மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, September 23, 2024

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம் - EP 72

மறுநாள் அவனைப் பார்க்க அவளும் அவனை பார்க்க அவளும் மிக ஆவலாக அந்த கோயிலில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள் .நேற்று இருந்த தயக்கம், கூச்சம் இப்போது குறைந்திருந்தது. இருவருமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருந்தார்கள் .இருவருக்குமே பரஸ்பரம் பிடித்திருந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தான் அவர்கள அதிகமாக யோசித்தார்கள் .

ஆனால், அதையும் தாண்டி அதை எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களுக்கு இருந்தது. தனது குடும்பம் பற்றியும் தன்னுடைய உத்தியோகம் வருமானம் எல்லாவற்றையும்  விரிவாக குருமூர்த்தி சொன்னான்

“என்னுடைய அப்பா அம்மாவை பார்த்துக்கிற ஒரு விஷயத்துக்காகவே நிறைய பெண்கள் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. ஒன்னு கல்யாணம் ஆகி  தனியா செட்டில் ஆகணும், இல்லனா கல்யாணம் ஆகி தனி அப்பார்ட்மெண்ட்ல இருக்கணும்எங்களால என்னால உங்க வீட்ல இருக்க முடியாது, அப்படின்னு சொல்லியே, எனக்கு ரொம்ப நாளா திருமணம் ஆகல,”

‘.............”

“சரி மேரேஜ் ஆகல போனா போவுது,  அப்பா அம்மா கூடவே வாழ்ந்திடலாம் கல்யாணமே வேண்டாம் என்று தான் நானும் நெனச்சேன

“ மை காட்.. வாட் எ ரேர் பெர்சன் யூ ஆர்? ’அவள் வியக்க

உங்களப் பார்த்த அப்புறம் தான் மனசு மாறிட்டேன்” என குருமூர்த்தி அவனைப்பற்றி சொல்ல,

சோபனாவும் தன்னுடைய குடும்பம் , அக்கா , அக்காவின் குடும்பம் தனக்கு டெல்லியில் நடந்த ஒரு பொருந்தாத திருமணம் , அதன்பின் நடந்த திருமண முறிவு, மோசடி பற்றி எல்லாவற்றையும் சுருக்கமாக தலை குனிந்தபடி அவனிடம் சொன்னாள்.

 குருமூர்த்திக்கு உள்ளுக்குள் சந்தோசம் பொங்கி வடிந்தது . திருமணம் ஆகியும் விவாகரத்து ஆகியும் கன்னியாக இருக்கிற பவித்திரமான பெண்  இவள்.

‘கடவுளே இந்த பெண்ணை எனக்கு கொடு” என அந்த கோயில் அவன் மீண்டும் மீண்டும்  வேண்டினார்கள். ஜோடியாக கோயிலை சுற்றி வந்தார்கள். கோயிலை விட்டு வந்தார்கள். பிரிந்தார்கள். வீட்டுக்கு சென்றார்கள்.

அவர்கள் அடுத்த நாளும் பேசினார்கள். அதற்கு அடுத்த நாளும் கோயிலுக்கு வந்தார்கள். பேசினார்கள்.

என்ன ஆச்சு? ரெண்டு நாள் தான் இருப்பேன் ஸ்ரீரங்கத்துக்கு போயிடுவேன்னு சொன்னிங்களே” என்ன அவன் கேட்க,

நாளைக்கு போவேன்” என்றாள். ஆனால் அவள் நாளைக்கும், மறுநாளும் வந்தாள். அதற்கு மறுநாளும் வந்தாள். அவர்கள் இன்னும் பேசினார்கள்.

அவளுக்கு ஊருக்கு போக மனசு இல்லாய் போல,

 ஷோபனாவும் வேண்டாம் , வேண்டாம் என மனதில் சொல்லிக் கொண்டே அவனைத் தேடிப் போனாள். நிறைய பேசினாள்.

 திருமணமே வேண்டாம், இனி வாழ்க்கையில் ஆண்களே வேண்டாம் என அவள் எடுத்திருந்த வைராக்கியமான முடிவு கொஞ்சம் கொஞ்சமாக  உடைந்து, குருமூர்த்தியை தழுவிக் கொள்ள நினைத்தது .

அவன் ஷோபனாவைவாங்க போங்க’ என்பதிலிருந்து, வா போ’ என பேசும் உரிமைக்கு வர ,

ஷோபனாவே அன்று நான் உங்க வீட்டுக்கு வரணும் உங்க பேரன்ட்ஸ் பாக்கணும்னு ஆசையா இருக்குஎன்றாள்.

 அவன் ஷோபனாவின் கைகளை பிடித்துக் கொண்டான்.

