மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, September 21, 2024

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம் - EP 71

 


கள்வெறி கொண்டேன் 1 - 7 பாகங்கள் பெற:


ஏய்ய் ஷோபனாஅவன் கிட்டத்தட அலறிவிட்டான்.

“..........”

என்னங்க எப்ப கோயிலுக்கு வந்தீங்க? ’

“..........”

“நீங்க இன்னும் இன்னும் போகலையா?”

“’ எப்படி போவேன் ? நான் கோயிலை விட்டு கிளம்பின உடனே, நீங்க   ஆஞ்ச  நேயர் சன்னதியில என்னத்தையோ பறி கொடுத்தா போல தொப்’புன்னு படிக்கட்டுல உட்கார்ந்ததைப்  பார்த்தேன் .வந்து பேசலாமா? அப்படின்னு நினைச்சேன் . கூட்டமா இருந்துச்சு.”

‘............................”

“சரி ஒரு வழியா  இங்க தான் வருவீங்க பேசலாம் பேசலாம்னு பார்த்தேன் . ஆனா நீங்க வரவே இல்ல. ரொம்ப டீப்பா யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க . ஐயையோ நம்மள பத்தி , நம்ம மேரேஜ் பத்தி இவருக்கு சொல்லி இருக்கக் கூடாது அப்படின்னு ஒரு செகண்ட் தவிச்சிட்டேன். உங்க கிட்ட பேசத்தான் வெயிட் பண்றேண்”

சரி என் பைக் நீ எப்படி கண்டுபிடிச்சீங்க ?”

நீங்க வேற.,  நான் ஒவ்வொரு பைக்கா நிக்க நிக்க, ஆளுங்க எடுத்துட்டு போயிட்டாங்க, கடைசியா எடுக்காம இருந்தது இந்த ஒரு பைக் தான். இதுதான் உங்க பைக்கு நான நினைச்சேன்”  என்ன சொல்ல அவன் சிரித்தான் .

அவன் முகத்தில் இருந்த அப்பாவித்தனம் அவளுக்கு பிடித்திருக்க வேண்டும். ஆண்கள் ஆபத்து இல்லாதவர்கள் என்றால் அவர்களை தாராளமாக பெண்கள் அனுமதிக்கிறார்கள். நம்புகிறார்கள். ஆனால், அதை கண்டுபிடிப்பதற்கு தான் பெண்களுக்கு பயிற்சி தேவையாக இருக்கிறது.

 ஷோபனாவுக்கு அந்த பயிற்சி இருந்தது. அதனால் தான் ரகுவை ஆள் ஒரு மாதிரியானவன் என் கணித்து இருந்தாள்.

இந்தப் பயிற்சி பருவம் வந்த நாள் முதல் இயல்பிலேயே பாடம் ஆகி விட்டது. அவள் பணிபுரியும் இடத்தில் வெளியில் குடும்பத்தில் உறவில் நட்பில் ஏராளமான ஆண்களை அவள் சந்தித்திருக்கிறாள் .எல்லோருமே நல்லவர்களைப் போல நடித்து தனது தன்னுடைய விஷமத்தனத்தை காட்டக் கூடியவர்கள் .

ஆனால், இவன் அப்படி இல்லை தனக்கு திருமணமான ஆகிவிட்டது என்ற செய்தியை கேட்டதும் அவன் சுக்கு நூறாய் உடைந்து விட்டான். நிறைய நேரம் யோசித்தான். இந்த மூன்று மாத காலம் தன் பின்னால் அவன் பல நாட்கள் சுற்றி இருக்கிறான். தன்னை கண்டதும் அவன் விழியில் ஏற்படுகிற ஒளிக்கீற்று பரவசம் அவளையும் சற்று உள்ளே அசைத்து விட்டது.

 எல்லாவற்றிற்கும் மணிமகுடம் வைத்தார் போல  நேற்று அவனுடைய சேர்ந்த தமிழ் மொழி ஆற்றலுடன் கூடிய  கவித்திறன் அவனுக்குள்ளே இருந்த ஒரு அற்புதமான கலைஞனை,  பிறருக்காக உருகும் ஒரு ஆணை,  அவளுக்கு அடையாளம் காட்டியது .

அதன் வெளிப்பாடுதான் அவனுக்காக அவளும் முக்கால் மணி நேரம் வெளியே அவனுக்காக காத்திருக்க வைத்து விட்டது.

 ஒர்க் பண்றீங்களா என்ன?” அவளைக் கேட்டான் குரு.

‘ம்ம் ஏர்டெல்.. பிராஞ்ச் மேனஜர்,  ஸ்ரீரங்கத்துல. நீங்க?’

அவன் தனது மிகப்பெரிய நிறுவனத்தின் தன்னுடைய மிகப் பெரிய பதவியை சொன்னான்.

“சௌ த் சோன் ஹெட்ன்னு சொல்றீங்க  இப்படித்தான் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருப்பிங்களா ?”

ஏங்க? நான் எல்லார் பின்னாடியுமா சுத்துறேன்?. என் மனசுக்கு புடிச்ச ஒரு பொண்ணு . என் லைஃபுல நான் எதிர்பார்த்த ஒரு பொண்ணு ,என் ஃபேமிலிக்கு ஏத்த பொண்ணு ,உடம்பு சரி இல்லாத என்னுடைய அப்பா அம்மாவை பாத்துக்க கூடிய ஒரு பொண்ண தான் தேடிட்டு இருந்தேன்.”

‘.....................”

