாங்க தானே வாங்கினோம். போய் கேரவானை ஓரம்
கட்டி.,ரூட்டை கிளியர் பண்ணு..."
"சரிங்க சார். "
கேரவான். கிரேன் , பேரிகார்ட் எல்லாம் வேகமாய் நகர்த்தப்பட வாகனங்கள் மெல்ல
ஊர்ந்து போக துவங்கியது..
" நாளைக்கு சண்டே தானே ? கூட்டம்
இருக்காது. டிராபிக் இருக்காது .. ஹீரோ இப்ப.. போகட்டும் .விடுங்க, அந்த கேரக்டரா
ஆர்டிஸ்ட் மட்டும் இருக்கட்டும். அவர் சீன் எடுத்துக்கலாம்முன்னு டைரக்டர்
சொன்னாரு" ஒரு உதவி உயக்குனர் சொல்ல.,,
" இந்த அறிவு முதல்லியே இருந்தா
இவ்ளோ சண்டை வந்திருக்காது. எவ்ளோ பேருக்கு அடி . ஒத்தை ஆளு ஒரே ஆளு எல்லாரையும் போட்டு
பின்னி எடுத்துட்டான்.. என் சட்டையை பிடிச்சி தூக்கறான். இதெல்லாம் தேவையா..
த்தூ..."
"..................."
"என்னய்யா பிளான் பண்றீங்க?"
அந்த ப்ரொடியூசர் கத்தினார்
"சார் கேரக்டர் ஆர்டிஸ்ட் நைட்டு முழுக்க நடிக்க ஒத்துக்கணுமே "
"எல்லாம் ஒத்துக்கணும். எங்க போறான்? ஒத்துப்பான்"
" இல்ல சார் என்னதான்
இருந்தாலும அவர் ஒரு காலத்துல ஹீரோவா நடிச்சவரு "அதெல்லாம் இருக்கட்டும் அது
அந்த காலம். இப்ப அந்த ஆளு வெறும் காரக்டர் வேஷம் தாணே. நான் சொல்றத செய்ய சொல்லு " என சொல்லி துரத்த,
சௌமியா கார் நகரத் துவங்கியது.
சௌமியா அங்கிருந்த வேடிக்கை பார்க்கும்
ஆளை அழைத்து
" என்ன படம் ஷூட்டிங் நடக்குது ?" என சௌம்யா கேட்க,
"தமிழ் படம் தான் மேடம்., மலையாள, தமிழில் ஒரே சமயத்துல நடக்குது "
"ஹீரோ யார்"
" துர்க்கர் சல்மான். ஹீரோயின் ரேஸ்மி நாயர்.."
"ஓ ஐ சீ ..சரி யாரோ ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கேரவன்ல தூங்கறதா சொன்னாங்களே ? அது யாரு? "
அபர்ணா ஆரவமாய் கேட்க,
"அவரு ஒரு காலத்துல ரொம்ப
ஃபேமஸா இருந்த ஆக்டர் . மூனு வருஷம்
கழிச்சு இப்ப திரும்ப நம்ம படத்துல தான் நடிக்கிறார் "
ஓ அப்படியா ? யார் அவர்? பேர் என்ன?"
என்று கேட்டாள் சௌம்யா.
" ஆக்டர் ஷியாம்"
என்றான்.
சௌம்யா விசாரிப்பதை ஓரம்
கட்டப்பட்ட வேனிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆக்டர் ஷ்யாம்.
காமபெருநதி முதல் பாகத்தை படிக்க
Awesome update. NV universe is here with shyam.
ReplyDeleteLook like cinema
ReplyDelete