அடுத்த வாரம் டைரக்டர் பாலுவின்
படத்துக்கு. கால் ஷீட் கொடுத்தார்கள். இந்த படம் தனது கேரியரில் அடுத்த நிலைக்கு கொண்டு போகக்கூடிய படம் என்பதை மாதேஷ்க்கு சொல்லி சொல்லி அந்த படத்தில் வேலை செய்ய வைத்தான் தணிகா.
படம் முடிந்து ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது . தமிழ் சினிமாவில் உள்ள பிஎன்சி ஏரியாக்களில் படம் நல்ல விலைக்கு விற்றது.
தமிழ் நாட்டில் மாதேஷ் போலவே இலக்கு எதுவும் இல்லாத கற்பனைக்கு சக்திக்கு மீறி கற்பனை செய்யக் கூடிய , மினிஸ்டர் பொண்ணு எம்எல்ஏக்களுக்கு ஆசைப்படுகிற, எதற்கெடுத்தாலும் கோபப்படுகிற இளைஞர்கள் கூட்டம் பெரிய அளவில் இருந்தது , அவனுக்கு எல்லாம் மாதேஷ் ஹீரோவானான்.
அதற்குப் பிறகு வரிசையாக அதேபோல படங்கள் நடித்தான். சாதாரண கிராமத்து இளைஞனாக, ஊரில் ஒன்று நடந்தால் கேள்வி கேட்க கூடியவனாக ,அவனது கேரக்டர்கள் வடிவமைக்கப்பட்டன.
அவன் கிராமத்து சப்ஜெக்ட்- சிட்டி சப்ஜெக்ட் என மாறி மாறி நடித்தான்.
இவனுக்கு மேல் இருக்கக் கூடிய இரு பெரிய ஸ்டார்கள் கூட அவனைப் பார்த்து பயப்படுகிற அளவில், அவர்களை நெருங்கி போகக் கூடிய அளவில் மாறிவிட்டான்.
செல்வராஜாவுக்கும் தணிகாவுக்கும் ஒரே சந்தோஷம்.
“தணிகா நாம் இன்னொரு முக்கியமான வேலை பண்ணனும். அதை பண்ணாதான் பையன் பீல்டில் நிற்க முடியும் . இல்லண்னா வந்த வேகத்தில் காணாமல் போய்டுவான் . ஆனா உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல” செல்வராஜா ஆரம்பிக்க
“அட சொல்லுப்பா செல்வராஜா .இதுல என்ன இருக்கு ?” என்றான் தணிகா.
“ கோடம்பாக்கத்துல அந்த பைனான்சியர்
இருக்காரு இல்ல , ரங்கராஜன் சார்.. “
“ஆமா “
‘அவங்க குடும்பத்துல மாதேஷ்க்கு சம்பந்தம் பண்ணனும்” என சொல்ல தணிகா எழுந்துகொண்டான் .
“என்னய்யா சொல்ற ? அவங்க எல்லாம் தமிழ் நாட்டுல பெரிய குடும்பம்”
“ என் பையனும் ஒரு நாள் அந்த மாதிரி ஆகுவான்பா .”
“ஆகட்டும் நல்லதுதான் . ஆனா இப்பாதானே நாலஞ்சி படம்
நடிச்சிருக்கான்?, என்ன இருந்தாலும்.. ” அவன் இழுக்க
“ என்ன தணிகா. ஜாதி யை சொல்றீயா? எங்கிருந்து வந்தேன்னு எனக்கு ரிஷிமூலம் பாக்குறியா?”
“ அது இல்லப்பா.,
ரங்கராஜு எல்லாம் ரொம்ப வருஷமா பரம்பரை பணக்காரன் மாதிரி ஆயிட்டாங்க.. அவங்களுக்கு
சவுத் இந்தியா ஃபுல்லா சொத்து இருக்கு . சென்னை திருச்சி, மதுரைல ஹோட்டல்ஸ்
இருக்கு. அவங்க லெவல் பெரிய லெவல்பா.. பாலிடிக்ஸ்ல பெரிய ஆளுங்க… ஆனா
நமக்கு................?“
“இங்க பாரு தணிகா. அந்த ரங்கராஜுக்கு
ரெண்டு பொண்ணுங்க இருக்கு.
பெரிய பொண்ணு சுஷ்மிதா மாநிறம். உனக்கு தான் தெரியுமே. நம்ம பாப்பா வித்யாவுக்கு ஃபிரண்ட்.