ஷோபனா இப்பயாச்சும் சொல்லு. என்ன கட்டிக்கிறேன்னு சொல்லு’ என்னால இதுக்கு மேல தாங்க முடியாது .எனக்கு நைட்டான தூக்கம் வரல ப்ளீஸ் .”

‘.............”

ஷோபனா இப்பவாச்சும் சொல்லு” என் குடும்பத்துல நீயும் ஒரு உறுப்பினரா இருக்கணும்”னு தான் நான் ஆசைப்படுறேன்”  என சொல்ல ,அவள் மனம் நெகிழ்ந்து போயிருந்தாள்.

 வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்களை நாம் பார்த்தாகிவிட்டது இந்த முடிவு நமக்கு ஏமாற்றமா? இல்லையா ?என்பது தெரியவில்லை .

ஆனால் குருமூர்த்தி மிகவும் நல்லவன் .உங்க பேரன்ட்சை கிட்ட பேசிட்டு நான் சொல்லட்டுமா? என கேட்க.,

என்ன நீ என் பேரன்ட்ஸ் மட்டும் ஓகே சொன்னா போதுமா? உங்க பேரன்ட்ஸ் கிட்டயும் கேக்கனுமில்ல? “ இருவருமே சிரித்தார்கள்.

 அன்று சீக்கிரமே கோயிலை விட்டு கிளம்பி குருவின் பைக்கில் ஏறி வீட்டிற்கு போனார்கள் .

வீட்டுக்குள் நுழையும்போதேஅம்மா நான் சொன்னேன் இல்ல? அம்மா கோயில்ல ஒரு பொண்ணு

ஆஆமா ஷோபனா” என அம்மா சொல்ல,  ஷோபனாவுக்கு  'தடேர்ர்ர்' என தூக்கி வாரி போட்டது .

குருவின் அம்மாவே தன் பேரை சொல்ல, சந்தோஷம் தொண்டையில் ஏறி பெருமூச்சாக வெடித்தது.

“” அடி ஷோபனா உனக்கு தெரியாது.
நீ என் கெட்ட சோபனங்களை துரத்தி விட்டாய்..”
அப்படின்னு கவிதை எழுதுனியேடா.,  அந்த பொண்ணா இது  குரு? ”

அம்மா அலற விட்டாள்.

“சும்மா இரேம்மா உனக்கு இங்கிதமே தெரில”

அவளும் இதை எதிர்பார்க்கவில்லை.  ஷோபனாவின் சிவந்த அழகான முகம்  வெட்க சிவப்பில் தகித்தது.

அப்பாவும் அவளிடம் இனிமையாக பேசினார்.  அவளைப் பற்றி கேட்டறிந்தார்.

“எங்களை பாத்தவுடனே ஓடின பொண்னுங்க தான் ஜாஸ்தி, நீதான்மா அவங்கிட்டயே ‘பேரன்டசை பாக்கனும். என்னை வீட்டுக்கு கூட்டி போன்’ னு சொல்லி இருக்கே” அவரது ஆனந்தம் எல்லாருக்கும் படர,

 தனது காதலி பற்றி  பேரன்ட்ஸிடம்  முன் கூட்டியே  சொல்லி இருக்கிறான் என்றால்,  நிச்சயமாக அந்தக் காதலில் உண்மை தன்மை இருக்கும் ' என உணர்ந்த ஷோபனா  உளமார மகிழ்ந்தாள்.

பேசிவிட்டு கிளம்புகையில், இருவரையும் அமர வைத்து, அவர்களின் காலில் விழுந்து  நமஸ்கரிக்க,  அந்த அம்மாள் இவளை கட்டியணைத்தாள்.

எனக்கு ஆஸ்துமா இருக்கு, கர்ப்பப்பையில் ஏதோ பிரச்சினைனு சொல்றாங்க, எங்க வீட்டுகாரருக்கு சர்க்கரைல இருந்து, ரத்த அழுத்தத்திலிருந்து வண்டி வண்டியா கிடக்கு. ஏதோ அங்க எங்கே நடமாடுறோம் . இதெலாம் எங்க பிரச்சனைம்மா. ஆனா உன் தலையில சுமத்த மாட்டோம். இங்க எங்களை பாத்துக்க ஒரு  நர்சம்மா வேலைக்கு வராங்க"

"............அம்மா"

" ஆமா அவங்க தான் எங்களை பார்த்துக்கிறாங்க , எங்களுக்கு எந்த பிரச்சனை இல்லை. உன்னை ஜாஸ்தி தொந்தரவு பண்ன மாட்டோம். என் பிள்ளை தான் மாசம் நாலு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறான் .ஆனா கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’ என்கிறான் ‘ இங்க வற்ர   பொண்ணு வீட்டுக்காரங்க, எங்க ரெண்டு நோயாளியை பார்த்த உடனே இவங்களுக்கு வடிச்சு கொட்ட முடியாது , வேளா வேலைக்கு மாத்திரை கொடுக்க முடியாது அப்படின்னு சொல்லிட்டு போயிடறாங்க. என் புள்ள எங்களுக்காகவே கல்யாணம் பண்ணிக்கலஎன சொல்லி குருமூர்த்தியின் தாடியை ஏந்திக்கொண்டு முத்தமிட்டாள் அம்மா.

