‘ இது ஆர்த்தி மேடம் . இவங்க கம்பெனிதான் ஆர்த்தி பில்டர்ஸ். அண்ட் இந்த ஆர்த்தி
பில்டர்ஸ் கிராண்டனி குரூப்போட சிஸ்டர் கன்சர்ன் . அந்த கிராண்டினியோட எம்.டி . நான் தான் . என் பெயர் சுரேஷ் கிராண்டனி ” என்றான் சுரேஷ் கிராண்டணி.
அவர்கள். கிராண்டினி
கட்டுமான நிறுவனம் குறித்து கேள்விப் பட்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே அது மூன்றாவது மிகப்பெரிய கட்டுமான
நிறுவனம். பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்களை
உடைய அந்த நிறுவனத்தின் எம்டியா இப்ப., நம்மை
அடித்தது? யப்பா என்ன அடி?
அவர் ஏன் இந்த இடத்திற்கு வந்தார்? எப்படி மனைவியுடன்
வந்தார்? யார் சொல்லி வந்தார்? எப்படி இவரிடம்
மாட்டினோம்.
சுரேஷ் ரேகாவை நெருங்கி வந்தான். ரேகாவின் தோளை
தொட்டான்..” மேடம் யு ஆர் சேவ்ட்.. ஒன்னும் பயப்பட தேவையில்லை., போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணியாச்சு. இங்க தான்
இருக்காங்க”
வெளியே போலீஸ்
சைரன் கேட்க அவர்கள் கிலியுடன் சுரேஷ்ஷை பார்த்தார்கள்.
“ அய்யோ போலீசா?’ ரேகாவும் அச்சமுற,
போலீஸ் உள்ளே வர., இம்ரானையும், ராகுலையும் ரவுண்டு கட்ட,
“டோன்ட்
பேனிக் மேடம். உங்க பேரு வெளிய வராது.. நீங்க பாட்டுக்கு வீட்டுக்கு போய்டுங்க,
மத்ததெல்லாம் நாங்க பாத்துக்கறோம்..ஆர்த்தி டிட் யூ அரேஞ்ச் வெஹிஹள்ஸ்?”
“ம்ம்ம்..
டன்”
“ ஏய்ய்
வெளில வாங்கடா.. “ .,, ராகுலும் இம்ரானும் பேச்சு மூச்சு இல்லாமல் நிற்க., லோக்கல் இண்ஸ்பெக்டர்
பூபதி வந்தவுடனே இருவரையும் பூட்ஸ் காலால் உதைக்க ஆரம்பிக்க., ஏற்கெனவே சுரேஷால்
உதைபட்டிருந்த இருவரும் சுருண்டு விழுந்தார்கள்.
க்ரைம் கில்லர் படத்தை பாதியில் பார்த்தது போல யாருக்குமே எதுவும் புரியவில்லை.
இந்து எப்படி இங்கே வந்தாள்?. ரம்யா எப்படி இங்கே வந்தாள்.? இந்த பெரும் கிராண்டனி முதலாளிகள் எப்படி யார் பேச்சைக் கேட்டு இங்கு வந்தார்கள் ? அவர்கள் விழிக்க .,
“சார்
பெட்ல பாருங்க., டிரக்ஸ் டேப்ளட்.. இதை கொடுத்து தான்., இவனுங்க லேடீஸை
மைன்ட் வாஷ் பண்ணி தூக்கிட்டு வரானுங்க”
‘ யெஸ் சார்”
“தரோவா..
செக் பண்னுங்க,,.. இப்ப இந்த மேடத்தை கத்தியால குத்த வந்து திரெட்டன்
பண்ணான். அந்த கேசையும் சேத்து போடுங்க”
“யெஸ்
சார்”
‘ இந்த
மாடல் ஃபிளாட்டை எங்க கம்பெனி ஆளு
செக்யூரிட்டி மஸ்தான், இவங்களுக்கு
ரென்டுக்கு விட்டிருக்கான். “
“அவனை
புடிச்சி நேத்துலருந்து கஸ்டடில்ல வெச்சிருக்கோமே சார்.”