நம்ம வீட்டுக்கெல்லாம் வருமே.. ஆனால், சுஷ்மிதா கண்டிப்பா மாதேஷை விட பெரிய பொண்ணாச்சேப்பா.”
‘...ம்”
“ அவளை விட்டா ரெண்டாவது பொண்ணு சந்தியா. சுஷ்மிதாக்கு
தங்கச்சி. செக்க சிவப்பு . பாக்க தக்காளிபோல இருக்கும். ஆனா சந்தியா பர்சனாலிட்டிக்கு
கிட்ட மாதேஷ் போகமுடியாது..”
“ தணிகா எனக்கு பொண்ணுங்க அழகு முக்கியமே கிடையாது. என் பையனுக்கு ஒரு அங்கீகாரம் வரணும்னா பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ணியிருக்கணும் .அவ்வளவுதான். சுஷ்மிதாவும் இருந்தாலும் சரி, சந்தியாவா இருந்தாலும் சரி. ரங்கராஜு வீட்டுல சம்பந்தம்
பண்ணனும்...” செல்வராஜா சொன்னான்.
“ யோவ்… நீ என்ன பைத்தியமா? படத்துக்கு பைனான்ஸ் கேக்க அவங்கிட்ட போனப்ப
விரட்டி அடிச்சானே ஞாபகமிருக்கா”
“யெஸ்.. அதுக்குதான்”
அவன் கண்கள் சிவந்ததன.
“மாதேஷ்க்கு சந்தியாவை
கொடுப்பாங்கன்னு தெரியல , சுஷ்மிதா அவனை விட
பெரியவ. சினி ஆக்டர்ங்கிறதெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க. செல்வராஜா பையன் என்பது நிச்சயம் மாதேஷ்க்கு ஒரு மைனஸ் பாயிண்ட்பா.
.”“ எனக்கும் அது தெரியும் தனிகா. அதனாலதான் நான் ஒரு வழி வைச்சிருக்கேன்..”
“என்ன?”
“சந்தியா .,சுஷ்மிதா ரென்டு பேர்ல
யாரை நாம் டக்குன்னு தொடமுடியும்?”
“அப்படின்னா?”
“யார் நம்ம வீட்டுக்கு வரா? போறா?”
“ம்ம்ம்
சுஷ்மிதா.. அவ தானே பாப்பாக்கு ஃபிரண்டு.”
“ம்ம் அதான்.’
“ஆனா அவ பையனை விட வயசு
ஜாஸ்தியாச்சே?”
“அதைப்பத்தி நமக்கென்ன கவலை?
தணிகா அதிர்ந்து நின்றான்.
”என்னப்பா இப்படி பண்ண சொல்ற ? இது தப்பில்லையா?”
“வேற வழி இல்ல தணிகா? நாம ஜெயிக்கணும்னா இதெல்லாம் பண்ணிதான் ஆகணும் “
“அதுக்கு அந்த சுஷ்மிதா தானா பலி?
நம்ம வித்யா பாப்பா வயசுதான். அவளை போயி..”
“தணிகா. எங்க போனாலும் என் பிறப்பு
தான் எதுக்க வந்து நிக்குது. என்னால அதை உடைச்சி போக முடியல.. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி அந்த சந்தியா பொண்னு
வயசுக்கு வந்த பங்கஷன்ல என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமில்ல?”
“தெரியும் விடு செல்வராஜா”
செல்வராஜா , இத்தோடு நூறு முறை சொல்லிவிட்டான்.
ரங்கராஜின் இரன்டாம் மகள் சந்தியா வயசுக்கு
வந்த விழாவுக்கு அழைக்க., சுஷ்மிதா- மாதேஷின் அக்காள் வித்யாவுக்கு இடையேயான பழக்கத்தாலும், செல்வராஜா ஒரு டைரடக்டர்
என்பதாலும், ரங்கராஜின் மனைவியே நேரில் வந்து, வீட்டிற்கு கூப்பிட்டாள்.
செல்வராஜாவின் மனைவியும் போனாள்.
விழா மேடையில் பருவம் வந்த சந்தியாவுக்கு
நலுங்கு பூச செல்வராஜாவின் மனைவி
மேடை ஏறிய போது, வலுக்கட்டாயமாக கை பிடித்து இறக்கப்பட்டாள் என்னும் செய்தியை
மனைவி அழுது கொன்டே சொன்ன போது வெடித்து விட்டான் செல்வராஜா.
