மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, March 10, 2026

க.க.கா பாகம் 6 : எபிசோடு : 261

 

அன்று மதியம்..

அப்பார்ட்மென்ட் தெருவே பரபரத்திருந்தது.

வீட்டில் பத்திரமாய் போய் இறங்கினாள் ரேகா. அக்காவை பார்த்து அழுதபடி இருந்தான் ஜாக்கி,.

“மாத்திரை கொடுத்து அடிக்ட் ஆக்கிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்.? சொல்ற இடத்துக்கு வந்தா இன்னும் தரேன்னு கூப்பிட்டிருக்கான். இவங்களும் நம்பி போய் இருக்காங்க. இவங்க மேல தப்பு என்ன? அதான் ஊரு பேர் தெரியாத ஆளுங்க மாத்திர கொடுத்த வாங்கி போடக்கூடாதுந்னு சொல்றது .”

‘......................”

“சரி விடுங்க எந்த அசம்பாவிதமும் நடக்கறதுக்கு முன்னாடி நாங்க தான் பத்திரமா கூட்டி வந்துட்டோமே.”

ரேகாவின் கணவன் சேகர் விழிக்க.,

“சேகர்ணா பயப்படாதீங்க .. உங்க சம்சாரம் போனபடியே பத்திரமா வந்திருக்காங்க.. சொன்னா புரிஞ்சுக்கோங்க” இந்து சொல்ல சேகர் கை கூப்பினான். 

“நீங்களும் அவங்ககிட்ட பிரியமா இருங்க..., பொண்டாட்டின்னா வெறும் மிஷின் இல்ல.. உங்க கோவத்தை தாங்கிற ஷாக் அப்சார்பர் இல்ல” இந்து சொல்ல “

“இனிமே ஒழுங்கா பாத்துக்கறம்மா” முசுடு சேகரே மிருதுவாய் பேச, ஜாக்கி இந்துவை பார்த்து கை கூப்பினான்.

 சே அறிவு கெட்ட தனமாய் . வயசு திமிரில் இவள் மேல கை வெச்சுட்டோமே’..  நொந்து கொண்டான்.

“ ம்ம் சரி,. கொஞ்ச நாளைக்கு யாரும் அவங்களை தொந்தரவு பண்ணாதீங்க ., நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்”

“ஏம்மா! ஏதாச்சும் இவளை ஆஸ்பத்திறிக்கு கூட்டி போகனுமா?” சேகர் கேட்க.,

“எ..எதுக்கு?”

‘இல்ல இந்து போதை சிகிச்சை மறு வாழ்வு மையம்னு சொல்றாங்களே”

“ஓ அதுவா?  நியாயமா அங்க தான் கூட்டி போகனும். ஒரு மாசம் போதை பழக்கம்ல? ஆனா நடந்ததை பாத்த கிலி, பயம்., அவமானம் இதெல்லாம்  அவங்களுக்கு காலத்துக்கும் இருக்கும். அதுதான் பெஸ்ட் ட்ரீட்மென்ட். இனி அந்த மாத்திர பக்கமெல்லாம் தலையை வெச்சே படுக்க மாட்டாங்க”

“..................”

“அப்படியே அந்த மாதிரல்லாம் வேணுமின்னு கேட்டா கூட இங்க எங்கயும் கிடைக்காது.  டிரக்ஸ் டீலர்சை 35 பேரை  நேத்து நைட்டே அரஸ்ட் பண்னிட்டாங்களாம்..”

இதற்கு முன்பு பலறை இம்ரானால் ரேகாவுக்கு ஏற்பட்ட நிலை பற்றி ரம்யாவுக்கும் இந்துவுக்கும் தெரியவில்லை . தெரிந்து கொள்ளவும்  அவர்கள் விரும்பவில்லை.

போதை மாத்திரையில் கொடுத்து அவளை  சீரழிக்க பார்த்தார்கள் ,அதற்குள் நாங்கள் மீட்டுக் கொண்டு வந்து விட்டோம் என்பதை மட்டும் தான் இந்துவும் ரம்யாவும்  சொன்னார்காள்.