“ யா ஐ நோ
இட்”
‘சார்
சார் எங்களை விட்டுருங்க சார்.. விடசொல்லுங்க சார்” ரெண்டு பேரும் சுரேஷின் காலில்
விழ.,
“நீங்க பண்ற அக்கிரமா அநியாயத்தை எல்லாம் உங்க கூட்டாளி சைட் செக்யுரிட்டி கார்ட் மஸ்தான் எல்லாத்தையும் சொல்லிட்டான். வெளியில வாங்கடா “ ஆர்த்தி கத்த.,
“ இரு இரு., இவங்க மட்டும் இல்ல உள்ள ரெண்டு ஜென்டில்மேன் இருக்காங்க. அத மறந்துட்டோமே.. அவங்களையும் கூப்பிடனும் இல்ல?” சுரேஷ் கிராண்டனி திரும்பிப் பார்க்க ,
போலீசும் அவனின் உதவியாளர்களும் மூடிக்கிடந்த பெட்
ரூம் கதவைத் தட்ட., அது மௌனமாக இருக்க.,
“யார்
சார்?” இந்து கேட்க.,
“இங்க
பெட்டுல நடக்கறதை காசை கட்டி லைவ் ஷோவா பாக்கறானுங்க..”
“அய்யோ..
இது வேறயா? கடவுளே உலகம் எங்கே போதுன்ணே தெரிலயே? “ இந்து அதிர்ச்சியாக,
சாரதியும் சதாசிவமும் ஒளிந்திருந்த ரூமின் கதவை எட்டி உதைத்தார்கள் .
அந்த
கிழவன்கள் உலகமகா தயக்கத்துடன் வெளியே வர.,
“ஏய்ய்
உங்க மாமாடி...:?” கூட சதாசிவம் மாமாவும்..”
இந்து திடுக்கிட.,
‘ம..ம..மாமா”
ரம்யா உறைய
‘இவங்களா?
என்னை பாக்கவா?” ரேகா தலையில் அடித்து கொண்டுசரிய
“அய்யோ...
சதாசிவம் அங்கிள். நீங்களுமா..” இந்துமதி கத்த
இந்துவும்., ரம்யாவும்
மீளவே முடியாத அதிர்ச்சியில்
உறைந்தார்கள்;
எல்லாருக்கும்
எதிரே தனது சுயரூபம் வெளிப்பட்டு விட்ட அவமானத்தில் கூனிக் குறுகி இருவரும் வெளியே வர .,
“ இவங்க தான் லைவ் செக்ஸ் ஷோ
பாக்கறவங்க.” இன்ஸ்ஸ்பெக்டர் பூபதி விளக்க., இந்துவும் ரம்யாவும் அந்த இரண்டு
வயோதிகர்களையும் அந்த இடத்தில் அந்த நோக்கத்திற்காய் சத்தியமாய்
எதிர்பார்க்கவில்லை.
“சா....;சார்
. இது எங்க மாமனார் சார்”
‘ம்ம்
அதுக்காக?’
“இவரும்
எங்க நெய்பர் தான்.. கீழ் பிளாட்டுல
இருக்கார். சதாசிவம் பேரு”
“அதுக்காக
விட முடியாது மேடம்.. செக்ஸ் லைவ் ஷோ பாக்கறது பெரிய கிரைம்.. தலா ஆறுமாசம்
கன்பார்ம்”
“அய்யோ
சார்., நான் விட சொல்லலை சார்.. இவனுங்களை சும்மா விட கூடாது சார்.. படுபாவிங்க..”
ரம்யா காறி மாமனாரின் முகத்தில் காறிதுப்ப...
“அடப்பாவி சதாசிவம். நீயெல்லாம் ஒரு
மனுஷனா? த்தூ அடப்பாவிங்களா அந்த அபார்ட்மென்ட்டே உங்க காலுல
விழுந்ததுடா.. “ இந்துவும் கத்தினாள்.