“கையில் என்ன தான் காசு
இருந்தாலும், நம்ம வேற.அவங்க வேற
இல்லங்க.” சொல்ல ,.
“மயிர்ல ஜாதி., இப்பவே அவங்களை ஒரு
வழி பண்றேன் பாரு கூப்ட்டு வெச்சி, அசிங்கப்படுத்தறாங்களா?” செல்வராஜா கொதிக்க.,
“வி..விடுங்க.. யாரும் அதை
கவனிக்கல., நம்ம வித்யாவுக்கே தெரியாது.
ரங்கராஜு சார் மச்சான் பொண்டாட்டி தான்
அப்படி பண்ணுச்சு...ரொம்ப அசிங்கமாகிடுச்சி.. பிள்ளைங்க கிட்ட சொல்ல வேணாம்..
யாருகிட்டயேயும் சொல்ல வேணாம்”
ஆனால், செல்வராஜா தணிகாகிட்ட
மட்டும் சொல்லி குமுறினான்.
“ நான் கண்டிப்ப்பா பெருசா
ஜெயிச்சி., எல்லாரையும் கலங்க
அடிக்கனும்டா” அப்போது செல்வராஜா ஒரு படம் பண்னி கொண்டிருந்தான். அதுவே
கடைசி படமும் ஆனது.
வெற்றிக்கு ஆசைப்பட்டவனுக்கு போரே
வரவில்லை.
இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு
போர்க்களம் கிடைத்திருக்கிறது. வெற்ரியும் கிடைக்கலாம். ரங்கராஜு சம்பந்தம்
கிடைத்து உள்ளே பூரலாம்.
“| என்னை நம்பு தணிகா.. அப்ப தான்
நாம ஜெயிக்க முடியும்”
“.................
நமக்கும் வெற்றி என்பதால் தணிகை அந்த திட்டத்திற்கு ஒத்துக் கொண்டான்.
மாதேஷ் , தர்மராஜனுடன் செல்வராஜாவுக்கு வித்யா
என்னும் ஒரு பெண்ணும் இருந்தாள். தர்மராஜுக்கு அவள்
தங்கை ., மாதேஷ்க்கு அவள் அக்கா.
வித்யா படிக்கிற அதே கல்லூரியில் தான் ரங்கராஜின் பெரிய மகள் சுஷ்மிதா படித்துக்கொண்டிருந்தாள் . ரங்கராஜின் பெரிய மகள் சுஷ்மிதா, சந்தியா மூலமாக செல்வராஜாவின் குடும்பத்திற்கு அறிமுகமானாள்.
நன்கு பழக்கமான இளம் தலைமுறைகள் ஜாதி வித்தியாசம் பார்க்காது என்பதால் செல்வராஜா யார் ?அவனது பிறப்பின் மூலம் என்ன? என்பது எல்லாம் சுஷ்மிதா தெரிந்துகொள்ளவில்லை .
அதற்கு எந்தவித அவசியமும் அவளுக்கு இருக்கவில்லை. அடிக்கடி செல்வராஜ்ஜின் வீட்டிற்கு வந்த சுஷ்மிதா, கொஞ்ச நாளில் வித்யாவை தவிரவும் அவளது அண்ணன் தர்மா, தம்பி மாதேஷ்ஷிடமும் நன்றாகவே பழகினாள். பேசினாள்.
தர்மா மிகவும் ரிசர்வ்ட் டைப் என்பதால் சுஷ்மிதா அப்போது சிறு பையனாக இருந்த மாதேஷ் என்னிடம் நன்றாகவே பேசுவாள்.
ஒல்லியாய் அரும்பு மீசை உடைய குழந்தைத்தனம் மிக்க மாதேஷ்ஷிடம் சுஷ்மிதா கலகலப்பாக பழகுவாள் . அவள் வீட்டில் அண்ணன் தம்பி போன்ற ஆண் நட்புகள் இல்லாததாலும் , தான் படிக்கும் பள்ளி, பெண்கள் பள்ளி என்பதாலும் அவளுக்கு ஏனோ செல்வராஜாவின் குடும்பத்தை அங்கிருக்கும் வித்யாவின்
சகோதரர்களை நன்றாகவே பிடித்திருந்தது .