சில வாரங்களில்அவர்களது குடும்பம் இயல்புக்கு திரும்பும் என தோன்றியது.

 

 

களேபரம் அடங்க மாலை ரம்யா  சோர்வாய் வீட்டுக்கு வர.,

வீட்டில் உள்ளே இருந்த ரவி., அவனது அக்கா., மாமியார் பாய்ந்து ரம்யாவை கட்டி அணைத்துக் கொண்டார்கள்.

“ நல்ல வேலை செஞ்சேடி என் மகளே” என் மாமியார் சொன்னதில் உள்ளம் குளிர்ந்தாள் ரம்யா.

“வயசுக்கு பொருந்தாத காமம் ஆளை எப்படி ஆக்கிடுச்சி பாரு?.. இனி இந்த வீட்டுல கூட இருக்க  மாட்டேன். நான் என் பொண்ணு வீட்டுலய இருக்கேன்.. இங்க இருந்தா அந்தாளை பத்தி தான் கேப்பாங்க” அத்தை கிளம்ப தயாரானாள்.

அப்பாவை பற்றி ஏற்கெனவே நன்கு தெரிந்து வைத்திருந்த சாரதி மகளும்

“விடுங்க அண்ணி. நல்ல வேலை தான் செஞ்சிருக்கீங்க. அவர் ரொம்ப மோசமான ஆளுதான். வெளிய சொல்லகூடாதுன்னு தான் பொறுமையா இருந்தேன்.. நீங்க  ஒரு பொம்பளையை மட்டும் காப்பாத்தல. ஒரு பேமிலையையே காப்பாத்திடீங்க. “ என்றாள்

இனி அந்த மனுஷன் இந்த வீட்டில நுழையக்கூடாது. அவரு ஜெயில் இருந்து திரும்ப வந்தப்புறம் அவரு பணத்தை வைச்சிகிட்டு, எங்கேயாவது போய் சாப்பிடட்டும்.  என்றான் ரம்யாவின் கணவன்  ரவிச்சந்திரன் .

அவன் சொன்னது தான் சரி என்பதை மௌனமாக இருந்தால் ரவியின் தாய்.

 

 

மறுனாள் கீழ் விட்டு தளத்தில் எல்லா சாமான்களும் ஏற்றி கொண்டு இருந்தாள் சதாசிவத்தின் மனைவி.

சிவகாமி மாமி ! நில்லுங்க... நீங்க எங்க போறீங்க? நாங்க ஏதாச்சும் உங்களை சொன்னோமா? இப்ப உங்களுக்கென்ன அவமானம் வந்துச்சு?” இந்து தான் அதட்டினாள்.

“இது அவமானமில்லடி, வேதனை. நம்பி கால்ல விழுந்தவங்களுக்கு, செஞ்ச துரோகத்தை என்னால தாங்க முடியல”

அந்த ஆளு பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”

அடி போடி என் ஈரக்குலையே வெடிச்சிடும் போல இருக்கு. இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற ஒவ்வொரு மனுஷங்களையும், நான் குழந்தைகளா தான் பார்த்தேன் . என் வீட்டுக்காரரும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா அந்த ஆளுக்கு உள்ள ஒரு விஷப்பாம்பு, காமக்கொடூரன்  இருக்கிறத தெரியாமையே நானு 40 வருஷம் வாழ்கையை கொடுத்துட்டேன் . என்ன நெனச்சா எனக்கே கேவலமா இருக்கு”

ஐயோ இதுல உங்க தப்பு ஏதும் இல்லை”

அது எப்படி? புருஷன்காரன் எப்படிப்பட்டவன்? அவன் பார்வை எங்க போவுது? அவன் குணம் என்னன்னு தெரியாம எவ்வளவு முட்டாளா நான் இருந்திருக்கேன். சே..  என் வாழ்க்கையே அர்த்தம் இல்லாம போச்சு.  இப்படிப்பட்ட ஆள் கூட வாழ்ந்தோமுன்னு வெக்கமா இருக்கு.  எல்லாம் வேஷம்....”