ஷோபனாவிற்கு உள்ளுக்குள் எல்லாமே கரைந்து ஆகிவிட்டது’. இந்த உலகில் குருமூர்த்தி விட ஒரு உத்தமமான ஆள் இருக்க முடியாது’. என முடிவுக்கு வந்தாள்.

அந்த குடும்பம் கொஞ்ச நேரத்திலேயே அவளுடன் ஒட்டிக்கொண்டது. வார்த்தைக்கு வார்த்தைக்கு அந்த அம்மாள் சோபனா சோபனா என்னை கூப்பிட, அந்த வீட்டிலேயே அவள் இருந்து விடலாமா?’ என நினைத்தாள்.

 அது பழங்கால வீடாக இருந்தாலும் மிகப்பெரிய வீடாக பராமரிப்பு மிக்க வீடாக நேர்த்தியான இன்டீரியல் செய்யப்பட்ட வீடாக இருந்தது. குருமூர்த்தி வாங்குகிற சம்பளத்தின் பிரதிபலிப்பு அந்த வீட்டில் ஒவ்வொரு விஷயத்திலும் தெரிந்தது .

குருமூர்த்தி அன்பானவன், அடக்கமானவன், அமைதியானவன் கை நிறைய சம்பாதிக்க கூடியவன் ,இது எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் கண்ணியமானவன் ,இதைவிட பெரிய தகுதி என்ன வேண்டும் ?தன்னுடைய நிலையை எல்லாம் சொல்லிய பிறகும், தன்னை காதலிப்பதாக சொல்கிறான்

 “தினமும் இங்க  உன்ன பத்தி தான் பேசிட்டு இருக்கான். நீதான்மா  அவனுக்கு நல்ல பதிலை சொல்லணும்” என சொல்ல  ஷோபனா மௌனமாக இருந்தாள்.

உனக்கு ஆனதெல்லாம் கல்யாணமே இல்லம்மா, அது ஒரு ஜஸ்ட் பாஸிங் கிளவுட் புரியுதா? அதெல்லாம் மறந்துடும்மா , இப்பதான் நீ ருதுவாகி குருமூர்த்தி கையை புடிக்கறேன்னு நினைச்சுக்கம்மா”  என  அம்மா சொல்ல ஷோபனா  யோசனையாக தலையாட்டினாள்.

“இங்க வரப்ப ஸ்வீட் , பூ, பலகாரம்னு உனக்கு வாங்க்கிட்டு வர தோனூச்சே., அதுவே சொல்லுது நீ குணவதின்னு’’ மகராசியா போய்ட்டு வாம்மா”

அவளும் தன் வாழ்க்கையை அவனுக்கு, அந்த வீட்டுக்கு கொடுப்பதில் அவளுக்கும் எந்தவித மறுப்பு  ஏதுமில்லை.

 அந்த வீட்டை விட்டு விடை பெற்றுக்கொண்டு ஷோபனா  இறங்கும்போது தேகம் முழுக்க பரவிக் கிடந்த இன்ப அதிர்வுகளின் மனநிறைவுடன் இறங்கினாள்.

 அவருடன் பைக்கில் உட்கார்ந்து கொண்டு ,அவளது வீடு இருக்கும் தெரு முனையில் இறங்கிக்கொண்டாள் ஷோபனா .

என்ன ஷோபனா எனக்கு எதுவும் பதிலே சொல்லலியே” என்ன சொல்ல,

நான் நாளைக்கு சொல்றேன்” என்றாள்.

 அவள் நாளைக்கு சொல்றேன் என்றாலும், அவன் தன் கையை வெகு நேரம் பிடிக்க விட்டதில் இருந்தே அவள் தன்னுடைய பதிலை அப்போதே சொல்லிவிட்டாள் என்று தான் அவனுக்கு தோன்றியது.

“ரொம்ப காக்க வெச்சுடாதே ஷோபனா” என மட்டும் சொன்னான் குரு. 



கள்வெறி கொண்டேன் 1 - 7 பாகங்கள் பெற:

2 comments:

  1. sorry wrong comment earlier pls delete it

    ReplyDelete
  2. It is good you designed hero alwys staying with aged un healthy parents

    ReplyDelete