அதிலும் மாதேஷ் தன்னை வட வயது குறைந்தவன் சிறியவன் என்பதால் அவளுடன் பழகுவதில் எந்தவித பிரச்சனையும், பருவம் சமபந்தமான குழப்பங்களும் சுஷ்மிதாவிற்கு இல்லை. மாதேஷ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு கூட, சுஷ்மிதா விடம் பழகுவதில் அவனுக்கும் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் தான் இருந்தது. தனது அக்காவின் ஃப்ரன்ட்
என்பதால் அக்கா என தான் அழைப்பான்.
ஆனால் தணிகா மெல்ல மாதேஷின் மனதை
மாற்றும் பணியில் ஈடுபட்டான். விஷத்தை கலக்க ஆரம்பித்தான்.
“ என்னப்பா மாதேஷ் தபி? அந்த ரங்கராஜ் சார் பொண்ணு சுஷ்மிதா சதா உன்னையே சுத்தி வருது?” என கொளுத்திப் போட்டார்.
“அட போங்க அங்கிள் . அது எங்க
அக்கா பிரண்ட்..”
“முதல்ல தான் நீ சின்ன பையன். இப்ப அப்படியா?
உனக்குன்னு ஸ்டேட்டஸ், பேன்ஸ், வந்திருக்காங்க. நிறைய ஆக்டரஸ் கூட உன்னை சேத்து கிசுகிசு வருது. உன் பர்ஸ்ட படத்துல
நடிச்சாளே அந்த பூஜா சர்மா., அவ கூட...”
‘..............அட போங்க அங்கிள்
அவங்களும் என்னை விட பெரியவங்க .”
“அட யார்யா இவன்? ஆனா.,ஒன்னு
மாதேஷ். எத்தனை நடிகைங்க உன் பின்னல சுத்தினாலும் , ரங்கராஜ் சார் பொண்ணு சுஷ்மிதா மாதிரி கிடைக்க நீ
கொடுத்து வெச்சிருக்கனும். “
“சே..சே அவங்களைப் போயி...”
“. நீ வேறப்பா. ரெண்டாயிரம் கோடி
சொத்துகாரி. அவ கிடைச்சா உனக்கு இன்டியா முழுக்க பேர் கிடைக்கும். அவ வயசை
பாக்காதே. லைஃபை பாரு..,என்ன?”
மாதேஷின் நெஞ்சில் விஷயத்தை கலந்ததும் , சுஸ்மிதாவை ஒரு காம பிம்பமாக
மாற்றியதும் தணிகா செய்தது தான் . ஆனால் அது எல்லாமே செல்வராஜாவின் பின்னனி ஏற்பாடு தான்.
தன்னுடைய சுமாரன அழகிற்கும் உடல் வாகிற்கும் இப்படிப்பட்ட பெரிய இடத்துப் பெண் எப்படி பழகுவாள்? என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .
என்னதான் இருந்தாலும் நாம் அவர்களை விட வயது குறைந்த பையன் தானே என நினைத்துக் கொண்டிருந்தான். அவளை ஒரு அக்காவின் தோழியாக நினைத்து அடக்க ஒடுக்கமாக மாதேஷ்
இருந்தாலும், தனிகா தான் அடிக்கடி உசுப்பேற்றிக் கொண்டிருந்தான்.
“என்னப்பா நீயும் புளு டீ ஷர்ட் ,.
அவளும் புளு சுடி. என்ன முன்னாடியே பேசி வெச்சுகிட்டீங்களா?’
“போங்க அங்கிள்’
“ பரவால்லப்பபா,
முதல்ல எல்லாம் மாசம் ஒரு தடவை வருவா. இப்பெல்லாம் வாரம் ரெண்டு தடவை யாச்சும் வந்துடுடாறா.
நீ சினிபீல்டுல என்டர் ஆனப்பறம் அவ இங்க காத்து மாத்தி அடிக்குதே”
“அங்கிள் அவங்க
அப்படி இல்ல அங்க்கிள்”
“பொய் சொல்லாதப்பா.. புடிச்சாலும் நல்ல புளியங்கொம்பா புடிச்சி இருக்கியே “ என ஜோக்காக சொல்வதுபோல சொல்லி சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக மாதேஷ்ஷை சுஷ்மிதா பக்கம் தணிகா
திருப்பினான்.
No comments:
Post a Comment