சரி அதுக்கு வீட்டை ஏண் காலி பண்றீங்க?”

இது அவர் பார்த்து வச்ச வீடு . அவர் காசு. அவர் அட்வான்ஸ் கொடுத்த வீடு. மாச மாசம் ஒரு பென்ஷன்ல ‘ரென்ட்’ கட்டுற வீடு . அவரு காசு எதுவும் வேணாம். அவர் பொருள் எதுவும் வேணாம். இப்ப கூட நான் வண்டில ஏத்துற பொருளுங்க எல்லாம், என் பிள்ளைங்க வாங்கி கொடுத்தது தான். அவருது ஒன்னுமில்ல”

“...................................”

அப்போ பிள்ளைங்க எங்கிருந்து வந்தது? ன்னு கேட்காத. எனக்கு என் நெஞ்சே வெடிச்சிடும்.

“.......................”

 “அந்த ஆளு பண்ன வேலைக்கு.. ச்சே.. எத்தனை பேரு? எத்தனை குடும்பங்க? எங்க மேல மரியாதை வச்சி இருந்தீங்க?  சொந்த அப்பா அம்மா மேல கூட இவ்வளவு மரியாதை வைக்கல..  அதெல்லாம் இந்த ஆளு ஒரே நிமிஷத்துல கெடுத்துட்டான்.  பொம்பளன்றவ ஒவ்வொரு நேரத்துல, ஒவ்வொரு மாதிரியா இருப்பா. எல்லா நேரத்திலுமே அவளை உடம்பாவே பாக்குற புத்தி இருக்கே அது கொடூரமான புத்தி. அப்படிப்பட்ட புத்தியிருக்கிற ஆம்பளைக்கு கூட வாழ்ந்த என்ன விட அபாக்கியவாதி இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாதுடி.  எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க”  என்றபடி அவள் பொத்தாம் பொதுவாய் கும்பிட்டாள்.

“மக வீட்டுக்கு போறேன். எப்பனா நாளு, கிழமைன்னா வரேன்..” அவள் தீர்மானம்யா சொல்ல.,

இனி சிவகாமியை தடுத்து நிறுத்த முடியாது என்று தான் எல்லோருக்கும் தோன்றியது.

 

 

அதே வாரத்தில்

  ரவி ஆபீஸ் போன பிறகு,  ஜாக்கி ரம்யாவின் வீட்டிற்கு போனான் .

திடீரென அவனை பார்த்து ரம்யா ஷாக் ஆகி பின்வாங்க,

கைகூப்பி அழுதான்.

என்ன மன்னிச்சிடு ரம்யா .எனக்கு மன்னிப்பே கிடையாது”

“.......................”

நான் ரொம்ப மோசமான ஆளா இருந்துட்டேன். ஐயோ என்ன நினைச்சா எனக்கே அருவருப்பா இருக்கு. என்னை நம்பி வந்த பொண்ணு நீ . நியாயமா உன் கூடவே நான் கடைசி வரைக்கும் வாழ்ந்திருக்கனும்..”

“ அய்யோ  அதெல்லாம் எதுக்கு இப்போ?”

“ ஆனா உன்ன பழி வாங்குறதுக்காக உன் வாழ்க்கையை சீரழிச்சேன்.”

இப்ப எதுக்கு அதெல்லாம் முதல்ல நீ வெளியே கிளம்பி போ

ஐயோ என்ன பேச விடு. ரம்யா நான் அழனும் .உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும். உன் லைஃப்ல இப்படி ஒரு ஆளு இருந்தாங்கிறதை நீ கண்டிப்பா மறந்துடனும். மன்னிச்சிடனும். உன்  வழியில் நான் இனிமேல் வரவே மாட்டேன்”

“...........”

“... உன்னை பார்க்கிறதுக்கு, உன் நிழலை தொடறதுக்கு கூட, எனக்கு அருகதை கிடையாது. உன் லைஃப்ல முதல்ல வந்ததும் தப்பு. இரண்டாவது வந்ததும் தப்பு .”

“...........................”