அதுகேத்த பொண்ணு நீங்க தான்னு, மனசுக்குள்ள ஒரு உருவம் போட்டு வச்சிருந்தேன். ஆனா ஒரே ஒரு செகண்ட்ல அதை சடக்குன்னு உடைச்சிட்டீங்க.”

திரும்பத் திரும்ப அதை பத்தி பேச வேணாமே”

எதை பத்தி? “

நான் கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனவன்னு தெரிஞ்சும் என் மேல உங்களுக்கு இருக்கிற அந்த கிரஷ் பத்தி பேச வேணாம்னு சொல்றேன்’ என அவள் அவன் காதலை மறுக்க ,

அவனுக்கு என்னமோ அவளே  கிரஷ் அது இது என்ன சொல்லி அவனை ஏற்றி விடுவதாக நினைத்தான்.

ஷோபனா ப்ளீஸ் உங்கள பத்தி டீட்டெயில் சொல்லுங்க. நான் எங்க வீட்ல பேசுறேன். மேரேஜ் ஆன என்னா? டைவர்ஸ் தான் ஆகிடுச்சே”

“ப்ப்ச் உங்களுக்கெதுக்கு டைவர்ஸ் ஆனவ?’

ப்ச் ஷோபனா,  எனக்கு என்னமோ நீங்க இல்லாம என் லைஃப்பை  அமைச்சுக்க முடியும்’னு தோணல, “

அடடா என்ன இது பேசி ஒரு 24  மணி நேரம் கூட ஆகல, அதுக்குள்ளயே நான் லைஃப் ஃபுல்லா வரணும்னு ஆசைப்படுறீங்களே?”

ஏன் உங்களுக்கு அந்த ஆசை இல்லையா

எனக்கு அந்த கொடுப்பினை இல்ல”

கொடுப்பினை என்றதும் அவன் தடக்கென நிமிர்ந்தான்.

“ஏங்க நீங்க வேற. நீங்க உம்ம்னு சொல்லுங்க. தங்க தட்டுல வெச்சி உங்களை தூக்கிட்டு போறேன்”

‘ நோ..ப்ளீஸ் குரு ப்ளீஸ் நீங்க புரிஞ்சுக்கோங்க, இங்கே ஒரு பெண்ணோடு விவாகரத்துக்கு பின்னால ஏராளமான வலி இருக்கு,”

உங்க குழந்தைகளை பத்தி யோசிக்கிறீங்களா ?”என அவன் சொல்ல, அவள் சிரித்தாள்

கவலைப்படாதீங்க உங்களுக்கு அந்த சிரமம் எல்லாம் வைக்கல, எனக்கு குழந்தைங்க எதுவும் கிடையாது, “என சொல்லிவிட்டு, “இன்ஃபாக்ட் அதான் மெயின் பிரச்சனையே”  ஷோபனா  லேசாக முணுமுணுக்க அவளை ஆச்சரியமாக பார்த்தான்  குரு.

‘உங்களுக்கு அந்த சிரமம்  எல்லாம் வைக்கலைஎன்ன சொல்வதிலிருந்து அவள் அவனுடன் இணைந்து இணைய தயாராக விட்டாள் என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவனுக்கு அவளது காந்த வார்த்தைகளால், நெஞ்சம் சந்தோஷத்தில் வழிந்தது . உடல் முழுக்க விம்மியது.

“ஓ குழந்தைகளுக்காக தான் நீங்கள் யோசிக்கிறீங்கன்னு நினைச்சேன்என அவன் மறுபடியும் சொல்ல.

இல்லை, எனக்கு எதுவும் குழந்தைகள் இல்ல”  அந்த ஒரே ஒரு பதில் அவனால் சகலமும் விளங்கிக் கொள்ள முடிந்தது.

பை தி பை  இன்னும் டூ டேஸ் இங்க தான் இருப்பேன் அதுவரைக்கும் என்னை நீங்க பார்க்கலாம். அதுக்கப்புறம் எங்க ஊருக்கு போயிடுவேன். ஸ்ரீரங்கம்என்றாள்.

 அவள் நடந்து செல்ல,

“ஸ்கூட்டில வரலையா?. அப்ப  இருங்க., இருங்க பைக்ல போலாம்” என சொல்ல அவனை முறைத்தாள்

இதானே வேணாங்கிறது” என்ன சொன்னாள் மறுபடியும் சிரித்தாள்

. ப்ளீஸ் ஷோபனா”

“. நோ ஐ கான்ட்”

சரி அப்போ நம்பராச்சும் குடுங்க” என்ற அவள் தயங்கினாள்.

ப்ளீஸ்என அவன் கெஞ்ச அவள் தனது நம்பரை சொன்னாள்.

அட நம்பர் என்னை இவ்வளவு பேன்சியாக இருக்கே. விஐபி நம்பர்  போல இருக்கு” என சொல்ல ,அதற்கு அவள் சிரித்தாள்.

“ஏங்க நான் ஏர்டெல் தலைமை அதிகாரிங்க.  அதனால்தான் எங்க கம்பெனி இந்த நம்பர் எனக்கு கொடுத்து இருக்கு”  என அவனிடம் சொல்லிவிட்டு அவள் தன் வீட்டிற்கு திரும்ப நடந்தாள்.

 அவள் அந்த தெருமுனை போகும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அதன் பிறகு பைக் எடுத்துக் கொண்டு போனான்.

 அந்த இரவு சோபனாவுக்கும் தூக்கம் இல்லை. குருமூர்த்திக்கும் தூக்கமில்லை



என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.

Authornv(dot)com

 

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..

thirumbudi(dot)blogspot(dot)com

 

இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

Naveenavathsayana(at)gmail.com

No comments:

Post a Comment