“ உன் காலிலேயே நாங்க வருஷா வருஷம் விழுந்தோமேடா.. மனசாட்சியில்லாத
மிருகமாடா நீங்க? ச்சீ உங்க கால்லியா விழுந்தோம் ? ச்சீ...” ரம்யா கத்த,. இந்து தயாராக வைத்திருந்த செருப்புகளால் அடிக்க வர, பூபதி தடுக்க அவள் செருப்பை எடுத்து இருவர்
மீதும் வீசினாள்.
‘ரேகா
அக்கா உங்களை சொந்த தகப்பனா நினைக்கல??
‘மன்னிச்சகம்மா.
புத்தி பேதலிச்சி போச்சி” சதாசிவம் அழ.,
“உங்களுக்கெலலாம்
மன்னிப்பே கிடையாது. “ ஆர்த்தி சைகை காட்ட
பூபதி நால்வரையும் வெளியே தள்ளிக் கொண்டு போக.,
சாரதி தொபுக்கென ரம்யாவின் காலில் விழுந்தார்” ஐயையோ ரம்யா... போலீஸ்லாம் வேணாம் ரம்யா சொல்லு.. ரம்யா..”
“ நான் என்ன சொல்றது? . நீ மோசமான ஆளுன்னு எனக்கு தான் தெரியும். நீ பண்ண வேலைக்கு நான்
வாழ்வா சாவா?’ ன்னு இருந்தேண். இப்பதான் நிம்மதி,.. என் கண்ணு முன்னயே நிக்காத .
மரியாதையா போய்ரு..”
“ரம்யா...”
“ நீ மோசமான ஆளுன்னு தெரியும். ஆனா நீ இவ்வளவு மோசமான ஆளுன்னு எனக்கு தெரியாது... “
“அய்யோ என் பொண்ணு., பையன் முகத்துல
பொன்டாட்டி முகத்தில எப்படி முழிப்பேன்...” சாரதி பெருங்குரலெடுத்து அழ., அந்த
பயம் சதாசிவத்துக்கும் தொற்றிக் கொண்டது.
அப்படியே அவர் நிற்க., பூபதி முதுகை பிடித்து தள்ளினார்.
“வெளியில வாயா வெளியில் வா “ என சொல்ல தள்ள., ரம்யா ஆத்திரமும் அழுகையும் அடக்கிக் கொண்டு வெளியே வர,. அங்கே ஒரு பெரும் கூட்டம் நின்று கொண்டு இருந்தது.
“ஸ்டாப்
.. அவங்க லேடீஸ் முதல்ல போகட்டும்.,
ரேகாவை கிரௌட்ல காட்ட வேணாம்.. டிரைவரை காரை வாசலுக்கு கொண்டு வரசொல்லுங்க. அவங்க ஃபேஸ் எதுலயும் வர கூடாது. “ சுரேஷின் மனைவி ஆர்த்தி
கவனமாய் இருந்தாள்.
கொஞ்ச நேரம் முன்னாடி வரை ஒரு ஈ காக்கா இல்லாத இடத்தில் எப்படி இவ்வளவு பேர் வந்தார்கள்? என்பது குற்றவாளிகள் நால்வருக்கும்
தெரியவில்லை.
காரில்
ஏறி ரம்யா, ரேகா., இந்துமதி ஏற., ரேகா பூபதிக்கு கை கூப்பி நன்றி சொல்ல,
“நான்
என்னம்மா பண்ணேன். ? என் வேலைம்மா இது? நீங்க நன்றி சொல்றதா இருந்தா ஆர்த்தி மேடத்துக்கும் அவங்க
ஹஸ்பேன்டுக்கும் சொல்லனும்” என்றார். ரேகா ஆர்த்தியின் கைகளை பிடித்து கொண்டு அழ,
“ அதான்
எதுவும் தப்பா நடக்கலை இல்ல. தைரியமா போங்க..
“
அய்யோ!