ஐயோ ரம்யா ! உன் மாமனார் கிட்ட உன்ன பத்தி எல்லாம் சொல்லி உளறிட்டேன். சொல்லப்போனா உன் மாமனாருக்கு கொம்பு சீவி விட்டதே நான்தான். இப்படி ஒரு கேவலமான வேலையை உலகத்தில் எந்த ஆம்பளையும் செய்ய மாட்டான்.  நான் செஞ்சிட்டேன் ரம்யா. என்ன மன்னிச்சிடு ரம்யா.”

“...................”

என் அக்காவுக்கு ஒரு கொடுமை நடக்க இருந்தத நீதான் தடுத்துட்ட .அய்யோ அந்த இந்து கிட்ட எல்லாம் நான் எவ்வளவு மோசமா நடந்துகிட்டேன். ஆனா அந்த இந்துவும் சரி, நீயும் சரி ஒரு குடும்ப பொண்ணுக்கு பிரச்சனைன்னு வந்தப்போ எவ்வளவோ பதட்டமானீங்க.  என்கிட்ட கூட சொல்லாம போய் அதை சரி பண்ணி, எங்க அக்காவ மீட்டு வந்துட்டீங்க.

எங்க அக்காவ அந்த பசங்க எதாவது பண்ணி இருந்தா கூட. எங்க குடும்பமே உயிரோடு இருந்திருக்காது. இன்னைக்கு நான் முன்னாடி நிற்கிறதுக்கு நீ தான் காரணம். என்ன மன்னிச்சிடு ரம்யா.”

“....................சரி விடு, ஜாக்கி”

“ஊர்ல இருக்கிற பொம்பளைங்க மீது மேல ஆசைப்பட்டேன். ஆனால் என் வீட்டு பொம்பளை மேல ஒருத்தன்  ஆசைப்படுறப்போ, அவ வாழ்க்கையை சீரழிக்கிறப்போ எனக்கு எவ்வளவு கோவம் வருது?. அப்படித்தானே ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கும்.இப்பதான் எனக்கு  செவிட்டில அடிச்சாப் போல புரியுது. ரம்யா இனி இந்த தப்பை என் வாழ்நாள் செய்ய மாட்டேன். ரொம்ப சாரி.. இந்து கிட்ட  நான் மன்னிப்பு கேட்டதா சொல்லு. நான் ஊருக்கு கிளம்புறேன்

“................... ஊருக்கா?”

“ஆ,மா திருச்சிக்கு போறேன். இனிமே நான் இங்கே இருக்க மாட்டேன். நீ எப்பவும் போல இனி  ஜிம்முக்கு வரலாம், போலாம். வொர்க் அவுட் செய்யலாம். நான் பண்ண எல்லா தப்புக்கும் என்ன மன்னிச்சிடு . வரேன்எனக் கூறிச் சென்றவன் திரும்பி நின்றான்.

“அடுத்த வாரமே எனக்கு கல்யாணம்என்றான் .

ரம்யா எதுவும் சொல்லவில்லை.சரி” என்று மட்டும் சொன்னாள்.

அவன் அவளைப் பார்த்துயார் பொண்ணு?ன்னு கேக்க மாட்டியா?”

யாரு?” அவள் புரியாமல் பார்க்க,

மைதிலி” என்றான்.

“மைதிலியா?”

“ஆமா மைதிலி.  ஞாபகம் இருக்கா?.  ஆமா  அவதான். ஒன்னா உன் கூட வேலை பாத்தவ. உன்கிட்ட பண்ண தப்பைதான் என்னால சரி செய்ய முடியல.  என்ன நம்பி தன்னை கொடுத்த இன்னொரு பொண்ணு மைதிலி. இனிமே அவளுக்கும் அவ குழந்தைக்கும் நான் தான் பாதுகாப்பு.  அட்லீஸ்ட் இப்பவாச்சும் என் தப்ப சரி பண்றதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குஎன்றான்.

அவன் முடிவு சரிதான் என தோன்றியது ரம்யாவுக்கு..

 

 

 


கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க.. 

1 comment:

  1. Ennangada ellarum group a thrunthitanga

    ReplyDelete