ஏற்கெனவே எனக்கு நடந்ததை இவங்க கிட்ட சொன்னால்? அவளால் துயரமும் அவமானமும்
தாங்காமல் ஓ’வென அழுதாள். ஆர்த்திக்கு புரிந்தது.
“ ரேகா
மேடம்... நம்ம இஷ்டப்படி அமையாது போனாலும் குடும்பம் குழந்தைங்க தான் பெரிய
சந்தோஷம்.. அதை மட்டும் விட்டுடாதீங்க” ஆர்த்தி சொன்னது ரம்யாவுக்கும், பொட்டில் அறைந்தாற் போல
இருந்தது.
“வரோம்
சார்’ சுரேஷப் பார்த்து சொல்ல., அவனும் கை கூப்பி விடை கொடுத்தான்.
அவர்களது கார்
பின்பக்க ஆர்.எம்.சி வாகனம் வரும் கேட் வழியாக சடாரென போக .,
விஷயம்
தீயாய் பரவி, அப்பார்ட்மென்ட் ஜனங்கள் வந்து விட்டிருந்தனர். வெளி
ஜனம், ஆட்டோ காரரகள் சேர., வெளியே தள்ளு முள்ளு சத்தம் கேட்க., வாசலில் ஜாக்கி ஆத்திரத்துடன் ராகுலையும், இம்ரானையும்
போட்டு துவம்சம் செய்து கொண்டிருந்தான்.
“த்தா என்
அக்காளையாடா மாத்திர கொடுத்து இங்க கூட்டியாந்த்தீங்க”
அவனது அடிகள் அவர்களை பஞ்சாய் பிழிந்து போட்டது.
அங்கே
இருந்த மரக்கிளையை ஒடித்து அவர்களின் ,மண்டையில் அடிக்கப் போக பூபதி
தடுத்துவிட்டார்.
“
ஸ்டேஷண் வந்து புகார் கொடு.. இப்ப விட்டுடுங்க” அவனிடமிருந்து அவர் இருவரையும்
காப்பாற்ற,.
‘
அய்யோ...ட்ட்ய்ய்ய் ய்ய் ராகுல் என்ன வேலைடா பண்ணி வெச்சிருக்கே நாயே..?” ராகுலின்
அப்பாவும் தன் பங்குக்கு பதம் பார்க்க.,
அவர் வந்தது போதாமல்.,
:’இவன்
தான் சார். ஏன் கடைல் இல்லீகலா டிரக்ஸ் வித்தான்’ ராதா மெடிகல்ஸ் ஓனர் உள்ளூர்.,
எம்.எல்.ஏவுடன் வந்திருந்தார்.
“..
இருங்க இருங்க... இவனுங்க மேல அஞ்சாறு கேஸ் இருக்கு. ஸ்டேஷன் வந்து எழுதிக்
கொடுங்க” பூபதி கூட்டத்தை விலகி பொலிரோ
காரில் ஏற்ற.,
“சார்
யாரை வேணா மன்னிச்சி விடுங்க... இந்த விஷப்பாம்ப மட்டும் வெளிய விடாதீங்க. இனி
இவன் என் புள்ளையே இல்ல.” இம்ரானின் அப்பா கத்தி அழ,
“உன்
புள்ளை விஷப்பாம்பா? ஏன்யா விஷப்பாம்பை கேவலபடுத்தறீங்க? வழியை விடுங்கய்யா”
சுற்றி
நடப்பத்தை அவர்களால் அரைமயக்கத்தால் தான் உணரமுடிந்தது.
எவ்ளோ
ஜனங்கள்? இங்கே தீடிரென..? டக்கென சீனே மாறிவிட்டது. நம்மை சிக்க வைப்பதற்காக நம்மை தப்பு செய்ய விட்டு டிராப் வைத்து காத்திருக்கிறார்கள். ச்சே
செக்யூரிட்டி மஸ்தான் காலையில் இருந்தே
இங்கே இல்லாத போதே நாம் உஷாரா இருந்திருக்கனும்.
இது எல்லாமே இது ஒரு ட்ராப் . நம்மை நோட்டம்
விட்டிருக்கிறார்கள். காமம், கபடம் நம் மூளையை மழுங்கச் செய்து விட்டது,.
அய்யோ... நம் விஷயத்தை மஸ்தான் மூலம்
தெரிந்து விட்டார்கள்.
ஆனால்,
இதை போட்டு கொடுத்தது யார்? மஸ்தானிடம் எப்படி போனார்கள்? எப்படி ரேகா விஷயம்
வெளியே லீக் ஆனது? எப்படி ஏமாந்தேன்? எப்படி? எப்படி?
“இந்த மாடல் பிளாட்டுக்கு உள்ள செக் பண்ணுங்க. நிறைய தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருக்கு. இவன்தான் சப் டீலர். பேரு இம்ரான். இவன புடிச்சா, இத விக்கிற மெயின் டீலர்ஸ் எல்லாம் நீங்க ஈஸியா புடிச்சுடலாம்” சுரேஷ் சொல்ல ,
சாரதியும்
சதாசிவமும் வேறு வேனில் ஏற்றப்பட்டார்கள். தகர தடுப்பின்
வெளியே ஜனங்கள் எட்டி எட்டி பார்த்தார்கள்.
“
உள்ளே விபச்சாரம் நடக்குதுப்பா.” வெளியே
பொத்தாம் பொதுவா பேசினார்கள்.
“ ஒரு பிகர்
கூட காணோமே ”
“அதுங்கல்லாம்
பூட்ச்சிங்கப்பா கார்ல” ஏமாற்றமாய் ஒருத்தன் சொன்னான்.
உலகம்
இவ்விதம் தான்.
“ இந்த பெருசுங்க. லைவ் ஷோ பாக்குற குரூரமான ஆளுங்க. இவங்களுக்காகவே இந்த பசங்க, குடும்ப பொண்ணுங்களை அப்ரோச் பண்ணி அவங்க மனச கெடுத்து, இந்த இடத்துக்கு கூட்டிட்டு வராங்க” என சுரேஷ் சொல்ல., அந்த இன்ஸ்பெக்டர் இருவரையும் மாறி மாறி அறைந்தார்.
“ ஏன்டா ஒரு குடும்பத்துக்குள்ள வெளி ஆளு நுழையறதே தப்பு. அந்த தப்ப நீ பண்றது இல்லாம, அவங்கள இங்க கொண்டு வந்து அம்மணமாக்கி லைவ் ஷோ பாக்குறீங்களா?? வெண்ணைகளா ? “ என கன்னம் பெயர்ந்து போகும் அளவிற்கு அடி வாங்க., சாரதி மயக்கத்திற்குள் போனாலும் அவனை தூக்கி வைத்து அடித்து துவைக்க ஆரம்பித்தார்கள் .
வெளியே ஜீப், கார் வர எல்லோரும் தங்களது மொபைல் போனில் இந்த கைது சம்பவத்தை படம் பிடித்து கொண்டிருக்க., ஓரிரு youtube சேனல்களும் அவசர அவசரமாக கிளம்பி வந்து போதை மாத்திரை, விபச்சாரம் என தங்களுக்குத் தெரிந்த கற்பனைத் தொகுப்பில் பேச ஆரம்பித்திருந்தார்கள்.
“யாரோ ஒரு பூஜாரி பொண்ணுங்களை பூஜை பண்றேன்னு தள்ளிகிட்டு வந்துட்டானாம்”
‘அட அதில்லப்பா ., இது வெப் சீரியல் ஷூடிங்க்பா.. தோ
அவருதான் ஹீரோ...” சுரேஷை கைக்காட்டினார்கள்.
“பக்கத்துல
நிக்கறாபாரு வெளுப்பா., அவ தான் ஹீரோயின்”
“உனக்கெப்படி தெரியும்”
“நம்ம பிரண்டு தான் டைரக்டர்”
எல்லா இடங்களிலும் கள்ளம் கபடம் தான்.
ஏனெனில் உலகம் இவ்விதமானது தான்.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6